Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி சென்னைக்கு அருகில் கரையை நெருங்குமென எதிர்பார்க்கப்படுவதால் நவம்பர் 17, 18 தேதிகளில் கன மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடக்கு அந்தமான் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் எஸ். பாலச்சந்திரன், "இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நவம்பர் 17, 18…

  2. இடைவெளி நிரப்பப்படுமா? தமிழக அரசியலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் இருபெரும் ஆளுமைகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்த ஜெயலலிதாவின் மறைவு மற்றும் கருணாநிதியின் முதுமை என்பன தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் 6 முறை ஆட்சிப் பீடம் ஏறிய ஜெயலலிதா தான் இறந்தாலும் கூட இன்னும் நூறாண்டுகள் அ.தி.மு.க. வாழும் என கூறினார். ஆனால் அவர் இறந்து ஓராண்டு நிறைவடைவதற்குள்ளேயே அக்கட்சி பல துண்டுகளாக சிதறி இன்று நிலையற்ற ஒரு ஆட்சியையே தமிழகத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கிறது. வரட்சி, விவசாயிகள் தற்கொலை, நீட்தேர்வு, குடிநீர் தட்டுப்பாட்டு என்று பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்க…

  3. பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவுசெய்யவில்லை: முன்னாள் சிபிஐ அதிகாரி. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அறிவு என்கிற ஏ.ஜி.பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பேரறிவாளன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது வி.தியாகராஜன் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி சி.பி.ஐ. கேரள பிரிவின் எஸ்.பி.யாக இருந்தார். குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் பொறுப்பு சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் அளித்துள்ள பேட்டியொன்றில் பேரறிவாளனின் வாக்கு மூலத்தை தான் முழுமையாக பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். பேரறிவாளளின் வாக்கு மூலத்தில் தான் மாற்றம் செய்ததால் அவர…

  4. ‘நான் நலமாக இருக்கிறேன், ஆனால்...’ - தினகரனிடம் கதறிய சசிகலா #VikatanExclusive சிறையில் சசிகலாவைச் சந்தித்த தினகரனிடம், 'நான் நலமாக இருக்கிறேன், ஆனால் சிறை நெருக்கடிகளைச் சமாளிக்க முடியவில்லை' என்று கண்ணீர்மல்கக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க, நேற்று தினகரன் சென்றார். ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பிறகே அவருக்கு சசிகலாவைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. சீருடையில் வந்த சசிகலாவிடம் பேசியிருக்கிறார் தினகரன். சிறையில் நடக்கும் விவரங்களை சசிகலா, கண்ணீருடன் சொல்லியிருக்கிறார். தினகரன், ஆறுதலாகச் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வெளியில் வந்திருக்கிறார். இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில், …

    • 2 replies
    • 805 views
  5. இலங்கை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பிரச்சினையை எழுப்ப தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன. இலங்கைத் தமிழர் விவகாரம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் நடவடிக்கை, பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீவிரமாக எழுப்ப தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. டி.ஆர். பாலு இது தொடர்பாக திராவிட முன்னேற்ற கழகத்தைச்சேர்ந்த டி.ஆர். பாலு கூறுகையில், இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்தியா பங்கேற்றது தொடர்பாக விளக்கம் கேட்டும் நோட்டீ…

  6. மூன்று வழக்குகளில் இருந்து பிணை : சிறையிலிருந்து விடுதலையானார் ஜெயக்குமார்! நில அபகரிப்பு வழக்கு, தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் மற்றும் வீதிமறியல் போராட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்தவர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஜெயக்குமார் சார்பில் பிணை விண்ணப்பம் கோரப்பட்ட நிலையிலேயே நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது. ஏற்கெனவே தி.மு.க. பிரமுகர…

  7. ஹார்வார்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை.. ஏழை கவிஞன் என்பதால் ரூ.5 லட்சம்தான் தர முடிந்தது: வைரமுத்து சென்னை: ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். சென்னையில், இன்று மாலை நடைபெற்ற, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் விழாவில் பேசிய வைரமுத்து, மேலும் கூறியதாவது: சீன மொழிக்கு இணையாக இருக்கும் மொழிதான் தமிழ் மொழி. இந்தியாவின் சரிபாதி பண்பாடு தமிழ் பண்பாடு . எல்லாத் தகுதியும் உடைய தமிழ் மொழியை ஹார்வர்டு பல்கலைக்கு தாமதமாக கொண்டு சென்றுள்ளோம் என்பதே என் ஆதங்கம். அறிவுலகம் வகுத்த தகுதிக்கும் மேல் தகுதி கொண்டது தமிழ் மொழி . ஹார்வர்ட் தமிழ் இருக்கை தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் என நம்புக…

  8. இலங்கையின் வடபகுதியை தமிழகத்தின் ஓர் அங்கமாக எம்.ஜீ.ஆர். கருதினார் – நட்வர் சிங் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையில் சதிப்புரட்சி இடம்பெறலாம் என அஞ்சிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன இந்தியாவின் உதவியை நாடினார் என முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் குழப்பங்களை தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்-ஆரம்பத்திலிருந்தே பல தவறுகள் இடம்பெற்றுள்ளன, புதுடில்லிக்கென ஒரு கொள்கை காணப்பட்டது அதேவேளை முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜி இராமச்சந்திரன் வடஇலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்ற கொள்கையை பின்பற்றினார். …

  9. மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன் ‘‘தீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்?’’ என்று கேட்டோம். ‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் …

  10. உயிரைப்பணயம் வைத்து நமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை. எட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடனே. மீனவர் விடுதலையை மட்டும் நாம் கோரவில்லை. மீனவரை படுகொலை செய்த இலங்கைப் படையினரை கைது செய்திருந்தால் இந்த கொடுமைகள் நிகழாது போயிருக்கும். கடமை மறந்த இந்திய அரசினை கேள்விக்குள்ளாக்குவது தலைநகரில் வாழும் நம் அனைவரின் அரசியல் கடமை. அனைவரையும் அழைக்கிறோம். தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மீனவர் குடும்பங்கள் Thirumurugan Gandhi https://www.facebook.com/thirumurugan.gandhi.…

  11. புதுடில்லி : கலைஞர் டி.வி.,க்கு முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக எம்.பி., கனிமொழிக்கு முக்கிய பங்கு இருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச்செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர் டி.வி.,க்கு ரூ.200 கோடி முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அவர் அளித்த சாட்சியத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2ஜி ஊழல் மற்றும் அது தொடர்பான முறைகேடான பணபரிமாற்றம் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தற்போது, சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள, ராசாவின் கூடு…

  12. முல்லைத்தீவு மூதாட்டி – தமிழகம் அகதி முகாமில் கொலை!! முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த 80 அகவையுடைய (சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை) மூதாட்டி கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகம் சென்னையில் உள்ள கும்புடிபூண்டி அகதிகள் முகாமில், மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் வசித்து வந்த மூதாட்டியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் ஒருவர், அவரைக் கொலை செய்து விட்டு, அங்கிருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/03/முல்ல…

  13. காங்கிரஸ் மேலிடம் மீது கடும் அதிருப்தியில் இருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், த.மா.கா., தலைவர் வாசனை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் பரவி உள்ளது. அதனால், த.மா.கா.,வில் அவர் சேரலாம் என்றும் வதந்திகள் உலாவரத் துவங்கி உள்ளன. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த பின், கட்சியில் பெரும் மாற்றம் ஏற்படும் என, சிதம்பரம் எதிர்பார்த்தார். அத்துடன், கட்சியின் தேசிய ஊடக பிரிவு தலைவர் அல்லது பொருளாளர் பதவி, தனக்கு கிடைக்கும் என நம்பினார். ஆனால், காங்., தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும், சிதம்பரத்திற்கும் பதவி கொடுக்க விரும்பவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த சிதம்பரம், தன் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும், தமிழக காங்கிரசில் முக்க…

  14. 16 AUG, 2023 | 11:50 AM சென்னை: விமான டிக்கெட் இல்லாமல் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமுலில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் விமானடிக்கெட் சிறப்பு அனுமதி பாஸ் எதுவும் இல்லாமல் விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து குடியுரிமை சோதனை நடக்கும்பகுதி வரை சென்று அங்கு சுற்றிக் கொண்டிருந்தார். இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றுள்ளார். இதையடுத்து அந்த இள…

  15. ஜெயலலிதாவின் மரண விசாரணை: ஆணையகத்தில் முன்னிலையானார் பொன்னையன் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் ஆணையகத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொன்னையன் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பெறுவதற்காக ஓய்வுபெற்ற ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம் சம்மனொன்றை பொன்னையனுக்கு அனுப்பியுள்ளது. அதனடிப்படையிலேயே அவர் இன்று ஆணையகத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது, அவர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் தொடர்பிலேயே ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பொன்னையனிடம் பெறும் பதில்களை வாக்கும…

  16. குப்பைத்தொட்டியில் ரூபாய் நோட்டுகள் : கண்டெடுத்த தொழிலாளி கைது! சென்னையில், குப்பைத்தொட்டியில் கிடந்த கட்டுக் கட்டான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கண்டெடுத்த தொழிலாளியை பொலிஸார் கைதுசெய்தனர். சென்னை ஓட்டேரி பவானி எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோனி (48). குப்பை தொட்டியில் கிடக்கும் பழைய பொருட்களை சேகரித்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் நேற்று (23ம் திகதி) காலை, சேத்துப்பட்டு பகுதியில் வழக்கம்போல பழைய பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சேத்துப்பட்டு நேரு பூங்கா சுரங்கப்பாதை அருகே உள்ள ஒரு தொட்டியில் குப்பையைக் கிளறியபோது அதில், மத்திய அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூ…

  17. சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது May 18, 2019 சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீற்றர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் வழம…

  18. 30 AUG, 2024 | 02:00 PM திருச்சி: திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த பணியாளரை கண்டித்தும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்திய என்ஐடி நிர்வாகத்தை கண்டித்தும் விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்யக் கோரியும் திருச்சி என்ஐடி வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவிலிருந்து மாணவ - மாணவியர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு நேரில் சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்கள் சமாதானப்படுத்தி போராட்டத்தை வாபஸ் பெறவைத்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) அமைந்துள்ளது. மத்திய மனிதவள மேம…

  19. அதிமுக-திமுக: சரிசமமான இடங்களில் வெற்றிபெற்றதா? மின்னம்பலம் அதிமுகவை விட திமுகதான் அதிக இடங்களில் வெற்றிபெற்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை தொகுதியில் கலைஞர் கணினி கல்வியகம் அறக்கட்டளையை திமுக உருவாக்கி உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்த படித்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இந்த நிலையில் கணினி பயிற்சி மையம் திறக்கும் நிகழ்வு சைதாப்பேட்டை பஜார் சாலையில் இன்று (ஜனவரி 5) நடைபெற்றது. அதேபோல சென்னை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு கணினி பயிற்சி மையம், கலைஞர் சிலை ஆகியவற்றை …

  20. சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம் HemavandhanaUpdated: Wednesday, October 1, 2025, 12:03 [IST] திருவண்ணாமலை: போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்று காவல் துறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. அந்தவகையில், திருவண்ணாமலை சம்பவம் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.. அதுவும், வேலியே பயிரை மேய்வதும், வடமாநிலங்களை போலவே நம்முடைய தமிழ்நாட்டிலும் இத்தகைய பயங்கரங்கள் நடப்பதும், மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. நேற்று வி…

  21. தென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதுவரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 143 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 164 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு 21 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 160 பேர் பலியாகி உள்ளனர்.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க தமிழக அரசு முட…

  22. ஆம்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார் ஆம்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி குணமடைந்து இன்று வீடு திரும்பினார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ஒருவர், தன்னுடைய மகள் மற்றும் மகள் வயிற்றுப் பேத்தி ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 4 தலைமுறைகளைக் கண்ட மூதாட்டிக்கு 13 பிள்ளைகள். இவர்களில் 12 பேர் தற்போது உயிருடன் இல்லை. இவருடைய மகளும், பேத்தியும் கணவரை இழந்தவர்கள். வாழ்வாதாரத்துக்காக ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் மூதாட்டியின் பேத்தி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், மூதாட்…

  23. இந்திய தொலைக்காட்சிகள் ஈழத்தில் நடைபெறும் அவலங்களை சரிவர படம்பிடித்து காட்டுவது பெரும் குறைபாடு கொண்டதாக இருந்துவந்தது. தொடர்நாடக புகழ் சன் ரிவி, கலைஞர் ரிவி போன்றன தமிழகத்தின் மீடியா உலகில் தனியுரிமை சக்திகளாக இருந்தபோது இலங்கைப் போர் விடயத்தில் மோசமான அணுகுமுறையை கையாண்டன. 2009 வன்னியில் நடைபெற்ற போரின் பக்கங்களைகூட சரிவர தமிழக மக்களுக்கு காட்டாமல் நாடகமாடி வந்தன. இப்போது தமிழகத்தின் முதலாவது சிறந்த தொலைக்காட்சி என்ற பெயரைப் பெற்றுள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி வந்த பின்னர் சன், விஜய், கலைஞர், ஜெயா போன்ற தொலைக்காட்சிகளின் குருட்டுப் பக்கங்களில் ஒளியடிக்க ஆரம்பித்துள்ளது. புதிய தலைமுறை உடனுக்குடன் தமிழக மக்களுக்கு சரியான பக்கத்தை அடையாளம் காட்டத் தொடங்கியிர…

    • 6 replies
    • 952 views
  24. எங்கள் நம்பிக்கை நட்சத்திரங்களே! போராடும் மாணவர்களுக்கு இடிந்தகரையிலிருந்து அண்ணன் சுப.உதயகுமார்! http://youtu.be/br8fdhc58pM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.