தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10257 topics in this forum
-
ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது - சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையினையும் தமிழக அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. எனவே, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு ரூ.2 கோடி மாநில அரசால் வழங்கப்படும். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கான தகுதியினைக் கொண்ட தடகளம், மேசைப்பந்து, நீச்சல், வாள் சண்டை மற்றும் பாய்மரப் படகோட்டுதல் ஆகிய விளையாட்டுகள…
-
- 0 replies
- 590 views
-
-
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தூத்துக்குடியில் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைக்குடியை சேர்ந்த இளம்பெண் பானுமதியும், அவரது சகோதரி ஜான்சிராணியும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த திங்கட்கிழமை புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில் தாங்கள் சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்தபோது அவரது கணவர் லிங்கேஸ்வரர், மகன் பிரதீப் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தனர். மேலும் சசிகலா புஷ்பாவும், அவரது தாயார் கௌரியும் தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்…
-
- 0 replies
- 679 views
-
-
சமாதான வளையத்தில் சசிகலா புஷ்பா! -கார்டனுக்காக களமிறங்கிய சீனியர் எம்.பிக்கள் பாலியல் புகார், பணமோசடிப் புகார் என தொடர் வழக்குகளால் கடும் நெருக்கடியில் இருக்கிறார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. ' பதவியை ராஜினாமா செய்துவிட்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், கட்சிக்குள் அம்மா சேர்த்துக் கொள்வார்' என சமாதானப்படலத்தைத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க எம்.பிக்கள். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் நடந்த மோதல் தொடர்பாக, கார்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. இதன்பின்னர் ராஜ்யசபையில் பேசிய சசிகலா, ' என் தலைவர் என்னை அறைந்தார்' என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ' அ.தி.மு.கவினரால் என் உயிருக்கு ஆபத்து. பாதுகாப்பு வழங்குங்கள்…
-
- 0 replies
- 616 views
-
-
இந்த தமிழர்களுக்காகவும் பேசுவோம்...! '2016 , ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள், தங்களுக்கு குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினர்' என்கிற செய்தியை இணையத்தில் வாசித்தபோது எனக்கு வேடர் காலனி நினைவிற்கு வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேர பயணம் வேடர் காலனி. தமிழகத்தில் இருக்கும் 107 அகதிகள் முகாம்களில் ஒன்றுதான் வேடர் காலனி. ஒரு குக்கிராமத்தை போல தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்த வெளி சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும். எனவே அறுபது வீடுகள். எல்லாம் அலுமினிய தகரத்தால் ஆனவை. அனைத்தும் ஐந்து ஆறு தெருக்களில் இறுக்கமாக அமைக்கப்பட்டு, அதற்குள்ளாகவே அந்த கிராமத்தின் எல்…
-
- 1 reply
- 759 views
-
-
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், பார்வையாளர்களுக்கு வருகின்ற 20-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.வருகின்ற 15-ம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மேலும், விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டு பாதுகாப்பு…
-
- 1 reply
- 422 views
-
-
ரூ.570 கோடி சிக்கிய விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு கோப்புப் படம். திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதாவது கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் பிடிபட்டது. கைப்பற்றப்பட்ட ரூ. 570 கோடி பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) சொந்தமானது என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்கள் காட்டப்பட்டதால் பிடிபட்ட பணம் ரிசர்வ் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. இதனிடையே ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்.பி. டி.கே.…
-
- 2 replies
- 856 views
-
-
பா.ம.கவின் அங்கீகாரம் ரத்து?! மரக்காணம் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு! மாமல்லபுரத்தில் கடந்த 2013ல் நடந்த சித்திரைப் பெருவிழாவில், இருசமூகத்தினருக்கு இடையே எழுந்த மோதல் தொடர்பாக, பா.ம.கவிற்கு எதிராக வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல் மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய டிவிஷனல் பெஞ்ச், 'மோசடி செய்து பா.ம.க அங்கீகாரம் பெற்றது தெரியவந்தால், தேர்தல் கமிஷனே பா.ம.க மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று' தீர்ப்பு அளித்துள்ளது. மாமல்லபுரம் வன்னியர் சித்திரை பெருவிழா; ஒரு பிளாஷ் பேக்! ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில், சித்திரை மாதம், பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் 'முழுநிலவு சித்திரை பெரு…
-
- 0 replies
- 1k views
-
-
“நானே கடவுள்” ஜக்கி பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.! (காணொளி இணைப்பு ) ஜக்கி வாசுதேவ்வின் மாய வலையில் சிக்கியுள்ள எனது இரு மகள்களையும் மீட்டுத் தாருங்கள் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான முனைவர் காமராஜ் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். கோயம்புத்தூர் – செம்மேடு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள இந்த மையமானது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடம் என்று சொல்லப்படுகிறது. இங்கு தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா இ…
-
- 2 replies
- 4.3k views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய ஜெயலலிதா வழக்கறிஞர்களுக்கு மேலும் முக்கிய பொறுப்புகள்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுடன் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி, உயர் நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என கடந்த 20 ஆண்டுகளாக பயணிக்கிறது…
-
- 0 replies
- 447 views
-
-
சேலம் மாவட்டத்தில் காதலிக்கும் படி நபர் ஒருவர் வற்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் நடுரோட்டில் வைத்து முத்தம் கொடுக்க முயற்சித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ராணி என்ற மாணவி, அங்கிருக்கும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை சந்தீப் (22) என்ற நபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்குமாறும் வற்புறுத்தி வந்துள்ளார்.ராணி பள்ளிக்கு செல்கையில் தினமும், அவரை வழிமறுத்து என்னை திருமணம் செய்துகொள் என வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ராணியை வழிமறித்து மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு ராணி மறுத்துவிட்டு விலகிச்செல்லவே, அவரை வழிமறித்து முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். …
-
- 4 replies
- 875 views
-
-
சென்னையில் நடந்த கொரிய இசைவிழா! கொரிய தொடர்கள் உலகின் பல்வேறு இடங்களில் பிரபலமாகி வருகின்றன. தமிழ்நாட்டிலும் தான். இப்போதெல்லாம் எந்த கல்லூரி மனைவியிடம் கேட்டாலும் குறைந்தது பத்து தொடர்களை பார்த்ததாக கூறுகிறார்கள். அந்த தொடர்களின் பின்னால் ஒலிக்கப்படும் பாடல்கள் பெண்களை கவர்ந்திழுக்கின்றன. அதைப் பற்றிய தேடல்களில் k-pop குறித்த அறிமுகம் அவர்களுக்கு கிடைக்கிறது. மேற்கத்திய இசையையும் அவர்களின் (கொரிய மக்களின்) இசையையும் ஒன்று சேர்த்து வழங்குவதே K-pop ஸ்டைலாகும். இதில் பல்வேறு நபர்கள் சேர்ந்து ஒரு குழுவை (பெண்கள் குழு, ஆண்கள் குழு) அமைக்கிறார்கள். இந்த பாடகர்களுக்கு ஆடவும் தெரிந்திருக்க வேண்டும். பாடிக் கொண்டே ஆடும் இக்குழுவினர், தங்களுக்கான ஆல்பங…
-
- 0 replies
- 603 views
-
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவபொம்மையை எரித்து மாபெரும் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இலங்கை அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து குறித்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 107 தமிழர்கள் உயிரிழப்புக்கு நீதி விசாரணை கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த முற்றுகைப் போராட்டத்தில் கோவை ராமகிருஷ்ணன் உட்பட போராட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். http://www.tamilw…
-
- 0 replies
- 527 views
-
-
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ரகசிய வாக்குமூலம் அளிக்க இருக்கிறார் பிலால். இவர், நுங்கம்பாக்கத்தில் படுகொலையான சுவாதியின் நண்பர். ' கொலையாளியைப் பற்றி அவருக்கு முன்பே தெரியும். பிலாலுடன் சுவாதியின் தோழியும் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளிக்க இருக்கிறார்' என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞரை நெல்லையில் கைது செய்தது தனிப்படை. கழுத்தில் காயத்தோடு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம்குமாரிடம், மாஜிஸ்திரேட் ராமதாஸ் ரகசிய வாக்குமூலம் வாங்கினார். ' சுயநினைவு இல்லாமல் மயக்கத்தில் இருப்பவரிடம் எப்…
-
- 0 replies
- 739 views
-
-
கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டடத்துக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையை மாற்றியது ஏன் என்று திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்திடம் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மா.சுப்பிரமணியன் பேசும்போது, "வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பேரவையில் நடுநாயமாக அமர்ந்துள்ளீர்கள் என்று பேரவைத் தலைவர் ப.தனபாலைப் பார்த்துக் கூறி, ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதனை அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசியது:- வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பேரவை என்று குறிப்பிட்டுத் திமுக எம்எல்ஏ பேசினார். இந்த அளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்…
-
- 0 replies
- 273 views
-
-
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடியைச் சேர்ந்த ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதற்காக நாகர்கோவிலில் சிகிச்சை பெற முடிவு செய்த அவர் தனியார் ஆம்புலன்சை ஏற்பாடு செய்து அங்கிருந்து புறப்பட்டு வந்தார். அவருடன் உதவிக்கு 2 பேர் வந்தனர். ஆம்புலன்சை களக்காடு சாலைப்புதூரைச் சேர்ந்த சேர்மத்துரை (வயது 40) என்பவர் ஓட்டினார். நேற்று இரவு 8.30 மணிக்கு ஆம்புலன்சு தோவாளை ஆற்றுப்பாலத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த அரசு பஸ் ஒன்றை உரசியபடி ஆம்புலன்சு வேகமாக வந்தது. அப்போது தோவாளை புதூரைச் சேர்ந்த சுரேந்திர குமார் என்பவரது மனைவி முத்துப்பேச்சி (35) என்பவர் ரோட்டில் நடந்து வந்தார். தறிகெட்டு ஓடி வந்த ஆம்புலன்சு முத்துப்பேச்சி மீது மோதியது. பின…
-
- 0 replies
- 411 views
-
-
சென்னையில் உள்ள பல்வேறு மதுபான விடுதிகளில் மது விநியோகம் செய்யவும், நடனமாடவும் சிறுமிகளை உட்படுத்துவது தெரியவந்துள்ளது.போதை தலைக்கேறிய ஆசாமிகள் சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது."கண்கவர் நடனம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்", மதுப்பிரியர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக சென்னையில் உள்ள மதுபான விடுதிகள் அறிமுகப்படுத்தியுள்ள யுக்தி இது.மதுபான விடுதிகளில் நடனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், பொலிசாரின் ஒத்துழைப்புடன் இதுபோன்ற தவறுகள் நடந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் எந்தெந்த இடங்களில் உள்ள மதுபான விடுதிகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுகின்றன என்பதையும் அவர…
-
- 0 replies
- 549 views
-
-
பிரபாகரனைச் சந்திக்க சென்றபோதே ராணுவம் என்னைச் சுட்டுக்கொன்றிருந்தால்... - வைகோ 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த மதிமுக, மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை முன்னிறுத்தித் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி நேற்று(வெள்ளி) கிருஷ்ணகிரி,தர்மபுரி மாவட்டங்களுக்கான மதிமுக செயல் வீரர்கள் கூட்டம், தருமபுரியில் நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய வைகோ, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நான் பார்க்க சென்றபோதே, இந்திய ராணுவம் என்னைச் சுட்டுக் கொன்றிருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்க…
-
- 0 replies
- 404 views
-
-
சென்னை, ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், நடிகருமான சோ வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் பல முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தை பார்ப்பதற்கு ஆசைப்பட்டார். அதற்கான ஏற்பாடுகளை செய்து, அவர் கபாலி படத்தை பார்த்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோ தற்போது நலமுடன்…
-
- 6 replies
- 726 views
-
-
தமிழகம்: 570 கோடி ரூபாய் பணம் விவகாரம், சிபிஐ-யிடம் தி.மு.க மனு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சோதனையின்போது பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ள தி.மு.க., அவற்றை விசாரிக்கும்படி மத்தியப் புலனாய்வுத் துறையைக் கோரியுள்ளது. இது தொடர்பாக தி.மு.கவின் மாநிலங்களவை எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன், மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குனரைச் சந்தித்து அளித்த மனுவில் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். இந்தப் பணம் தொடர்பாக தன்னிடம் முக்கிய ஆதாரங்கள் இருப்பதால், தன்னை அழைத்து விசாரிக்க வேண்டுமென்றும் இளங்கோவன் கூறியிருக்கிறார். பாரத ஸ்டேட் வங்கியின் விசாகப்பட…
-
- 0 replies
- 440 views
-
-
நிர்க்கதியான இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து படகில் எற்பட்ட இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான 3 இந்திய மீனவர்களை மீட்டு இந்திய கடலோர காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான குறித்த மீனவர்களை மீட்டதுடன், குறித்த தகவலை இந்திய கடலோர காவற்படையினரிடம் அறிவித்து, குறித்த மீனவர்களையும் அவர்களுடைய படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைத்தள்ளனர். http://www.virakesari.lk/article/9836
-
- 1 reply
- 408 views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, 2ஜி விவகாரம் தொடர்பாக எடுத்த முடிவுகளுக்குத் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா கைது செய்யப்பட்டு சுமார் 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கும் புத்தகத்தை வரும் நவம்பரில் வெளியிட இருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு ‘இன் மை டிபன்ஸ்' என ராஜா பெயரிடப்பட்டுள்ளார்.இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. எனவே, அதே கால …
-
- 0 replies
- 329 views
-
-
படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி பயன்படுத்திய 14 சிம் கார்டுகள் மற்றும் மடிக்கணணி குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என கைது செய்யப்பட்ட ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராம்குமார் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் இன்று சென்னையில் நிருபர்களுடன் பேசினார். அப்போது, சுவாதி கொலை வழக்கை விரைந்து முடிக்க நீதித் துறையையும் காவல்துறை துணைக்கு அழைப்பதாக ராமராஜ் குற்றம்சாட்டினார். மேலும், ராம்குமார் தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்ய தான் தேவையான தகவல்களை திரட்டி வருவதாகவும் வழக்கறிஞர் ராமராஜ் தெ…
-
- 1 reply
- 604 views
-
-
பிரபல செருப்பு நிறுவனத்தின் செருப்பில் கறுப்பினத்தவரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதால், சர்ச்சை எழுந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி புதுரோட்டை சேர்ந்தவர் ஏ.தெ.சுப்பையன். இவர் கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் என கூறப்படுகிறது.இவர் அதே பகுதியை சேர்ந்த செருப்பு கடையில் செருப்பு ஒன்று வாங்க சென்றுள்ளார். கேரளாவில் தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் பிரபல செருப்பு நிறுவனமான வி.கே.சி நிறுவனத்தின் செருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.செருப்பை வாங்கி அதன் உள்பகுதியை கவனித்த போது, அதில் கறுப்பினத்தவரின் புகைப்படம் அச்சிடப்பட்டு, அதன் மேல் ஒரு ஆங்கில கவிதை ஒன்று இடம் பெற்றிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், செருப்பை வாங்கிய கடையில் தி…
-
- 0 replies
- 706 views
-
-
' ராஜீவ் கொலை சதியோடு இந்தியா வரவில்லை என்பதை சொல்வீர்களா?' -சி.பி.ஐ அதிகாரிக்கு சாந்தனின் கண்ணீர் கோரிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சாந்தன். ' வெளிநாட்டு வேலைக்காத்தான் இந்தியா வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி ஒருமுறையேனும் பகிரங்கமாக வெளியில் சொல்வீர்களா' என தன்னைக் கைது செய்த காவல்துறை உயர் அதிகாரிக்கு வேண்டுகோள் வைக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளன…
-
- 0 replies
- 587 views
-
-
சென்னையில் வேகமாகப் பரவும் அரேபிய உணவு கலாசாரம் (காணொளி) அரபு உணவுக்கூடங்கள் என்பது இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் முன்னதாகவே அறிமுகமான ஒன்றுதான். நூற்றுக்கணக்கான பிரத்யேக அரேபிய உணவுக்கூடங்கள் மாநிலம் முழுவதும் இயங்கி வந்திருக்கின்றன. ஆனாலும், தமிழகத் தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் அவற்றின் வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஷவர்மா என அழைக்கப்படும் உணவு வகைகள் விற்கப்படும் துரித உணவு கூடங்கள் சென்னையில் பெருகி வருகின்றன. துரித உணவு கலாச்சாரத்திற்கு மாறி வரும் இளைய தலைமுறையினர் பலர் தற்போது இந்த உணவை அதிகம…
-
- 1 reply
- 845 views
-