Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் பேசிய வைகோ, ‘இனி ஒருபோதும் தோற்க மாட்டேன். இனி நமக்கு அனைத்திலும் வெற்றி தான்’ என்று கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் அறிவித்தார். இந் நிலையில், தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப் பதற்காக மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தைக் சனிக்கிழமை சென்னையில் கூட்டி னார் வைகோ. தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக குழு ஒன்று அமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மதிமுக பொருளாளர் மாசிலா மணி, ஆட்சி மன்றக் குழு செயல…

  2. திருச்சி அருகே தா.பேட்டையில் ஒன்றிய, நகர திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காட்ட வேண்டும், தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளது, பாராளுமன்ற தேர்தலில் கலைஞர் தலைமை யில் பலமான கூட்டணி அமையும். பெரம்பலூர், திருச்சி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றார். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=114598

  3. 11, ஜனவரி 2014 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சனிக்கிழமை விழுப்புரத்தல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். நாங்கள் கேட்பது என்ன? என்று அவர்களுக்கு தெரியும். எங்களுக்கு என்ன கொடுக்கலாம் என்றும் அவர்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த பிறகு தான் பேச்சுவார்த்தையில் இறங்குவோம். இப்போது மக்கள் பிரச்சினையை பார்த்து வருகிறோம். சட்டமன்ற தேர்தல் போலவே வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்போம். நாங்கள் மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சிகளும் கூட்டணியில் இருக்கிறோம். எங்களது நோக்கம் மத்தியில் பா.ஜனதாவும், காங்கிரசு…

  4. 11, ஜனவரி 2014 திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கட்சியில் வட்டார மற்றும் வட்ட கமிட்டியை அமைக்க வேண்டும். கட்சிப் பற்றுள்ள இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 23 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 70,000 வாக்காளர்கள் புதியவர்கள். அவர்கள் 18 முதல் 22 வயதுக்குள்பட்டவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் இதை இளைஞர்கள் தெரிந்திருக்…

  5. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 20-1-2014 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி முறையாக செய்து, 30-1-2014 அன்று மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுத் தொகுதி வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் - ரூ.25,000/- தனித் தொகுதி மற்றும் மகளிர் விண்ணப்பக் கட்டணம் - ரூ.10,000/- விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.1000/-வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூற…

  6. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ‘’ஊழலை ஒழிக்க முன்னோடியாக திகழ்பவன் நான். தமிழ்நாட்டில் போதிய சாலை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியையும் அரசு செய்து கொடுக்க வில்லை. எந்தக் கட்சியிலும் ஆரோக்கியமான போட்டியை பார்க்க முடியாது. ஆனால், தேமுதிகவில் தான் ஆரோக்கியமான போட்டியை பார்க்க முடியும். மத்தியில் யார் ஆளப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிகவின் முடிவை பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=114645

  7. வகுப்புவாத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் பாஜக கூட்டணிக்கு மதிமுக செல்லக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் கூறியுள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாது, ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ், பாஜகவின் நிலைப்பாடு ஒன்றாகவே உள்ளது. இலங்கை தமிழக மீனவர்கள் பேசினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. மீனவர்கள் பிரச்சனைக்கு இந்தியா இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்றார். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=114618

  8. பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி முடிவு செய்வார் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார். பேட்டி காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி வி.நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் எந்தவொரு திட்டங்களும் நிறைவேற்றப்படாதது வருத்தத்திற்குரியது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும் பாராளுமன்ற உறுப்பினரையும் குறை கூறி ஆட்சி நடத்த முதல்–அமைச்சர் நினைக்கிறார். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர். காங்கிரஸ் அரசில் அனை…

  9. தமிழக- இலங்கை மீனவர்கள் இடையே சென்னையில் வரும் 20-ம் திகதி பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள போதிலும், அந்தக் கூட்டம் சாத்தியப்படாது என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 179 பேரை விடுதலை செய்யவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதேநேரம் இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 275 பேரையும் இலங்கை அரசு ஓரிரு நாட்களில் விடுவிக்கும் என்றும் ஜெயலலிதா நேற்றிரவு அறிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், தமிழகத்தில் மட்டுமன்றி ஆந்திராவிலும் இலங்கை மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அமைச்ச…

  10. திமுகவின் பிரச்சார பீரங்கியாக மாறுவாரா நமீதா....?? சென்னை: திமுகவில் சேர்ந்து லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் நடிகை நமீதா பிரசாரம் செய்யப் போகிறார். விரைவில் இதற்காக அவர் திமுகவில் முறைப்படி சேருவார். இதுதான் இப்போது லேட்டஸ்டாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான செய்தி. எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப சீரியஸாக இது பரவி வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது நடிகர் வடிவேலு படு தீவிரமாக திமுக கூட்டணிக்காக வாக்கு சேகரித்தார். போகிற இடமெல்லாம் தேமுதிக தலைவர் விஜயகாந்த்த்தை மிகக் காட்டமாக அவர் விமர்சித்தார். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. தேமுதிகவை தனது கூட்டணியில் சேர்க்க …

  11. நெல்லை: ஆம் ஆத்மி கட்சியில் இணையுமாறு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனுக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன்அழைப்பு விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்குழுவினர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் ஏற்கெனவே போராட்டம் நடைபெறும் இடிந்தகரை கிராமத்துக்கு வந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அத்துடன், ஆம் ஆத்ம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று டெல்…

  12. நேற்றைய புகழில் இன்று பதவிசுகம் அனுபவிக்கும் கொள்கை கோட்பாடற்ற அரசியல், சுயநலம், பதவிமோகம், பொதுநல அக்கறையின்மை, மூடநம்பிக்கை வளர்த்தல், பிற்போக்குத்தன்மை, சுயமரியாதை இல்லாத தனி மனித துதி, இயற்கை வளங்களை அழித்து கொள்ளையடித்தல், மக்களின் உரிமைப் போராட்டங்களை ஜனநாயக மரபின்றி ஒடுக்குதல், ஆயிரமாயிரம் வருடங்களாக தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்விற்கு வழி காணாமல் அவர்களை மேலும் மேலும் ஒடுக்குதல், மக்களைப் பிரிக்கும் சாதிமத வெறி ஊட்டி வளர்த்தல், சிறுபான்மையோரின் நலனைப் பேணாமல் அவர்களை அச்சத்திற்கு உள்ளாக்குதல்... நாளுக்கு நாள் நலிந்து போகும் விவசாயத்தை சர்வதேச தனியார் விதை உரவியாபாரிகளின் கொள்கைக்கு பலியாக்கி இயற்கையை சீரழித்தல், ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழ் உயிர்களை இனவெறி கொண்டு…

  13. இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தேவயானி கோபர்கடே -- இந்திய அமெரிக்க உறவுகளில் நெருக்கடி விலகியது ? இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த மேலும் தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை. தொடர்புடைய பக்கங்கள் தேவயானி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதியக் காலக்கெடுவை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு முன்னதாக , விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் சர்ச்சை ஏற்படக் காரணமாக இருந்த, இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியா திரும்பிக்கொண்டிருக்கிறா…

  14. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 15–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் வழங்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் தென்மண்டல தி.மு.க. செயலாளர் மு.க.அழகிரி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் பெயருடன் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தி.மு.க. பொதுக்குழு மீண்டும் நடக்க இருப்பதாக மு.க.அழகிரி படத்துடன் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.…

  15. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை வைகோ அமைத்துள்ளார். கூட்டம் பாராளுமன்ற தேர்தல் குறித்து முடிவு எடுக்க ம.தி.மு.க. ஆட்சி மன்ற குழு மற்றும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கணேசமூர்த்தி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தென் மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் தவிர மற்ற மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய வைகோ, மத்தியில் காங்கிரஸ் வரக்கூடாது என்பது தான் ம.தி.மு.க.வின் நிலைப்பாடு. இதை ஏற்கனவே நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன். எனவே அதனை …

  16. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அக்கட்சி, தொகுதி உடன்பாடு ஏற்படாததால் கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2-இல் வெற்றி பெற்றது. ராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார். அதன் பிறகு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மனிதநேய மக்கள் கட்சி, கடந்த ஜூனில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தது. இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக அக…

  17. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு சிறப்புற பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2013 ஆம் ஆண்டில் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு…

  18. மதுரை அருகே உள்ள நாகமலை, புதுக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கிராமங்கள் தோறும் காங்கிரஸ், இல்லந்தோறும் கைச் சின்னம் என்ற சிறந்த லட்சியத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சிறந்த திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அதுவே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். அனைவருக்கும் உணவு, கட்டாயக் கல்வி, கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களால் காங்கிரஸ் கட்சி மக்களின் செல்வாக்கை பெற்றுள்ளது. ஆகவே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். தமிழகத்தைப் பொறுத்த வரை வெற்றிக் கூட்டணி அமையும்…

  19. கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் மற்றும் பெண்ணாடம் நகர தே.மு.தி.க. சார்பில் பெண்ணாடத்தில் தே.மு.தி.க. கட்சியின் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:– எம்.ஜி.ஆர். விசுவாசிகள் யாரும் இன்று அ.தி.மு.க.வில் இல்லை. தே.மு.தி.க.வால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தே.மு.தி.க. போட்டியிட்ட ஒரு தொகுதியில்கூட ஜெயலலிதா பிரசாரம் செய்ய வரவில்லை. ஆனால் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. மின் பிரச்சனை, காவேரி நீர் பிரச்சனை எதுவும் தீர்வு காணப்படவில்லை. தே.மு.தி.க. தெரியாதனமாக அ.தி.மு.க.விடம…

  20. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப் மகன் திருமணத்திற்கான பத்திரிகையை கொடுக்க சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் திமுக தலைமையிலான அணியில் தேமுதிக இணைந்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார். அதனையொட்டி இந்த சந்திப்பு இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=114578

  21. பெண்கள் நினைத்தால் நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் பகுதி திமுக சார்பில் பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா, தண்டையார்பேட்டையில் வியாழக்கிழமை நடந்தது. இதில், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஸ்டாலின் பேசிய தாவது: வடசென்னை பகுதியில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக ஆளுங் கட்சியாக இல்லாவிட்டாலும், மக்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்குவதில் ஆளுங் கட்சியாகவே செயல்படுகிறது. பெண்களுக்கு நாட்டு நடப்புகள் தெரிய வேண்டும். பெண்கள் நினைத்தால் நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும். வீட்டை ப…

  22. தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் தஞ்சையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுகின்றனர். கைது செய்யப்படுகின்றனர். இலங்கை அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் மீனவர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகள் வருகிற மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். ஈழம் குறித்து ஈழத்தமிழர்களிடை…

  23. திமுகவில் இருந்து அழகிரி ஆதரவாளர்களான தலைமைச் செயற்குழு உறுப்பினர் மன்னன், பொதுக்குழு உறுப்பினர் எழில் மன்னன் உள்ளிபட 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி: "மதுரை மாநகரில் கழகத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், கட்டுப்பாட்டை மீறியும் சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டப்பட்டது பற்றிய செய்தி, தலைமைக் கழகத்தின் கவனத்துக்கு வந்தவுடன், திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இச்செயலைக் கண்டித்து, இச்செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் கழகத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் விஷமத்தனமான சுவரொட்டிகள், மதுரையில் ஒட்டப்பட்டுள்ளதாக,…

  24. தமிழ்நாடு முழுவதும் இன்று திருத்தம் செய்யப்பட் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை மாவட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட வாக்கா ளர் பட்டியலை இன்று மாவட்ட தேர்தல் அதிகாரி யும், மாநகராட்சி கமிஷனரு மான விக்ரம்கபூர் வெளியிட்டு கூறியதாவது:- சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 18 லட்சத்து 13 ஆயிரத்து 76 பேர். பெண்கள் 18 லட்சத்து 22 ஆயிரத்து 461 பேர். இதர பிரிவினர் 662 பேர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வேளச்சேரி அதிக வாக்காளர்கள் கொண்டதாக உள்ளது. இங்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 596 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர் எண் ணிக்கை கொண்ட தொகுதி துறைமுகம் ஆகும். இங்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 6…

  25. கடல் தாமரை மாநாட்டில் பங்கேற்கிறார் சுஷ்மா ஸ்வராஜ் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் வரும் ஜனவரி 31-ஆம் தேதி தமிழக மீனவர்களின் உரிமைகளைக் காப்பதற்காக பாஜக சார்பில் நடைபெறும் கடல் தாமரை மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=114360

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.