தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு…
-
- 0 replies
- 445 views
-
-
தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா | கோப்புப் படம் 2ஜி விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதும், சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-பி-ன் படி குற்றம்சாட்டப்பட…
-
- 1 reply
- 513 views
-
-
புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், எம்.பி.யுமான கனிமொழி உள்பட 19 பேருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என சிஏஜி குற்றம்சாட்டியிருந்தது. மேலும், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோரிடம் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு விசாரணை …
-
- 0 replies
- 430 views
-
-
2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழி தொடர்புடைய 2ஜி வழக்கில் தினசரி விசாரணை நடத்த சிபிஐ புதிய மனு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக, சிபிஐ தரப்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கு குறித்து தினசரி விசாரணை நடத்தக் கோரியுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செய்தியின்படி, 2ஜி அலைக்கறை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்…
-
- 1 reply
- 384 views
- 1 follower
-
-
2ஜி வழக்கு: இறுதிவாதத்தை நிறைவு செய்தார் ஆ.ராசா- ஜூலையில் தீர்ப்பு? எட்டு ஆண்டுகளாக நடந்து வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு இறுதி நிலைக்கு வந்திருக்கிறது. 2007-ல் ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்கப்பட்டது. இதில், பெருமளவு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து வழக்கு விசாரணையைத் தொடங்கியது. இதையடுத்து, 201…
-
- 0 replies
- 392 views
-
-
2ஜி வழக்கு: கனிமொழி, ஆ.ராசா விடுவிப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனுத் தாக்கல் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி : கோப்புப் படம் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தரப்பில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.30 ஆயிரத்து 984 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றச்சாட்டு கூறியது. இதன் அடிப்படையில் திமுக எம்பி கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17 மீது வழக்கு பதிவு செய்து…
-
- 0 replies
- 354 views
-
-
புதுடெல்லி: 2ஜி வழக்கு வழக்கில் வரும் 26ஆம் தேதி ஆஜராகுமாறு ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடியை தந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து அமலாக்கத்துறை, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட 10 பேர் மீதும் மற்றும் 9 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா, …
-
- 0 replies
- 332 views
-
-
#LiveUpdates 2ஜி தீர்ப்பு - கனிமொழி, ராசா நீதிமன்றம் வந்தடைந்தனர் #2GScamVerdict Credits : ANI 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வந்தடைந்தனர். சுப்பிரமணியன் சுவாமியும் நீதிமன்றம் வந்தடைந்தார். பாட்டியாலா நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க தொண்டர்களும் குவிந்துள்ளனர். காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூ…
-
- 32 replies
- 4.8k views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, 2ஜி விவகாரம் தொடர்பாக எடுத்த முடிவுகளுக்குத் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா கைது செய்யப்பட்டு சுமார் 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கும் புத்தகத்தை வரும் நவம்பரில் வெளியிட இருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு ‘இன் மை டிபன்ஸ்' என ராஜா பெயரிடப்பட்டுள்ளார்.இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. எனவே, அதே கால …
-
- 0 replies
- 328 views
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி எம்.பி. கைதாகி பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கனிமொழி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘‘2ஜி ஒதுக்கீடு முறைகேடுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் அவர், ‘‘கலைஞர் தொலைக்காட்சியில் எனக்கு 20 சதவீத பங்கே உள்ளது. நான் அதன் இயக்குனர்களில் ஒருவராக 2007–ம் ஆண்டு ஜூன் மாதம் 6–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இரண்டு வாரமே இருந்தேன். அதன்பிறகு 1½ ஆண்டு கழித்தே 2009–ல் நிதி பரிமாற்றம் நடந்தது. நான் எந்த காசோலை…
-
- 0 replies
- 380 views
-
-
புதுடெல்லி: 2ஜி வழக்கில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று மனு தாக்கல் செய்துள்ளார். 2ஜி வழக்கில், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து கலைஞர் டி.வி.யின் ஒரு பங்குதாரர் என்ற அடிப்படையில் கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையிலடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இவ்வழக்கில் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, கிரிமினல் சதி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்களை சிபிஐ பதிவு செய்துள்ளது. …
-
- 0 replies
- 306 views
-
-
2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! இந்தியாவை உலகப்புகழ் ஊழல் நாடாகக் காட்டிய 2ஜி அலைக்கற்றை வழக்கில், சி.பி.ஐ. தனது இறுதி வாதத்தை முடித்துவிட்டது. இனி குற்றவாளிகள் தரப்பு தங்கள் தரப்பை எடுத்துச் சொல்வதற்கான இறுதி-பதில் வாதம் நடைபெறும். பிப்ரவரி 1-ம் தேதியை அதற்கான ஆரம்பக் கெடுவாக குறித்துள்ளார் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி. இந்த நேரத்தில் 2ஜி வழக்கின் ஒரு பிளாஷ்பேக்... 2ஜி அலைக்கற்றைக் கதைக்குள் ஒரு முன்கதை... என்ன நடந்தது? நாம் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஏறத்தாழ எல்லோரிடமும் 3ஜி வசதி இருக்கிறது. ஆனால், மொத்தமாக வழக்கொழிந்துவிட்ட 2ஜி வசதிதான், அப்போது இந்தியாவின் பேசு பொருள். நாடாளுமன்…
-
- 0 replies
- 1k views
-
-
2ஜி ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே முடிவுகள் எடுக்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும், 2ஜி ஒதுக்கீட்டில் பிரதமரை அப்போதைய தொலை தொடர்புதுறை அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழிநடத்தினார் என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழிநடத்த …
-
- 1 reply
- 410 views
-
-
பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால், வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், ராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ராணுவ பயிற்சி மையத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற கடந்த 27ம் தேதி இலங்கையை சேர்ந்த விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோர் வந்தனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க முதல்வர் ஜெயலலிதா, திமுக …
-
- 0 replies
- 390 views
-
-
செம்மொழியான தமிழின் வளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் அடியோடு அலட்சியப்படுத்துகின்றன, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில், மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதையும், புதிதாக நியமிக்கப்பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாகவே இருப்பதையும் மாநில முதல்வர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ”உலக நாடுகள் எங்கும் பயணம் செல்லும் பிரதமர், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும், உலகத்தையே உறவாகக் கொண்ட கணியன் பூங்குன்றனாரையும், மேற்கோள் காட்டுகிறார். மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வள்ளுவர் குறளைத் தேடித்தேடி மேற்கோள் காட்டுகிறார். இதைச் சொல்…
-
- 0 replies
- 374 views
-
-
3 கொலையாளிகளை விடுதலை செய்ய என்ன ஒரு அக்கறை, வேகம்.. 7 தமிழர்கள் விடுதலை ஏன் இல்லை ? சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யாத நிலையில், 3 கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துக்கொலை செய்த அதிமுகவை சேர்ந்த தண்டனை குற்றவாளிகளை அவசரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருமே 25 வருடங்களை சிறையில் கழித்தவர்கள். சுமார், இரட்டை ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் கழித்துள்ளனர்.ஆனால், அவர்கள் விடுதலை என்பது தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த 3 பேரை தெரிந்த ஆளுநருக்கு இந்த 7 பேரை தெரியுமா? இவர்களையும் விடுதலை செய்வார…
-
- 2 replies
- 1.4k views
-
-
3 தொகுதிகளில் முன்னிலை..! அப்போலோவில் அதிமுகவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை வகித்து வருவதால் அதிமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன், இனிப்புகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்திலும், கட்சி தலைமை அலுவலகத்திலும் இந்த கொண்டாடம் நடந்து வருகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர். இரண்டாவது இடத்துக்கு திமுகவும், 3வது இடத்துக்கு பாஜ…
-
- 7 replies
- 1.5k views
-
-
3 தொகுதி இடைத் தேர்தல்களில் சி.பி.ஐ.எம் போட்டி... உடைகிறதா மக்கள் நலக்கூட்டணி? தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டிட முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில், அந்தக் கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு, மக்கள் நலக்கூட்டணியை சிதறடிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர். பின்னணியில் நிகழ்ந்தவை என்ன? மக்கள் நலக்கூட்டணி 2016-சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மக்கள் நலக்கூட்டியக்கம் உருவானது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, அந்த கூட்டியக்கம், மக்கள் நலக்கூட்ட…
-
- 0 replies
- 505 views
-
-
3 நாளில் தமிழக நிலைமை தெளிவாகும்: அட்டர்னி ஜெனரல் எதிர்பார்ப்பு புதுடில்லி: மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி கூறியதாவது: சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.தமிழக அரசியல் சூழ்நிலை 2 அல்லது 3 நாளில் தெளிவாகும் என எதிர்பார்க்கிறேன். இதன் பின்னர் வழக்கமான முதல்வர் செயல்படுவார். இனிமேல், இரண்டு தரப்பும் சட்டசபையில் பலத்தை நிருபிக்க உத்தரவிடலாம். அல்லது ஒரு தரப்புக்கு போதிய பலம் உள்ளது என கவர்னர் கருதினால், அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து, சட்டசபையில் பலத்தை நிருபிக்க உத…
-
- 0 replies
- 309 views
-
-
3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக். பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் விற்பனை அதிகம் ஆகும். அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இந்த பொங்கல் பண்டிகையின் போது தீபாவளி பண்டிகையை விட கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் …
-
- 9 replies
- 2.3k views
-
-
3 நாள் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு- நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கியது ஐகோர்ட் நளினிக்கு மூன்று நாள் பரோல் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு நாள் மட்டுமே பரோலில் சொல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் அண்மையில் காலமானார். இதைத் தொடர்ந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கேட்டுவேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் நளினி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட வேலூர் சிறை கண்காணிப்பாளர், நளினிக்கு ஒரு நாள் அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து தந்தையின் இறுதிச் சட…
-
- 1 reply
- 378 views
-
-
2000வது ஆண்டில் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரியில் வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் பேருந்துக்கு தீவைத்து 3 மாணவிகளை உயிருடன் எரித்துக் கொன்றனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறைகள் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு ஆகும். எதிர்க்கட்சிகள், அரசு ஊழியர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவரும் இத்தகைய அடக்கு முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, பா.ம.க. மீது பழிபோட்டு, அது ஒரு வன்முறைக்கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 14.05.2013 செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கைய…
-
- 1 reply
- 534 views
-
-
சென்னை: மு.க. அழகிரி தம்மையும் மு.க. ஸ்டாலினையும் பற்றி விரும்பத்தகாத வார்த்தைகளை பேசினார் என்றும் மு.க. ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் இறந்துவிடுவார் என கூறியதை எப்படி பொறுப்பது என்று அவரது தந்தையும் திமுக தலைவருமான மு. கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். - See more at: http://m.oneindia.in/tamil/news/tamilnadu/azhagiri-used-harsh-words-against-stalin-dmk-chief-karunanidhi-192278.html#sthash.jv6hODMk.dpuf
-
- 6 replies
- 675 views
-
-
3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ? சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ் தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வென்று, மே 23-ஆம் தேதியன்று அதிமுகவின் பொது செயலாளரான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். Image captionமுதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவிடம் ஆசி பெறும் ஒ.பன்னீர் செல்வம் இன்றோடு (மே 23-ஆம் தேதி, 2017) ஆட்சி பொறுப்பேற்று தனது முதல் ஆண்டை அதிமுக அரசு நிறைவு செய்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளில், தற்போதைய ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவுதான் ம…
-
- 0 replies
- 485 views
-
-
23 JAN, 2025 | 02:17 PM சென்னை: 2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் என சொன்னவர்கள். இப்போது மோடி மூன்றாவது முறையாக பிரதமரான பிறகும் மீட்காமல் இருப்பது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம், நரேந்திர மோடி பிரதமரானால் ஒரு தமிழக மீனவர் கூட தாக்குதலுக்கு உள்ளாகமாட்டார்கள், மீனவர் நலன்களைப் பாதுகாக்க மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று வகைவகையான வாக்குறுதிகளைக் கொடுத்து தேர்தலோடு காணாமல் போன கச்சத்தீவி…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-