Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 7 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பிரமாண்ட ஏற்பாட்டில் கருணாநிதி வைர விழா தி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்திற்கு, முதன்முதலில் கடந்த 1957-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் காலடிவைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது. 1957-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி. 13 முறை தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஓரே சட்டமன்ற உறுப்பினராக இந்தியாவில் இவர் மட்டுமே உள்ளார். தமிழக சட்டச…

  2. பட மூலாதாரம், imd.gov.in 24 அக்டோபர் 2025, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 27ஆம் தேதி) வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ''தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்று மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது.'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ''மேற்கு-வடமேற்கு திசையில் இது மெதுவாக நகர்ந்து, நாளை (25-10-2025) தென்கிழக்கு மற…

  3. புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக ஜான்மைக்கோல் குன்ஹாவை கர்நாடகா அரசு நியமித்தது. இந்நிலையில், நீதிபதி நியமனத்தில் உச்ச நீதிமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு சார்பில் இன்…

  4. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர். டி ஷர்ட், டிராக் ஷூட் ஜிப்பா போன்றவற்றை வகுப்பறைக்கு அணிந்து வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது என்று டி ஷர்ட் மற்றும் ஜீன்சுக்கு தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்து வரவேண்டும். மாணவிகள் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் ஷர்ட் அணியக் கூடாது. சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரிக்கு வரவேண்டும் என்று உத்தரவில…

  5. பட மூலாதாரம்,PALANIVEL THIAGA RAJAN/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது? தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது கூடலூர் தொகுதியின் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பொன். ஜெயசீலன் கேள்வி ஒன்றை எழுப்பினார். அந்த கேள்வியில், "எனது தொகுதியா…

  6. கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவரை சக வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவர்களே பாலியல் வல்லுறவு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்-பெண் இருபாலரும் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அவர் உடன் பயிலும் சக வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் மிரட்டி பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவத்தின் பின்னணி என்ன? என்பதைக் காவல் துறையிடம் பிபிசி தமிழ் பேசியது. நண்பருடன் பேசிய புகைப்படத்தை காட்டி மிரட்டிய சிறுவர்கள் …

  7. கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன... தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் டாஸ்மாக்கைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக்கைத் திறக்க அறிவுறுத்தியிருந்தாலும் அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டாஸ்மாக்கைத் திறக…

  8. பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு! பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், வெடிகுண்டில் நான் வாங்கிக் கொடுத்த பேட்டரியே பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. இதனால் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். …

  9. 24 FEB, 2024 | 09:43 AM தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுநருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. மீனவர் ஜான்சன் ஏற்கெனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப…

  10. தி.மு.க ஆட்சிக்கு வந்த இரண்டாண்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறையில், டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக சில ஆவணங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் இன்று புகாரளித்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஊழலை வெளிகொண்டுவந்தமைக்காக அறப்போர் இயக்கத்துக்கு நன்றி தெரிவித்து, இதை தி.மு.க-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல் என்று விமர்சித்ததோடு, இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ``தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் டிஸ்ட்ரிபியூஷன் ட…

  11. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தமது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பித்ததன் பின்னர், இலங்கையில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் நடத்தப்படுகின்ற இந்த கருத்துக் கணிப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு கருத்துக் கணிப்பின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைய சர்வதேச ரீதியாக வாழ்கிற தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது மிகவும் அவசியமானது என்றும் கருணாநிதி சுட்டிக்காட்டி…

  12. 2011-ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த, பா.ம.க. படுதோல்வி அடைந்தது. சட்டசபை தேர்தலில் வன்னியர், ஆதிதிராவிடர் ஆகிய இரு சமுதாயத்திலிருந்தும், சுமார் 50 சதவீதம் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தன. அதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. வட மாவட்டங்களில் பெருவாரியான வெற்றியை பெற்றது. தனித்துப் போட்டியிட்ட பா.ம.க. 3.5 சதவீதம் வோட்டுகளை தான் பெற முடிந்தது. இந்தக் கணக்கை பார்த்த அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்துள்ளதை உறுதி செய்து கொண்டன. அக்கட்சியுடன் இனிமேல் கூட்டணி அமைக்க தேவையில்லை என, இரு கட்சிகளும் முடிவெடுத்து உள்ளன. இந்த மெசேஜ் ராமதாஸூக்கு போக அவர், ஏதோ…

  13. 'கமல் பாணி வேறு; என்னுடைய பாணி வேறு' - ரஜினிகாந்த் சினிமாவைப் போல அரசியலிலும் என்னுடைய பாணி வேறு கமல்ஹாசனுடைய பாணி வேறு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 21ம் தேதி அரசியல் சுற்றுப் பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன். அன்றே மதுரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்த உள்ளார். அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நிலையில் தனக்கு பிடித்தமான மனிதர்களை சந்திக்கிறேன் என்று கூறி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்த கமல்ஹாசன் தொடர்ந்து, இன்று (18.2.2018) நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். சென்னை போயஸ் இல்லத்தில் உள்ள வீட்டில் நடைபெற்ற சந்திப்பில் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு…

  14. சென்னையில் கடந்த 2017-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு தண்டனைக்குள்ளான தஷ்வந்த்தை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. Published:Today at 8 AMUpdated:Today at 8 AM தஷ்வந்த் Join Our Channel 31Comments Share சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது. தமிழகத்தை உலுக்கிய கொடூரம்! இந்த வழக்கின் பின்னணியைப் பொறுத்தவரையில், 2017 பிப்ரவரி 5-ம் தேதி, போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடி…

  15. சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது சென்னை: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடித்திருப்பதால் ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால்தான் சட்டசபை செயலாளரிடம் அவர் அவசரமாக விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று சபாநாயகர் தனபால் நடத்திய முறையற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தடுக்க கடுமையாக முயன்றனர். இதில் பெரும் அமளி வெடித்தது. இதையடுத்து அவைக் காவலர்கள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினர். சட்டசபையிலிருந்து கிழித்த சட்…

  16. ‘குடும்பச் சண்டையில் அவர்களே அழிவார்கள்!’ - எம்எல்ஏ-க்களிடம் சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive சசிகலா குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள சண்டையை மௌனமாக கவனித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘தினகரன் தரப்பினர் அளிக்கும் பரிந்துரைகளை முதல்வர் அலுவலகம் ஏற்பதில்லை.' குடும்பச் சண்டையில் அவர்களே அழிந்து போவார்கள். நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை' என்பதுதான் முதல்வரின் மனநிலையாக இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். திகார் சிறையில் இருந்து வெளிவந்த அன்று, 'கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன்' என தினகரன் அறிவித்த தினத்தில் இருந்தே, மன்னார்குடி குடும்ப உறவுகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டுவிட்டது. திவாகரனும் நடராசனு…

  17. நடிகர் ராகவா லாரன்ஸை நோக்கி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞனின் கேள்வி..

  18. சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா! தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியில் இருந்து விலகுவதாக சாந்தா ஷீலா நாயர் விளக்கம் அளித்திருக்கிறார். http://www.vikatan.com/news/tamilnadu/80011-shantha-sheela-nayar-resigns.art

  19. இலங்கைக் கடற்படையினர்... தாக்குதல் நடத்துவதை நிறுத்த, நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்து! தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாகி சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் …

  20. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுவிவகாரம் – சி.பி.ஐ அதிகாரி மீது குற்றச்சாட்டு! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மீது வழக்கு பதிவு செய்யாததால், விசாரணை நடத்தும் சி.பி.ஐ. இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜுனன் உள்பட 7 பேர் உச்சநீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவுக்கு பதில் வழங்குமாறு சி.பி.ஐ. இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு உச்சநீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மே 22-ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100 ஆவது நாள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந…

  21. சென்னை, வேலூர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் உக்கிரம்: தமிழகத்தில் பாலைவனத்துக்கு நிகராக உணரப்படும் வெப்பம் - பகலில் நடமாடவும், இரவில் தூங்க முடியாமலும் மக்கள் தவிப்பு சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க துணியால் முகத்தை மூடியபடி குடைபிடித்துச் செல்லும் கல்லூரி மாணவிகள், படம்: ம.பிரபு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாலைவனத்துக்கு நிகரான வெப்பம் தற்போது உணரப்படுகிறது. கோடையின் முக்கிய நாட்கள் வருவதற்கு முன்பே, வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் சராசரியாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருப்பதால் மதுரை, வேலூர், சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் வெப்பத்தின் உக்கிரத்தால் சாலைகளில் மக்…

  22. திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; ஒரு குழந்தை உட்பட இருவர் உயிருடன் மீட்பு திருச்சியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து | படம்: ஞானவேல்முருகன் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை 7 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது | படம்: ஞானவேல் முருகன் திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ளது தஞ்சாவூர் குளத்தெரு. இப்பகுதி…

  23. 44ஆவது புத்தகக்காட்சி: தொடக்க விழாவில் துணை முதல்வர்! மின்னம்பலம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் 44ஆவது புத்தகக்காட்சியைத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (பிப்ரவரி 24) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்தப் புத்தகக்காட்சிக்கு நிதி உதவியாக தமிழக அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாயும், துணை முதலமைச்சர் சார்பில் 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 9ஆம் வரை நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சியில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இந்தக் காட்சியில் சுமார் 800 அ…

  24. அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த மருத்துவ மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது தமிழகத்தில் இந்த நோய்த் தொற்றியோர் எண்ணிக்கையை 3 ஆக ஆக்கியுள்ளது. 17-ம் தேதி சென்னை வந்தவுடனே அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். நேற்று மார்ச் 18 அன்று அவர் அறிகுறிகளோடு ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காத்தவராயன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிறகு தெய்வமாக்கப்பட்டதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் & ரக்ஷனா. ரா பதவி, பிபிசி தமிழ் 6 ஏப்ரல் 2025, 02:07 GMT காத்தவராயன் என்ற நாட்டார் தெய்வம் குறித்து கிட்டத்தட்ட அனைவருக்குமே நன்கு தெரியும். ஆனால், இந்தக் காத்தவராயன் என்ற தெய்வமும் அதற்கான வழிபாட்டு முறையும் தொடங்கியதன் பின்னணியில் ஓர் ஆணவக்கொலை சம்பவம் இருக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். காத்தவராயன் மட்டுமில்லை, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் நாட்டார் தெய்வங்கள் பலவற்றின் தோற்றுவாயாக ஆணவக்கொல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.