தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக முதல்வரிடம் முறையிட திரைப்பட சங்கங்கள் முடிவு! சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரணியாக சென்று முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிடப்போவதாக தமிழ்த் திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் இன்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழ் திரையுலக சங்கங்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் நாசர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கூறுகையில், "பேரறிவாளன் உட்பட 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு …
-
- 0 replies
- 498 views
-
-
'தை பிறந்தால் வழி பிறக்கும்' சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் 'தை பிறந்தால் வழி பிறக்கும்'- என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இந்த முறை தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றிலிருந்து நான்கு மாதத்தில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்திருக்கும். அது, தற்போது இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.தி.மு.க) அரசாகவே இருக்குமா அல்லது அதற்கு போட்டியாக களத்தில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) அரசாக இருக்குமா என்பதே 'பொங்கல் பட்டிமன்றமாக' தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆம், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, மே மாதத்தில் புதிய அரசு அமைய வேண்டும். அந்த ஜனநாயக திருவிழாவில் எந்தெந்தக் கட்சிகள் யார் யாரோடு உறவாடும் அல்லது பகையாடும் என்பது இ…
-
- 0 replies
- 516 views
-
-
மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுகின்றதா....? [Sunday 2016-01-17 08:00] கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் 80 ஆயிரம் காளைகள் விற்கப்பட்டதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.இந்தத் தடையால் நாட்டு மாடுகள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.ஏர் பூட்டி நடத்தப்படும் விவசாயம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு, டிராக்டர் மூலம் உழுகிற விவசாயத்துக்குக் காளை மாடுகள் பயன்படுத்தப்படுவது இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல காளை மாட்டு வண்டிகளும் அடியோடு மறைந்துவிட்டன.இந்த நிலையில், இன விருத்திக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகள் …
-
- 0 replies
- 2.3k views
-
-
ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அ…
-
- 2 replies
- 900 views
-
-
வரும் பேரவைத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் 46-ஆவது ஆண்டு விழா, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் நேற்று இரவு நடைபெற்றது.விழாவில் சோ.ராமசாமி பேசியது:அதிமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம் சில நிறைகள் இருக்கின்றன. வெள்ளத்துக்கே ஜெயலலிதாதான் காரணம் என்று சொல்ல முடியாததால், நிவாரண உதவிகள் வழங்குவதில் குறைகள் கூறுகின்றனர். ஆனால், அதிலும் போகப் போக ஒரு வரைமுறை வந்து எல்லா இடங்களிலும் திருப்திகரமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.குடும்ப ஆட்சி போனதற்கு...:தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பணியை முதல்வர் ஜெயலலிதா ஆற்றி வரு…
-
- 1 reply
- 746 views
-
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’தமிழ் கடவுளான முருகப் பெருமானின் முக்கிய விழாவான தைப்பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தைப்பூசம் அன்று விடுமுறை விடப்படுகிறது.தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் அரசு விடுமுறை அளிப்பது போல் தைப்பூசத்துக்கும் பொது விடுமுறை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மதுரை திருமலை நாயக்கருக்கு விழா எடுப்பது போன்று மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கும் அரசு விழா எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது தமிழ் சமூகத்துக்கு மிகப்பெரிய அவமானம். தமிழ…
-
- 0 replies
- 542 views
-
-
ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்! கிருஷ்ணகிரியில் போலி சான்றிதழ் மூலம் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த 1-ம் வகுப்பு 'டிஸ்கன்டினியு' ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். போலீசில் பிடிபட்டால்தான் அவர் உண்மையில் பணியில் எவ்வாறு தாக்குபிடித்தார் என்பது தெரியவரும். கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து பிடிபட்டார். இவரிடம் போலி சான்றிதழ்கள் பெற்ற பலரும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வருவது விசாரணையில் தெரிய வந்தது. பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன் (37) என்பவருக்கு இவர் அளித்த போலி சான்றிதழ் மூலம் அவர், அரசு பள்ளியில்…
-
- 0 replies
- 713 views
-
-
திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள் நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன. ஆலந்தலை முதல் கல்லாமொழி வரையிலான கடல் பகுதியின் கடற்கரைகள் இவ்வாறு சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடலில் காயம்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணிகளில் காவல்துறையினர், ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். திமிங்கலங்கள் கரை ஒது…
-
- 6 replies
- 1.6k views
-
-
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 575 views
-
-
மீண்டும் தாய்க் கழகத்தில் ஐக்கியமாகிறார் நாஞ்சில்? அண்மையில் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த விவகாரத்தில், நாஞ்சில் சம்பத்தின் அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரின் பதவி பறி போனது. எனினும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக அவர் இன்னும் நீடிக்கிறார். அதனால், தனது நீக்கம் குறித்து அதிமுக தலைமைக்கு மனம் திறந்த மடல் ஒன்றை நாஞ்சில் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மடலில், தனது நிலைப்பாட்டையும், மதிமுகவில் இருந்து தான் விலகிய பிறகு அதிமுக தலைமைக்கு தான் காட்டிய விசுவாசம் குறித்தும், மனதை உருக்கும் வகையில், கொட்டியிருக்கிறாராம். தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அவருக்கு மீண்டும் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரப்படவில்லையெ…
-
- 1 reply
- 954 views
-
-
பீப் பாடல் விவகாரம்: காலம் கடத்தும் சிம்பு... அவகாசம் கொடுக்கும் நீதிமன்றம்! பீப் பாடல் விவகாரத்தில், சென்னை மற்றும் கோவை காவல் நிலையத்தில் சிம்பு ஆஜராக ஜன.29ம் தேதி வரை அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீப் பாடல் விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகர் சிம்பு மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல்துறையினரும், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பல நீதிமன்றங்களிலும் வழக்கு பதிவாகி உள்ளது. இதனிடையே, சிம்பு தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அவர் இன்று, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவலர்கள் முன்பு ஆஜர் ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அ…
-
- 1 reply
- 553 views
-
-
கெஜ்ரிவால் முதல் சகாயம் வரை... தனிமனித வழிபாடு சரியா? முன்குறிப்பு: தலைப்பைப் படித்ததுமே ‘சகாயத்தை விமர்சித்து இன்னொரு கட்டுரையா?’ எனக் கொந்தளிக்க வேண்டாம். கட்டுரையை முழுக்கப் படித்த பிறகு ஒரு முடிவுக்கு வரவும்! சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்னும் குரல் ஓரளவு வலிமை பெற்று வருவதைக் காணமுடிகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்ற பெரும்வெற்றியைத் தமிழகத்துக்கு இழுத்து வர சகாயம் உதவுவார் என்று சிலர் திடமாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். அவர் இவர், அந்தக் கட்சி இந்தக் கட்சி, அந்த அணி இந்த அணி என்று திரும்பத்திரும்பப் பார்த்து வெறுத்துப்போன பெரும்திரளான மக்கள், சகாயத்தை ஒரு மாற்றாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். சகாயம் செய்யவேண்டிய சகாயம்…
-
- 0 replies
- 932 views
-
-
8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்த போலி சான்றிதழ் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கும், பன்னிரண்டாம் வகுப்புக்கும் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பலர், எட்டாவதைக் கூட தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னர் சூட்டைக் கிளப்பிய அதே வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை மையம் கொண்டு சுழலத்துவங்கியிருக்கும் இந்த புயல், கல்வித்துறையை கதிகலங்கடித்துள்ளது இப்போது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர சான்றிதழ் பரிசோதனைகள் நடந்துவருகிறது. தமிழக…
-
- 9 replies
- 1.1k views
-
-
தேமுதிக பொதுக்குழுவில் பார்த்தசாரதி: விஜயகாந்த் முன்னிலையில் நிர்வாகிகள் ஆவேசத்தால் பரபரப்பு! பெரம்பலூரில் நடந்து வரும் தேமுதிக பொதுக்குழுவில், கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நிர்வாகிகள் ஆவேசமாக பேசி வருவதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது. தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 26 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகள், செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. காலை 10.45 மணிக்கு மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் வந்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்…
-
- 2 replies
- 660 views
-
-
நாகப்பட்டினம் அருகே தலித் ஒருவரது உடலை பொதுப்பாதையில் கொண்டு செல்ல அனுமதி மறுத்த கொடுஞ்செயலுக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கொளத்தூர் தா.செ. மணி வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் என்ற கிராமத்தில் தாழ்ந்தப்பட்ட மக்கள்மீது, அங்கிருக்கிற ஆதிக்க ஜாதியினர், தொடர்ச்சியாக பொதுக்கோயிலில் இருந்து பால்குடம் எடுப்பதையும், இறந்த பிறகு பொதுப் பாதையில் இறந்தவர்களைக் கொண்டு செல்வதையும் அனுமதிக்காமலே உள்ளனர். இறந்த உடலை ஊராட்சிப் பாதை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றால் அரை கிலோமீட்டர் மட்டுமே . ஆனால் வயல்வெளி, வாய்க்கால், வரப்பு என எடுத்துச் சென்றால் சுமார் மூன்று கில…
-
- 0 replies
- 467 views
-
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி : மத்திய அரசு அறிவிப்பு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அனுமதி தந்தது. பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி குறித்த அறிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு வீரர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=158587
-
- 0 replies
- 551 views
-
-
பீப் பாடலில் புதிய வழக்கு பதிய கூடாதாம்... நீதிபதி கண்டிப்பு... பின் வாங்கிய சிம்பு பீப் பாடல் தொடர்பாக புதிய வழக்குகள் பதியக்கூடாது என டிஜிபி-க்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நடிகர் சிம்பு வாபஸ் பெற்றுள்ளார். வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல என நீதிபதி கருத்து தெரிவித்ததால் அவர் இந்த வழக்கை வாபஸ் பெற்றார். நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்ததாக தகவல் வெளியாகின. இதையடுத்து, சிம்புக்கு எதிராக பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் போராட்டங்கள் நடத்தினர். கோவை, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில், சிம்பு, அனிருத் மீது …
-
- 0 replies
- 527 views
-
-
வெள்ள நிவாரணம்,மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை: - முதல்வர் ஜெயலலிதா [Wednesday 2016-01-06 08:00] முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான மத்தியக் குழுவினர். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம்-மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை என்று 2-ஆவது முறையாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 22-இல் எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான…
-
- 0 replies
- 521 views
-
-
'நம்பிக்கைதானே வாழ்க்கை... விஜயகாந்த் வருவார்!' - வைகோ திருப்பூர்: "மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த், வாசன் ஆகியோரை அழைத்திருக்கிறோம். அவர்கள் வருவார்கள் என நம்புகிறோம். அரசியலில் நம்பிக்கைதானே வாழ்க்கை" என திருப்பூரில் வைகோ தெரிவித்தார். கொங்கு மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் இன்று நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழகம் முழுவதும் இளம் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்துத்தரப்பு மக்களிடமும் பேரழுச்சி ஏற்பட்டு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிற இயக்கமாய் மக்கள் நலக்கூட்டணி முன்னேறிக்கொண்டி…
-
- 0 replies
- 859 views
-
-
'மாஸ்' காட்டிய கழகம்; 4 மணி நேரம் திணறித் தவித்த மக்கள்: 8 தகவல்களுடன் திமுக ஆர்ப்பாட்டம் சென்னை திமுக ஆர்ப்பாட்டத்தில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன். செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்கள் குவிந்ததால் சென்னை வாலாஜா சாலையில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, அண்ணா சாலை, வாலாஜா சாலை, கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக, திமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள சென்னை தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்க…
-
- 0 replies
- 490 views
-
-
பீப் பாடல் விவகாரம்: கோவை போலீஸ் முன் ஜன.11ல் ஆஜராக சிம்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! பீப் பாடல் விவகாரத்தில், கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் நாளை ஆஜராவதற்கு பதிலாக, வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகர் சிம்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகளை ரத்துசெய்யக் கோரி நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் கோவைய…
-
- 1 reply
- 636 views
-
-
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா... சொல்லுங்கள்? 'செம்பரம்பாக்கம் தண்ணீரை தாறுமாறாகத் திறந்துவிட்டதுதான், பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் மூழ்கிபோகக் காரணம். இது அரசாங்கத்தின் தோல்வி' என்று சொல்லி தி.மு.க சார்பில் ஜனவரி 5-ம் தேதி மாபெரும் போராட்டத்துக்கு தீவிரமாகிவிட்டார் தமிழினத் தலைவர் கருணாநிதி. இவரை முந்திக்கொண்டு கறுப்பு எம்.ஜி.ஆர். போராட்டங்களை நடத்தி முடித்தேவிட்டார். இதேபோல... சிவப்பு காந்தி, பச்சை மண்டேலா, மஞ்சள் சே குவேரா, காவி படேல் என்று மற்ற மற்ற கட்சி தலைகளும் தங்களின் சக்திக்கேற்ப காரணத்தை உருவாக்கிக் கொண்டு, களத்தில் வீராவேசம் காட்டி வருகிறார்கள். ஆளுங்கட்சிக்கு வேறு வழியே இல்லை... இவர்களுக்கு எதிராக கண்டனக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முன்னிலை பெறும்: கருத்துக் கணிப்பு! தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்திலில் தி.மு.க முன்னிலை பெறும் என லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களின் “பண்பாடு மக்கள் தொடர்பகம்” வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசு சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்துகணிப்புகளை வெளியிட்டார். அப்பொழுது அவர் “ தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் கிராமம், நகரம் என களப்பணியில் ஈடுபட்டு, மொத்தம் 5176 பேரிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தபட்டது. அதில், 'தமிழகத்தில் பிரச்னைகளை தீர்க்கும் திறமையான கட்சியாக எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்?' என்ற மக்களிடம்…
-
- 1 reply
- 948 views
-
-
நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன? சென்னை: அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையியில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். பதவி பறிப்பு ஏன்? நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இன்று காலை புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது…
-
- 2 replies
- 1.3k views
-
-
அண்ணன் சீமான் அவர்களுக்கு வாக்களியுங்கள் http://www.poll-maker.com/poll526689xb0134918-22
-
- 14 replies
- 2k views
- 1 follower
-