தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
புலிகளை குறை சொல்லும் கேவலமான காங்கிரசே இந்த வினாக்களுக்கு பதில் சொல். 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்? 2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொ…
-
- 0 replies
- 779 views
-
-
அரசியலில் குள்ளத்தனமாக சிந்திக்கும் நான்கு பிரபலங்கள் இந்திய அரசியலில் குள்ளத்தனமான இராஜதந்திரத்தை பயன்படுத்துவதில் நான்கு பேர் பிரபல்யம் பெற்று விளங்குகிறார்கள். அவர்களில் முதன்மை இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட முன் னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த படியாக குள்ளத்தன மாக காய்நகர்த்தல் களை மேற்கொள்வ தில் முன்னிலை வகிப் பவர் இந்திய காங்கி ரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இர ண்டாவது இடத்தையும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீருக்கு அடியில் நெருப்பை அணையாமல் கொண்டு செல்லக்கூடியவர். இவர் மூன்றாவது இடத்தையும் எப்போதும் அமைதியாக வார்த்தைகளை அளந்து பேசினாலும் கண் சிமிட்டாமல் தான் …
-
- 3 replies
- 620 views
-
-
சாதிச்சாக்கடையில் அணைந்துவிடுமா சகோதரா நம் புரட்சித்தீ ??? அசைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு வானம் நோக்கி வளர்ந்து நிறகும் ஒரு பெரும் சுவரை நேர்கொண்டு மோதி இடித்தழிப்பதைவிட, அதன் அடியிலிருக்கும் இரண்டொரு செங்கற்களை உருவிவிட்டாலே போதும், எவளவு பெரிய சுவரும் ஆட்டம் காண ஆரம்பிக்கும். தன்னினத்தின் இழிவு கண்டு வெகுண்டெழுந்த மாணவர் புரட்சியை நேர்கொண்டு அடக்க அஞ்சும் நயவஞ்சகர் கூட்டம் கையிலெடுத்திருக்கும் நரித்தனமான தந்திரம் இதுவேயாகும், அடம்பன் கொடிகளானாலும் மிடுக்குடன் திரண்டவர்களை ஆளுக்கொரு திசையில் பிரித்துவிட அவர்கள் கையிலெடுத்த கடைசி ஆயுதம்தான் "சாதி"................ அதுஏனோதெரியவில்லைஆண்டாண்டுகாலமாய் சாதி என்ற சின்னஞ்சிறிய வட்டத்தினுள் தம்மை இறுக்கமாக இணைத்…
-
- 1 reply
- 706 views
-
-
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுதான் இந்தப் போராட்டம். அரசியலுக்கு சிறிதும் இடமளிக்காமல் இலங்கை தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, உன்னதமான குறிக்கோளுக்காக அறவழியில் நடத்தப்படும் இந்தப் போராட்டம் இலங்கைத் தமிழர் நலனுக்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடு. இவ்வளவு உணர்வுப்பூர்வமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும், இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகிறது. போரினால் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் அவல நிலைமை நீடிக…
-
- 3 replies
- 674 views
-
-
சென்னை: தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததற்காக ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத்தமிழருக்கு விடியல் ஏற்பட, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழக முதல் அமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ள தீர்மானம், வரலாற்றுப் புகழ்மிக்க சிறப்புக்கு உரியது ஆகும். துன்ப இருளில் துயரத்தில் பரிதவிக்கும் ஈழத்தமிழருக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஒரே தீர்வு ஆகும் என்பதால், 1976 மே 14 இல், வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா தலைமையில், ஈழத்தமிழர…
-
- 0 replies
- 493 views
-
-
திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவீச்சு (படங்கள்) பிரிவு: தமிழ் நாடு திண்டுக்கல்லில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர குல வேளாளர் பேரவை தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை பழி வாங்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் யூனியன் கரட்டழகன்பட்டி வார்டு கவுன்சிலர் முத்துப்பாண்டி. இவர் முன்பு பசுபதி பாண்டியனின் தேவேந்திர குல வேளாளர் பேரவையில் மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். பிறகு ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னணி மற்றும் சில தலித் அமைப்புகளில் பொறுப்பு வகித்திருக்கிறார். இவர் மீது பசுபதி பாண்டியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நி…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடியலின் வெளிச்சத்தைத் தரும் தீர்மானத்தை முன்வைத்த முதல் அமைச்சருக்கு வைகோ நன்றி பாராட்டு! பிரிவு: தமிழ் நாடு ஈழத்தமிழருக்கு விடியல் ஏற்பட சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழக முதல் அமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ள தீர்மானம் வரலாற்றுப் புகழ்மிக்க சிறப்புக்கு உரியது ஆகும். துன்ப இருளில் துயரத்தில் பரிதவிக்கும் ஈழத்தமிழருக்கு சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஒரே தீர்வு ஆகும் என்பதால் 1976 மே 14 இல்இ வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அவர்கள் தலைமையில் ஈழத்தமிழர்கள் அனைவரும் கூடி ஒருங்கிணைந்து சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகச் செய்த பிரகடனத்தின் வழியிலும் தமிழ் ஈழ தேசியத்தின் ஈடு இணையற்ற தலைவரும் தம…
-
- 0 replies
- 338 views
-
-
ஞானதேசிகனுக்கு எதிராக திருச்சியில் திரண்ட மாணவர்கள். பிரிவு: தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் திருச்சி, கரூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை திடீரென்று தனி ஈழத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்தினர். ஞானதேசிகன் திருச்சியை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர், பேனர்களை சேதப்படுத்தியவர்களை கைதுசெய்யக் கோரினர். இதில் இருதரப்புக்கும் வாக்க…
-
- 0 replies
- 644 views
-
-
இலங்கை தூதரை உடனடியாக கைது செய்ய வேண்டும்: வைகோ பிரிவு: தமிழ் நாடு இந்தியாவுக்கு உள்ளே இனபேதத்தைக் தூண்டும் சிங்களத் தூதர் பிரசாத் கரியவாஸத்தை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம், தொடர்ந்து அத்துமீறிச் செயல்பட்டு வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது, இந்தியாவுக்கு உள்ளே, தமிழர்களுக்கு எதிராக, இனபோதத்தைத் தூண்டும் வகையில், ஒரு கடிதத்தை எழுதி, மின் அஞ்சல் வழியாக, இந்திய ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார். சிங்களர்கள், வட இந்தியர்களின் வழித் …
-
- 0 replies
- 983 views
-
-
முக்கிய செய்தி; தமிழீழ்ம் கோரியும் மாணவர் போரட்டத்தை வலுசேர்க்கவும் எத்திராஜ் கல்லுரி மாணவி தற்கொலை செய்து கொண்ட்தாகவும், இன்று மாலையே அடக்கம் செய்ய காவல் துறை வர்புறுத்துவதாகவும், மாணவர்கள் விரைந்து வருங்கள் என்றும் எனக்கு திரு மணி, தமிழ் உணர்வாளரிடம் இருந்து செய்தி வ்ந்துள்ளது. இடம் வியாசர்பாடி எண் 9840480273 மேலும் https://www.facebook.com/tamilnaduhungerstrike
-
- 31 replies
- 2.4k views
- 1 follower
-
-
ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரி குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்ட பிரிவு: Business: General வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இளங்கோவன் (வயது 24). தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இளங்கோவன் திடீரென்று கட்டவாக்கத்தில் உள்ள 50 அடி உயரம் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிமீது ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். தற்கொலைக்கு காரணமாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கூக்குரல் எழுப்பினார். இதனை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து சமாதானம் செய்ய முயன்றனர். கிராம மக்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து இளங்கோவன் மேலிருந்து குதிப்பதாக மிர…
-
- 0 replies
- 406 views
-
-
சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது. பிரிவு: தமிழ் நாடு பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது என நாடாளுமன்றச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியது: சஸ்பெண்ட் விவகாரத்தில் சட்டப் பேரவையில் எந்த மாதிரியான உத்தரவு வெளியாகி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டுமெனவும் அவர்கள் கூறினர். வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை என்றால் அவர்கள் எம்.எல்.ஏ.வாகத் தொடர்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. சம்பளம், படிகள் மற்றும் தகுதிகள் அனைத்தையும் இழப்பதாக உத்தரவிட்டால் அத்தகைய எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்படும். ஆனாலும் இது குறித்து தேர்தல் ஆணையமே இற…
-
- 0 replies
- 447 views
-
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சதீவை இந்தியாவுடன் இணைப்பதே தீர்வாக இருக்கும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் சட்டப் பேரவையில் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'இந்தியாவின் ஒரு பகுதியாக கச்சதீவு இருந்தபோது இந்தப் பிரச்சினை எழவில்லை. தமிழக மீனவர்கள் கச்சதீவின் அருகில் மீன் பிடித்து தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. அப்போது, தமிழ…
-
- 1 reply
- 707 views
-
-
நேற்று நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அன்பழகன் காங்கிரஸ் ஆட்சி கவிழ திமுக துணை நிற்காது என பேசியதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கருணாநிதி ஆதரவு தெரிவித்து பல்டி அடித்துள்ளமை உறுதிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசு கவிழ திமுக துணை நிற்காது என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.அதேசமயம் மதச்சார்புள்ள கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடகது என்பதில் தெளிவாக இருக்கின்றோம். அதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கவிழ திமுக ஒருபோதும் துணை நிற்காது என்றார். அய்யா அன்பழகனாரே நாங்களும் தெளிவாகத்தான் உள்ளோம். எந்த முகமூடிகளை போட்டுக் கொண்டு வந்தாலும் நாங்களும் எற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதில் உங்களைவ…
-
- 5 replies
- 771 views
-
-
பதிவு செய்த நாள் : மார்ச் 26,2013,23:37 IST கருத்துகள் (12) கருத்தை பதிவு செய்ய சென்னை: ""மெஜாரிட்டி அரசில், மின்வெட்டு, 16 மணி நேரமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் வெட்கம் இல்லையா?'' என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. அப்போது, தி.மு.க., உறுப்பினர் எ.வ.வேலு பேசுகையில், ""தமிழக அரசின் பட்ஜெட், உப்பு சப்பு இல்லாதது. தேர்தல் அறிவிப்பில், "அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் நிலவும் மின் பிரச்னை தீர்க்கப்படும்; தமிழகம் மின் மிகை மாநிலமாகும்' என்றனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் மின் பிரச்னை நீடிக்கிறது,'' என்றார். இதற்கு, அ.தி.மு.க., உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளித…
-
- 0 replies
- 830 views
-
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலைகளில் பிஸியாகியுள்ளன. அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் தங்களது கூட்டணியை பிரிந்து தனித்து நிற்கின்றன. எந்த எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று உறுதியாகவில்லை என்றாலும், சில கட்சிகளில் நடவடிக்கைகளைப் பார்த்தால் திமுக, தேமுதிக-வுடன் கூட்டணி அமைப்பதற்காக வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்த திமுக, இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. அதேபோல தேமுதிக-அதிமுக கூட்டணி பிரிந்து விட்டதாலும், இவர்களும் இனி கூட்டண் அமைக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்தால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கருதும்…
-
- 1 reply
- 636 views
-
-
சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!: எதிர்ப்பு ஆரம்பம் Posted by: Mayura Akilan Published: Tuesday, March 26, 2013, 10:08 [iST] சென்னை: இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனம் சிங்களத்தில் நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும் கடைகள் உள்ளன. சர்ச்சைக்கும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போல. அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பின்னர் மீள்கிறது. இப்போது தமிழகர்களுக்கு எதிரான பிரச்சனையில் சிக்கியுள்ளது. http://tam…
-
- 0 replies
- 812 views
-
-
சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், கொழும்பில் நவம்பர் 15 முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் இருந்து வேறு ஒரு நாட்டுக்கு மாற்றுமாறு நெருக்கடி கொடுக்க வேண்டும். இப்படி கொழும்பு மாநாட்டை புறக்கணிப்பதன் மூலமே இலங்கையில் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்று வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று கனடா வலியுறுத்தி வருகிறது. கொழும்பு காமன்வெல்…
-
- 4 replies
- 699 views
-
-
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, நேற்று காலை, திடீரென வாகனத்தை நிறுத்தி, சாலை ஓர கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த கோவில் குருக்களை அழைத்து, பூஜை செய்த பிரசாதத்தை வாங்கிச் சென்றார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கம் அனுமான் காலனியை சேர்ந்தவர் பால சூர்யா, 34. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, 10க்கும் அதிகமான, விநாயகர் கோவில்களுக்கு பூஜை செய்து வருகிறார். மேலும், சாலைகளில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்வதும், இவரது வழக்கம். வழக்கம் போல், நேற்று காலை கிழக்கு கடற்கரைச் சாலையில், அக்கரை சிக்னல் அருகில் உள்ள, சாலையோர விநாயகர் கோவிலில், பூஜை செய்து கொண்டிருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவின் கார், இவரை கடந்து சென்றது. சிறிது நேரத்தில், முதல்வரின் கார் பின்னால் வந்து,…
-
- 1 reply
- 699 views
-
-
பொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? கடந்த வருடம் நடந்த இனப்படுகொலைக்கு பின்னனியில் இருந்த சதிகளை கண்டுபிடித்து மாறிவரும் உலகஒழுங்கை புரிந்து கொண்டு செயல்பட வெண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. போருக்கு பின்னனியில் செயல்பட்ட இந்திய காங்கிரஸ் அரசின் தனிப்பட்ட வெறுப்பு, அரசு அதிகாரிகளின் தமிழின எதிர்ப்புடன் சேர்ந்து மனிதநேயமற்ற முறையில் சந்தை லாபத்திற்காக இந்திய அரசு செயல்பட்டதும் அதன் துணையாக இந்தியாவின் நிறுவங்கள் வேலைசெய்ததையும்/செய்வதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த தமிழினப்படுகொலைக்கு துணையாய் நின்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார காரணிகளை நாம் தொடர்ச்சியாக கண்டறிந்து அதை எதிர்த்து போராடுவது நமக்கு கட்டாயமாகிறது. இந்த வழியில் நமத…
-
- 0 replies
- 886 views
-
-
தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டங்களால் செல்வாக்கிழந்துள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வியூகத்தில் தமிழகத்தை வளைத்துப்போட புதிதாக யோசிப்பதாக அமெரிக்க பத்திரிகையான ரைம் எழுதியுள்ளது. எப்படி பஞ்சாப்பில் இந்திய நடுவண் அரசுக்கு எதிராக எழுந்த அலையை அடக்க, அன்று ஒரு சீக்கியரை காங்கிரஸ் பிரதமராக அறிவித்ததோ அதுபோல தற்போது தமிழகத்தில் காங்கிரசை நோக்கி பெருக்கெடுத்துள்ள சுனாமியை தடுக்க ப.சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளராக்கும் துரும்புச் சீட்டை காங்கிரஸ் பாவிக்க யோசித்துள்ளது. மும்பை குண்டு வெடிப்பை சிறப்பாக கையாண்டமை, இதுவரை இந்திய பொருளாதாரத்தை ஸ்திரத் தன்மையுடன் வைத்திருத்தல் போன்ற திறமைகள் இவரிடம் இருக்கிறதாக ரைம் சுட்டிக்காட்டியுள்ளது. இதே கருத்தை பிரிட்டனில் இருந்…
-
- 2 replies
- 620 views
-
-
ஈழத் தமிழர் நலனை முன்னிறுத்தி தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் உத்வேகம் அளிக்கிறது. இப்படி ஒரு போராட்டச் சூழலை தமிழகம் சந்தித்து எவ்வளவு காலம் இருக்கும்? அரசியல் ஒரு சாக்கடை; அது நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறையிடமிருந்து வெளிப்படும் இந்தத் தார்மிகக் கோபமும் தன்னெழுச்சியும் அது வெளிப்படும் அறவழியும் கொண்டாடப்பட வேண்டியவை. ஆனால், ஒரு போராட்டம் என்பது இவ்வளவு மட்டும்தானா? முக்கியமாக, இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன அதாவது இந்தப் போராட்டம் அடையப்போகும் இலக்கு என்ன? நாம் வாழும் காலத்தின் தன்னிகரற்ற போராளியான இரோம் ஷர்மிளா ஒரு போராட்டத்துக்கான தேவையாகக் குறிப்பிடுவது இவை: ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை... தீவி…
-
- 7 replies
- 700 views
-
-
ராசா ஊழல் செய்தார் என்றால் பிரதமரும் அதற்கு உடந்தை. கருணாநிதி பிரிவு: அரசியல் தி.மு.க. மீது விழுந்த இடி, இப்போது காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. 2ஜி சேற்றை பிரதமரின் மீது பூசும் ஆவணங்கள் வெளியானதில் தி.மு.க-வின் பங்கு இருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை’ என்ற மூன்று வார்த்தைகள்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு ஏற்றத்தையும் இறக்கத்தையும் கொடுத்தது. மிகஅரிதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற பணமூட்டைகளோடு முன்அனுபவம் உள்ள நிறுவனங்கள், முந்தாநாள் முளைத்த நிறுவனங்கள்... என்று நூற்றுக்கும் மேற்பட்ட பணம் கொழிக்கும் நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதியதும்... இந்த தள்ளுமுள்ளுவில் ராசா தில்லுமுல்லு செய்தார் என்பதும்தான் ஒரு லட்…
-
- 1 reply
- 659 views
-
-
ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிராக பலம் பெறும் போராட்டம் ஈழம் சிங்களவனின் கொலைக்களம் , தமிழகம் சிங்களவனின் விளையாட்டு களமா ?? ஐ.பி.எல் , கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியிலிருந்து எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் (?) அனுமதிக்க கூடாது , மீறி அனுமதித்தால் நாம் ஐ.பி.எல் போட்டியை புறக்கணிப்போம். மேலும் தமிழகத்தில் ஐ பி எல் போட்டிகள் நடைபெற விடமால் தடுத்து நிறுத்துவோம் , இந்த ஐ.பி.எல் விளையாட்டு போட்டியை தடுத்து நிறுத்தினால் அது அரசுக்கு பெரிய ஈழப்பீடை ஏற்படுத்தும், இந்தியா மட்டுமல்லமால் உலகத்தில் உள்ள அணைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் நமது போராட்டம் சென்றடையும் . பரப்புங்கள் பகிருங்கள் Lanka protests continue in Tamil Nadu, heat on IPL now The vote at UNHRC is ove…
-
- 2 replies
- 1.1k views
-
-
சென்னையில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 7 முதல் 10 பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவர்களுடன் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250 பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க.வின் கோரிக்கையை மத்திய அரசு உதாசீனப் படுத்தியதால் ஐக்க…
-
- 3 replies
- 620 views
-