Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நளினிக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்த நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இன்று வாதாடினார். விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் 30 நாட்கள் பரோல் வழங்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நளினிக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதி பரோல் கோரி மனு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நளினி நேரில் ஆஜராவதில் சிக்கல் உள்ளது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இ…

    • 0 replies
    • 796 views
  2. நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். …

  3. நளினிக்கு வீடு இன்மையால் பரோல் மறுப்பு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற, நளினிக்கு சொந்தமாக வீடு இல்லை என்பதனால், அவருக்கு பரோல் வழங்குவதற்கு நன்னடத்தை அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. தல்வர் பழனிசாமியை சந்தித்து முறையிட உள்ளதாக, நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது கணவர் முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ளார். இவர்களது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடு நடந்துவர…

  4. துடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனைவியிடம் சி.பி.ஐ,. ரகசிய விசாரணை நடத்தியுள்ளது. சென்னையில் பிரபல வக்கீலான இவர் பலரை ஏமாற்றிய நிதி நிறுவனம் சாரதா சிட்பண்ட் நிறுவன அதிபரிடம் ரூ. ஒரு கோடி வாங்கியதாகவும், மேலும் இவரை காப்பாற்ற தான் துணை இருப்பதாகவும் கூறியதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது என்றாலும், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ.,க்கு கிடைத்த கடிதம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேற்கு வங்கம் கோல்கட்டாவை மையமாக கொண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் கொடி கட்டி பறந்தது. இந்த நிறுவனத்தில் பணம் போட்ட அப்பாவி மக்களுக்கு முதிர்வு தொகை தராமல் அந்த நிறுவனம் இழுத்து மூடியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுத…

  5. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினியால் தொடரப்பட்ட வழக்கை சென்னை மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு அனுமதியளிக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை மேல் நீதிமன்றில்; மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணையின…

    • 0 replies
    • 409 views
  6. நளினியின் தந்தை மரணம்: இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினியின் தந்தை சங்கரநாரயணன் இன்று உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பரோலில் செல்ல நளினிக்கு வேலூர் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடா நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்றவர் நளினி. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையால் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தற்போது வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன் …

    • 8 replies
    • 788 views
  7. நளினியின் பிணைக்காலம் நீடிப்பு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் பிணைக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணைக்காலத்தை நீடிக்ககோரி நளினி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன் மகளின் திருமணத்திற்காக கடந்த மாதம் 25ஆம் திகதி பிணையில் விடுதலையானார். இந்நிலையில், நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பிணைக்காலத்தை காலத்தை …

  8. விடுதலை செய்யக் கோரிய, நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட். டெல்லி: கடந்த 23 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனைக் கைதி நளினியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்து உத்தரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் ஆறு பேரில் நளினியும் ஒருவர். தற்போது வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதானவர்களில் நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ஜெயக்க…

  9. வேலூர் சிறையில் 23 ஆண்டுகளாக வாடிய மன நலம் பாதித்த ஆயுள் தண்டனை கைதியான பக்கா என்ற விஜயா இம்மாதம் 19-ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் முயற்சியாலேயே விஜயா விடுதலை ஆகியுள்ளார். உருக்கமான காதல் விஜயா ஒரு நடனக் கலைஞர். ஆனால் மாபெரும் அரங்குகளின் மேடைகளில் நடனமாடும் கலைஞர் அல்ல. சாதாரண மக்களுக்காக வீதிகளில் நடனமாடும் நாடோடிக் குடும்பம் ஒன்றின் கழைக்கூத்தாடி கலைஞர் அவர். அவரின் நடனத்தால் மயங்கிய சுப்பிரமணியன் என்பவர் விஜயாவிடம் காதல் வயப்பட்டார். இதனால் சுப்பிரமணியனை அவரது சுற்றத்தார் ஒதுக்கினர். ஆனால் சுப்பிரமணியனோ தனது காதலில் உறுதியாக இருக்க விஜயாவும் அவரது காதலை ஏற்றுக் …

  10. நளினியின் விருப்பத்தை அறிந்து சொல்லுங்கள்: சட்டதரணிக்கு நீதிபதிகள் உத்தரவு! In இந்தியா June 18, 2019 10:10 am GMT 0 Comments 1117 by : Yuganthini காணொளி ஊடாக வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்வது தொடர்பான நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு நளினியின் சட்டத்தரணிகளிடம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினி, இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயு…

  11. நளினியை நேரில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினியை எதிர்வரும் 5 ஆம் திகதி நேரில் முன்னிலைப்படுத்துமாறு வேலூர் சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரிய நளினியின் மனு மீதான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள் வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினி, தனது சட்டத்தரணி ஊட…

  12. நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, வேலூர் சிறையில் உள்ள நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரின் தாய் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரது தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் வேலூர் சிறையில் உள்ள நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனக்கு 80 வயதாகும் நிலையில், தன் மகளை வேலூருக்கு சென்று பார்த்து வருவதில் சிரமம் இருப்பதாக அந்…

  13. நளினியை முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல்!: நீதிமன்றம் கேள்வி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளதென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனிலுள்ள தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஆறு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமனறத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த மனு மீதான விசாரணையின் போது, நேரில் முன்னிலையாகி வாதிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றத்தை அவர் கோரியிருந்தார். குறித்த மனு மீதான வழக்கின் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்…

  14. நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் சென்னை: முன்கூட்டியே விடுவிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் படி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதியான நளினி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று மனுவை தள்ளுபடி செய்துள்ளத…

  15. நளினியை விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றில் மத்திய அரசு தகவல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றில் இந்திய மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை உயர்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை. இதற்கிடையில், ராஜீவ…

    • 3 replies
    • 821 views
  16. நளினியை விடுவிக்க முடியாது! - தமிழக அரசின் திடீர் விளக்கம் Chennai: எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு 10 ஆண்டு, 20 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை வரும் 25-ம் தேதி விடுவிக்க கடந்த1-ம் தேதி தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்த…

  17. நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 20 வருடங்கள் சிறைய…

  18. நளினியைச் சந்திக்க அனுமதி கோரி சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் மனு 14 Views நளினியைச் சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும் எனவும், தனக்கு சிறையில் விதிக்கப்பட்ட தடைகளை இரத்து செய்ய வேண்டும் எனவும் சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் மனு அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச் சிறையிலும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். முருகன்-நளினி தம்பதி என்பதால் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரண…

  19. நள்ளிரவில் நடந்த ரகசியப் பேச்சு! பன்னீர்செல்வம்- பழனிசாமி அடுத்த மூவ் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்- முதல்வர் பழனிசாமி அணியினர் நள்ளிரவில் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரு அணி தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை சசிகலா ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க மூன்றாக உடைந்தது. சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, தீபா அணி எனப் பிரிந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து இரட்டை இலைச் சின்னம் கேட்டு இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவைத்தனர். இருதரப்பினரின் வாதத்துக்குப் பின்னர் அ.தி.மு.க பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல…

  20. மிஸ்டர் கழுகு: நள்ளிரவில் பணத்தை திருப்பிக் கொடுத்த அமைச்சர்! உள்ளே நுழைந்த கழுகார், இந்த இதழுக்காகத் தயாராகிவரும் அட்டையைப் பார்த்துச் சிரித்தார். “ஐயோ பாவம், எடப்பாடி! அவர் என்ன செய்வார்? எத்தனை நாள்களுக்கு ஆட்சியோ... அதுவரை அமைதியாக ஓட்டுவோம் என்று சைலன்ட் ஆக்டிங் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லையாம்!” என்றபடி செய்திகளைக் கொட்டத் தயாரானார் கழுகார். “தமிழகத்தைத் திரைமறைவில் ஆள்வது மத்திய அரசுதான் என்பது பழைய செய்திதான். ஆனால், மிரட்டல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்களே?” என்று இடைமறித்தோம். “இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே? பி.ஜே.பி அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களில், …

  21. ஆழ்கடலில் மீன் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக 60 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால் சென்னை நீலாங்கரை முதல் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வரையிலான விசைப்படகுகளை மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மீன் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடைவிதித்துள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு 45 நாட்கள் மட்டுமே இத்தடைக்காலத்தை கடைபிடித்து வந்தது. ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் என்ற நடைமுறையை அரசு பின்பற…

  22. சென்னை: ஐ.நா. வின் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளைக் கண்டு அறிய, தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, கொடுந்துயருக்கு ஆளானவர்களைச் சந்தித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா என்பவன், ‘நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன்; இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன்' என்று கொச்சைப்படுத்தி இருக்கிறான். நீதிக்காகவே வாழ்கின்ற, போற்றத்தக்க மாதரசியான நவநீதம் பிள்ளை அவர்களை, இப்படி இழிவுபடுத்தி சிங்கள அமைச்சர் ஒருவன் பேசுகிறான் என்றால், ஏராளமான தமிழ்ப் பெண்களை, சிங்களவர்கள் கற்பழித்துக் கொன்ற கொடூரத்தின் பிரபதிபலிப்புத்தானே மெர்வின் சில்வாவின் இந்தத் திமிர்ப் பேச்சு? சிங்களவர்க…

  23. மிஸ்டர் கழுகு: நவம்பரில் கமல் கட்சி... டிசம்பரில் ரஜினி கட்சி! ‘‘கோட்டையைச் சுற்றிவந்த அரசியல் புயல், கோடம்பாக்கத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது” என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘கமலையும் ரஜினியையும் சொல்கிறீர்களா?’’ என்று தகவல்களைக் கேட்கத் தயாரானோம். ‘‘ரஜினி குறித்து ‘முரசொலி’ பவளவிழாவில் கமல் பேசியது ரஜினி மனதில் காயத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. அதன்பிறகு ரஜினியைச் சந்தித்திருக்கிறார் கமல். ‘நான் உங்களைப்பத்தி பேசுனது வேறு. எல்லோரும் தப்பா புரிஞ்சுக்கிட்டு கைதட்டிட்டாங்க’ என்று கமல் சொன்னாலும், ரஜினி மனம் சமாதானமாகவில்லை என்பது சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழாவில் அப்பட்டமாக வெளிப்பட்டது. கமலின் ‘முரசொலி’ விழா பேச்சுக்குப் பதில் சொல்வதுபோல இரு…

  24. நவம்பர் 26 - தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள். இந்த நாளை கொண்டாடுவதற்கு உலகத் தமிழர்கள் கடந்த ஒரு வார காலமாகவே ஆயத்தமாகி வந்தனர். தமிழர் நலன் சார்ந்த பல கட்சிகள் இந்த நாளை தமிழின எழுச்சி நாளாக கொண்டாடுகின்றன. இருப்பினும் தமிழக அரசு பிரபாகரன் பிறந்த நாளை யாரும் கொண்டாடக் கூடாது என்றும் , பிரபாரகன் படத்தை பொது இடங்களில் வைக்கக் கூடாது என்று காவல்துறைக்கு கட்டளையிட்டு உள்ளது. என்ன தான் தமிழக அரசு தடை சொன்னாலும் , பிரபாகரன் தமிழினத்தின் தலைவர் , அவர் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடாமல் இருக்க மாட்டோம் என்று பல தமிழ் கட்சிகள் , இயக்கங்கள் , அமைப்புகள் ஏற்கனவே இந்த நாளை கொண்டாடி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்துகள் ! தமிழக இணைய பயன்பா…

  25. நவம்பர் 6ம் தேதி 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நீதிமன்றம் அனுமதி 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்.எஸ்.எஸ். பேரணி - கோப்புப்படம் நவம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.