தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 14ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 14வது நாளாக சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில், பரணிகுமார், திவாகர், செல்வக…
-
- 0 replies
- 431 views
-
-
பெங்களூரு: எனக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருப்பது, என் மீது விரோதமும், கடும் வெறுப்பையும் நீதிபதி கொண்டிருப்பதையே காட்டுவதாக மேல்முறையீட்டு மனுவில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்களில் தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எனக்கு 100 கோடி ரூபாய் அபராதமாக விதித்துள்ளார். இது ஒரு அசாதாரணமான தீர்ப்பாகும். இதுவரை நடைமுறையில் இல்லாதது. மற்றொரு வகையில் பார்த்தால் எனக்கு விதிக்கப்பட்டுள்ள 100 …
-
- 2 replies
- 606 views
-
-
புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, ஜாமீன் கேட்டு ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 13வது நாளாக சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில், பரணிகுமா…
-
- 0 replies
- 603 views
-
-
அப்பீலை அச்சிடவே 3 மாதங்கள் ஆகும்னு 'அம்மா'வின் சட்டக்குழுவுக்கு தெரியாதா? Thursday, October 9, 2014, 15:16 பெங்களூர்: மேல்முறையீடு என்பது சினிமா நோட்டீஸ் அல்ல உடனே அச்சிடுவதற்கு. பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அச்சிட்டு, சரிபார்த்து, எண்ணிக்கை அளிக்க வேண்டும். மேல்முறையீடுகளை தயாரிக்கவே உயர் நீதிமன்றத்திற்கு 3 மாதங்கள் ஆகும் என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அப்பீலை அச்சிடவே 3 மாதங்கள் ஆகும்னு 'அம்மா'வின் ச…
-
- 0 replies
- 598 views
-
-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை சனிக்கிழமையன்று வழங்கப்படவிருக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முடிவடைந்தன. செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி குன்ஹா முன்னர் அறிவித்திருந்தார். பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் இடமும் தேதியும் மாற்றப்பட்டன. தீர்ப்பு செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம…
-
- 118 replies
- 14.6k views
-
-
நடிகர் ரஜினியை பாஜகவுக்கு இழுப்பதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஹைதரபாத்தில் இருக்கும் ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ரகசிய கருத்து கேட்பு நடந்துவருவதாக தெரிகிறது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். அவர் பாஜகவில் சேர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி என அக்கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர். சமீபத்தில் கொலு விழாவை காரணமாக வைத்து ரஜினி வீட்டுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ரஜினியின் மனைவி லதாவுடன் சுமார் ஒரு மணி நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். இந்த செய்தி முதன்முதலில் ‘தி இந்து’வில் வெளியானது. இத…
-
- 0 replies
- 526 views
-
-
பிணையில் வந்தார் ஜெயலலிதா! கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்று இன்று பிற்பகல் உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ஆம் திகதி தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் இந்த வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பிலும் கடந்…
-
- 28 replies
- 2.4k views
-
-
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! தனியாக கட்சி ஆரம்பித்தோ, தேசிய கட்சிகளில் அடிமட்டத்தில் இருந்து உழைத்தோ அல்லது திராவிட இயக்கம் நடத்திய சமூக போராட்டங்களில் ஈடுபட்டோ முதல்வர் பதவியை ஜெயலலிதா பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் என்ற பெரும் நட்சத்திரத்தின் நட்பும் ஆதரவும் தந்த பதவி தான் அதிமுக தலைவர் பதவியும் அதைத் தொடர்ந்து கிடைத்த முதல்வர் பதவியும். எம்ஜிஆரின் ஒரே வாரிசாக இவரை மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தால் தான் ஜானகியை புறக்கணித்துவிட்டு இவரை அதிமுகவின் தலைவியாக ஏற்றுக் கொண்டனர். ஜெயலலிதாவை முதல்வராக ஆக்கியதில் சில ஊடகங்களின் பங்கும் மிக மிக முக்கியமானது. பல சுயநல, சமூக காரணங்களால் இந்த ஊடகங்கள் ஜெயலலிதாவை ஆரம்பத்தில் இருந்தே தூக்கிப் பிடித்தன. சட்டம் தன் வேலைய…
-
- 4 replies
- 673 views
-
-
திருச்சி: ஜெயலலிதா ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, பெரியார் பேட்டியளிப்பதாக திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, 'விடுதலை' நாளிதழில் தந்தை பெரியார் விமர்சனம் செய்துள்ளதாக திருச்சியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 'பெரியார் பேசினால்…?' எனும் தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ''ஜெயலலிதா ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபடும் அ.தி.மு.க. காலிகள் குறித்து உங்கள் கருத்து என்ன?'' என்றும், அதற்கு, ''சமுதாய ஒழுக்கக் கேடாகப் போனதற்கு காரணம், ஒருவன் அயோக்கியத்தனம் செய்கிறான் என்றால் அதை கண்டிக்க வேண்டுமென்று தோன்றாததுதான்!'' என…
-
- 1 reply
- 2k views
-
-
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு உத்தரவிடும்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பாஜ மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பஸ் சேவையை நிறுத்துவது, தனியார் பள்ளிகளை மூடுவது போன்றவற்றில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. ஆனால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதை எல்லாம் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் செயல்படாமல் உள்ளார். ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்ள இத…
-
- 0 replies
- 321 views
-
-
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது. அணு மின் நிலையம், அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள், அதிகாரிகளின் குடியிருப்பு பாதுகாப்புக்காக சுமார் 500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 8 மணி நேரச்சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அணு மின் நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவுனரிடையே நேற்று நள்ளிரவு தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் நேரச்சுழற்சி அடிப்பட…
-
- 0 replies
- 268 views
-
-
தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை காரணமாக வைத்து ஆட்சியை கலைக்கும்படி தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் மனு கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 10 நாட்களில் தமிழகம் முழு வதும் நடந்த போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது. திமுக மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டத்தை கட்சித் தலைமை கூட்டியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமை யில் இன்று கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் கடந்த 27-ம் தேதி முதல் நடந்த சம்பவங்கள், போராட்டங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்த புள்ளிவிவரங்களுடன் வரும்ப…
-
- 1 reply
- 525 views
-
-
நேரடியாக தொடங்கியது மோடி - ஜெயலலிதா யுத்தம்: ‘சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை’ என்று ஹரியாணா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம் ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்துவிட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதா கைது விவகாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என பாஜக கருதுகிறது. அதன் முதல்கட்டமாகத்தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரிய கட்சிகள் எல்லாம் புறக்கணித்த நிலையில் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிட்டது. பல …
-
- 0 replies
- 861 views
-
-
முதல்வர் ஜெயலலிதா தண்டனைக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது: பிரதமர் வி.உருத்திரகுமாரன் ‘தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ‘தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதித்து அளித்துள்ள தீர்ப்பின் பிரகாரம் அவர் முதல்வர் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இந்த நெருக்கடியான நிலையைச் சட்டரீதியாக எதிர் கொண்டு …
-
- 1 reply
- 449 views
-
-
கடையடைப்பு, வேலை நிறுத்த நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடவேண்டாம்: - முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை [Tuesday 2014-10-07 19:00] "தமிழ்நாடு அமைதியான சூழலில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், தமிழ்நாடு அரசின் மீது களங்கம் கற்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் சிலர், சட்டம்-ஒழுங்கு குலைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இன்று தலை மைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின்சா ரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன்,வீட்டுவசதித் துறை அமை…
-
- 0 replies
- 443 views
-
-
சென்னை: நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக பா.ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவி்ல்லை. இது நான் எதிர்பார்த்தது தான். காலையில் எனது ட்விட்டர் வலைதளத்திலும் கூட இதனைத்தான் பதிவு செய்திருந்தேன். நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசு வழக்கறிஞருக்கு மட்டும்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அவர்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவ…
-
- 1 reply
- 408 views
-
-
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேவேளையில், தீர்ப்பு விவரம் முழுமையாக வெளிவருவதற்கு முன்பே ஊடகங்களில் 'ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்' என செய்திகள் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது. நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வாதத்தின்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் முதலில் வாதிட்டார். பிற்பகலில் தொடர்ந்த வாதத்தின்போது, ந…
-
- 0 replies
- 465 views
-
-
கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் வகையில் சென்னையில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சர்ச்சைப் போஸ்டர்கள் அகற்றப்பட்டன. ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என சிலர் சென்னையின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனால், அங்கு கன்னட மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில் கர்நாடக காவல்துறை உயர் அதிகாரி எம்.என். ரெட்டி, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார். விஷமிகள் சிலர் ஒட்டிய சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் அகற்றப்பட்டதாகவும் தனது ட்வி…
-
- 0 replies
- 412 views
-
-
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக முதலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய அ.தி.மு.க.வினர் பின்னர், ஜாமீன் மறுக்கப்பட்ட தகவலையடுத்து ஆத்திரம் அடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா உள்பட 4 பேரின் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்ததையடுத்து, அரசு வழக்கறிஞர் பவானி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதை பார்த்து அ.தி.மு.க.வ…
-
- 2 replies
- 424 views
-
-
சென்னை: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்காவிட்டால் கன்னடர்களை சிறைபிடிப்போம் என அதிமுக சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.எம். ரெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் அதிமுகவினர், இது தொடர்பாக பலவிதமான பேனர்களையும் வைத்து வருகின்றனர். அதன் ஒரு அம்சமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு பே…
-
- 0 replies
- 417 views
-
-
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரச சிறப்பு சட்டத்தரணி ஆச்சர்யா தெரிவித்துள்ளார். இதுபோன்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அந்த தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களை பிணையில் விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதன்படி, குற்றவாளிகளுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆச்சார்யா கூறினார். தசரா விடுமுறை நேற்றுடன் முடிவடைவதால் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று திறக்கப்படுகின்றது. நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை நடைபெறும். சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஜெயலலிதா சார்ப…
-
- 11 replies
- 1.1k views
-
-
சென்னை: அமைச்சர்கள் தங்கள் துறை சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்நாட்டில் தான் வாழ்கிறோமா அல்லது கடும்புலி வாழும் காட்டில் வாழ்கிறோமா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்றாடம் ஒவ்வொரு பகுதியிலும் உண்ணாவிரதப் போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும், மனிதச் சங்கிலி என்றும் போட்டிப் போட்டுக் கொண்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக் கூடிய அளவில் முறைப்படி காவல் துறையினரின் அனுமதியைக் கூடப் பெறாமல் நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில…
-
- 3 replies
- 663 views
-
-
கத்தி படம் தொடர்பாக பொய்களைப் பரப்புவது யார்? -புகழேந்தி தங்கராஜ் 'இளைய தளபதி' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தம்பி விஜயின் கத்தி திரைப்பட விவகாரத்தில் நான் வெளிப்படையாகப் பேச நேர்ந்தது, விரும்பி எதிர்கொண்ட ஒரு சூழலில் அல்ல! உண்மையைப் பேச மற்றவர்கள் தயங்கிய நிலையில், நானாவது அதைப் பேசியாக வேண்டுமே என்கிற கட்டாயத்தில், ஒரு தர்மசங்கடத்துடன்தான் அதைப் பேசினேன். என் நண்பர்கள் அனைவருக்கும் இது தெரியும். ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் லைக்கா மொபைல் நிறுவனம் கத்தி திரைப்படத்தை எடுத்திருக்கிறது என்பதுதான் பிரச்சினையின் அடிப்படை. இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் - என்று தமிழக அரசு வெளிப்படையாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னை: பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாளை (7ஆம் தேதி) அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தி.மு.க. மற்றும் பா.ம.க. வழக்கறிஞர்கள், இது தொடர்பாக மனுகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று (6ஆம் தேதி) வந்தது. இதை விசாரித்த நீதிபதி, ''பள்ளி, கல்லூரிகள் நாளை (7ஆம் தேதி) வழக்கம்போல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதி அளித்தார். மேலும், தமிழகத்த…
-
- 1 reply
- 654 views
-
-
டெல்லியில் புலி தாக்கி இறந்த அந்த வாட்ஸ் அப் காணொளியை பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது... !!! .. மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும். .. அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன்...! என்னுள் எழும்பிய அந்த ஒரு கேள்வி ?? .. கற்றலினால் ஆன பயன் என்ன? .. எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம். எல்லாம் ச…
-
- 13 replies
- 1.4k views
-