தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய சசிகலா | படம்: எல்.சீனிவாசன். அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை. இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க. 1.10 pm: சொத்துக் குவிப்…
-
- 13 replies
- 1k views
-
-
பிப்.16-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஆளுநர் மாளிகை | படம்: ம.பிரபு. 'இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு, குடும்ப அரசியலுக்கு வாய்ப்பில்லை'- இப்படியெல்லாம் அறியப்பட்டதுதான் அதிமுக. ஆனால், இன்று அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் சசிகலாவின் குடும்பத்தினர் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் தலைமையில் ஓரணியினர் பிரிந்திருக்கின்றனர். சசிகலா தலைமையை ஏற்றுப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூவத்தூரிலேயே காத்திருக்கின்றனர். ஆளுநரோ, எத்தனை பேர் எத்தனை முறை சென்று பார்த்தாலும் எந்த முடிவும் அறிவிக்காமல் இருக்கிறார். இதுவரை அவரது மவுனத்துக்கு சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாகக் கூறப்பட்டது.…
-
- 9 replies
- 1k views
-
-
பிப்.17-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் கோப்புப் படம்.| க.ஸ்ரீபரத். தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்க…
-
- 7 replies
- 913 views
-
-
பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் திருநாவுக்கரசர் | கோப்புப் படம். நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு: திருநாவுக்கரசர் அறிவிப்பு * அதிர்ந்துவரும் தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில், தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடக்கிறது. 117 பேர் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி பிழைக்கும் என்ற சூழலில் எடப்பாடி பலப்பரீட்சையை எதிர்கொள்கிறார். இந்தச் சூழலில் இன்று (சனிக்கிழமை) காலை கோவை…
-
- 18 replies
- 877 views
-
-
பிப்.19-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் ஓபிஎஸ் | கோப்புப் படம். கடும் அமளிகளுக்கு மத்தியில் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்களும், எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். சட்டப்பேரவையில் நடந்த பெரும் ரகளை, திமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டது, நம்பிக்கை வாக்கெடுப்பு முறை, சபாநாயகர் நடவடிக்கைகள் என பேரவை நிகழ்வுகள் குறித்த விமர்சனங்களும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. பரபரப்பான இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு: இந்த பக்கத்தை அவ்வப்போது ரெப்ரஷ் …
-
- 2 replies
- 395 views
-
-
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 16 மாநிலங்களின் மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 21-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி முடிவடையும். வேட்பு மனுக்கள் பரீசிலனை 29 ஆம் தேதி நடைபெறும். மனுவை வாபஸ் பெற கடைசி தேதி ஜனவரி 31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன், திமுகவைச் சேர்ந்த ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க…
-
- 0 replies
- 460 views
-
-
பிப்.9-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஓ.பன்னீர்செல்வம் (இடது) ; வி.கே.சசிகலா (வலது) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க) 11.15 am: 'ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை மறைத்தது ஏன்?' என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், 'சசிகலா குழுவி…
-
- 13 replies
- 1.2k views
-
-
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். புறநகர் பகுதியில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான இடம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்தார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=114361
-
- 1 reply
- 527 views
-
-
பிம்ப அரசியலிலிருந்து விடுபடவேண்டிய தருணம் தாமதமாக வந்திருந்தாலும் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதனை உணர்ந்து, இத்தீர்ப்பை முன்வைத்து உடனடியாக ஓர் அரசியல் விழிப்புணர்வுச் செயல்திட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். இப்போதைக்கு பொதுமக்கள் இத்தீர்ப்பை மிகவும் எளிமைப்படுத்தி புரிந்துவைத்திருக்கின்றனர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கத் துணிந்த சசிகலாவின் அகந்தையை அடக்கி அவரையும் அவருடைய உறவினர்களையும் (சுதாகரன், இளவரசி) சாட்டையைச் சுழற்றி சிறைக்கு விரட்டிய 'நாயகன்' என்றே இத்தீர்ப்பை அவர்கள் பார்க்கின்றனர். அதுவே அவர்களுக்கு உடனடிப…
-
- 0 replies
- 262 views
-
-
பிரகாஸ்ராஜை கொல்ல திட்டம்? கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேசை படுகொலை செய்த நபர்கள் நடிகர் பிரகாஸ்ராஜ் உட்பட மேலும் 35 பேரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கவுரிலங்கேஸ் பெங்களுரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கேல் என்ற நபரிடமிருந்து டயறியொன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த டயரி மூலம் பிரகாஸ்ராஜ் உட்பட 35 பேரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது. இதற்காக இந்து மதத்துடன் தீவிர ஆர்வம் கொண்டுள்ள 50 பேரை பயன்படுத்த திட்டமிடப்பட்டமையும் டயரி மூல…
-
- 1 reply
- 600 views
- 1 follower
-
-
பிரசவத்துக்கு சென்ற பெண்ணின் கருக்குழாயை தைத்ததாக சர்ச்சை: ராமநாதபுரத்தில் என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வைஜெயந்தி ராமநாதபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். என்ன நடந்தது? ராமநாதபுரம் அருகே புல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் வைஜெயந்தி மாலா(23). இவருக்கும் போகலூர் ஒன்றியம் மஞ்சக்கொல்லை சேர்ந்த பிரபாகரனுக்க…
-
- 0 replies
- 597 views
- 1 follower
-
-
பிரசாந்த் கிஷோர் - மு.க.ஸ்டாலின்: ஐ.டி நிறுவனத்தை நம்பி களம் இறங்கும் திமுக, என்ன காரணம்? பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமு.க. ஸ்டாலின் தமிழகத்தில் வரவிருக்கிற 2021 சட்டமன்ற தேர்தலில் பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பேக் நிறுவனம் திமுகவிற்கு தேர்தல் பணியாற்றவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் பலவும் தேர்தலில் வெற்றியை பெற, பிரசாந்த கிஷோரின் ஆலோசனை பெற்று வெற்றிபெற்றுள்ள நி…
-
- 0 replies
- 599 views
-
-
பிரச்சினைகளை மறக்க வைத்த 500, 1000 ரூபா நாணயத் தாள்கள் இ ன்றைய நிலையில் தமிழகம் மற்றும் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகப் பிரதானமாக பேசப்படுவது 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியாகாதென்று பிரதமர் மோடி அறிவித்ததாகும். அடுத்தது அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவர் தோற்கடிக்கப்பட்டு, அதிரடியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாகும். இந்த இரண்டு விடயங்களும் தான் தமிழகத்தின் நகரம், கிராமம் மற்றும் பட்டித்தொட்டியெல்லாம் பேசப்படும் விடயமாக உள்ளன. இந்த விடயங்கள் தமிழகத்தின் உள்ளக அரசியல் மற்றும் பொதுப் பிரச்சினை…
-
- 0 replies
- 461 views
-
-
பிரதமரிடம் பேசியது என்ன? - டெல்லியில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். புதுடெல்லி: புதுடெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, தமிழக நலன் தொடர்பான 141 பக்கங்களில் 29 கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் அளித்தார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வார்தா புயலால் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் கடும் ச…
-
- 1 reply
- 523 views
-
-
புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா. முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த, மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். சுமார் 50 நிமிடம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, நீண்ட காலமாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து, மனு ஒன்றையும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "…
-
- 0 replies
- 310 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அரசு கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர் மன்னார் வளைகுடா அருகே மீன் பிடித்த போது கைது செய்யப்பட்டனர். 16 மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்து சென்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் பிடித்துச் செல்வது வாடிக்கை ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். வழக்கு ஏதுமின்றி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். http://www.dinakaran.com/New…
-
- 1 reply
- 832 views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி பிரதமருக்குத் தந்தி அனுப்பும் போராட்டம் நடத்த தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில்நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வரும் மார்ச் 23-ஆம் தேதி இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. அத்தீர்மானத்துக்கு இந்தியா முழுமையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அத்தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தந்தி அனுப்ப வேண்டும். அதன்…
-
- 0 replies
- 410 views
-
-
பிரதமருடன் அ.தி.மு.க எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க எம்.பி.க்கள் இன்று திடீரென சந்தித்து பேசினர். கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கடையினர் நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர்கள் தினேஷ், அரவிந்தன் காயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா- இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி அளித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …
-
- 0 replies
- 384 views
-
-
பிரதமருடன் ஜெயலலிதா சந்திப்பு: ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரிக்கை! புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக இன்று (14-ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு டெல்லி விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து டெல்லியிலுள்ள தமிழக இல்லத்திற்கு சென்ற ஜெயலலிதா, சற்று நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் சுமார் 4.00 மணியளவில் டெல்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டிற்கு சென்று, பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு தேவையான 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் நரேந்…
-
- 0 replies
- 315 views
-
-
பிரதமரை சந்திக்க முடியாத அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கடந்த வியாழனன்று, பிரதமரை சந்திக்க தீவிரமாக முயன்றும் முடியாமல், ஆறுதலுக் காக வெள்ளியன்று உள்துறை அமைச்சரை சந்தித்த, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், கடைசியாக வெள்ளியன்று ஒரு திருப்திக்காக, ஜனாதிபதி யையும் சந்தித்து தமிழகம் திரும்பியுள்ளனர். வறட்சி நிவாரண நிதி கோரிக்கைக்காக ஏற்கனவே கேட்டிருந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் வரச் சொன்னதால், முதல்வர் பன்னீர்செல்வம் டில்லிக்கு வந்திருந்தார்.இந்த சந்திப்பை, தமிழகத்தில் பற்றி எரியும் ஜல்லிக்கட்டு பிரச்னைக்காகவும் முதல்வர் பயன்படுத்தப்போகிறார் என்பதை அறிந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவின் உத்தரவு…
-
- 0 replies
- 484 views
-
-
புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த பிரிவு உபசார விருந்தில் விருந்தில் ராகுல் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து, அவரை அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மேலும் ஒருவேளை காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும், மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் ஆகப்போவதில்லை. அவர் வருகிற 17 ஆம் தேதியுடன் பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் மன்மோகன் சிங் நேற்று தமது அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்று…
-
- 1 reply
- 515 views
-
-
பிரதமரைச் சந்தித்து அழைப்பு விடுத்த ஸ்டாலின் மின்னம்பலம்2022-03-31 நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 31) பிற்பகல் சந்தித்தார். ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகம் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு முதல்வர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மைய வளாகத்தில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்தார். அவருடன் திமுக எம்.பி.க்கள் உடனிருந்தனர். தொடர்ந்து திமுக அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருந்தபோது அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். இ…
-
- 1 reply
- 325 views
-
-
பிரதமர் அலுவலக இணை செயலராக தமிழக ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமனம் முதல்வர் பழனிசாமி வாழ்த்து சென்னை பிரதமர் அலுவலக இணை செயல ராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு நேரடிஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானபி.அமுதா. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணி யாற்றினார். கடந்த ஆண்டு மத்திய அரசுப்பணிக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவர் பிரதமர் அலுவலகஇணை செயலராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர்பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்…
-
- 0 replies
- 504 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை குறித்த அறிக்கை தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழர்களின் நம்பிக்கை குறைந்துபோயுள்ளது. இராஜபக்சேவுக்கு ஆதரவாக சிங்களக் கடும் போக்காளர்கள் பேரணியை நடத்தி மீண்டும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளனர். நடைபெறவிருக்கும் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவது என்ற ஒற்றை நோக்கத்தோடு இப்போதைய இலங்கை அரசாங்கம் காய்களை நகர்த்தி வருகிறது. தமிழர்களைப் பற்றி அதிபர் மைத்ரிபாலாவும் கவலைப்படவில்லை. இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும், தம்…
-
- 0 replies
- 317 views
-
-
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு! பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வருவதை முன்னிட்டு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் திகதி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்திற்கு காலை 10.40 மணியளவில் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கிற்கு செல்கிறார். அங்கு மெட்ரோ ரெயில் விரிவாக்கம் மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகளுக்காக 20 நிம…
-
- 0 replies
- 340 views
-