Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொழும்பு: இலங்கையில் கொழும்பு துறைமுகநகரம் என்ற பெயரில் சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிகப் பெரும் அச்சுறுத்தலை சீனா மூலம் ஏற்படுத்தி இருக்கிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.இலங்கை ஒரு தனித்தீவாக இருந்த போதும் இதனை முன்வைத்துதான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தெற்காசியாவின் அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அந்த நாடுதான் தெற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது புவிசார் அரசியல் கோட்பாடு.இதனடிப்படையில்தான் காலந்தோறும் இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் நீடித்த ஒன்றாக இ…

  2. திருவள்ளூர்: திருத்தணியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருத்தணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன் ராஜா(32). நாம் தமிழர் கட்சி மாவட்ட இணை செயலாளர். அவர் அகூர் பகுதியில் கோணிப்பை தைத்து விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி சரண்யா. அவர்களின் மகன் மருதப்பாண்டியன்(4). நேற்று மதியம் கடைக்கு சென்ற ராஜா இரவாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் கவலை அடைந்த சரண்யா அக்கம் பக்கத்தினரிடம் விவரத்தை தெரிவித்து அவர்கள் உதவியுடன் தனது கணவரை தேடினார். இந்நிலையில் சித்தூர்-திருத்தணி சாலையோரத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நள்ளிரவு 1 மணி அளவில் தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

  3. தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க டி.டி.வி.தினகரன் ரகசியத் திட்டம்? டி.டி.வி.தினகரன், தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டி.டி.வி.தினகரன் நேற்று நள்ளிரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். சமீபத்தில், டெல்லி போலீஸில் சிக்கிய சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தொடர்ந்து, தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனனிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது. தினகரனின் செல்போன் உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. த…

  4. நடிகர் சத்யராஜ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்யராஜ் கேட்டுக்கொண்டார். சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த ராஜா ராணி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில் "மெட்ராஸ் கபே படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதில் ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக கேள்விபட்டேன். படத்தைப் பார்த்த நமது உணர்வாளர்களும் தலைவர்களும் படம் தமிழருக்கு எதிரானதாக இருப்பதாகக் கூறியுள்ளனர். விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும். ஒருவேளை உண்மையாகவே ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருந்தால் அது மிகப் பெரிய தவறு. தமிழீழப் போராட்டத்துக்கு யாரும் உதவி செய்யாவிட்டாலும் கூட ப…

  5. மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்! தாமரை மலரை கையில் ஏந்தியபடி என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘புரிகிறது. கமலாலயம் பக்கம் போய்விட்டு வருகிறீரோ? ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழகத்தில் வேகமெடுத்த பி.ஜே.பி-யின் ஓட்டம் கொஞ்சம் ஓய்ந்ததுபோல் தெரிகிறதே” என்றோம். “பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழகப் பயணம் ரத்து செய்யப்பட்டதை வைத்து அப்படி நினைக்கவேண்டாம். அதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவர் சென்னை வருகிறார் என்றதுமே, புகார் கடிதங்கள் டெல்லிக்குப் பறந்தன. தமிழக பி.ஜே.பி பற்றி எதையெல்லாம் அவர் நேரில் வந்து அறிந்துகொள்ளத் திட்டமிட்டாரோ, அவை புகார் கடிதங்களின் வழியாக டெல்லிக்கே சென்று சேர்ந்துவிட்டன. கோஷ்ட…

  6. நிற்க நேரமில்லாமல் உழைத்ததற்கு கிடைத்த வெற்றி: முதல்வர்! மின்னம்பலம்2021-10-13 மக்கள் மத்தியில் ஐந்தாண்டில் கிடைக்க வேண்டிய நம்பிக்கை 5மாதத்தில் கிடைத்துவிட்டது என்று உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, இரண்டு நாட்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 2 மணிக்கு மேல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரையிலான நிலவரப்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்: தி.மு.க. - 70, காங்கிரஸ் - 6. அ.தி.மு.க-0 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்: தி.மு.க. - 700, அ.தி.மு.க. - 144…

  7. மிஸ்டர் கழுகு: எடப்பாடி ‘அஸ்திரம்’ தினகரன் ‘திடுக்’ ‘‘ஜனாதிபதி வேட்பாளர்கள் ராம்நாத் கோவிந்த், மீரா குமார் இருவரும் தமிழகத்தின் தலைநகரை முற்றுகையிட்டதுதான் கடந்த வார பரபரப்பு’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். “பி.ஜே.பி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் அமர்க்கள வரவேற்பு கொடுத்திருக்கின்றனவே?’’ என்றோம். ‘‘ஆமாம்! அவருடைய பயணத்திட்டம் டெல்லியில் தயாரானபோதே ‘அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளுடனும் தனித்தனியாக எப்படிப் பேசுவது... என்ன பேசுவது’ என்பதும் முடிவானது. வழக்கம் போல, ஓ.பி.எஸ் அணிக்குத்தான் முன்னுரிமை. ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் அந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். ராம்நாத்திடம் பன்னீர் காட்டிய பவ்யத்தைக் கண்டு, அவருடன்…

  8. ரூபாவை சீண்டிய சசிகலா! சர்க்கரை நோயாளியான சசிகலா, தினமும் காலையில் தனக்கென பிரத்யேக சமையலறையில் ரெடியான தோசை அல்லது இட்லிதான் சாப்பிடுவார். கடந்த திங்கள்கிழமை வேறு வழியின்றி எல்லாக் கைதிகளையும் போலவே எலுமிச்சை சாதம் சாப்பிட்டு டீ குடித்தார். மதியம் அசைவ உணவு சாப்பிடுவதே அவரின் விருப்பம். ஆனால், கேழ்வரகு ரொட்டியும் தயிர் சாதமும்தான் கொடுத்தனர். இரவில் சப்பாத்தியும் தயிர் சாதமும் சாப்பிட்டுவிட்டு அவர் தூங்கப் போவார். ஆனால், எல்லாக் கைதிகளுக்கும் கொடுக்கும் சாதமும் சாம்பாருமே தரப்பட, வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தார். ‘சிறைக்குள் அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது’ என்பதைத் தவிர சசிகலாவுக்கு வேறு எந்தக் குறையும் இல்லை. தங்குவதற்கு ஒரு அறை, …

  9. மாணவிகளை பாலியல் ரீதியாக மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதிவு: டிசம்பர் 21, 2021 12:11 PM சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பெயர் பிரேம் குமார் என்பதும், 20 வயதான அவர் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்…

  10. வெள்ளிக்கிழமை , 20-12-13 புது டில்லி சீக்கிய மற்றும் இதர அரசியல் சிறைவாசிகள் தொடர்பான பத்திரிக்கையாளார் சந்திப்பில், 2009இல் ப.சிதம்பரத்தின் மீது செருப்பு வீசிய சீக்கிய பத்திரிக்கையாளர் மரியாதைக்குரிய திரு. ஜர்னாயில் சிங் அவர்களுடன் உடன் பங்கேற்கிறோம். வாய்ப்பிருக்கும் தில்லி வாழ் தமிழ்த் தோழர்கள் பங்கேற்கும் படி வேண்டுகிறோம். இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் SDPI தேசிய செயலாளர் ரஃபி முல்லா அவர்களும் பங்கேற்கிறார். Thirumurugan Gandhi (facebook)

  11. நேர்மையாளர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை – கமல்ஹாசன் ஆவேசம் நீங்கள் யாரை, எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்களின் அடுத்த தலைமுறை கவனித்துக் கொண்டிருக்கிறது என கமல்ஹாசன் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் வியூகத்தை மாற்றி நோட்டீஸ் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். பின்னர் சில இடங்களுக்கு நடந்தே சென்று வாக்குகளை சேகரித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கின்றன. இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர…

  12. ஐ.நா சபையே உலக நாடுகளே ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணயத்தில் இரண்டு இலட்சம்.... http://www.sankathi24.com/news/38695/64//d,fullart.aspx

  13. சென்னை: பாஜக அணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம்பிடித்துவிட்டதாகத் தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மக்களவை தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்பது கடைசி வரை இழுபறியாகவே இருந்தது. காங்கிரஸ், திமுக, பாஜக என பல கட்சிகளும் விஜயகாந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தன. அழைத்த அத்தனை கட்சிகளுடனும் பேசி வந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென அவர் சிங்கப்பூர் பறந்துவிட்டார். திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடைசிவரை காத்திருந்தன. இவற்றில் திமுக விஜயகாந்துக்கான கதவை மூடிவிட்டது. காங்கிரஸ் காத்திருந்தது. இதற்கிடையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணிப் பேச்சில் ஈடுபட்டார். இந்த அணியில் ஏற்கெனவே…

  14. புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் அணுமின் நிலையத்தில் பின்பற்றவில்லை எனவும் மனுதாரர் சார்பில் குற்றச்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நா…

  15. மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார் ஜெயலலிதா இதற்கிடையே மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ராஜபக்சே வருவதால் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ராஜபக்சே வருவதையடுத்து மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ள…

    • 7 replies
    • 1.1k views
  16. என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் என்னுள் மையம் கொண்ட புயலை உங்கள் கரை வரை கொண்டு சேர்க்கும் தீரா ஆசையின் முதல் அலை இது. இன்னும் எவ்வளவு காலம் தமிழர் தம் கண்முன் நடக்கும் அநீதிகளையும் அநியாயங்களையும், மக்கள் செல்வங்கள் எல்லாம் தனியார் தம் ஆசைக் கோட்டைகள் கட்ட மண்ணெடுக்கும் மேடாய் மாறிவருவதையும் பார்த்துக்கொண்டிருப்பர்? இந்தக் கேள்வி பல கோடி மனங்களில் எழத்துவங்கி கால் நூற்றாண்டாகிவிட்டது. என் மனமும் இதற்கு விதிவிலக்கல்ல. தானுண்டு தன் வேலையுண்டு என்று கண்டும் காணாமல் இருந்த தமிழர்களில் நானும் ஒருவன். இந்த மெத்தனத்துக்கான தண்டனையைப் பல ஆண்டுக்காலம் அனுபவித்தாயிற்று. விழிப்புடன் இல்லாமல், குற்றங்கள் நடப்பதைப் பார்த்திருந்ததுதான்…

  17. எழுத்தாளர் ஞாநி, உடல்நலக் குறைவால்... சென்னையில் காலமானார். மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி (வயது 63) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். ஆங்கில பத்திரிகையாளர் வேம்புசாமியின் மகன் ஞாநி சங்கரன். 1954-ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர் ஞாநி. தந்தையைப் போலவே ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றியவர் ஞாநி, 1980களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலி நாளேட்டின் புதையல் பகுதியில் அது தொடர்பான தகவல்களை விரிவாக பதிவு செய்தவர் ஞாநி. பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் ஞாநி. பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தார். 2014-ம் ஆண்டு ஆலந்தூர…

  18. மிஸ்டர் கழுகு: குறி வைக்கப்படும் சிதம்பரம்! கழுகார் நம் முன் ஆஜரானபோது, கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதைப் பார்த்த கழுகார், ‘‘கருணாநிதி லேசாக பேச ஆரம்பித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். விரைவில், ‘அன்பார்ந்த உடன்பிறப்புகளே...’ என அவர் பேசுவதையும் வீடியோவில் எடுத்து அனுப்புவார்கள்” என்றார். அவரிடம், ‘‘கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியான டி.எஸ்.பி பாண்டியன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளாரே?” என்றோம். “2006-2011 ஆட்சிக்காலத்தில், கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தார். அப்போது, அவருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக டி.எஸ்.பி பாண்டியன் நியமனம் செய்யப்பட்டார். அவரைப் போல கணேசனும், விநோதனும் அந்தப் ப…

  19. ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில்.. ஜெயலலிதா நினைவு மண்டப மாதிரி தோற்றம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான யாக பூஜை இன்று காலை 6.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது. யாகசாலை பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகேயுள்ளது. ஜெ. நினைவிடத்தை நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஃபினிக்ஸ் பறவை போல அரசியலில் அதிரடியாக எழுந்து வந்தவர் ஜெயலலிதா என்று பறைசாற்ற வேண்டும் என்பது அதிமுக தலைமை விருப்பம். அதற்கேற்ப நினைவு மண்டபமும் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அ…

  20. தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் - ஜெயலலிதா வேண்டுகோள். பெங்களூர்: அதிமுகவினர் யாரும் என்னைப் பார்க்க சிறைக்கு வர வேண்டாம். தமிழக மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தகவலை ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறையில் ஜெயலலிதா யாரையும் பார்ப்பதில்லை என்றும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரைக் கூட இதுவரை நான்கு முறை மட்டுமே அவர் பார்த்துள்ளதாகவும் சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அமைதியாக இருக்கும் ஜெயலலிதா. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ஜெயலலிதா சிறையில் அமைதியாக தனது நாட்களைக் கழித்து வருகிறார். யாருடனும் அவர் தேவையில்லாமல் பேச…

  21. ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதை பட மூலாதாரம்,NETFLIX/GUNEETMONGA ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கருக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த ஆவணப்படம். தாயைப் பிரிந்து குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான கதைய…

  22. ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும் தூக்கு தண்டனையில் இருந்து விடுபட வேண்டி பள்ளி குழந்தைகள் மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், பிரசாந், வில்சன், லாங்லெட் ஆகியோர் மீது இலங்கை அரசு போதை பொருள் கடத்தியதாக தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராகவும், தண்டனையில் இருந்து 5 மீனவர்களை மீட்கவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. மீனவர்களின் சொந்த ஊரான தங்கச்சிமடத்திலும் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இந்நில…

  23. நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்: உலக தண்ணீர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை Published By: RAJEEBAN 22 MAR, 2023 | 10:46 AM ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்தளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால் தான் நீரின்றி அமையாத…

  24. மோடி மீதான தமிழர்களின் நம்பிக்கை துடைத்து எறியப்பட்டுள்ளது’ என்று வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: கடந்த 27-ம் தேதி மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தேன். அது நியாயமான விமர்சனம். இன்னும் தொடர்ந்து செய்வேன். காத்மண்டில் சார்க் மாநாட்டுக்கு சென்ற நரேந்திர மோடி, தமிழ் இன அழிப்பை செய்யும் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற வாழ்த்துகிறார். இது பிரதமர் பதவியின் தரத்தை தாழ்த்தி விட்டது. நேரு காலத்தில் இருந்து பிரதமராக இருந்த யாரும் இப்படி சொன்னதில்லை. இன்னொரு நாட்டின் ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என, ஒரு மாநாட்டில் சொல்வது தவறு. இதைத் தான் நான் பேசினேன். இப்போதும் அந்த கருத்தில் உறுதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.