தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் 48 கி.மீ., நீளத்தில் கிரானைட் கற்களை அடுக்கி 'கிரானைட் கோட்டை' அமைத்தது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணையில் நேற்று அம்பலமானது. கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நேற்று மதுரை மாவட்டம் இடையபட்டியில் விசாரணை நடத்தினார். 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியசூரியனேந்தல் கண்மாயில் 2009 முதல் 2011 வரை மீன் பிடிக்க பி.கே.மூர்த்தி என்பவர் ரூ.30 ஆயிரத்துக்கு டெண்டர் எடுத்தார். மீன் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில், கண்மாயையொட்டி கிரானைட் குவாரி தனியாரால் துவக்கப்பட்டது. கண்மாயில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து கண்மாயை மூடிவிட்டனர். இடையபட்டி கல்லாங்குத்து கண்மாய் அருகே ஒருவர் இரண்டு ஏக்கர் பட்டா நிலத்தில் கிரானைட் கற்கள் அறுக்க 1995ல் அனுமத…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியுற்றது குறித்து திமுக தலைவர் கலைஞர் அறிக்கை: ’’இன்னொரு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒருவர் தோல்வியடைவது கண்டு, மகிழ்ச்சி கொள்வது நாம் பின்பற்றி வரும் நாகரிகத்திற்கு ஏற்புடையதல்ல எனினும், நமது தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை மிருகத்தனமாக வேட்டையாடிய ராஜபக்ஷேயின் தோல்வி நமக்கு ஒருவகை நிறைவையே தரு கிறது என்பதால் வரவேற்கலாம். இந்தத் தோல்வியின் மூலம் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இனப் படுகொலைக்கும், மனித உரிமை மீறல் களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் தக்க தண்டனை தரப்படும்போது தான் இயற்கை நீதி முழுமை பெறும். கடந்த காலங்களில் எல்லா சர்வாதிகாரிகளுக்கும் நேர்ந்த தவிர்த்திட இயலாத முடிவு சரித்திரத்தின் சாகாத படிப்பினையா…
-
- 0 replies
- 349 views
-
-
ஜெயலலிதா, சசிகலா மீதான வழக்கு வாபஸ்! ஜெயலலிதா மீதான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது குறித்த வழக்கை திரும்பப் பெறுவதாக எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது குறித்து ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது வருமான வரித்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், சுமார் 18 ஆண்டுகள் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில், ஜெயலலிதாவும், சசிகலாவும் அபராதம் செலுத்த தயார் என்று கூறி அபராதத் தொகையை வருமான வரித்துறைக்கு அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அபராதம் செலுத்திவிட்டதால், சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக வருமான வரித்துறை இன்று நீதிமன்றத…
-
- 1 reply
- 900 views
-
-
ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரை போராடுவோம்! தமிழர் வாக்குகளால் வென்ற மைத்ரிபால சிறிசேனா பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்! இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் சொந்தங்களைப் படுகொலை செய்த 21-ம் நூற்றாண்டின் மிகப் பயங்கர கொடுங்கோலன் இனப்படுகொலையாளன் ராஜபக்சே வீழ்த்தப்பட்டுவிட்டான். ராஜபக்சேவின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக அமைதி வழியில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தங்களது வாக்குகளை செலுத்தி சர்வதேச சமூகத்துக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாடு இதுவே என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அரச தலைவராக மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்க இருக்கிறார். அரச தலைவர் தேர்தலில் வென்றுவிட்டாலும் ராஜபக்சேவுக்கும் மைத்ரிபாலவுக்கும் பெரிய வேறுபாடு எதுவு…
-
- 0 replies
- 1.1k views
-
-
என்றாவது ஒருநாள் அறம் வெல்லும்; அநீதி அழியும்’ என்பதே, தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் நம்பிக்கை. அக்கூற்றினை மெய்ப்பிக்கின்ற வகையில், தமிழ் இனக் கொலைகாரன்-சிங்கள இனவாத ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றான். ஜெனீவா நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து, உலகம் தடை செய்த குண்டுகளை வீசி, பச்சிளம் குழந்தைகள்,பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாதோர் என இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த குற்றவாளி ராஜபக்சே. ‘இலங்கைத் தீவில் தமிழர் என்ற இனம்’ என்பதே கிடையாது என்று கூறி, தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை அதிகரித்து, சிங்கள இராணுவத்தையும், காவல்துறையையும் அங்கு நிறுத்தி, தமிழர் தாயகத்தை இட்லரின் வதை முகாமைப் போல ஆக்கினா…
-
- 0 replies
- 587 views
-
-
Out of media player. Press enter to return or tab to continue. கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை வேண்டும் – மனுஷ்யபுத்திரன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாரிஸ் நகரில் நையாண்டி இதழான, " ஷார்லி எப்தோ" அலுவலகத்தில் இருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாம் கண்டிப்பதாகத் தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், அதே நேரம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நுண்ணுணர்வுகளை புண்படுத்துவதும் தவறு என்றார். இஸ்லாமிய நம்பிக்கைகள் குறித்து இஸ்லாத்துக்குள்ளும், வெளியிலிருந்தும் பல விமர்சனங்கள் வருகிறது என்று கூறும் மனுஷ்யபுத்திரன், ஆனால் முகமது நபியை உருவகப்படுத்துவது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்கிறார். முகமது நபியை மிகப் புனிதமாக முஸ்லீம்கள் கருதுவதால் அது குறித்து …
-
- 6 replies
- 784 views
-
-
சென்னை: சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியில் கேமராவுடன் இறங்கிய ட்ரோன் வகை குட்டி விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் மேற்பரப்பில் இன்று மதியம், ட்ரோன் என்று அழைக்கப்படும் குட்டி விமானம் வந்து தட்டுத்தடுமாறியபடி தரையிறங்கியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், அச்சமடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, அந்த ட்ரோன் விமானத்தில் கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அது ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட கூடிய வசதி கொண்டதாகும். ADVERTISEMENT கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் விமானங்க…
-
- 0 replies
- 530 views
-
-
சென்னை: ரயிலில் வித்-அவுட்டில் போவது போலவே விமானத்திலும் டிக்கெட் எடுக்காமல் போக முயன்ற வாலிபரால் சென்னை விமான நிலையமே கலகலப்பில் ஆழ்ந்தது. விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 5 அடுக்கு பாதுகாப்பை மீறி, சுவர் ஏறி குதித்து நுழைந்த வாலிபரை சுற்றுவளைத்து அதிகாரிகள் பிடித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் விசாரணையில் ரயிலில் ஓசி பயணம் போன்று விமானத்திலும் பணம் இல்லாமல் செல்வதற்காக திருட்டுதனமாக விமானத்தில் ஏறவந்ததாக கூறியுள்ளார். ADVERTISEMENT 5 அடுக்கு பாதுகாப்பு: டெல்லி கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த "விமானக் கடத்தல்" தொடர்பான மிரட்டல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி மாலையில் இருந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோவை: கோவையில், விபத்தில் சிக்கிய காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கொட்டியது. அதை பொதுமக்கள் போட்டிப்போட்டு அள்ளிச்சென்றனர். ரூ.2.45 கோடி மீட்கப்பட்டது. கோவை மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து அரிசிபாளையம் நோக்கி நேற்று காலை 8.40 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. போடிபாளையம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த சொகுசு கார் மீது பஸ் மோதியது. இதில் காரை ஓட்டிய டிரைவர், கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த யாசர் அராபத் (26), முன் பக்க சீட்டில் உட்கார்ந்திருந்த ஜாபர் (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காரின் பின் பக்க சீட்டில் இருந்த ஜலீல் (41) என்பவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. விபத்தின்போது காரில் கதவில் இருந்தும், டேஷ் போர்டில் இருந்தும் பணக்கட்டுகள் கொட்டியது. மேலும், பெரிய மூட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடை செயராசு மற்றும் 13மாவட்ட பொறுப்பாளர் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளராக இருக்கும் அய்யநாதன், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை இன்று சந்தி்த்தனர். அப்பொழுது பேசிய அய்யநாதன், “தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்…
-
- 17 replies
- 2.9k views
-
-
தமிழக மீனவர்களை இலங்கையின் கடற்படையினர் பயமுறுத்தி விரட்டிய சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நேற்றுக் காலை கச்சத்தீவு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று தமிழக மீனவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தமது மீனவர்களை பயமுறுத்திய இலங்கையின் கடற்படையினர் கரை திரும்புமாறு உத்தரவிட்டதாக இராமேஸ்வரம் மீனவர்களின் சம்மேளன தலைவர் எஸ் எமீரிட் தெரிவித்துள்ளார். இதன் போது இலங்கை கடற்படையினர் 20 படகுகளையும் வலைகளையும் நாசப்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக சுமார் 1000 படகுகளில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பியதாகவும் எமீரிட் தெரிவித்துள்ளார். tamilwin.com
-
- 0 replies
- 306 views
-
-
காவிரி உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், ஜனவரி 20ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தலைவர் கலைஞர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள், தமிழ் இன உணர்வாளர்களுக்கு அழைப்பு விடுத்து அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, வணக்கம். நலமே சூழ்க. தொன்மைத் தமிழ்நாட்டின் பன்னெடுங்கால வரலாற்றில் இரண்டு கடல் கோள்களால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர், இதுவரை ஏற்படாத அபாயம் தமிழக வாழ்வாதாரங்களுக்குத் தற்போது நேர்ந்துள்ள நிலைமை, மிகுந்த கவலையையும், அச்சத்தையும் தருகின்றது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தஞ்சை தரணியையும் மேலும் பல பகுதிகளையு…
-
- 0 replies
- 570 views
-
-
தமிழகத்தில் தீவிர மூளை காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... தமிழகத்தில் மூளை காய்ச்சல், தீவிர மூளை காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மாநில கேன்சர் இன்ஸ்டிடியூட் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர், மத்திய அரசின் சுகாதார நலத்திட்ட…
-
- 0 replies
- 539 views
-
-
சென்னை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 130-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் பூந்தமல்லியில் நடந்தது.கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகை குஷ்பு பேசும் போது தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் என்னை பற்றி மிகவும் மோசமாக விமர்சனம் செய்து இருக்கிறார். காமராஜர் கட்சி நடிகை குஷ்பு பின்னால் போகிறது என்று கூறியுள்ளார். யாரும் என் பின்னால் வரவில்லை. நான்தான் பெருந்தலைவர் காமராஜரின் கட்சிக்கு சென்று இருக் கிறேன். நடிகை-நடிகர் என்றால் மோசமானவர்கள் என்பதுபோல் விமர்சிக் கிறார்கள். பாரதீய ஜனதா ஆளும் மத்திய அரசில் கேபினட் மந்திரியாக இருக்கும் ஸ்மிருதி இரானி நடிகை இல்லையா? மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது ரஜினியை சந்திக்க வில்லையா? அவரை கட்சிக்கு இழுக்க தமிழக பாரத…
-
- 0 replies
- 1.5k views
-
-
மேல்முறையீட்டு மனு விசாரணையை ஒத்தி வைக்க கோரிய ஜெ. வக்கீல் மீது நீதிபதி குமாரசாமி காட்டம்!! பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் விடுத்த கோரிக்கையை தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி காட்டமாக நிராகரித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும் கண்டிப்புடன் நீதிபதி குமாரசாமி கூறினார். 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதியன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு …
-
- 0 replies
- 370 views
-
-
இனப்படுகொளையாளன் ராஜபக்சவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு இலங்கை சென்று வந்திருக்கும் ஹிந்தி நடிகர் சல்மான்கான் வீட்டை இன்று காலை மும்பையில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை முற்றுகையிட்டுள்ளனர். ஹிந்தி நடிகர் சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை அறிவித்துள்ளனர். இதனால் அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. http://www.pathivu.com/news/36602/57//d,article_full.aspx
-
- 1 reply
- 608 views
-
-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுவிலக்கு மராத்தான் போட்டி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை, அண்ணா சாலை. சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே சிவானந்தா சாலையில் இருந்து தொடங்கியது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கொடி அசைத்து துவக்கி வைத்தார். மெரினா கடற்கரை வழியாக கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ்) அருகே நிறைவு பெறுகிறது. இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியர் ஏழு பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். இப் மதுவிலக்கு மராத்தான் போட்டியில் ஆயிரக்கனக்கானவர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் மதுவிலக்கு மராத்தான் போட்டி பற்றிய செய்தித் தொகுப்பு மதுப்பழக்கத்தை அறவே ஒழிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
பா. ஏகலைவன் உப்புப் போட்டு திங்கிற காங்கிரஸாருக்கு. ஒரு நிமிடம் நின்று படித்துவிட்டு........... ---------------------------------------------------------------- விடுதலைப் புலிகள் மீதான தடை நீடித்திருப்பது சரியா என்று புதிய தலைமுறையில் ஒரு விவாதம். நண்பர் குணசேகரன் நெறிப்படுத்தியிருந்தார். காங்கிரஸ் கட்சி சார்பாக அமெரிக்கை நாராயணன் பேசும் போது ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர்கள் புலிகள் என கடுமையாக கொதித்தார்.. ‘தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றார்கள்’ என்ற காரணத்தையே திரும்ப திரும்ப சொல்லி குமுறினார். எல்லாவற்றையிம்விட சிறுவன் பாலசந்திரன், பிரபாகரன் படத்தை எல்லாம் வைத்து பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்று ரத்தக் கொதிப்பு வந்தவராக, இல்லை வந்துதான் கத்தினார். நல்லது…
-
- 0 replies
- 693 views
-
-
ஜெயலலிதாவின் கோரிக்கை நிராகரிப்பு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 6 தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதா மீதான வழக்கின் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்ததால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுப்பில் இருந்ததால், நீதிபதி ஹெச்.பில்லப்பா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வழக்கு விவரங்களை நீதிபதியிடம் தெரி…
-
- 0 replies
- 498 views
-
-
ஜெ. மேல்முறையீட்டு மனு விசாரணையில் சேர்க்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல்! பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களையும் சேர்க்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு தலா ரூ10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெ. மேல்முறையீட்டு …
-
- 0 replies
- 344 views
-
-
வேலை நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக 02.01.15 வெள்ளிக்கிழமை காலை முதல் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தென் கொரிய நிறுவனமான NVH India Auto Parts Pvt Ltd -ல் தொழிலாளர்கள் ULF சங்கம் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் தொழிலாளர்களை தென் கொரிய அதிகாரிகள் தாக்கும் காட்சிகளையும், மிரட்டும் காட்சிகளையும் தொழிலாளர்கள் சிலர் தங்கள் செல்போனில் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவு செய்தனர். வீடியோவில், தொழிலாளி பூபாலன் என்பவரின் காலை பிடித்து தென்கொரிய அதிகாரி ஒருவரால் இழுத்து வந்து மிரட்டப்படுகிறார். தாக்கப்பட்ட தொழிலாளி பூபாலன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் …
-
- 5 replies
- 1.2k views
-
-
சென்னை: காவிரி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்க இருப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று வைகோ கூறியதாவது: மத்தியில் நடைபெறுவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அல்ல. பாரதிய ஜனதா அரசு. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தால் கூட்டணிக் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கும். ஆனால் இதுவரை அப்படி எந்த ஒரு கூட்டத்தையும் பாரதிய ஜனதா கூட்டியது இல்லை. நரேந்திர மோடி அரசு இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுனால், தமிழகத்தில் 3 கோடி விவசாயிகள் பாதிக்கப்படு…
-
- 0 replies
- 390 views
-
-
ஜெ.,வழக்கு நீதிபதி அறிவிப்பு பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமாக ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச் அமைக்க வேண்டும் என கர்நாடகா ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்க தனி பெஞ்ச்சை அமைத்து , கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதி வகேலா இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிபதி குமாரசாமியை, ஜெயலலிதா வழக்கை விசாரிக்க நியமனம் செய்தும் தலைமை நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1151413
-
- 1 reply
- 718 views
-
-
மகிந்த ராஜபக்சேவுடன் பேட்டி எடுத்து ஒளிபரப்பும் அவசியம் தந்தி தொலைக்காட்சி ஏன் வருகிறது?... மகிந்தாவிற்கு இந்த விளம்பரத்தினை ஏன் தந்தி தொலைக்காட்சியின் பார்ப்பன செய்தி தொகுப்பாளர் கும்பல் செய்ய வேண்டும்? கடந்த வருடம் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியில் ராஜேஸ் சுந்தரம் அவர்களால் எடுத்து வெளியிடப்பட்ட “இலங்கையின் இனப்படுகொலை” எனும் ஆவ்ணப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்து “தந்தித் தொலைக்காட்சியில்” ஒளி பரப்பிய பொழுது, “இனப்படுகொலை” என்பதை மறைத்து “ போர்க்குற்றம்” எனும் திரிபுபடுத்தி ஆவணப்படத்தின் அரசியலை நீக்கியதை ஏன் தந்தி தொலைக்காட்சி செய்தது? நியூஸ் எக்ஸ் எனும் காங்கிரஸ் தலைவர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆங்கில இந்திய தொலைக்காட்சியே “இனப்படுகொலை” எனும் வாசகத்தோடு ஒளிபரப்பிய பொழுது…
-
- 10 replies
- 2.9k views
-
-
பதிவு செய்த நாள் 25 டிச 2014 08:16 சென்னை: இயக்குநர் சிகரம் பாலசந்தரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது, அதை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடியாக ஔிபரப்பின. பெசன்ட் நகர் மின் மயானத்தில் ஏராளமானவர்கள் கூடி நின்று மறைந்த திரைஉலக மேதைக்கு அஞ்சலி செலுத்தியதைக் காண முடிந்தது. பல இமாலய படைப்புக்களை படைத்த இயக்குநர் ஒருவருக்கு இறுதி சடங்கு நடந்த வேளையில் எங்கும் சோகம் நிலவியது. கண்ணீருடன் நடிகர், நடிகைகள் சடங்கில் கலந்து கொண்டனர். சிலர் கதறி அழுதனர். எங்கும் சோகம் கப்பிய நிலையில், இறுதி சடங்குகள் முடிந்து, நடிகர், நடிகைகள் அங்கிருந்து வௌியேறினர். அதுவரை சோகமாக இருந்த சூழ்நிலை திடீரென மாறியது. மின்மயானத்தில் திரண்டிருந்த கூட்டம், சோகத்தில் இருந்து விடுபட்டு, தங்களின் அபிமான நடி…
-
- 1 reply
- 589 views
-