தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
முதன்முறையாகத் தமிழகம் தவிர்த்த இந்தி பேசாத மாநிலங்களின் அரசியல்வாதிகளும்கூட அச்சப்படக்கூடியதாக அது இருந்தது. தனது முயற்சியில் மனம் தளராத மோடி அரசு மிகப் பெரிய கொத்துக்குண்டு ஒன்றை இந்தி பேசாத மாநிலங்களின் மீது வீசியிருக்கிறது. ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு என்கிற மத்திய அரசுக் குழு ஒன்றின் பரிந்துரைகளைக் கடந்த மார்ச் 31, 2017-ல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்று ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தப் பரிந்துரைகள் நமது வேலைவாய்ப்பு, கல்வி, மொழி உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதலாக அமைந்திருக்கின்றன. குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் எல்லோரும், அவர்களுக்கு இந்தி எழுதப் பேசத் தெரியும் என்கிற பட்சத்தில், நாடாளுமன்றத்தில் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று பரிந்த…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழ் நாடும் இங்கிலாந்தும் இங்கிலாந்தில் 5 லட்சம் தமிழர்கள் தான் வாழ்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு மதிப்பளித்து இலண்டன் தொடர்வண்டித்துறை தமிழில் பயணச் சீட்டு பெறுவதற்கு உதவி செய்கிறது. தானியங்கி இயந்திரம் மூலமாக தமிழில் பயணச் சீட்டை தேர்வு செய்ய உதவுகிறது. தமிழ்நாட்டில் எட்டு கோடி தமிழர்கள் உள்ளனர் . ஆனால் அவர்களுக்கு மதிக்களிக்காமல் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே பயணச் சீட்டை கொடுக்கிறது இந்திய தொண்டர்வண்டித்துறை. தமிழை பயன்படுத்த மறுக்கிறது. பல முறை நேரில் சென்று மனு அளித்தும் தொடர்வண்டித்துறை நிர்வாகம் தமிழர்களின் புகாரை கண்டு கொள்வதில்லை. தமிழர்களை அலட்சியப்படுத்துகிறது. தமிழக அரசும் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . நடுவண் அரசின் அராஜக இந்தித் திண…
-
- 0 replies
- 374 views
-
-
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில கேள்விகள்..? தமிழக அரசியலில், கடந்த 7-ம் தேதி ஆரம்பித்த சூறாவளிப் புயல் நேற்றைய வாக்கெடுப்பு வைபவத்தோடு கரை கடந்துவிட்டது. இடைப்பட்ட இந்த பத்து நாட்களில்தான் எத்தனை எத்தனை திருப்பங்கள், ஆச்சரியங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள்... எது எப்படியோ... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேர் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டுவிட்டார்.! தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அசாதாரண சூழலில் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சில குறிப்புகள் இங்கே...அரசியல் விஷயங்களில், தாங்கள் எந்தப் பக்கம் என்று இதுவரையிலும் உறுதியான அடையாளம் காட்டிக்கொள்ளாத…
-
- 0 replies
- 374 views
-
-
Homophonesஉம் கூலிப் கதைகளும் ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடத்தில் Homophones என்ற பகுதி இருக்கிறது. அதை அன்று விளக்கிக் கொண்டு உதாரணங்கள் சொல்லிக்கொண்டிருந்தோம். அங்கே வகுப்பு மாணவர்கள் 59 பேரில் சிலர் மட்டுமே விடுப்பு மற்ற அனைவரும் இருந்தனர். அவர்களில் ஒரு சில மாணவர்கள் எப்போதும் கலாட்டா செய்யும் மனோபாவத்திலேயே வகுப்பிலிருப்பது மிக இயல்பாக இருந்து வருகிறது. புத்தகத்தில் இருக்கும் சொற்களுக்கு விளக்கம் கூறிவிட்டு வேறு உதாரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். அந்த வகையில் மாணவன் வைஷந்த் கூடவே எதையோ சொல்ல… மீண்டும் நான் , திரும்ப சொல்லக்கேட்டேன். மிஸ்….ஹான்ஸ் – ஹேன்ட்ஸ் என்றான். அது சரியான உதாரணம் இல்லை, அது இங்கு பிரச்சனை இல்லை. “ஹான்ஸ் ன்னா…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு March 15, 2019 போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் 2009ஆம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் போலி என்கவுன்டரில் தன் கணவரைக் கொன்றதாக சுந்தரமூர்த்தியின் மனைவி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையகத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அத்துடன் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையக நீதிபதி கொல்லப்பட்டவரின் உடலை பரிசோத…
-
- 0 replies
- 374 views
-
-
இயன்முறை மருத்துவக் கூட்டமைப்பை உருவாக்கவும், அதற்குரிய நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது.. மருத்துவ முன்னேற்றங்களும் நவீன கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், புதிய புதிய நோய்களின் தாக்கமும் அதிகரித்தபடியேதான் உள்ளது. எத்தகைய நவீன மருந்துகளின் கண்டுபிடிப்பால்கூட டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய சூழலில் மருந்தோ, அறுவை சிகிச்சையோ இல்லாமல் எத்தகைய பாதிப்புகளையும் தடுக்கக்கூடிய சிறப்புவாய்ந்த இயன்முறை மருத்துவத்தைத் தமிழக அரசு பரவலான செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டும். இயன்முறை மருத்துவத்தின் தரத…
-
- 0 replies
- 374 views
-
-
மனத் தூய்மையுடன் எதிர்க்கட்சியாகப் பணியாற்றுவோம்- பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டறிவிப்பு! அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அ.தி.மு.க.வின் கொள்கை வழிநின்று பணியாற்றுவோம் என அறிவித்துள்ளனர். அத்துடன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், தமக்கு வாக்களித்த வாக்காளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து 10 ஆண்டு காலம் நடைபெற்ற அ.தி.மு.க. அரச…
-
- 0 replies
- 374 views
-
-
என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?'' பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனு சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்த காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆளுங்கதான் நாம். ஆனா, விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு உண்மையா இருந்திருக்காங்களோ, அவங்கதான் தலைவர்கள். தன் போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும் பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன். போரில் தன் மகனைப் பலி கொடுத்ததில் தொட…
-
- 0 replies
- 374 views
-
-
சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது சென்னை: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடித்திருப்பதால் ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால்தான் சட்டசபை செயலாளரிடம் அவர் அவசரமாக விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று சபாநாயகர் தனபால் நடத்திய முறையற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தடுக்க கடுமையாக முயன்றனர். இதில் பெரும் அமளி வெடித்தது. இதையடுத்து அவைக் காவலர்கள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினர். சட்டசபையிலிருந்து கிழித்த சட்…
-
- 0 replies
- 374 views
-
-
1991 இல் ராஜீவ் படுகொலை முதல் பேரறிவாளனுக்கு ஜாமீன் வரை.. நடந்தது என்ன? 32 ஆண்டு கால பின்னணி! tamil.oneindia சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டது முதல் ஜாமீன் பெற்றது வரை கடந்து வந்த பாதை என்ன? 1991 மே 21- ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார் 1991 ஜூன் 11- ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் கைது 1991 ஜூன் 14- நளினி ஸ்ரீகரன் என்கிற முருகனும் கைது செய்யப்பட்டார் 1991 ஜூலை 22- சுதேந்திரராஜா எனும் சாந்தன் கைது செய்யப்பட்டார். 1…
-
- 0 replies
- 374 views
-
-
"ரஜினி எம்.ஜி.ஆர் ஆட்சியென்றால்... நான் மக்களாட்சி!" - ரஜினியின் 'எம்.ஜி.ஆர் ஆட்சி'க்கு கமல் பதில் சர்ச்சைகளின் ஆதர்ச நாயகனும், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஹெச்.ராஜா, தனது முகநூலில் "தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்" எனப் பதிவிட்டிருந்தது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் இதற்குக் கணடனம் தெரிவித்து வருகின்றனர். பெரும் சர்சைக்குரிய இப்பதிவை முகநூல் பக்கத்திலிருந்து ஹெச்.ராஜா நீக்கியதும், அதற்கு வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக 'மக்கள் நீதி மய்ய'த்தின் சார்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தனது கண்டனத்தை…
-
- 0 replies
- 374 views
-
-
கோவை, திருப்பூரில் ரூ.500 கோடி மோசடி? மொபைல் செயலி, வாட்ஸ்ஆப் மூலம் ஆள் சேர்த்து ஏமாற்றியது எப்படி? பட மூலாதாரம்,SHANMUGA VELAYUTHAN கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட பல்வேறு மாவட்ட மக்களை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன் மீது முதலீடு செய்ததால் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறி, பேராசையைத் தூண்டி பல கோடி ரூபாயை நூதன முறையில் மோசடி செய்துள்ளது சைபர் க்ரைம் கொள்ளை கும்பல். மோசடி கும்பல் மக்களை ஏமாற்றியது எப்படி? கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த வாரம், 20-க்கும் மேற்ப…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்ப தயக்கம் - கள நிலவரம் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் இலங்கை இறுதி கட்ட போரின்போது இந்தியாவில் அகதியாக தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கே அழைத்து வர இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழு ஒன்றை நியமித்துள்ளார். ஆனால், தங்களுடைய இலங்கைக்கு திரும்ப பெரும்பாலான இலங்கை தமிழர்கள் விரும்பவில்லை என்று தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெ…
-
- 1 reply
- 374 views
- 1 follower
-
-
65 அகதிகள் மாயம் - அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல திட்டமா? தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து மாயமான 65 அகதிகள் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தூத்துக்குடியில் முகாமிட்டு இந்திய உளவுப்பிரிவு பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, குளத்துவாய்பட்டி, தூத்துக்குடி ராம்தாஸ்நகர் ஆகிய மூன்று இடங்களில் அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த நிலையில் சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 65 இலங்கை அகதிகள் தப்பி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கேரளா அல்லது தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு ச…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழக மருத்துவ மாணவன் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல என உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. திருப்பூர் சேர்ந்தவர் சரவணன். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த அவர் கடந்த 10ம் தேதி சந்தேகத்திற்கு உரிய வகையில் மரணமடைந்தார். இதுகுறித்து கடும் சர்ச்சை எழுந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல என எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடலில் நச்சுப்பொருள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அது சில மாதங்களுக்குப் பின்னரே தெரிய வரும் என்றும் அவர…
-
- 1 reply
- 373 views
-
-
அரசியலுக்கு வரலாலம், தலைமை பொறுப்புக்கு ஆசைப்படக்கூடாது: ரஜினிகாந்த் மீது பாரதிராஜா கடும் தாக்கு நல்ல தலைவர்களை, மந்திரிகளை உருவாக்குபவர்களாக ரஜினி இருக்கலாம். அவர் தலைமை பொறுப்புக்கு ஆசைப்படக்கூடாது. தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் தான் இருக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா பேசினார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் 7 தமிழர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிச்சந்திரன் எழுதிய, ‘ராஜி்வ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வ…
-
- 0 replies
- 373 views
-
-
கடந்த 7 ஆம் தேதி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் இன்று 5 வது நாளாக தொடருகிறது. கடந்த 7 ஆம் தேதி 500 விசைப்பபகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ராமேவரம் மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும், சில படகுகளில் இருந்த வலைகளை அறுத்தும், 5 படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்து மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18 ஆம் தேதி வர…
-
- 0 replies
- 373 views
-
-
ராஜீவ்காந்தி தனக்கு மரணம் விடுதலைப்புலிகளால் தான் ஏற்படும் என அறிந்திருந்தாரா? ராகுல்காந்தி தெரிவித்திருப்பது என்ன? Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 01:59 PM ராஜீவ்காந்தி தனது மரணம் விடுதலைப்புலிகளால் தான் ஏற்படும் என அறிந்திருந்தாரா என்பது தனக்கு தெரியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். என் பாட்டியைப் போலவே என் தந்தையும் தனது மரணம் சமீபமாக இருந்ததை உணர்ந்திருந்தார். அது விடுதலைப் புலிகளால் தான் ஏற்படும் என்று அவர் அறிந்திருந்தாரா என்று தெரியாது. ஆனால் ஏதோ சில சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. அவை தன் உயிருக்கு உலை வைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார்.என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார் இந்த…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்! ராம மோகன ராவ் ஆவேசம் வருமான வரித்துறை சோதனை குறித்து தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் விளக்கம் அளித்து வருகிறார். தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு, அலுவலகம் மற்றும் அவரது மகன் விவேக், உறவினர்கள் வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் மதிப்பிலான ரூபாய், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராம மோகன ராவை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் உடல்நலக் குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டி…
-
- 1 reply
- 373 views
-
-
அண்ணா, எம்ஜிஆரை கீழ்த்தரமாக விமர்சித்த சீமான்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிமுக! 26 Sep 2025, 6:05 PM அண்ணா, எம்ஜிஆரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த நிலையில், அதிமுக தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 26) விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “விஜய் மாற்றம் என்பது குறித்து சொல்லவே இல்லை.. அவர் திமுகவிலிருந்து இரண்டு இட்ல…
-
- 3 replies
- 373 views
-
-
மறைந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் புனைப்பெயர்களை சசிகலா சூட்டி கொண்ட தால், அ.தி.மு.க.,வினர் கடுப்படைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியில், பதவி களில் உள்ள முக்கிய நிர்வாகிகள், அமைச்சர் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கும், இதில் உடன்பாடு இல்லை. இருப்பினும், தங்களது பதவிகளை தக்க வைப் பதற்காகவும், பலமான எதிர்ப்புகள் உருவாகா மல் இருப்பதற்காகவும், பலர் அமைதி காத்து வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக மாறியதில் இருந்து ஜெயலலிதா பாணியில், உடை அலங் காரம், முடி அலங்காரம், பேச்சு, நடவடிக்கை ஆகியவற்றை, ஜெ., போலவே சசிகலா மாற்றி யமைத்து வலம் வருகிறார்.இதன…
-
- 0 replies
- 373 views
-
-
அ.தி.மு.க-வுக்கு தீபாவின் அதிர்ச்சி..! - தேர்தல் ஆணையத்திடம் 13 பக்க ஆதாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம், அ.தி.மு.க. ஜெ. தீபா அணி சார்பில் 13 பக்க ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது, நிச்சயம் அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க., மேலும் பிளவுபட்டுள்ளது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, அந்த அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அணி உருவானது. சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், சசிகலா அணியில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ…
-
- 0 replies
- 373 views
-
-
டெல்லி: ஆந்திரப் பிரதேச போலீசார் நடத்திய சந்தேகத்திற்கிடமான, சட்ட விரோதமான கொலைகள் தொடர்பாய் விசாரணை செய்யப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. செம்மரக்கட்டை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிற இருபது பேரை ஆந்திரப் பிரதேச போலீசார் சுட்டுக்கொன்றது தொடர்பாய், சுயேச்சையான முறையில் துரித விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு இன்று குரல் கொடுத்துள்ளது. இக்கொலைகள், சட்டவிரோதமானவை என கண்டறியப்பட்டால், அவற்றிற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இது குறித்து பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கூறுயிருப்பதாவது, ஏப்ரல் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, ஆந்திரப் பிரதேச போலீசாரும் வனத்துறை அ…
-
- 0 replies
- 373 views
-
-
தமிழகத்தில் மகிந்த ராஜபக்ச கலாச்சாரம் மற்றும் வணிகத்துறை மூலம் கால் பதிக்க முயற்சிக்கிறார் அதை தமிழீழ ஆதரவு அமைப்புக்கள் ஒருபோதும் அனுமதிக்காது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் கூறியுள்ளார். அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலை காணொளில் பார்வையிடலாம். http://www.pathivu.com/news/32196/57//d,article_full.aspx
-
- 0 replies
- 373 views
-
-
போயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி? கூவத்தூரில் இருந்து கிளம்பி, போயஸ்கார்டன் வந்த சசிகலா சற்றுமுன் 11.15 மணிக்கு போயஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பின், அங்கு குழுமியிருந்த தன் கட்சித் தொண்டர்களுக்கு தைரியமாக இருக்கச்சொல்லி பேட்டி கொடுத்தார்,சசி. அவரைச்சுற்றி இருந்த பெண்தொண்டர்கள் சசியைப்பார்த்து அழுதவண்ணம் இருந்தனர். பேட்டி கொடுத்த பின், உடனடியாக வீட்டுக்குள் சென்ற சசி, இன்று அதிகாலை 4 மணி அளவில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல இருக்கிறார். அங்கு செல்லும் சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் சிறிதுநேரம் பிரார்த்தனைச் செய்துவிட்டு, காரிலேயே பெங்களூரு நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்…
-
- 1 reply
- 373 views
-