தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
உலகத்தில் பல சிக்கலான அரசியல் மற்றும் பூகோள பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சீனா-ஹாங்காங்கின் "ஒரு நாடு இரு கொள்கை" பிரச்சினை. கடந்த வாரம் பங்குச்சந்தையில் இந்த பிரச்சினை அப்படியே மெதுவாக உரசி சென்றது. ஆனால் அவ்வளவு தாக்கம் ஏற்படுத்த வில்லை. அதற்கு மேலும் பெரிதாகாது என்ற ஒரு அதீத நம்பிக்கையும் காரணமாக அமைந்தது. ஆனாலும் இது ஒரு நம்பிக்கை தான். இன்னும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. மீண்டும் இந்த பிரச்சினை வந்தால் பங்குச்சந்தையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவதற்கு இந்த பிரச்சினையின் பின்புலத்தை அறிவதும் அவசியமாகிறது. அதனை இந்த கட்டுரையில் பகிர்கிறோம். 1842ல் பிரிட்டனின் காலனி பிடிக்கும் கொள்கையின் காரணமாக ஹாங்காங் சீனாவிடமிருந்து பிரிட்டிஷ் கைக்கு…
-
- 7 replies
- 1.4k views
-
-
காற்றில் பறக்கிறது தமிழ்நாட்டு அரசியல் (பன்னீர்) மானம் !!! https://www.facebook.com/video/video.php?v=746979372037033
-
- 2 replies
- 682 views
-
-
போங்கடா தமிழர்களா போங்கடா தமிழர்களா ஒரு ஊரிலெ இல்ல இல்ல ஒரு காட்டில ஒரு திருடன் இருந்தான் அவன் அந்த காட்டு வழியே போகிற வழிப்போக்கரைகளை தாக்கி கொள்ளையடித்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் சாகும் தருவாயில் அவன் மகனை அழைத்து “மகனே நான் இறக்கப் போகிறேன் வாழும் காலம் வரை இந்த ஊர் மக்களின் யாயிலும் பல்லிலும் இருந்து விட்டேன் நீ என்ன செய்வாயோ என எனக்கு தெரியாது ஆனால் நான் இறந்த பிறகு இந்த ஊர் மக்க்|ள் என்னை நல்லவன் என்று சொல்ல வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டு அவன் இறந்து விட்டான். மகனுக்கு இப்ப என்ன செய்து தந்தைக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பது என ஒரே குழப்பம். நெடு நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான் அவனும் அவன் தந்தை போலவே காட்டில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான் ஒரே…
-
- 1 reply
- 933 views
-
-
சுப்ரதா ராயும், ஜெயலலிதா ஜாமீன் மனுவும்... ஒரு திகில் எதிர்பார்ப்பு! டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் உச்சநீதிமன்றத்தில், டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இவர்களின் மனுவை விசாரித்தால் நிச்சயம் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்று கூறுகிறார்கள். காரணம், நீதிபதி தாக்கூர் மிகவும் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது. சஹாரா இந்தியத் தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீனே கொடுக்க முடியாது என்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்தவர் நீதிபதி டி.எஸ். தாக்கூர் என்பதால் ஜெயலலிதாவின் நிலை இவரிடம் போனால் மேலும் சிக்கலாகும் என்று கூறுகிறார்கள்…
-
- 0 replies
- 838 views
-
-
‘சூப்பர் ஸ்டார் புகழை இழந்து விடுவீர்கள்’ ரஜினிகாந்துக்கு உதயகுமார் திறந்த மடல் ‘சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழந்து விடுவீர்கள்’ ரஜினிகாந்துக்கு உதயகுமார் திறந்த மடல். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளார் என்றும் அவரை பாஜக தங்கள் கட்சிக்குள் கொண்டு வர தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது என்ற செய்தியும் வந்த வண்ணம் உள்ளன. தமிழ் அமைப்புகள் ஏற்கனவே ரஜினி தமிழக அரசியலில் வரக் கூடாது என்று குரல் எழுப்பியுள்ளன. தமிழ் நாட்டை தமிழினம் தான் ஆள வேண்டும் , தமிழர் அல்லாத ஒருவர் தமிழ் நாட்டின் முதல்வராக வரக் கூடாது என்றும் குரல் எழுப்பி உள்ளனர். இந்நிலையில் அணு உலைப் போராளி உதயகுமார் அவர்கள் ரஜினி ஏன் தமிழக அரசியலில் வரக் கூடாது என்று ரஜினிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். தி…
-
- 3 replies
- 1.6k views
-
-
மாஜி முதல்வர் சவுதாலா ஜாமீன் ரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு பாதிப்பா? டெல்லி: தலைப்பை படித்து பார்த்தால், மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டதைப்போலத்தான் தோன்றும். ஆனால், ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிகழ்வு, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுடனும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடனும் பெரிதும் பொருந்திப்போகிறது என்பதே உண்மை. பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு கடந்த 2003ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி சவுதாலா நீதிமன்றத்தில் ஜாமீன் …
-
- 1 reply
- 636 views
-
-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை விதிமுறைப்படி ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 14 நாட்களாகின்றன.பொதுவாக, தண்டனை கைதி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அவருக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. இதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசிக்கு ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலை ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால் இவையெல்லாம் ஆவணத்தில் பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட வேலைகள். ஆனால் ஜெயலலிதாவின் செல்வாக்கை கருத்தில்கொண்டு, அவருக்கும், சசிகலா உள்ளிட்ட தோழிகளுக்கும் இந்த வேலைகளை செய்ய சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று தகவல்கள் தெ…
-
- 4 replies
- 1.3k views
-
-
திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்... அக்டோபர் 10, 2014 முனைவர் சுப. உதயகுமாரன் நாகர்கோவில் திரு. ரஜினிகாந்த் அவர்கள் போயஸ் கார்டன், சென்னை அன்பார்ந்த ஐயா: வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் ஒரு நல்ல மனிதர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், அது குறித்து தங்கள் ரசிகர் மன்றத் தோழர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஓர் இந்தியக் குடிமகன் என்ற முறையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவும், அதற்கான ஆயத்தங்கள் செய்துகொள்ளவும் தங்களுக்கு முழு உரி…
-
- 0 replies
- 706 views
-
-
விவசாயம் செய்ய எண்ணும் இளைஞர்களுக்கு நம்மாழ்வார் ஐயாவின் ஆலோசனைகள் https://www.facebook.com/video/video.php?v=10202797418325746
-
- 1 reply
- 343 views
-
-
சென்னை: அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று அறிக்கை மேல் அறிக்கை வெளியிடும் எதிர்க்கட்சிகள், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளதை அகற்ற முடியுமா?என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்களுக்கு எண்ணிலடங்கா நலத்திட்டங்களை வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி, நல்லாட்சி புரிந்து வந்துள்ள ஜெயலலிதா எதிர்க்கட்சிகளால் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக சந்தித்து விரைவில் வெற்றி காண்பார் என்பது உறுதி. தமிழகத்தில் அமைதி நிலவுகிற போது, சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சிதைந்து விட்டது, அமைதி இழந்து விட்டது என்று எத…
-
- 0 replies
- 543 views
-
-
புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 14ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 14வது நாளாக சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில், பரணிகுமார், திவாகர், செல்வக…
-
- 0 replies
- 432 views
-
-
பெங்களூரு: எனக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருப்பது, என் மீது விரோதமும், கடும் வெறுப்பையும் நீதிபதி கொண்டிருப்பதையே காட்டுவதாக மேல்முறையீட்டு மனுவில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்களில் தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எனக்கு 100 கோடி ரூபாய் அபராதமாக விதித்துள்ளார். இது ஒரு அசாதாரணமான தீர்ப்பாகும். இதுவரை நடைமுறையில் இல்லாதது. மற்றொரு வகையில் பார்த்தால் எனக்கு விதிக்கப்பட்டுள்ள 100 …
-
- 2 replies
- 606 views
-
-
புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, ஜாமீன் கேட்டு ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 13வது நாளாக சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில், பரணிகுமா…
-
- 0 replies
- 604 views
-
-
அப்பீலை அச்சிடவே 3 மாதங்கள் ஆகும்னு 'அம்மா'வின் சட்டக்குழுவுக்கு தெரியாதா? Thursday, October 9, 2014, 15:16 பெங்களூர்: மேல்முறையீடு என்பது சினிமா நோட்டீஸ் அல்ல உடனே அச்சிடுவதற்கு. பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அச்சிட்டு, சரிபார்த்து, எண்ணிக்கை அளிக்க வேண்டும். மேல்முறையீடுகளை தயாரிக்கவே உயர் நீதிமன்றத்திற்கு 3 மாதங்கள் ஆகும் என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அப்பீலை அச்சிடவே 3 மாதங்கள் ஆகும்னு 'அம்மா'வின் ச…
-
- 0 replies
- 599 views
-
-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை சனிக்கிழமையன்று வழங்கப்படவிருக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முடிவடைந்தன. செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி குன்ஹா முன்னர் அறிவித்திருந்தார். பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் இடமும் தேதியும் மாற்றப்பட்டன. தீர்ப்பு செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம…
-
- 118 replies
- 14.6k views
-
-
நடிகர் ரஜினியை பாஜகவுக்கு இழுப்பதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஹைதரபாத்தில் இருக்கும் ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ரகசிய கருத்து கேட்பு நடந்துவருவதாக தெரிகிறது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். அவர் பாஜகவில் சேர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி என அக்கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர். சமீபத்தில் கொலு விழாவை காரணமாக வைத்து ரஜினி வீட்டுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ரஜினியின் மனைவி லதாவுடன் சுமார் ஒரு மணி நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். இந்த செய்தி முதன்முதலில் ‘தி இந்து’வில் வெளியானது. இத…
-
- 0 replies
- 527 views
-
-
பிணையில் வந்தார் ஜெயலலிதா! கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்று இன்று பிற்பகல் உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ஆம் திகதி தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் இந்த வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பிலும் கடந்…
-
- 28 replies
- 2.4k views
-
-
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! தனியாக கட்சி ஆரம்பித்தோ, தேசிய கட்சிகளில் அடிமட்டத்தில் இருந்து உழைத்தோ அல்லது திராவிட இயக்கம் நடத்திய சமூக போராட்டங்களில் ஈடுபட்டோ முதல்வர் பதவியை ஜெயலலிதா பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் என்ற பெரும் நட்சத்திரத்தின் நட்பும் ஆதரவும் தந்த பதவி தான் அதிமுக தலைவர் பதவியும் அதைத் தொடர்ந்து கிடைத்த முதல்வர் பதவியும். எம்ஜிஆரின் ஒரே வாரிசாக இவரை மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தால் தான் ஜானகியை புறக்கணித்துவிட்டு இவரை அதிமுகவின் தலைவியாக ஏற்றுக் கொண்டனர். ஜெயலலிதாவை முதல்வராக ஆக்கியதில் சில ஊடகங்களின் பங்கும் மிக மிக முக்கியமானது. பல சுயநல, சமூக காரணங்களால் இந்த ஊடகங்கள் ஜெயலலிதாவை ஆரம்பத்தில் இருந்தே தூக்கிப் பிடித்தன. சட்டம் தன் வேலைய…
-
- 4 replies
- 673 views
-
-
திருச்சி: ஜெயலலிதா ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, பெரியார் பேட்டியளிப்பதாக திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, 'விடுதலை' நாளிதழில் தந்தை பெரியார் விமர்சனம் செய்துள்ளதாக திருச்சியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 'பெரியார் பேசினால்…?' எனும் தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ''ஜெயலலிதா ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபடும் அ.தி.மு.க. காலிகள் குறித்து உங்கள் கருத்து என்ன?'' என்றும், அதற்கு, ''சமுதாய ஒழுக்கக் கேடாகப் போனதற்கு காரணம், ஒருவன் அயோக்கியத்தனம் செய்கிறான் என்றால் அதை கண்டிக்க வேண்டுமென்று தோன்றாததுதான்!'' என…
-
- 1 reply
- 2k views
-
-
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு உத்தரவிடும்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பாஜ மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பஸ் சேவையை நிறுத்துவது, தனியார் பள்ளிகளை மூடுவது போன்றவற்றில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. ஆனால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதை எல்லாம் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் செயல்படாமல் உள்ளார். ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்ள இத…
-
- 0 replies
- 321 views
-
-
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது. அணு மின் நிலையம், அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள், அதிகாரிகளின் குடியிருப்பு பாதுகாப்புக்காக சுமார் 500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 8 மணி நேரச்சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அணு மின் நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவுனரிடையே நேற்று நள்ளிரவு தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் நேரச்சுழற்சி அடிப்பட…
-
- 0 replies
- 268 views
-
-
தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை காரணமாக வைத்து ஆட்சியை கலைக்கும்படி தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் மனு கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 10 நாட்களில் தமிழகம் முழு வதும் நடந்த போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது. திமுக மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டத்தை கட்சித் தலைமை கூட்டியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமை யில் இன்று கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் கடந்த 27-ம் தேதி முதல் நடந்த சம்பவங்கள், போராட்டங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்த புள்ளிவிவரங்களுடன் வரும்ப…
-
- 1 reply
- 526 views
-
-
நேரடியாக தொடங்கியது மோடி - ஜெயலலிதா யுத்தம்: ‘சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை’ என்று ஹரியாணா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம் ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்துவிட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதா கைது விவகாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என பாஜக கருதுகிறது. அதன் முதல்கட்டமாகத்தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரிய கட்சிகள் எல்லாம் புறக்கணித்த நிலையில் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிட்டது. பல …
-
- 0 replies
- 862 views
-
-
முதல்வர் ஜெயலலிதா தண்டனைக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது: பிரதமர் வி.உருத்திரகுமாரன் ‘தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ‘தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதித்து அளித்துள்ள தீர்ப்பின் பிரகாரம் அவர் முதல்வர் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இந்த நெருக்கடியான நிலையைச் சட்டரீதியாக எதிர் கொண்டு …
-
- 1 reply
- 449 views
-
-
கடையடைப்பு, வேலை நிறுத்த நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடவேண்டாம்: - முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை [Tuesday 2014-10-07 19:00] "தமிழ்நாடு அமைதியான சூழலில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், தமிழ்நாடு அரசின் மீது களங்கம் கற்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் சிலர், சட்டம்-ஒழுங்கு குலைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இன்று தலை மைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின்சா ரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன்,வீட்டுவசதித் துறை அமை…
-
- 0 replies
- 443 views
-