Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை சி.ஐ.டி. நகரிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், ரூ. 4,500 வாடகை வீட்டில் இன்முகத்தோடு வரவேற்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இன்றைக்கு 90-வது பிறந்த நாள். இந்த வயதிலும் ஆள் அசரவில்லை. ஒரு ஆர்ப்பாட்டத்துக்குப் போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவர் நள்ளிரவு வரை நீண்ட நேர்காணலுக்கு நிதானமாகப் பதில் அளித்தார். இந்த 90 வருஷ வாழ்க்கையின் ஊடே பார்க்கும் போது, ஸ்ரீவைகுண்டம், ராமசாமி, கருப்பாயி இந்தப் பெயர்களெல்லாம் இன்றைக்கு உங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு என்ன? இந்தப் பேரெல்லாம் இல்லைன்னா, இன் னைக்கு நான் இங்கெ உட்கார்ந்துருப்பேனானு தெரியல. ஒரு மனுசன் உருவாக்கத்துல தாய் - தகப்பன், குடும்பம், ஊரு எல்லாத்துக்கும் பங்கிருக்கு. ஸ்ரீவைகுண்டம…

  2. எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தமிழக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 9 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்களும் நேற்று மீன்பிடிக்கச் சென்ற வேளை அவர்களை…

    • 0 replies
    • 434 views
  3. பன்னீர்செல்வம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்! தேனியில் கலகலத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் புதிய அணியை உருவாக்கிவருகிறார். இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் உள்பட பதினொரு எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அ.தி.மு.க கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால், இவர்க…

  4. வைகோ | கோப்புப் படம்: பிடிஐ 'சந்திரகுமார் செய்தது பச்சை துரோகம். இதைவிட விஜயகாந்துக்கு பாலில் விஷம் கொடுத்திருக்கலாம்' என்று மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ''அதிமுகவும் இன்னொரு கட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து அழைக்கிறது. அடுத்த முறை அதிமுகவில் எம்எல்ஏ சீட் கொடுத்து, அமைச்சராக்குவேன் என்று உறுதி தருகிறது. ஆசை வார்த்தை காட்டுவது, பணத்தைக் கொடுப்பது, கட்சியை விட்டு வா என்கிறது. திமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜயகாந்த் நல்லவர் என்று திமுக சொல்லும். வராததால் தேமுதிகவை…

    • 0 replies
    • 433 views
  5. சொன்­னீங்­களே... செஞ்­சீங்­களா? (வீடியோ இணைப்பு) அ.தி.மு.க. அரசின் செயற்­பா­டு­களை விமர்­சித்து தனியார் தொலைக்­காட்­சி­களில் ஒளி­ப­ரப்­பாகி வரும், ‘சொன்­னீங்­களே... செஞ்­சீங்­களா?' என்ற விளம்­ப­ரத்தை ஒளி­ப­ரப்பத் தடை விதிக்க வேண்டும் என அ.தி.மு.க. தேர்தல் ஆணை­யத்­திடம் மனு அளித்­துள்­ளது. கடந்த சட்டப் பேரவைத் தேர்­தலின் போது அளித்த வாக்­கு­று­தி­களை, பத­வியில் அமர்ந்­ததும் அ.தி.மு.க. அரசு செய்யத் தவறி விட்­ட­தாகக் குறிப்­பிட்டு, தி.மு.க.வினால் தனியார் தொலைக்­காட்­சி­களில் வித­வி­த­மான விளம்­ப­ரங்கள் தொடர்ந்து ஒளி­ப­ரப்­பப்­பட்டு வரு­கின்­றன. இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு, இல­வச நிலம் போன்ற வாக்­கு­று­திகள் ஆட்­சிக்கு வந்­ததும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்…

  6. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30,000த்தை கடந்தது ARUN SANKAR / Getty தமிழகத்தில் இன்று (ஜூன் 6) புதிதாக 1,458 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 19 நபர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 251-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று இறந்த 19 நபர்களில் பெரும்பாலானவர்கள், நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற…

  7.  பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், வேலூர் அரச வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து இந்திய மத்திய மாநில அரசாங்கங்கள் இழுத்தடித்து வருகின்றன. இதனால் 25 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன், வேலூர் அரச வைத்தியசாலையில் திடீரென எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் வைத்தியசாலையைச் சுற்றி …

  8. போதுமான குடிநீர் இருப்பு: ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட குடிநீர் நிறுத்தம் சென்னையில் போதுமான குடிநீர் இருப்பு இருப்பதால் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் இன்றுடன் நிறுத்தப்பட்டது. சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டுக் குடிநீரைக் கொண்டு வர தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி உத்தரவிட்டார். இதையடுத்து, இத்திட்டத்துக்காக 65 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், சென்னை நகர மக்களுக்குப் பருவமழை கைகொடுத்து வருவதால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த …

  9. உணர்ச்சிகரமாகச் செய்தார்கள் வளர்ச்சிகரமாகச் செய்யவில்லை சசிகலா சிறைக்குச் செல்வார் என்றார், சென்றார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் என்றார். முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளிப்போகும் என்றார் நிறுத்தப்பட்டது. தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்லும் தீர்க்கதரிசியான பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசையைச் சந்தித்தபோது… நீங்கள் சொல்வது எல்லாம் நடந்து வருகிறது என்கிறார்கள். தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்? தமிழக சட்டசபைக்கு 2021 க்கு முன்னரே தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்கள் மீது பல ஊழல் வழக்குகள் இருக்கின்றன. முதல்வர் மேலேயே விசாரணை வருகிறது! இரண்டு திராவிட…

  10. தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் – தினகரன் அதிர்ச்சி தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பது குறித்து அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோகா…

  11. சென்னை: பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் பா.ஜனதா தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மீது அவதூறு வழக்கு இன்று தொடர்ந்துள்ளார். அதில், கடந்த 4ஆம் தேதி பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த சுப்பிரமணிய சுவாமி, மீனவர்கள் பிரச்னையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார் என்றும், இதனால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்றும் கூறியுள்ளார். இதேபோன்று முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் இந்த …

  12. 'முதல்வர் பதவிக்காக ஏன் அவசரப்பட்டார் சசிகலா?!' - ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா பின்னணி #VikatanExclusive தமிழ்நாட்டின் மூன்றாவது பெண் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட அதேநேரத்தில், உறவுகளின் அழுத்தம் தாங்க முடியாமல் அப்போலோ மருத்துவமனையின் எல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ம.நடராசன். மன்னார்குடி உறவுகளின் ஆட்டமும் தொடங்கிவிட்டது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 60 நாட்கள் நிறைவடைவதற்குள், தமிழக முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடித்துவிட்டார் சசிகலா. 'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியிருக…

  13. இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்தியா பயிற்சி அளித்து வந்த நிலையில் தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் இலங்கைக்கு கோவை விமான நிலையம் மூலம் திருப்பி அனுப்ப வைக்கப் பட்டனர். இதை அறிந்த தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு விழிப்புணர்வு பயணம் செய்யும் மாணவர்கள் கோவை விமான நிலையதில் போராட்டம் நடத்தினர் . பின்னர் மாணவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தர் . மாணவர்களில் தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு விழிப்புணர்வு பயண முயற்சியை வைகோ பாராட்டி ஊக்கமளிக்கும் விதமாக 15 நிமிடங்கள் அங்கு உரையாற்றினர் . படங்கள் கிழே : http://dinaithal.com/tamilnadu/16472-they-struggle-against-the-sri-lankan-military-airport-on-the-students-movies.html

    • 0 replies
    • 433 views
  14. ‘சுவாதி படுகொலை அன்றே, ராம்குமார் ஊருக்கு கிளம்பியது ஏன்?’ -களமிறங்கிய உண்மை கண்டறியும் குழு சுவாதி படுகொலை வழக்கின் உண்மைகளைக் கண்டறிய எவிடென்ஸ் அமைப்பினர் களமிறங்கியுள்ளனர். ‘படுகொலை வழக்கை அவசர கதியில் முடித்து வைக்கவே போலீஸார் விரும்புகின்றனர். குறிப்பாக, ராம்குமார் பேசிவிட்டால் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால் சிறையில் கெடுபிடி செய்கிறார்கள்’ என்கிறார் எவிடென்ஸ் கதிர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ‘ படுகொலை வழக்கின் உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவே போலீஸார் விரும்புகின்றனர். அவரைக் கை…

  15. சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை: சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுகள் மற்றும் இளைய ராஜாவின் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளைய ராஜாவின் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு ம…

  16. பேச்சுவார்த்தை வேண்டாம்... தீர்வு மட்டுமே வேண்டும்... ”ஜல்லிக்கட்டை அனுமதிப்பதற்கான முடிவை 3 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் எங்கள் ரேசன் அட்டை, ஆதார் அட்டைகளை திருப்பியளிப்போம் அல்லது தீயிட்டு கொளுத்துவோம்” கோவையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை...

    • 1 reply
    • 432 views
  17. நளினியை முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல்!: நீதிமன்றம் கேள்வி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளதென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனிலுள்ள தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஆறு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமனறத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த மனு மீதான விசாரணையின் போது, நேரில் முன்னிலையாகி வாதிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றத்தை அவர் கோரியிருந்தார். குறித்த மனு மீதான வழக்கின் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்…

  18. ஜெ., படம் திறப்பதா தலைவர்கள் எதிர்ப்பு spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% சென்னை: தமிழக சட்டசபையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை திறக்க, கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள…

  19. கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம். மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். கடந்த சில நாட்களாக விசைப்படகு மீனவர்களுக்கு மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்கி வந்தன. இதனால் குறைந்த அளவு விசைப்படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல்மழை பெய்து வருகிறது. இந்த சாரல்மழையின் காரணமாக கடலில் மீன்கள் அதிக அளவு கிடைக்க தொடங்கி உள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 300-க்கும்…

  20. கறுப்பர் கூட்டம் நாத்திகன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு செய்திப்பிரிவு கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் மீது குண்டர் சட்டம்போடப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கில் இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம்ரத்து செய்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் என்கிற சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோ…

  21. புதுடெல்லி: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க அடுத்த ஆண்டு ஜனவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜல்லிக்கட்டை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் வருகை குறித்து டிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டை நடத்தினர். இதனால் மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளிடையே மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றது. இந்த நிலையில் சீன அதிபரை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் தமிழகத்துக்கு வருகை தருகிற…

    • 0 replies
    • 432 views
  22. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இது தொடர்பாக டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தலைமையில் தேர்தல் ஆணையத்தின் உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) ஆலோசனை நடத்தினர். தேர்தல் நடத்தப்படும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடமும் அரசியல் கட்சிகளிடமும் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை க…

  23. லதா ரஜினிகாந்த் | கோப்புப் படம்: ஆர்.ரகு 'கோச்சடையான்' படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்த 'கோச்சடையான்' திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை தயாரிப்பதற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்பவரிடம் படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் என்பவர் ரூ.14.9 கோடி கடன் பெற்றுள்ளார். இதற்கு முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் போட்டார். இந்நிலையில் அபிர்சந்த் நஹார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முரளி மீதும், லதா ரஜினிகாந்த் மீதும் நிதி மோசடி புகார் தெரிவித்தார்.…

  24. சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் இந்தி வெறியை புகுத்தும் அளவு பேசியுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நம்மிடம் கூறியதாவது, தமிழகத்தில் 4000 பள்ளிகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் தமிழக மக்களை பிளவு படுத்தும்படி கருத்துக்களை கூறியுள்ளார். சன் செய்திகள் தொலைக்காட்சியில் 17/09/13 அன்று நடந்த விவாத நிகழ்ச்சியில் மும்மொழி பாடத் திட்டம் தமிழகத்தில் தேவையா என்ற கேள்விக்கு அவர் ஒரு இந்தி வெறியர் போலவே பதில் அளித்துள்ளார். அவரின் இந்தி வெறிப் பேச்சுக்கு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் இராஜ்கு…

  25. ’I am hero... My Villain Kalaignar... My Villie Jayalalitha..!' -விஜயகாந்தின் செம ஸ்டைல் இங்கிலீஷ் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தேர்தல் தொடர்பாக என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். பிரணாய் ராயின் கேள்விகளுக்கு சரமாரி ஆங்கிலம், நடுநடுவே தமிழ் என ஏக உற்சாகத்துடன் பதில் அளித்திருக்கிறார் விஜயகாந்த். எடுத்த எடுப்பில், "அரசியல் ஒரு சினிமா என்றால்... ஐ யம் ஹீரோ! மை வில்லன் இஸ் கலைஞர்... மை வில்லி இஸ் ஜெயலலிதா. good ah..?" என்று கேட்டு கெத்து ரியாக்‌ஷன் காட்டி, லைக் எதிர்பார்க்கிறார் விஜயகாந்த். அதேபோல், ’கருணாநிதி 90 அபோவ், ஜெயலலிதா 60 எபோவ், மை ஏஜ் ஐ டோன்ட் நோ. ஹார்ட் இஸ் மை ஏஜ். இட் இஸ் வெரி யங்!’ என்றெல்லாம் அமர்த்தலாக பதிலளித்திரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.