Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதால், மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்த சிகிச்சை பலனின்றி இறந்தார். நடிகர் சிட்டிபாபு ( வயது49). திருமணமாகி, ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பல ஆண்டுகளாக, நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் அடைப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பது …

  2. நாம் தமிழர் மேடையில் ஏறி மைக்கை பிடுங்கிய திமுகவினர் - தருமபுரியில் பரபரப்பு ஏ.எம். சுதாகர் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@NAAMTAMILARORG தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், மேடையில் இருந்த மைக்கையும் அவர்கள் பிடுங்கி வீசியதாக காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியை பிபிசி தமிழ் தன்னிச்சையாக உறுதிப்படுத்தவில்லை. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நில…

  3. சிக்கித் தவிக்கும்... இலங்கைத் தமிழர்களுக்கு, உதவுமாறு... ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் கோரிக்கை! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று (வியாழக்கிழமை) தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார். இந்தச் சூழ்நிலை…

  4. ஸ்ராலினை சந்தித்தார் மிலிந்த! June 4, 2022 இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்ராலினுக்கும் இடையில் சென்னையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் விடயங்களை பரிமாறிக்கொள்ள உரிய பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு இதன்போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், தமிழ் தத…

  5. நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். …

  6. ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்! பிரதாப் ரெட்டி புதுத்தகவல் Chennai: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்குறித்து விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தில் இதுவரை தி.மு.க மருத்துவர் அணியின் நிர்வாகி டாக்டர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்ட 27 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்தனர். 120-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். டாக்டர் சரவணனிடம் கடந்த நவம்பர் 22, 23-ம் தேதிகளில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 13-ம் தேதி, தீபாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைகளுக்கிடையே, அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் பிரீதா …

  7. ஃபைசல், நாசர், லூத்ஃபுதின் ஃபைசலுடன் கமீலா நாசர் நடிகர் நாசரின் மூத்த மகன் நூருல் ஹசன் ஃபைசல் (24), மே 22 -ம் தேதி நண்பர்களு டன் சென்னை கடற்கரை சாலை யில் காரில் சென்றுகொண்டிருந்த போது பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று நண்பர்கள் பலியாக கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் நூருல் ஹசன் ஃபைசல். மகன் தீவிர சிகிச்சைப் பிரி வில் இருந்தாலும் தன்னால் தயாரிப்பாளர்கள் நஷ்ட மடையக் கூடாது என்பதால் வேதனையை இதயத்தில் அடக் கிக்கொண்டு படப் பிடிப்புகளுக்கு சென்று வருகி றார் நாசர். இந்நிலையில் மக னுக்கு பக்கத்திலே இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் நாசரின் மனைவி கமீலா நாசரை சந்தித்தோம். ‘‘எனது மற்ற இரண்டு மகன்க ளுக்கும் மூத்தவன் ஃபை…

    • 0 replies
    • 430 views
  8. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.27 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய இந்த மாநாட்டை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார். மாநாட்டில் 30 மாநிலங்களில் இருந்தும், 6 ஆசிய நாடுகளில் இருந்தும் இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து முப்பது ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 2 ஆய்வுகள் மட்டும் மாநாட்டுக்கு தேர்வு …

    • 0 replies
    • 419 views
  9. மிஸ்டர் கழுகு: கை கழுவுகிறதா டெல்லி? ‘‘மேடையில் ரஜினி, கமல். முன்வரிசை யில் நான்கு அமைச்சர்கள்... எப்படியிருக்கிறது இந்தக் காட்சி?’’ என்று கேட்டபடி வந்தார் கழுகார். ‘‘எங்கே இந்தக் காட்சி?’’ என்றோம். ‘‘எம்.ஜி.ஆர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்குப் பிறகு உருவாக்க நினைத்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படம், இப்போது அனிமேஷனில் தயாராகிறது. அதன் துவக்க விழாவின்போது நடந்த காட்சி இது. பிரபுதேவா வுடன் இணைந்து ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களை அவர் அழைத்திருந்தார். பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருந்தார். ரஜினி இருப்பதை அறிய…

  10. எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தார். சி.விஜயபாஸ்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். எத்தனை இடங்களில் சோதனை? முந்தைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்…

  11. தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம் “அதிமுகவுக்கு எதிரிகளே இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதோ நாங்கள் இருக்கிறோம் என்று நிரூபித்துவிட்டோம்’’ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பலரும் சொல்லி வைத்ததுபோல ஒரே நேரத்தில் வாபஸ் பெற்றனர். நெல்லை மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், கடைசி நேரத்தில் தனது மனுவை வாபஸ் பெற்றதால், அங்கு அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்பட்டாலும் பல இடங்களில் அவர்கள் பணத்துக்கு விலை போனதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் பேசினோம். அவரது பேட்டி: பல இடங்களில் உங்…

  12. ஆளுங்கட்சியின் ஊழல் - அதை எந்த கட்சி செய்தாலும் - ஒரு தனி பிரச்சினை. ஊழலை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் - அது முதலீட்டிய சந்தையில் முறையற்று பெருகும் பணம் எனும் கொள்ளையை ஆட்சியாளர்கள் அனுமதிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு நன்றித்தொகை. நாம் தீவிர முதலீட்டிய விசுவாசிகள் என்பதால், இந்த பொருளாதார அமைப்பினால் பலனடைகிறவர்கள் என்று நம்புகிறவர்கள் எனபதால், இதில் முறையற்று கையூட்டை வழங்குவோர் அதே பணத்தை முறையற்று தானே சம்பாதிக்கிறார்கள் என்பதை ‘கவனிக்க’ தவறுகிறோம். ஒரு துறைமுக கட்டுமானம் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றால் அது ஏன்? நெடுஞ்சாலை பணிகள் ஒருவருக்கே கிடைக்கிறது என்றால் அது ஏன்? அதில் அபரிதமான பணம் முறையற்று வருகிறது என்பதாலே. உடனே நாம் ஊழல் இ…

  13. நேற்று மாலை நடைபெற்ற ‘சிவப்பு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் படத்தில் ‘கோனார்’ என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர் ராஜ்கிரண் பேசுகையில் ஆச்சரியப்படத்தக்கவகையில ஈழப் பிரச்சினை குறித்து மிக விரிவாகவே பேசினார். ராஜ்கிரண் பேசும்போது, “இந்தப் படம் புலம் பெயர்ந்து தமிழகம் வரும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணுக்கும், இங்குள்ள கட்டிடத் தொழிலாளிக்கும் இடையில் மலரும் காதலைச் சொல்லும் படம் இது. மனிதாபிமானம் என்பது அனைவருக்குமே இருக்கின்ற ஒன்று. இருந்தாக வேண்டிய ஒன்று. அதன் தேவையென்ன என்பதை இந்தப் படம் நிச்சயமாக உணர்த்தும். படத்தில் காதலும் உண்டு. ஆனால் அதன் பின்னணியில் அந்தப் பெண்ணுக்கு ஒரு சோக்க் கதையும் உண்டு. அதில்தான் ஈழத்தின் பிரச்சினை சொல்லப்பட்ட…

    • 0 replies
    • 545 views
  14. என் உயிருக்கு இனிப்பான நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கும் , என் உணர்வோடும் ,உயிரோடும் கலந்து விட்ட தாய்த் தமிழ் உறவுகளுக்கும்.. வணக்கம். நாளை நடைபெறவிருக்கின்ற இந்திய மக்களவை தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கின்ற சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றின் பணிகளுக்காக நீங்கள் ஒவ்வொருவரும் உழைத்த உழைப்பு என்பது தமிழ் இன விடுதலைப் பக்கங்களில் மதிப்புமிக்க சொற்களால் விவரிக்க படவேண்டிய வியர்வை வரலாறு. எவ்விதமான பொருளாதார சாதிய பின்புலமுமின்றி .. இலட்சிய நெருப்பினை.. தன் ஆன்மாவில் சுமந்து, இனத்தின் வலி அறிந்து, நீண்டகாலமாக அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் துயர் இருட்டைப் போக்க வெயில் கொளுத்தும் வீதிகளில்.. வியர்வை மழையில…

  15. "பைகளை எடுத்து வர வேண்டாம்..!” தமிழக தேவாலயங்களிலும் தடை உத்தரவு ’தேவாலயங்களுக்கு வரும் பக்தர்கள், தோள் பை உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர வேண்டாம்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேக நபர்கள், தோளில் மாட்டியிருந்த பையில் வைத்தே குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதன் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தேவாலயங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பாதிரியார்களுக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளை பொலஸார் வழங்கி உள்ளனர். அத்துடன், தேவாலயங்களும் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

  16. 12 JUN, 2024 | 03:09 PM தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பின்பு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நான் கட்சிக்காகக் கடுமையாக உழைக்கக் கூடியவள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் இங்கே தா…

  17. ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே படகு பழுதாகி கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பினர். கடந்த 21ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து பாஸ்கரன், மாரிமுத்து, சீனிபாண்டி உள்ளிட்ட 6 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, கச்சதீவு அருகே அவர்கள் சென்ற படகு பழுதானது. இதனை அடுத்து கரை திரும்பாத மீனவர்களை, சக மீனவர்கள் 3 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்டு அவர்களை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 1 மணி அளவில் ராமேஸ்வரம் துறைமுகம் வந்தடைந்தனர். கரை திரும்பிய மீனவர்கள் தங்களை மீட்ட இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு நன்றி தெரிவித்தனர். கடந்த 21 ஆ…

  18. எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக மதுரை நகரில் கடந்த 25ஆம் தேதி 15 நிமிடங்களில் 45 மி.மீ., என்ற அளவில் அதி கனமழை பதிவானது. இதனால் பல குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், எதிர் வரும் காலங்களில் அதீத மழை பெழிவு ஏற்பட்டால் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை மாநகராட்சியில் …

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், சென்னை கடந்த சில நாட்களுக்குள் 18 வயதுகூட நிரம்பாத வீட்டுப் பணிப் பெண்கள் இருவர் கொடுமைப்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில், பல்லாவரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வின் மகனும் மருமகளும் தன்னைக் கடுமையாக்க கொடுமைப்படுத்தியதாக ஒரு இளம்பெண் அளித்த வாக்குமூலம், தமிழ்நாட்டையே அதிரவைத்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதேயான அந்த பட்டியலினத்துப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கேட்கும் யாரும் பதறிப்போய்விடுவார்கள். தனக்கு நடந்த கொடுமைகளை அந்தத் தருணத்தில் பிபிசி-யிடம் பகிர்ந்திருந்தார் அந்தப் பெண். 12-ஆம…

  20. மந்திரி தந்திரி! - 30 கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பரபரப்பு கூடியிருந்த நேரம். தே.மு.தி.க., இடதுசாரிகள் எல்லாம் சேர்ந்து அ.தி.மு.க தலைமையில் 'மெகா கூட்டணி’ உருவாகியிருந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகி, கூட்டணிக் கட்சிகள் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகள் அரண்டுபோயின. தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இப்படி நடந்தது இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்த... 'ஜெய…

  21. நாகப்பட்டினம் அருகே தலித் ஒருவரது உடலை பொதுப்பாதையில் கொண்டு செல்ல அனுமதி மறுத்த கொடுஞ்செயலுக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கொளத்தூர் தா.செ. மணி வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் என்ற கிராமத்தில் தாழ்ந்தப்பட்ட மக்கள்மீது, அங்கிருக்கிற ஆதிக்க ஜாதியினர், தொடர்ச்சியாக பொதுக்கோயிலில் இருந்து பால்குடம் எடுப்பதையும், இறந்த பிறகு பொதுப் பாதையில் இறந்தவர்களைக் கொண்டு செல்வதையும் அனுமதிக்காமலே உள்ளனர். இறந்த உடலை ஊராட்சிப் பாதை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றால் அரை கிலோமீட்டர் மட்டுமே . ஆனால் வயல்வெளி, வாய்க்கால், வரப்பு என எடுத்துச் சென்றால் சுமார் மூன்று கில…

    • 0 replies
    • 464 views
  22. தமாகா போட்டியிடும் 26 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு வாசன் | கோப்புப் படம் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். அக்கட்சி போட்டியிடும் 26 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்: 1. ராயபுரம் - பிஜூ சாக்கோ 2. மைலாப்பூர் - ஏ.எஸ். முனவர் பாட்சா 3. காட்பாடி - டி.வி.சிவானந்தம் 4. அணைக்கட்டு - பி.எஸ். பழனி 5. வாணியம்பாடி - சி.ஞானசேகரன் 6. பர்கூர் - எம்.ஆர…

  23. ஆலந்தூர், சென்னை விமான நிலையத்தில் 65–வது முறையாக கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. இதில் பெண் போலீஸ் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். உள்நாட்டு – பன்னாட்டு முனையங்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முனையங்களில் உள்ள மேற்கூரைகள், கண்ணாடி கதவுகள் உள்ளிட்டவை அடிக்கடி உடைந்து விழுகின்றன. இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 22 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 20 முறை தடுப்பு கண்ணாடிகளும், 5 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை பயண அறிவிப…

    • 6 replies
    • 604 views
  24. அப்போலோவில் திடீர் பரபரப்பு உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது. குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தர…

  25. அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை பிடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், ஜெய லலிதாவின் தோழி சசிகலா, சமரசம் செய் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தனக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய வர்களுக்கு, கட்சியில் புதிதாக துணைச் செயலர் பதவியை உருவாக்கி வழங்கவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டை யனுக்கு மந்திரி சபையில் இடம் தரவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மறைந்த ஜெயலலிதா வகித்த பொதுச் செயலர் பதவி, அ.தி.மு.க.,வில் காலியாக உள்ளது. கட்சியில் அதிகாரம் மிகுந்த பதவி என்பதோடு, பொதுச் செயலராக வருபவர், முதல்வராக வர வாய்ப்பு அதிகம் என்பதால் அப்பதவியை பெற போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்ததும், உடனடியாக முதல்வரை தேர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.