Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போயஸ் கார்டனுக்குள் அதிகாரிகளுக்கு நோ என்ட்ரி! - கோட்டையில் கோலோச்சும் ஓ.பி.எஸ். அ.தி.மு.க பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. அதே சமயம், 'முதல்வர் மரணம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சை எழுப்புவதால், மிகப் பொறுமையாகவே காய் நகர்த்தி வருகிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, 'அ.தி.மு.கவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும்' எனக் கட்சியின் சீனியர்கள் பேசி வருகின்றனர். 'இதற்காக அ.தி.மு.கவின் உட்கட்சி விதிகளையும் தளர்த்துவோம்' என நேற்று பேட்டி அளித்தார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.பொன்னையன். "ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்தவர்கள் எல்லாம், இப்போது சசிகலா…

  2. அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது என்று தெரிவித்து சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நேற்று முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றது என்றும், போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை மேற்கொண்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கும் கால வரையறை நீடிக்கப்பட்டமைக்கு அமெரிக்காதான் முற்றுமுழுதாக காரணம் என்றும் வலியுறுத்தியே இந்த முற்றுகை நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மற்றும் மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்களே இம்முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. http://onlineuthayan.com/News_More.php?id=390603919215147987#

  3. கார்டனை ஆட்டுவிக்கும் ஆடிட்டர்! - ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தும் மர்மம் பொதுக்குழுவை எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் நடத்தி முடிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள் அ.தி.மு.க சீனியர்கள். கடந்த மூன்று நாட்களாக எந்தவித ரெய்டும் இல்லாததால் கார்டன் வட்டாரத்தில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. ' சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் கட்சியிலும் ஆட்சியிலும் நீடிப்பதை பா.ஜ.க தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனைக்கே சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழக அரசின் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரரும் மணல் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வளைக்கப…

  4. 2019 மக்களவைத் தேர்தலையொட்டி பிபிசி தமிழ் சார்பில் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுவரும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் "தமிழர் குரல்" தேர்தல் சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்தார். இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தலில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், ஜனநாயகம் குறித்த அவர்களுடைய கருத்து என்ன என்பவற்றை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதே தமிழர் குரல்: நிகழ்ச்சியின் நோக்கம். இந்த …

  5. பட மூலாதாரம்,PROF. RAMESH படக்குறிப்பு, பனையூர் கோவில் மூலவர் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் உள்ள பல கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி, கருவறையில் உள்ள மூலவர்களின் மீது விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இது எப்படிச் சாத்தியமானது? தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இதுபோல வடிவமைக்கப்பட்ட கோவில்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் சங்கரனார் கோவிலில் செப்டம்பர், மார்ச் மாதங்களில் தலா மூன்று நாட்களில் சூரிய ஒளி மூலவர் சிலை…

  6. ‘இது ஒரு நல்ல கேள்வி?’ - முதல்வர் பதவிகுறித்த கேள்விக்கு பன்னீர்செல்வம் சொன்ன தத்துவம் 'தமிழகம், பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது' என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதற்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதலடிகொடுக்கும் விதமான பதில் அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகம் முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘ இந்தியாவிலும் சரி தமிழகத்திலும் சரி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுகிற நேரத்தில், ஜெயலலிதா எங்களுக்கு சொன்னது என்னவென்றால், 'என் பிறந்தநாள் அன்று என் இல்லம் தேடி வராதீர்கள். ஏழை எளிய மக்களின் இ…

  7. சுவாதியை பார்த்தது முதல் கொலை வரை..! ராம்குமாரிடம் போலீஸ் அடுக்கிய கேள்விகள் சுவாதி கொலை வழக்கு பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு அசைவுகளையும் பொது மக்கள் கவனித்து வருகின்றனர். ராம்குமார் மட்டுமா குற்றவாளி, இல்லை வேறு யாரும் இருக்கிறார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு எல்லாம் விடையளிக்கும் வகையில் போலீஸார், ராம்குமாரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ராம்குமாரை போலீஸார் கைது செய்ய முயன்ற போது அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் அப்போது எந்த விசாரணையும் போலீஸாரால் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் மூன்று நாள் போலீஸ் காவலில் முழு விவரங்களையும் பெற போலீஸார் முனைப்புடன் செயல்பட்டு …

  8. தந்தையர் தினம்: "அப்பாதான் எனக்குத் தோழி" - ஒரு தந்தை, மகளின் பாசக் கதை நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 18 ஜூன் 2022 மனைவி படுக்கையில் பல ஆண்டுகளாக முடங்கிருக்கிறார். மற்றொரு புறம் பதின்ம வயது மகள் கல்லூரிப் படிப்பைத் தொடர வேண்டிய சூழல். ஓட்டுநர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த 55 வயதான இளங்கோவன், தனது மனைவியின் உடல் நலத்தைப் பேணுவதிலும், மகளின் எதிர் காலத்தைக் கவனிப்பதிலும் தனி ஒரு ஆளாக வாழ்க்கையை எதிர்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மனைவி இறந்துவிட, மகளுக்கு தாயுமாகவும் இருக்க வேண்டிய நிலைமை இளங்கோவனுக்கு ஏற்பட்டது. எதிர்காலம் இருண்டு போயிருந்தது. அந்தக் கடினமான தருணத்…

  9. "நீட்" தேர்வை... இரத்து செய்ய, சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் – பன்வாரிலால் புரோகித் நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து ஜுலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கை நிதிநிலை அறிக்கை குறித்து அறிந்துகொள்ள பயன்படும். மேலும் நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும். அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும்’ எனத் தெரிவித்தார். …

  10. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருவேறு ஏ.டி.எம்களில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடி தூவியுள்ளனர். அம்பலூர் பகுதியிலுள்ள இந்தியா ஒன் ஏடிஎம்மிலும் தெக்குப்பட்டு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்மிலும் நள்ளிரவில் அடுத்தடுத்து இந்த கொள்ளை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கைரேகை பதிவதைத் தவிர்க்க கையுறை அணிந்தும் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய்ப்பொடி தூவியும் சிசிடிவி கேமராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடித்தும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் இயந்திரத்தை திறப்பதற்கான அவர்களது முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் பணம் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறும் போலீசார், கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட…

  11. சென்னை: கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையோ, கடைகளையோ நாத்திகர்கள் உபயோகப்படுத்த முடியாது என்று என்று இந்து அறநிலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் இந்து அறநிலைத்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் நிர்வாகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பப்பட்டுள்ளது அதில் கோவில் சொத்துகளை நாத்திகர்கள் பயன்படுத்தவோ, வாடகைக்கு உபயோகிக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையோ, கடைகளையோ நாத்திகர்கள் உபயோகத்திற்கு விடப்படாது என்றும், இறைச்சி, மதுபானம் போன்றைவை பரிமாறப்படும் விருந்துகளும் அந்த மண்டபங்களில் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னால், திருவாரூர் மாவட்டத்தில…

  12. தமிழக முதல்வர் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து முக்கியப் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் சார்பில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,தமிழக ஆளுநர் கே. ரோசைய்யா, முதல்வருக்கு வாழ்த்துக் கடிதம் மற்றும் பூங்கொத்து அனுப்பியதோடு தொலைபேசி மூலமும் தனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ. ராமசுவாமி ஆகியோர் தொலைபேசி மூலம் தங்…

  13. தினகரனுக்கு எம்.எல்.ஏ.,க்கள் மிரட்டல் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன், தினகரன், நேற்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அமைச்சர் பதவி கேட்டு, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மூவர், தினகரனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என, மூன்று அணிக ளாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்படு கின்றனர். ஜனாதிபதி தேர்தலில், மூன்று அணி களும், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல், சட்டசபை தொடர் முடிந்த பின், மாவட்ட சுற்றுபயணம் சென்று, கட…

  14. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா? என்.ராம் கேள்வி ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் இக் கருத்தைத் தெரிவித்தார்.தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் "ஜெயலலிதா இருந்திருந்தால் கட்டாயமாக நடத்தியிருக்க மாட்டார்கள். மென்மையான நேரத்தில் நடத்தியிருப்பது ஒரு பலவீனம்தான். ஆனால் எப்போதும் நடக்காமல்…

  15. மும்பையில் அமித் ஷா - ரஜினி விரைவில் சந்திப்பு:தமிழக அரசியலில் உதயமாகிறது புதிய கூட்டணி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும், நடிகர் ரஜினியும், விரைவில் மும்பையில் சந்தித்து பேச உள்ளனர்.இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: நடிகர் ரஜினி, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், ஒரு மாதம் தங்கி, 'காலா' படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அப்போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும், அவரும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, தொலைபேசி மூலமாக, அமித் ஷாவும் ரஜினியும், ஆறு முறை பேசியுள்ளனர். ரஜினி, அரசியலுக்கு வருவதை, அமித் ஷா வரவேற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான பூர்வாங்க பேச்சு, ஏற்கனவே நிதின்…

  16. கடல் மட்டம் உயர்வு – நீாில் மூழ்கப் போகும் சென்னையின் ஒரு பகுதி! 2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர நகரங்களுக்கான கடல் மட்ட உயர்வு மற்றும் கடல்நீர் புகுவது பற்றிய வரைபட அறிக்கையை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விற்காக இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையிலிருந்து 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் சென்னை மற்றும் மும்பை நகரங்களே முதன்மை நகரங்களாக பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2040 ஆம் ஆண்டில் சென்னை பெருநகரப் பகுதியின் குறிப்பிட்ட பகுதிகள் 7.29 சதவிகிதம…

  17. ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம்| கோப்புப் படம். கிரானைட், மணல் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவுக்கு தடை கோரிய தமிழக அரசு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16-ம் தேதி) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவில்: "தமிழ்நாட்டில் நடந்த கிரானைட், மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு வழக்குகள் பதி…

  18. இலங்கை அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,இந்திய பெருங்கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமையுடன் அங்கு தங்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாவதை நான் மிகுந்த வேதனையுடன் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.இலங்கை அரசால் இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலை…

  19. ஊழல் மாநிலங்கள் பட்டியல் : 3வது இடத்தில் தமிழகம் புதுடில்லி: ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டியலில், கர்நாடகா முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக, 'நிடி ஆயோக்' ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை அளிக்கும் அமைப்பான, 'நிடி ஆயோக்'கின், ஊடக ஆய்வு களுக்கான மையம், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது சேவைகளைப் பெறுவதற்கு, மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து, நாட்டில் உள்ள, 29 மாநிலங்களில் 20ல், 3,000 நகர்ப்புற, கிராமப்புற மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் அடிப்படையில், ஊழல் மிகுந்த மாநிலங் கள் பட்டியலில்,க…

  20. கோவையில் 7 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: சந்தேகநபருக்கு மரண தண்டனை கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. பன்னிமடையைச் சேர்ந்த 1ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த மார்ச் 25ஆம் திகதி காணாமல் போனார். மறுநாள் அவரது வீட்டின் பின்புறத்தில் துணியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இது தொடர்பாக துடியலூர் பொலிஸார், சிறுமியின் வீட்டிற்கு எதிரே வசித்து வந்த தொண்டாமுத்தூரைச் சேர்ந்த…

  21. மதுரை: தனி தமிழ்நாடு அமைக்க உத்தரவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் தொடரப்பட்டுள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ம.தி.மு.க. மாநில செயலாளர் ஏ.பாஸ்கர சேதுபதி சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பிரதமர் நேரு காலத்தில் இருந்து இன்று வரை தமிழகத்தின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நதிநீர் பிரச்னை, நிதி ஒதுக்கீடு, மீனவர் பிரச்னை என்று அனைத்து தரப்பிலும் வஞ்சிக்கப்பட்டுகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் விரக்தியில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். …

  22. சிறையில் முறைகேடு: ரூபாவிடம் ரகசிய விசாரணை பெங்களூரு:பெங்களூரு மத்திய சிறையில், நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையிலான குழுவினர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி., ரூபாவிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா, பெங்களூரு மத்திய சிறையை ஆய்வு செய்து, சிறையில் சட்ட விரோத சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அனுபவிக்கும், அ.தி.மு.க., சசிகலா, முத்திரைத்தாள் மோசடி வழக்கின் தெல்கி போன்றோருக்கு, வி.ஐ.பி…

  23. விஜய்யின் மர்ம வியூகம்! திமுக-அதிமுகவின் கோட்டை உடைக்கப்படுமா? நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே), பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசியல் கட்சியாக, 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பொதுத் தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் (ECI) வகுக்கப்பட்ட விதிகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், கிரிக்கெட் மட்டை, வைரம், ஹாக்கி ஸ்டிக் மற்றும் பந்து, மைக்ரோஃபோன் (மைக்), மோதிரம் மற்றும் விசில் போன்ற சின்னங்கள் சாத்தியமான தேர்வுகளில் முதலிடத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றுள், கிரி…

  24. ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் ஏற்பட்ட தாமதத்தைப்போல, தற்போது லட்சத்தீவு மற்றும் மகாராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போயுள்ள 120 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்பதில் தாமதம் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளவில்லை, தூத்தூர்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 15 நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களில் பலர் இன்னும் திரும்பாததால், அவர்களை மீட்கக் கோரி உறவினர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2017 ஒக்கி புயல் பாதிப்பால் ஏற்பட்ட வலியிலிருந்து தாங்கள் இன்னும் மீளாதநிலையில், தற்போது காணாமல் போனவர்களை கண்டறிய தாமதம் செய்யக்கூடாது என வேதனையோடு பேசுகின்றனர் மீனவர்…

    • 0 replies
    • 427 views
  25. 11, ஜனவரி 2014 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சனிக்கிழமை விழுப்புரத்தல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். நாங்கள் கேட்பது என்ன? என்று அவர்களுக்கு தெரியும். எங்களுக்கு என்ன கொடுக்கலாம் என்றும் அவர்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த பிறகு தான் பேச்சுவார்த்தையில் இறங்குவோம். இப்போது மக்கள் பிரச்சினையை பார்த்து வருகிறோம். சட்டமன்ற தேர்தல் போலவே வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்போம். நாங்கள் மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சிகளும் கூட்டணியில் இருக்கிறோம். எங்களது நோக்கம் மத்தியில் பா.ஜனதாவும், காங்கிரசு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.