தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
வேலூரை 3ஆக பிரித்து.... திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்.. முதல்வர் அறிவிப்பு. வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 73-ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.அவர் அப்போது சுதந்திர தின விழா உரையில், வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என அறிவித்தார். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனிமாவட்ட…
-
- 0 replies
- 573 views
-
-
திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு! சென்னை: தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் மக்கள் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்திபன், சி.எச்.சேகர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து 'மக்கள் தே.மு.தி.க.' என்ற கட்சியை ஆரம்பித்தனர். இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் கூறி, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை நேற்று சந்திரகுமார் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தொகுதிகள் ஒதுக்குவதாக கருணாநிதி கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தி.ம…
-
- 0 replies
- 361 views
-
-
கொரோனா – இந்தியாவில் 80 மாவட்டங்களை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது… March 23, 2020 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசின் அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் ஆகியோர் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சுய ஊரடங்கு அழைப்புக்கு மக்கள் தாங்களாக முன்வந்து பெருமளவில் ஆதரவு அளித்ததாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் அப…
-
- 0 replies
- 350 views
-
-
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவனால் பரபரப்பு நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 17:17 PM சென்னை, சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. எனினும், இந்த செயலில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு பட…
-
- 0 replies
- 599 views
-
-
அன்பிற்குரிய தமிழக உறவுகளே, பாண்டிய மன்னன் சிவபெருமானுக்கு அடித்த அடி உலகிலுள்ள எல்லா உயிர்களின் முதுகிலும் வீழந்ததைப் போல சிங்களவன் எங்களுக்கு அடித்த அடி உங்கள் முதுகிலும் எத்தகைய காயங்களையும் வலிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாங்கள் இப்போதுதான் உணர்ந்துகொள்கிறோம். உங்கள் போராட்டங்களைப் பார்த்தே புரிந்துகொள்கிறோம். சிறிலங்காவின் சனத்தொகை தமிழ் மக்களையும் சேர்த்து வெறும் இரண்டு கோடி பத்து லட்சம். ஆனால் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையோ சிறிலங்காவின் ஒட்டுமொத்த சனத்தொகையை விட சில மடங்கு அதிகம். எனவே தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் சிறிலங்காவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துவிட்டனர் என்பதை நினைக்கும் போது சிங்களத்திற்கு சித்தம் கலங்குகிறது. செங்களத்தில் தமிழர் சேன…
-
- 0 replies
- 632 views
-
-
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது . முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர் . மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர் 1. தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் கொள்…
-
- 0 replies
- 541 views
-
-
அஞ்சலி சொல்லக் கூட ஆண்மை இல்லையா...! முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவரின் பிறந்த நாளாகட்டும், தேர்தல் வெற்றி ஆகட்டும், சிறைக்கு போய் திரும்பினாலும் பல நாளிதழ்கள் பக்கம் பக்கமாய் வாழ்த்து விளம்பரங்கள் போட்டு திணறிடிப்பார்கள். தங்கத் தலைவி, புரட்சித்தலைவி, அம்மா, நிரந்தர முதல்வர் என ஆயிரம் ஆயிரம் அடைமொழிகளில் பேப்பரை நனைத்திருப்பார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா தயவில் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் தான். இதை ஏன் இப்போது பதிவிடுகிறேன் என்றால்... அப்பேர்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றோடு 48 மணி நேரத்தை தாண்டி விட்டது. 5ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு அவர் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப…
-
- 0 replies
- 428 views
-
-
தமிழன் தொலைக்காட்சி முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது இன்று காலை சென்னை தி நகரில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு விழாவில் பேசியது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் பிடிவாரண்ட் அளித்துள்ளனர். இதனிடையே ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் இருந்து செல்லும் பெரும்பாலான பேருந்துகள் மூன்றா…
-
- 0 replies
- 451 views
-
-
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கேன் குடிநீர் நிரப்பும் நிறுவனங்கள் தரச்சான்றிதழ் பெற்றுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு பதிலளிக்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தரமற்ற வகையில் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதையடுத்து, பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக கொண்டு பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து தரமற்ற குடிநீர் நிரப்பும் நிறுவனங்களை மூட மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, புறநகர் பகுதிகளில் தரமற்ற 200க்கும் மேற்பட்ட குடி…
-
- 0 replies
- 400 views
-
-
ஜூன் 07, 2013 சேது சமுத்திர திட்டத்தில் அதிமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவுக்கு நற்பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகவே, முதலமைச்சர் ஜெயலலிதா சேதுசமுத்திர திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 18 மணி நேரமாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியின் மூலம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு அதிகர…
-
- 0 replies
- 390 views
-
-
சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி “பன்னீர்செல்வம் திரும்பி வரவேண்டும்; அவர் வந்தால் ஏற்றுக் கொள்வோம்; அவர், தலைமைப் பொறுப்பைக் கேட்டால் விட்டுக்கொடுப்போம்; கட்சி உடையக்கூடாது என்பதற்காக எதையும் செய்வோம்; அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் துணைப்பொதுச்செயலாளராக இருப்பதற்கு டி.டி.வி.தினகரனுக்குத் தகுதி இல்லை” என்று ஸ்டேட்மென்ட்களை அடுக்கி அ.தி.மு.க-வை அதிர வைத்துள்ளார், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். இன்றைய தேதிக்கு சசிகலா குடும்பத்துக்கு பரம எதிரிகளாகப் பார்க்கப்படும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தீபா அணிகளே சற்று அடங்கி இருக்கும் நிலையில், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த தீபக் திடீரென வாய் திறந்திருப்பது டி.டி.…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜெ.,க்கு துரோகம் செய்த சசி குடும்பம் : பன்னீர்செல்வம் ஆவேசம் சென்னை, ''சசிகலா குடும்பத்தினர், அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், கபளீகரம் செய்து, ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துள்ளனர்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த, 1,500 நிர்வாகிகள், நேற்று பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சினிமா பாடலாசிரியர் சினேகனும், நேற்று, பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது, பன்னீர்செல்வம் பேசியதாவது: எம்.ஜி.ஆர…
-
- 0 replies
- 317 views
-
-
தி.நகரில் இன்று காலை தீபா - கணவர் மாதவன் ஆதரவாளர்கள் மோதல் சென்னை தியாகராய நகரில் இன்று காலை தீபா - கணவர் மாதவன் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. (கோப்பு படம்) தீபா ஆதரவாளர்கள் சென்னை: தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபா வீட்டு முன்பு இன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாடுகள் இன்று காலையில் செய்யப்பட்டிருந்தன. அம்பேத்கர் படத்துக்கு தீபாவும், மாதவனும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாதவன் அ.தி.மு.க.கரை வேட்டி கட்டியிருந்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி தீபா மற்றும் மாதவனின் ஆதரவாளர்கள் திரண்…
-
- 0 replies
- 491 views
-
-
தச்சர் சஜீவனின் பேட்டியால் ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி கோவை:கோடநாடு பங்களாவில் தச்சு வேலை பார்த்த சஜீவன் அளித்த பேட்டி, ஆளுங்கட்சியி னர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொல்லப்பட்டு, கொள்ளை முயற்சி நடந்தது; இதில், மற்றொரு காவலாளியும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப் படும் குற்றவாளிகள் பலர், கேரளாவைச் சேர்ந் தவர்கள் என்பதால், கோடநாடு எஸ்டேட் பங்க ளாவிற்கு மர வேலைகள் செய்த, கேரளாவைச் சேர்ந்த சஜீவன், 40, மீதும் சந்தேகம் எழுந்தது. இதற்கேற்ப, இந்த சம்பவங்களின் போது, அவர் துபாய் சென்றிருந்தார். துபாயி…
-
- 0 replies
- 467 views
-
-
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் குடும்பத்துடன் திரளாக பங்கேற்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பெரியாரின் 135-ஆவது பிறந்த நாள், அண்ணாவின் 105-ஆவது பிறந்த நாள், திமுகவின் 65-ஆவது ஆண்டு விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு முப்பெரும் விழா திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. வேலூரில் நடைபெறுவதாக இருந்த இந்த விழா, தொடர் மழை காரணமாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. பெரியார் சமுதாயச் சீர்திருத்தச் சிற்பி என்றால், அண்ணா அரசியல் மறுமலர்ச்சி ஆசான். பெரியாரும் அண்ணாவ…
-
- 0 replies
- 462 views
-
-
தமிழக அமைச்சர்கள் சிலரை மாற்றும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியை விட, கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என, அவர் கருதுவதால், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், சட்டசபையில், வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியை கவிழ்ப்போம் என, மிரட்டல் விடுத்துள்ளதாக வும், தகவல் வெளியாகி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்; 34 நாட் களுக்கு பின், ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவரை, அ.தி.மு.க., அம்மா அணியைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.பி.,க்கள், ஐந்து மாவட்ட செயலர்கள் வரவே…
-
- 0 replies
- 3.8k views
-
-
மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..! கழுகார் வந்ததும் டி.வி ரிமோட்டை கையில் எடுத்து ‘டைம்ஸ் நவ்’ சேனலைத் தட்டிவிட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைக் காப்பாற்றுவதற்காக கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த ஸ்டிங் ஆபரேஷன் உச்சபட்ச டெசிபலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நம் பக்கம் திரும்பிய கழுகார், ‘‘நேற்றுகூட ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காட்டில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்து பணமும் தங்கமும் கொடுக்கப்பட்டது’ எனக் குற்றம் சாட்டினாரே... கவனித்தீரா?” என்றார். ‘‘முதல்நாள் அவர் அங்கே பேசுகிறார். மறுநாள், அவரது கோஷ்டியைச் சேர்ந்த மதுரை தெற்கு தொகு…
-
- 0 replies
- 614 views
-
-
ராஜீவ் கொலை வழக்கு-சில நியாயங்கள்! சில தர்மங்கள்! ராஜீவ் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாகவும் திட்டத்திற்கு உடந்தையாகவும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவர்,23 ஆண்டுகள் சிறையிலிருந்ததாலும் கருணைமனு மீது முடிவெடுக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதாலும் அவர்களின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் ரத்து செய்தது. கூடுதலாக தண்டனை அனுபவித்ததால் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.தமிழக முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களுடன் ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையிலிருப்பவர்களையும் சேர்த்து விடுவிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததையும் அதன்…
-
- 0 replies
- 642 views
-
-
'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைG VENKET RAM எந்தக் கட்டுரையும் விளக்க முடியாத அளவிற்கு வட இந்தியா மற்றும் தென் இந்தியாவிற்கு இடையிலான கலாசார வேறுபாட்டை சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் நமக்கு திறம்பட வரையறுத்துக் காட்டியுள்ளன. விளம்பரம் 'பத்மாவதி' என்ற இந்தி படத்தை…
-
- 0 replies
- 1.2k views
-
-
`ரூ.8 கோடியை எப்போ கொடுப்பீங்க?' - லதா ரஜினிக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்! கோச்சடையான் படத்துக்கான கடனை எப்போது அடைப்பீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். ஏ.ஆர்.ரகுமான் இசையில், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியான படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்த நிலையில் கோச்சடையான் படத்தைத் தயாரிப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் ரூ.10 கோடியை ரஜினிகாந்த் மனைவி லதா வாங்கியிருந்ததாகப் பு…
-
- 0 replies
- 491 views
-
-
பாக்கு நீரிணையை ஒரே நேரத்தில் நீந்திக் கடந்து ஏழு பேர் சாதனை ! Published By: T. SARANYA 14 MAR, 2023 | 10:16 AM தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 10 மணித்தியாலங்கள் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்தனர். குறித்த சாதனையை இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையைச் சேர்ந்த, பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா ஆகிய நான்கு நீச்சல் வீரர்கள், சுமா ராவ், சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி, மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய மூன்று நீச்சல் வீராங்கனைகளும் செய்துள்ளார்கள். …
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
இடைத்தேர்தலில் களமிறக்கப்படுவாரா அழகிரி? தி.மு.கவில் புதிய திருப்பம் 'கொடியை தம்பியிடமே கொடுங்கள்' என்று அழகிரி சொன்னதே ஸ்டாலினின் தலைமையை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதற்கான சிக்னல்தான். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்குள் அழகிரியைக் கட்சிக்குள் கொண்டு வரும் முடிவை, தளபதி எப்போதோ எடுத்து விட்டார். இடைத் தேர்தல் வெற்றியையும், அழகிரியின் பங்களிப்பையும் அதுவே உறுதி செய்து விடும்" என்கிறார்கள் இந்தியாவுக்கான சுதந்திரதினம் ஆகஸ்ட் 15-ம் தேதி என்றால், தி.மு.க.வுக்கான சுதந்திர தினம் ஆகஸ்ட் 14-ம் தேதிதான் என்ற நம்பிக்கையோடு, உடன்பிறப்புகள் காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 14-ம் தேதியன்று கட்சியின் தலைவர் உள்ளிட்ட புதிய ந…
-
- 0 replies
- 526 views
-
-
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 26ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன. இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்பட…
-
- 0 replies
- 589 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சில பகுதிகளில் பெண்கள் தங்களது ஆடைகளை வீடுகளில் கருப்பு கொடியாக கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு ஆலை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதற்கு வலுசேர்க்கும் வகையில் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்" என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அறவழிப் போராட்டங்களை நடத்தப்போவதாக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அறிவித்துள்ளன. இந்நிலையில், …
-
- 0 replies
- 479 views
-
-
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவு; 1000 டன்களை இறக்குமதி செய்கிறது இந்தியா மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 22,2015, 4:12 PM IST பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 22,2015, 4:12 PM IST புதுடெல்லி, தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கணிசமான அளவுக்கு சரிந்துள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் 2-வது நாடாக இந்திய உள்ளது. 2014-ம் ஆண்டில் மட்டும் 900 டன்கள் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் தங்க இறக்குமதி 11 சதவீதம் வரை அதிகரிக்கும் என அகில இந்திய நகை வியாபார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவை பின்வருமாறு:- …
-
- 0 replies
- 519 views
-