Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 2017-ல் சசிகலாவை வரவேற்கும் சவால்கள்! அ.தி.மு.க-வையும், ஆட்சியையும் தன் கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. சசிகலா, 'சின்ன அம்மா' என அழைக்கப்படுவது... திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி, பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி; எம்.ஜி.ஆருடன் அரசியல் தொடர்பில் இருந்து; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல பொதுக்கூட்டங்களில் பேசி; மக்களோடு மக்களாகக் கலந்து; பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தித்து; அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் ஜெயலலிதா. கடந்த டிசம்பர் 5-ம் தேதி அவர், மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் தமிழகத்துக்கும், அ.தி.மு.க-வுக்கும் …

  2. சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்திய‌ கைதிகள் சிறையில் தாக்கப்பட்டது உண்மை: மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்திருக்கிறார் என முன்னாள் டிஐஜி ரூபா கடந்த ஜூலை மாதம் புகார் தெரிவித்தார். அப்போது சிறையில் சசிகலா, தெல்கி உள்ளிட்ட விஐபி கைதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் தொடர்பாக கைதிகள் ரூபாவிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார், அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கைதிகளை சரமாரியாக த…

  3. அதிகார போட்டியில் வெல்லப் போவது யார் ஒட்டு மொத்த தமிழக மக்களும் காத்திருப்பு சென்னை:''அ.தி.மு.க.,வில் நடக்கும் அனைத்து விபரங்களையும், கவர்னரிடம் தெரிவித்தோம்; அவர் நல்ல முடிவை அறிவிப்பார். நமக்கு நல்லதே நடக்கும்,'' என, கவர்னரை சந்தித்த பின், முதல்வர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவும், கவர்னரை சந்தித்து பேசியுள்ளார். எனவே, இரு தரப்புக்கும் இடை யிலான இந்த அதிகாரப் போட்டியில், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆளும், அ.தி.மு.க.,வில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில், சசிகலா தரப்பு…

  4. சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற முடிவு? - உள்துறை அதிகாரிகள் அறிக்கையால் பரபரப்பு அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா | படம்: பிடிஐ. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக கர்நாடக அரசின் உள்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டதில் இ…

  5. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் வெள்ளிக்கிழமை கருணாநிதி அறிக்கையாக வெளியாகியுள்ளது.. கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே பதில்: இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது. கே: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா ப: உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன…

  6. ' நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!' -கட்சித் தலைவர்களிடம் மனம் திறந்த கவர்னர் அப்போலோவுக்கு இணையாக தினசரி தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கிறது கிண்டி ராஜ்பவன் மாளிகை. ' பொறுப்பு முதல்வரை நியமிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆளுநரின் சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஆனால், அப்படியொரு எந்த ஓர் அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்பிறகு, ஆளுநரை சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்…

  7. ஜெயலலிதா கலந்து கொள்ள இயலாததால் 4 அமைச்சர்கள் இல்ல திருமணம் ரத்து! சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் 4 அமைச்சர்களின் இல்ல திருமணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சர்களான வைத்திலிங்கம், காமராஜ், முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் சண்முகநாதன் ஆகிய நால்வரும், தங்களின் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி வைக்க ஜெயலலிதாவிடம் தேதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து முதல்வர் அமைச்சர்களின் இல்ல திருமணங்களில் பங்கேற்பதாகக் கூறி டிசம்பர் 6 ம் தேதியை முகூர்த்த நாளாகவும் நிர்ணயித்து,திருமண ஏற்பாடுகளை நடத்த அனுமதியளித்துள்ளார்.இதனையடுத்து திருமண வேலைகள் தடபுடலாக நடந்து வந்தது. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ.க்க…

  8. வரியை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் மதுபான விலை உயர்கிறது! இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதனால் மதுபானத்தின் விலை உயர்கிறது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக சாதாரண வகை 180மிலி மதுபான போத்தலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் வகை 180மிலி போத்தலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் நாளை முதல் உயர்த்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/வரிய…

  9. அரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைத்து விட்டதாகவும், அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கி இருப்பதாகவும் கமல்ஹாசன் மனம் திறந்து கூறியுள்ளார். #Kamalhaasan #Rajinikanth ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியலுக்கு வந்துள்ளனர். கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” எனும் கட்சியை கடந்த மாதம் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் செல்ல சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அடுத்த மாதம் திருச்சியில் அவர் மாந…

  10. கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? தங்கவேல் அப்பாச்சி ஆசிரியர், பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் (2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.) ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "என்னிடம் கொஞ்சம் கடன் வாங்க…

  11. செம்மரங்களை வெட்டச்சென்றதாகக் கூறி 84 தமிழர்கள் ஆந்திராவில் கைது பகிர்க ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காகச் சென்றதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை ஆந்திர காவல்துறை கைதுசெய்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற இடத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். செம்மரங்களை வெட்ட கூலித் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, செம்மர கடத்தல் தடுப்பு காவல்துறையினர், திருப்பதி - கடப்பா சாலையில் வந்த ஒரு லாரியை சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு துரத்திச் சென்றனர். …

  12. ‘‘அக்காவுக்கு துரோகம் செய்தவர்களை.....?!" சசிகலா மன்னிப்பு கேட்ட நாள் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியை சசிகலா குடும்பம் இப்போது பங்கு போட்டுக்கொண்டிருக்கிறது. 2011-ம் ஆண்டிலும் இதேபோல சதித் திட்டம் தீட்டப்பட்டதால் சசிகலா உள்பட அவரது குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். 2011 டிசம்பர் 19-ம் தேதி இது அரங்கேறியது. மூன்று மாதங்களில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். அந்த நேரத்தில், அதாவது 2012 மார்ச் 28-ம் தேதி சசிகலா வெளியிட்ட அறிக்கை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘'அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.பி. எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்'' என்றெல்லாம் அந்த அறிக்க…

  13. 'ஜெயலலிதா உயில் என்னிடம்தான் உள்ளது' : தீபக் பரபர தகவல்..! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிரிந்தது. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஒரு பேரவை துவங்கி தனி வழியில் சென்றார். தீபாவின் சகோதரர் தீபக் சசிகலா அணிக்குதான் ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அவர் தினகரனுக்கு எதிராக குரல் கொடுத்தார். பின், பன்னீர்செல்வம், சசிகலா அணியில் இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தீபக்கின் புதிய கருத்து ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீபக் கூறுகையில், "என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என…

  14. இந்திய சிறப்பு முகாமில் இருந்த 10 இலங்கை தமிழர்கள் விடுதலை...! தமிழக எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், நே்ற்றிரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உள்ளனர். இவர்கள், “பொய் வழக்கில் கைது செய்த எங்களை அந்த வழக்கின் தண்டனை காலம் முடிந்தும் ஏதாவது ஒரு காரணத்தைச் …

  15. இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் ஜெயலலிதா 20 நிமிடம் பேசினாரா: விசாரணையில் கேள்வி சென்னை:''சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 2016 டிச., 3ல், எய்ம்ஸ் மருத்துவர்களுடன், ஜெயலலிதா, 20 நிமிடம் பேசினார். மறுநாள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுஉள்ளது,'' என, சசிகலா வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் தெரிவித்தார். ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், சசி உறவினர்கள், கிருஷ்ணப்பிரியா, விவேக் மற்றும் ஜெ., உடலை, 'எம்பார்மிங்' செய்த, டாக்டர் சுதா சேஷய்யன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி,வெங்கட்ரமணன், அரசு மருத்துவர், சுவாமிநாதன் ஆகியோரிடம், நேற்று குறுக்கு விசாரணை நடந்தது.விசாரணைக்கு பின், ராஜா செந்துார் பா…

  16. தமாகா போட்டியிடும் 26 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு வாசன் | கோப்புப் படம் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். அக்கட்சி போட்டியிடும் 26 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்: 1. ராயபுரம் - பிஜூ சாக்கோ 2. மைலாப்பூர் - ஏ.எஸ். முனவர் பாட்சா 3. காட்பாடி - டி.வி.சிவானந்தம் 4. அணைக்கட்டு - பி.எஸ். பழனி 5. வாணியம்பாடி - சி.ஞானசேகரன் 6. பர்கூர் - எம்.ஆர…

  17. ரஜினியை ஓரம்கட்ட தான் கமல் களமிறங்குறாரா ? | Socio Talk | Rajinikanth vs Kamal Haasan நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வரலாமா? ரஜினி அரசியல் பேசிய பிறகு தான் கமல் திடீர் களத்தில் குதிக்க என்ன காரணம்? இருவரில் யார் முதலில் அரசியலுக்கு வருவார்? மத்திய அரசுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தது சரியா? அன்று முதலே ஜெயலலிதாவுக்கு பிடிக்காத மனிதர் கமல். இன்னும் பல கேள்விகளும் விடைகளும்.

  18. ஜூனியர் விகடன் 26 Feb, 2014 சளைக்காத சட்டப்போராட்டம்! ========================= ''நெருப்பில் எரியும் உடல் விரைவில் வெந்து தணிந்துவிடுகிறது. ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் கைதியின் உடலும் மனமும் தூக்கிலிடப்படும் நாள் வரை ஒவ்வொரு நொடியும் எரிகிறது; தவிக்கிறது; துடிக்கிறது. இந்தக் குரூரத்துக்கு நாகரிக சமூகத்தில் நிச்சயம் இடம் இருக்க முடியாது' என்று சுட்டிக்காட்டி மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதனை ஏற்று முருகன், சாந்தன், பேரறிவாளனை மட்டுமல்ல; ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. இதனை சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்…

  19. அரசியல் புயலுக்கு ரெடியாகவும்.. நாளை மறுநாள் வெளியாகிறது தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு? 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், 19 எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதில், ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பாக ஆஜராகி…

  20. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் தாக்கியதில் ஒருவர் பலியானார். பலியான நபரின் குடும்பத்திற்கு அரசு சார்பில், 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது ஏன்? News18 Tamil Last Updated : April 13, 2021, 08:00 IST வழிப்பறியில் ஈடுபட்ட சக்திவேலைப் பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவானது எப்படி? திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள புனலப்பாடி கிராமத்திற்கு, கடந்த 9ம் தேதி அன்று விவசாய வேலைக்காக 23 வயதான மோகன் என்பவர் சென்றுள்ளார். வேலை முடிந்த பின் அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தை…

  21. இந்தியாவுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை உலக வங்கி வழங்கவுள்ளது என்று, உலக வங்கித் தலைவர் ஜிம் யாம் கிம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டார் உலக வங்கித் தலைவர் ஜிம் யாம் கிம். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களை சந்தித்த பின்னர் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் சென்று அம்மாநில முதல்வர்களையும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜிம் யாங் கிம், இந்தியாவில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்க சாதி மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட 17 வயது பட்டியல் சாதி மாணவர் மற்றும் அவரது 14 வயது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 11 ஆகஸ்ட் 2023, 12:05 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று பாடநூல்கள் கூறுகின்றன. ஆனால், கல்வி பயிலச் சென்ற பள்ளியில்தான் ஒரு பட்டியலின மாணவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதையும் மீறி பள்…

  23. புதுடெல்லி: சாலை விபத்துக்களில் நாள் ஒன்றுக்கு 400 பேர் பலியாகின்றனர். அதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கையை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டு உள்ளார். அதனை வெளியிட்டு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் 5 லட்சத்து ஆயிரத்து 423 விபத்துகள் நேரிட்டுள்ளது. அதில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 671 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நாள்தோறும் 1,374 விபத்துகள் ஏற்படுவதாகவும், அதில் சராசரியாக 400 பேர் பலியாவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் ஒரு மணி நேரத்தில் 5…

  24. "கரன்ட் பில் கட்டச்சொல்லி ஆன்லைன் மோசடி" - புதிய திருட்டு, என்ன தீர்வு? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணைய பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிப்புக்குப் பிறகு சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களை இலக்கு வைத்து ஆன்லைனில் நூதன மோசடியில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகரிக்கும் ஆன்லைன் நூதன மோசடி வாடிக்கையாளர் சேவை வழங்கும் நிறுவனங்கள் வங்கிகள், வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்பேசி வ…

  25. பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து சிறீலங்காவினை தற்காலிகமாக நீக்கவேண்டும் என்று கோரி தமிழகம் புதுக்கோட்டையில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகம் புதுக்கோட்டையிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுக்கோட்டைதோப்புக்கொள்ளையில் அமைந்துள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளை ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் அங்கீகரித்து பெயர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டிலுள்ள அகதிகளை விருப்பத்திற்கு மாறாக சிறீலங்காவிற்கு அனு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.