தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
தேனியில் நாம் தமிழர் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நாம் தமிழர் கட்சி கடந்த 2 வருடங்களாக போராட்ட களத்திலேயே உள்ளது. தற்போது கட்சியாக உருவெடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ஆயத்தமாகி வருகிறோம். தமிழகம் முழுவதும் 137 மாவட்டங்களாக பிரித்து புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தேனி மாவட்ட புதிய நிர்வாகிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் நிர்வாகிகளை ஒன்று திரட்டி கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க மே 18–ந் தேதி திருச்சியில் மாநாடு நடத்த உள்ளோம். தேனி மாவட்டம்…
-
- 3 replies
- 642 views
-
-
ராமேஸ்வரம் : நூற்றாண்டு விழா கண்ட பாம்பன் ரயில் பாலத்தை, 'பாரம்பரிய சின்னம்' ஆக, 'யுனஸ்கோ' அறிவிக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பாம்பன் கடல் மீது 2.06 கி.மீ., தூரத்தில் ரயில் பாலம் அமைக்க, 1909ம் ஆண்டில் பணியை துவக்கிய ஆங்கிலேயர்கள், 145 தூண்கள், 126 இரும்பு கர்டர்களுடன் பாலம் அமைத்து, 1914ம் ஆண்டு, பிப்., 24ம் தேதி, ரயில் சேவை துவக்கினார்கள். இப்பாலத்தில் சரக்கு கப்பல், கடற்படை கப்பல்கள், ஆராய்ச்சி கப்பல்கள், மீன்பிடி படகுகள் கடந்து செல்ல, அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத அக்காலத்தில், பாலம் நடுவில் 213 அடி நீளத்தில், 936 டன் எடையில் தூக்கு பாலத்தை, பொறியாளர் ஜெர்சர் வடிவமைத்தார். இன்று வரை, பழைய தொழில் நுட்பத்துடன் கப்பலு…
-
- 0 replies
- 523 views
-
-
இலங்கை வந்த தமிழக கரப்பந்து வீரர்கள் கவலையுடன் திரும்பினர் ஆசிய இளையோர் கரப்பந்து (volleyball) போட்டிக்காக இலங்கை சென்றிருந்த தமிழக வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டதும், பயிற்சியாளர் ஆண்டனி, விடுதி மேலாளர் நாகராஜன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதும் தமிழக விளையாட்டு வீரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழக விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொழும்பில் வெள்ளிக்கிழமை (05) தொடங்கிய 10-வது ஆசிய இளையோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. அதில் தமிழக அரசின் சிறப்பு விளையாட்டு விடுதியைச்…
-
- 0 replies
- 375 views
-
-
சென்னை: தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட, 900 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை குறித்து, தகவல் அறிந்தவர்கள், தெரிவிக்கும்படி, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து, பல ஆண்டுகளாக கலைப்பொருட்கள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு பணத்திற்காக விற்கப்படுகின்றன. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் அவ்வாறு ஆஸ்திரேலியாவிற்கு விற்கப்பட்ட, ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த நடராஜர் சிலை மற்றும் விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆகியவை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த, 900 ஆண்டு கள் பழமையான மற்றொரு நடராஜர் சிலை, வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருப்பதா…
-
- 0 replies
- 657 views
-
-
தாகூர் பிலிம் சென்டர் இந்தியாவிலேயே முதல் முறையாகத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் அற்புதமான ஒலி-ஒளித் தொழில்நுட்பத்துடன் திரையரங்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேசத் தரத்தில் சென்னையில் சினிமா பார்க்கும் அனுபவத்துக்கு ஒரு புதிய முகவரி ஒன்று உருவாகியுள்ளது. அருமையான வசதிகளுடன் கூடிய திரையரங்கம் மட்டும் இல்லாமல் திரையரங்கத்தைச் சுற்றியுள்ள இடமும் ஓர் ஓவியக்கூடம் போல உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பசுமையான சூழலில் இயங்கிவரும் அரசு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தான் இந்தத் திரையரங்கம் அமைந்துள்ளது. இதன் பெயர் தாகூர் பிலிம் சென்டர். “தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் முயற்சியில் இந்தியாவில் உருவான முதல் தி…
-
- 0 replies
- 575 views
-
-
சென்னை:அமைச்சருடன் ஏற்பட்ட மோதலால், கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம், மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை திடீரென இடமாற்றம் செய்தது, ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களிடம், கடும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது. கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக, கடந்த 2012 ஜூன் மாதம், சகாயம் பொறுப்பேற்றார். அதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தை மேம்படுத்த, சகாயம், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இதன் பயனாக, 2012 - 13ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.கோ - ஆப்டெக்ஸ் விற்பனை, 200 கோடியில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 14 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. இதிலிருந்து ஒரு கோடியை, நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கினார். நெசவாளர்கள் புகைப்படத்தை, அவர்கள் …
-
- 0 replies
- 632 views
-
-
சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பட்டினிப்போராட்டம். 31.08.2014 தமி்ழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆயிரக்கனக்கான ஈழ ஏதிலிகளிடமும் ஐ நா குழு விசாரிக்க வேண்டும், ஐ நா குழு இந்தியா வருவதற்கு மத்திய பா ஜ க அரசு விசா வழங்க வேண்டியும், விசாரணை நிலுவையில் உள்ள சூழலில் ஐ நா சபையில் கொடுங்கோலன் ராஜபக்ஷேவை உரை நிகழ்த்த அனுமதிக்கக்கூடாது என்று அண்ணன் சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது. (facebook) நாம் தமிழர் கட்சி சார்பில் இனி நடைபெறவிருக்கும் போராட்டங்கள். (facebook)
-
- 6 replies
- 486 views
-
-
இந்தியாவின் தமிழக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைக்கடிகாரம் கட்டி சென்றதற்காக அவரை தலித் அல்லாத பிற சமூக மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி, மணிக்கட்டையும் வெட்டி விட்டனர். இந்த செயலால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. புதன்கிழமை இரவு (03.09.14) இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் திங்கள்கிழமை (01.09.14) பாடசாலைக்கு சென்றபோது கைக்கடிகாரம் கட்டி சென்றதற்காக சாதி வெறியில் இந்த வெறிச் செயலில் அந்த மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருத்தங்கல், திருவள்ளுவர் காலனி பகுதியைச் சேர்ந்த 16 வயதான பரஞ்சோதி றமேஸ் திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல் நிலைப் பாடசாலையில் பிளஸ் 1 படித்து வருகிறார். திங்கள்கிழமை (01.09.14) அன்று பாடசா…
-
- 0 replies
- 494 views
-
-
மீனவர் படகுகள் விவகாரம்.. அந்தர்பல்டி அடித்தார் சுப்பிரமணியன் சுவாமி! டெல்லி: தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கைக்கு நானே ஆலோசனை கூறியதாக பேட்டியளித்திருந்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தற்போது தாம் அப்படிக் கூறவில்லை என்று மறுத்துள்ளார். பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்த போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.. அவர்கள் தொழிலாளர்கள். அதனால் விடுவித்துவிடுங்கள். ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள். அதை விடுவிக்க வேண்டாம் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது என்று கூறியி…
-
- 5 replies
- 726 views
-
-
புதைந்துபோன வரலாறு https://www.facebook.com/video/video.php?v=721854244552491 மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார…
-
- 0 replies
- 2.5k views
-
-
சென்னை: ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் டெசோ இயக்கத்தினர் இலங்கை தமிழர் பிரச்னையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தருவதோடு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் ராஜபக்சே பங்கேற்க அனுமதி தரக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதித்து விசா வழங்க வேண்டும். ஈழத் தமிழர்க…
-
- 2 replies
- 743 views
-
-
'ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!' பகீர் கிளப்பும் டெல்லி பத்திரிகையாளர் 24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்! குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் இன்னம…
-
- 18 replies
- 11.6k views
-
-
சென்னை: தமிழர் பிரச்சனையில் திமிர் பிடித்து கருத்து கூறும் சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டுக்குள் நுழைந்தால் கடுமையான போராட்டத்தை நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு எப்படி நடந்துகொள்ளும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து விளக்கியதும், சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், அவர்களின் படகுகளை திருப்பித் தராமல் இலங்கை அரசு பிடித்து வைத்திருப்பதற்கும் தான் கூறிய யோசனைகளே காரணம் என்றும் சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது தமிழர்களிடையே, குறிப்பாக அன்றாடம் பாதிப்பிற்குள்ளாகும் தமிழக மீனவர்களிடையே கடும் கோவத்தையும், கொந்தள…
-
- 0 replies
- 650 views
-
-
மத்திய அரசு ஆசிரியர் தின பெயர் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும்-வைகோ வலியுறுத்தல்! ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, தனது கடும் உழைப்பாலும், முயற்சியாலும் கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார். அவர் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5 ஆம் நாள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்கால இளம் தலைமுறையை பிஞ்சு பருவத்திலிருந்தே ஆற்றுப்படுத்தி, சமூகத்தில் உயர்ந்தவர்களாக ஏற்றம் பெற கல்விச் செல்வத்தை வாரி…
-
- 0 replies
- 422 views
-
-
தமிழர்களின் படகுகளை நான்தான் பிடித்துவைக்க சொன்னேன்.!! மாண்புமிகு "Dr.சுப்ரமணிய சாமி" , தந்தி டிவிக்கு பகீர் பேட்டி..!! https://www.facebook.com/video/video.php?v=618585048257812
-
- 5 replies
- 1k views
-
-
குறைவான சம்பளம், கடுமையான வேலை நேரங்கள், ஓய்வெடுக்க முடியாத சூழல், பாலியல் சீண்டல்கள்… “குவைத் தெருக்கள்ல கார்ல வெச்சு என்னை ரெண்டு லட்ச ரூபாய்க்குக் கூவிக் கூவி வித்தாங்க மேடம். என்னால மறக்க முடியல… ஏதாவது பண்ணணும் மேடம்” - இறுகப் பற்றியிருந்தபோதும் கைகளின் நடுக்கம் குறையவில்லை நதியாவுக்கு. “நீங்கதான் தப்பிச்சு வந்துட்டீங்களே…” கேள்வியை மிக அவசரமாக இடைமறிக்கிறார் நதியா. “ஆமா! ஆனா, அங்க இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. எல்லாரும் தப்பிக்கணும் இல்ல?” வெளிநாடுகளில் வீட்டு வேலை பார்க்கும் பெண்களின் பிரச்சினைகள்பற்றிய அந்தக் கருத்தரங்கில் நதியா போலப் பல கண்ணீர்க் குரல்களைக் கேட்க முடிந்தது. மிக மோச மான சூழலிலிருந்து தப்பித்து வந்து ஒரு மாதமே ஆன நிலையில், இப்போதும் பானுமதிய…
-
- 0 replies
- 531 views
-
-
எம்.ஏ.எம். ராமசாமி பதினெட்டு வருடங்களுக்கு முன்பு செட்டிநாடே திருவிழாக் கோலம் காண நடந்தது அந்த வைபவம். ஊருக்கெல்லாம் விருந்து வைத்து, ஒக்கூர் சேக்கப்பச் செட்டியார் மகன் ஐயப்பனை முத்தையாவாக்கி சுவீகாரம் எடுத்துக்கொண்டார் தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். அப்படி சுவீகாரம் கொண்ட மகனே இப்போது வளர்ப்புத் தந்தைக்கு எதிராக வரிந்து கட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. எம்.ஏ.எம்.ராமசாமியின் கொள்ளுத் தாத்தா முத்தையா செட்டியார் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் தனக்கென ஒரு செல்வாக்கை தக்க வைத்திருந்தார். தங்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்ட அவருக்கு ‘ராஜா சர்’ பட்டத்தை வழங்கியது பிரிட்டிஷ் அரசு. அதுமுதல் அந்தக் குடும்பத்தை ‘ராஜா வீடு’ என்று அழைத்தே பழகிப்போனது செட்டிநாட்டுச் சீமை. செட்…
-
- 0 replies
- 2.9k views
-
-
அண்ணா பிறந்த நாளை ஒட்டி, அடுத்த மாதம், 15ம் தேதி, திருவள்ளூரில் ம.தி.மு.க.,வின் மாநில மாநாடு நடக்கிறது. ம.தி.மு.க.,வினரைப் பொறுத்த வரையில், இந்த மாநாட்டு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். ஏனென்றால், இம்மாநாட்டில் தான், 2016 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து, வைகோ அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிரான முழக்கம் : தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ம.தி.மு.க., தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை, அக்கட்சித் தலைவர் வைகோவின் தொடர் அறிக்கைகள் ஏற்படுத்துகின்றன. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா அன்று துவங்கிய, மத்திய அரசுக்கு எதிரான அவரது முழக்கம், தொடர்ந்து கொண்டே போகிறது. இதுகுறித்து, ம.தி.மு.க., வட்டாரம் மேலும் கூறியதாவது: இந்தி மொழிக்கு மு…
-
- 0 replies
- 562 views
-
-
நீங்கள் செய்த கர்மம் சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது: சன் டிவியை சாடிய ஹைகோர்ட் நீதிபதி! சென்னை: கேபிள் டிவி தொழிலில் ஏகாதிபத்தியமாக செயல்பட்டு மற்றவர்களை பாதிப்படைய செய்தீர்கள்...அந்த கர்மம் சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது என்று சன் டிவி குழுமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் சாடியுள்ளார். சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விட்டல் சம்பத் குமரன் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அப்போது அவர், கல் கேபிள்ஸ் ந…
-
- 2 replies
- 739 views
-
-
தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் இந்தியாவின் முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மூத்த சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசிய நிறுவனம் மேக்ஸிஸுக்கு விற்கப்பட்டது தொடர்பில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின்னரே சிபிஐயின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இவர்களில் ஜே.எஸ்.ஷர்மா உயிரிழந்து விட்டாலும் அவரது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.இந்தக் குற்றப்பத்திரிக்கையில், மாறன் சகோதரர்களைத் தவிர மலேசியத் தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் நிறுவனத்தின் உயரதிகாரியான அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மற்றும் முன்…
-
- 0 replies
- 487 views
-
-
புதுடெல்லி: ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்பான ஆபாச இணையதளங்களை முடக்க கோரி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது பதில் அளித்துள்ள மத்திய அரசு, இது போன்ற ஆபாச இணையதளங்களின் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளது. இதனால் கட்டுப்படுத்துவதில் சில பிரச்னைகள் உள்ளன. இத்தகைய பிரச்னைகளை தீர்க்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இதனையடுத்து, பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் அறிக்கையை 6 வார காலங்களில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http:…
-
- 0 replies
- 399 views
-
-
2 லட்சம் அப்பாவி தமிழர்களின் இரத்தம் குடித்த கொடூரன் ராஜபக்சேயின் LYCA திரைப்பட நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்தை தடை செய் என இனம் காக்கும் வீரத்தமிழர்கள் , அண்ணன் பிரபாகரன் தம்பிகள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/33488/57//d,article_full.aspx
-
- 0 replies
- 473 views
-
-
அடுத்தடுத்த அடிகள்... சரியக் காத்திருக்கிறது சன் டிவி சாம்ராஜ்யம்!! சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமானது அடுத்தடுத்த நெருக்கடிகளால் மிகப் பெரியவை சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது. திமுக ஆதரவுடன் தொடங்கப்பட்ட சன் டிவி. அதன் பின்னர் அத்தனை அதிகார பலத்தையும் பயன்படுத்தி வலுவான அஸ்திவாரம் போட்டு பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டது. இந்த சன் டிவி சாம்ராஜ்யத்தை மக்கள் அதிகம்பேர் விரும்புகிறார்கள் என்ற கட்டமைப்பை உருவாக்க கேபிள் தொழிலிலும் குதித்தது. எஸ்.சி.வி. என்றாலே இதர கேபிள் ஆபரேட்டர்கள் நடுநடுங்கும் வைக்கும் அளவுக்கு ஏகபோகம் கொண்டதாக இருந்தது எஸ்.சி.வி. ஊடக நிறுவனங்கள் நடுக்கம்.. கேபிள் டிவி ஆபரேட்டர்க…
-
- 3 replies
- 3.3k views
-
-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வராக முன்னாள் மத்திய நிதியமைச் சர் ப.சிதம்பரத்தை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. தலைவர் பதவியை பிடிப்பதற்காக ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், திரு நாவுக்கரசர் ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து ‘தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: தலைவர் பதவிக்காக பலபேர் களத்தில் இறங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம், வாசன், சுதர்சன நாச்சி யப்பன் இந்த மூவருக்கும் இடையில் தான் கடும்போட்டி நிலவுக…
-
- 1 reply
- 460 views
-
-
தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) அவசரக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுபவீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய நிலையில், டெசோ கூட்டம் அவசரமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=134343365125334559#sthash.CeLtkxI5.dpuf
-
- 0 replies
- 542 views
-