தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
அணைகள் வேக வேகமாக நிரம்பி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முடங்கிப் போய் கிடக்கிறது. கடந்த வாரம் வரை, நீர்நிலைகள் மைதானமாக காட்சியளித்த நிலையில், தற்போது சாலைகளே நீர்நிலைகளாக மாறிவிட்டன. புதன்கிழமை மழை பெய்யத் தொடங்கியபோது, இதுவும் சாதாரண மழைதான் என்று கோவை மக்கள், தங்களது டே பிளானை (Day plan) அமைத்திருப்பார்கள். ஆனால், மழை வேறு பிளானை செயல்படுத்திவிட்டது. புதன்கிழமை தொடங்கிய மழை, வெள்ளிக் கிழமை வரை கொட்டிக்கொண்டிருக்கிறது. வால்பாறை முற்றிலுமே முடங்கிப் போய்விட்டது. பழங்குடி கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. தொடர்மழை காரணமாக, கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
தோட்டத்திலேயே அழுகும் கிர்ணி பழங்கள். புதுச்சேரி ஊரடங்கு உத்தரவால் தோட்டங்களிலேயே அழுகிய நிலையில் கிர்ணி பழங்கள் உள்ளதால் வளர்த்த கையாலேயே அதைத் தூக்கி எறியும் மன உளைச்சலில் புதுச்சேரி கிராமப்புற விவசாயிகள் உள்ளனர். புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கோடைக்காலத்துக்கான பயிர்களான தர்பூசணி, கிர்ணி பழங்கள் பயிரிட்டு வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். புதுச்சேரியிலும் பல இடங்களில் இப்பழங்கள் விற்பனையாகும். அதிக அளவில் புதுச்சேரி கிராமப்பகுதியில் பி.எஸ்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த கிர்ணி பழங்களை வாங்க யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரமுடியவில்லை. ஏனெனில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதே முக்கியக் காரணம். கட…
-
- 6 replies
- 939 views
- 1 follower
-
-
சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும்,பத்தாண்டு நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளில் 800-க்கும் அதிகமான ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 25 ஆண்டு தண்டனை அனுபவித்தும் இன்னும் சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள்…
-
- 0 replies
- 204 views
-
-
நிதிநிறுவன கடனுக்கு வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை தாடிக்கொம்பு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது இல்லை. அதற்கு பதிலாக தாலுகா அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனினும், கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் மக்கள் மனு கொடுக்க வருகின்றனர். இதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு, ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடைய கையில் மனுக்கள் அடங்கிய கவர் இருந்தது. கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்த போது, அந்த நபர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே …
-
- 0 replies
- 689 views
-
-
நெல்லித்தோப்பில் நாராயணசாமி அமோக வெற்றி நாராயணசாமி வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள் | படம்: எஸ்.செந்தளிர். நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புதுச்சேரி முதல்வர் பதவியை நாராயணசாமி தக்கவைத்துக் கொண்டார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. இதில், இறுதி நிலவரப்படி தஞ்சையில் 69, அரவக்குறிச்சியில் 82, திருப்பரங்குன்றத்தில் 71 மற்றும் நெல்லித்தோப்பில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியத…
-
- 0 replies
- 328 views
-
-
சென்னைக்கான வீசா தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் காரணமாக இவ்வாறு சென்னைக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. யாத்திரைகளை மேற்கொள்வதற்காக சென்னைக்கு வீசாக்களை வழங்கி வந்த பௌத்த சாசன அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது, தற்போதைய நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் வரையில் வீசா வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. சென்னை ஊடாக இலங்கையர்கள் பயணம் செய்வது ஆபத்தானது எனவும், இதனால் இவ்வாறான யாத்திரைகளுக்கு வேறும் வழிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. http://www.newsalai.com/details/a-temporary-suspension-of-the-visa.html
-
- 7 replies
- 1.2k views
-
-
ஜல்லிக்கட்டு தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார் ரஜினி..! தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாசாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். கலாசாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது. என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள். பெரியவ…
-
- 1 reply
- 471 views
-
-
முதல்வராக நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி வந்தால் உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும்: துரைமுருகன் தகவல் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் முதல்வர் பதவியில் நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி வரும் சூழ்நிலை வந்தால், அப்போது அவருக்கு உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் முதன் மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும் பதவியேற்றனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை க…
-
- 0 replies
- 276 views
-
-
வரும் தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சேலத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. கோஷ்டியே இருக்கக் கூடாது. எந்தக் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை. அரசியல் கட்சி என்றால் அதில், கோஷ்டி பூசல் தவிர்க்க முடி…
-
- 8 replies
- 1k views
-
-
"மூன்றில் ஒரு பங்குதான் கொடுத்தார்கள்!" - முடிவுக்கு வராத கூவத்தூர் கணக்கு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பதற்காக, எம்.எல்.ஏக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார் சசிகலா. 'நாங்கள் யாரும் பன்னீர்செல்வம் அணிப் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதில் இரண்டு பங்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அ.தி.மு.க அரசியல் வரலாற்றில் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் வரிந்து கட்டிக் கிளம்பிய மறுநாளே எம்.எல்.ஏக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் சசிகலா. 11 நாட்களாக தொடர்ந்து பிரேக்கிங் …
-
- 0 replies
- 484 views
-
-
தினகரனுக்கு கோர்ட் 'கிடுக்கிப்பிடி': அன்னிய செலாவணி மோசடி வழக்கு சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜரான தினகரனின் கோரிக்கையை, மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்ததால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியரான, சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதம் அடிப்படையில், சென்னையில், பெயரளவில் செயல்பட்டு வந்த, பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, மூன்று கோடி ரூபாய் கடன் பெற்றது. இதில், 2.20 கோடி ரூபாயை எடுத்து, கோடநாடு எஸ்டேட் வாங்க, சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் தினகரன் பயன்படுத்தினர். அத்துடன், 'ஜெஜெ டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதி களை ஏற்படுத்து…
-
- 0 replies
- 293 views
-
-
சென்னை: காவிரி ஆற்றில் நீர்த்தேக்கம் அமைக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் அணைகள் நிரம்பி உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரினால் மேட்டூர் அணை நிரம்புகிறது. இவ்வாறு உபரிநீராக தமிழகத்திற்கு திருப்பி விடப்படும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதில் காவிரி நடுவர் மன்றத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அரு…
-
- 1 reply
- 463 views
-
-
தமிழகத்தில் இடி மற்றும் மழையால் 8 பேர் பலி..!! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் மழை காரணமாக 8 பேர் பலியாகியுள்ளனர், 6 ஆடுகள் உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன்பேட்டையில் உள்ள தனியார் நெல் அரவை ஆலையில் கூலி வேலையில் 7 பெண்கள் ஈடுபட்டு வந்தனர். செங்கத்தில் இன்று மாலை மழை பெய்ததால் 7 பெண்களும் ஒரு அறையில் ஒதுங்கியுள்ளனர். அப்போது ஆலையின் புகை போக்கியின் மீது இடி தாக்கி மேற்கூரை சரிந்து விழுந்ததில் சிக்கிய 5 பெண்கள் சம்பவ இடத்தில் பலியாகினர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதேபோல விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிரிக்கெ…
-
- 0 replies
- 275 views
-
-
‘ஆளே அடையாளம் தெரியலையே!’ - சிறையில் கதறியழுத சசிகலா..! #VikatanExclusive பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்த கட்சியினரிடம், அவர் கதறி அழுததாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷிடம் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தி, சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ், புகழேந்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர். அவர்களுக்கு முன்னதாக, ராமலிங்கம் எம்எல்ஏ, தமிழ்மகன் உசேன், நடிகர்கள் ஜெ.கே.ரித்தீஷ், ஜெ.எம்.பஷீர் என்ற விஜய்கார்த்திக் ஆகியோர் சந்தித்தனர். சுடி…
-
- 0 replies
- 481 views
-
-
49 'ஸ்லீப்பர் செல்' எம்.எல்.ஏ.க்கள்! அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடக்கும்? #HallOfShameADMK அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்த, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 49 எம்.எல்.ஏ.க்கள் கணக்கில் வரவில்லை என்கிறார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வெற்றிவேல் சொல்வது போல், அவர்கள் 'ஸ்லீப்பர்செல்' எம்.எல்.ஏ.க்களா என்ற பரபரப்பு எதிரணி முகாமில் பற்றிக் கொண்டிருக்கிறது. அது பொதுக்குழுவில் வலுவாக எதிரொலிக்கலாம் என்கிறார்கள்தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில், அ. தி.மு.க. 135, தி.மு.க. 89, காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக், 1 மற்றும் காலி இடம் 1 (ஜெ.ஜெயலலிதா இறப்பு காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி)…
-
- 0 replies
- 515 views
-
-
திருச்சியில் இலங்கைத் தமிழ் மாணவர் வெட்டிக்கொலை! – காதலியின் தங்கையை காதலித்தவரை தட்டிக்கேட்டதால் விபரீதம். [Monday, 2014-02-17 18:08:50] திருச்சியில், காதல் தகராறில் இலங்கைத் தமிழரான கல்லூரி மாணவர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருச்சி சீனிவாச நகரில் வசிக்கும், ஸ்ரீதரன். இலங்கை தமிழரான இவரது மகன் விதுகரன் (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். விதுகரன் காதலித்த மாணவியின் தங்கையை அதே கல்லூரியில் படிக்கும் திருச்சி தில்லைநகரை சேர்ந்த அரவிந்த் (20) காதலித்தார். விதுகரனுக்கு இது பிடிக்காததால் அரவிந்தை கண்டித்தார். இந்நிலை…
-
- 6 replies
- 3.1k views
-
-
இலங்கை மக்களுக்கு உதவும் தீர்மானம் அரசியல் லாபமாக மாறிவிடக்கூடாது- மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கேட்டு தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானம் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம். இந்த தருணத்தில் சொல்லுதல் யார்க்கும் எளிய… என்ற திருக்குறளை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்க ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தியபோது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக…
-
- 3 replies
- 386 views
-
-
நாகப்பட்டினத்தில் அரசு போக்குவரத்து பணிமனையின் மேற்கூரை இடிந்துவிழுந்து 8 தொழிலாளர்கள் பலி நாகப்பட்டினம் பொறையாறில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் போக்குவரத்து தொழிலாளர்கள் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில், "நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்துப் பணிமனை உள்ளது. இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. இன்று அதிகாலை இந்தக் கட்டிடத்தின் மேற்கூரை திடீரெனச் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கார…
-
- 0 replies
- 438 views
-
-
பாறையில் கண்டறியப்பட்ட ஓவியங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர். விழுப்புரத்தை அடுத்த சிறுவாலை என்ற கிராமத்தில் 5000 ஆண்டு களுக்கு முந்தைய தொல் பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் வரலாற்றுக்கு முந்திய கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கற்கால மனிதர்களின் கலை உணர்வையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் வாழ்க்கை முறையையும் சித்தரிக்கும் இம்மாதிரியான தொல்பழங்கால ஓவியங்கள் தமிழகம் முழுதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, செத்தவரை போன்ற இடங்களில் கிடைத்த ஓவியங்கள் தனிச் சிறப்புக்குரியவை. அவற்றின் காலம் கி.மு 3000 முதல் கி.மு 7000 வரை என அறிஞர்கள் கருது கின்றனர். அதைப்போன்ற த…
-
- 0 replies
- 546 views
-
-
கோவை: பொள்ளாச்சியில் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சார்பில் விடுதி ஒன்றும் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 3 மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் தங்கி இருக்கின்றனர். மலை வாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய இவர்கள் ஆதரவற்ற நிலையில் இங்கு தங்கி, அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச் சென்று விட்டனர். இரவு திடீரென மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே விடுதியில் சோத…
-
- 1 reply
- 664 views
-
-
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 21 ஆவது முறையாக கண்ணாடி கூரை சரிந்து விழுந்தது. விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் கோவை, கொல்கத்தா, மதுரை, அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதில் பயணம் செய்ய 300க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். பயணிகளை சோதனை செய்யும் பகுதியில் 20 அடி உயரத்தில் இருந்து கண்ணாடி உடைந்து விழுந்தது. அந்த பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் விழுந்தடித்து ஓடினர். இந்த கண்ணாடி விபத்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்ணாடி உடைந்தை அடுத்து உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய…
-
- 2 replies
- 608 views
-
-
ராமேஸ்வரம்: மாவட்ட ஆட்சியரின் உறுதியினை ஏற்று மீனவர்கள் படகுகளின் உரிமத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டனர். அதேவேளையில் மத்திய அரசுக்கு எதிராக இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்துவோம் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரு மாத காலத்தில் 258 மீனவர்கள், 57 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டனர். இதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளதுடன், இவர்களது 55 படகுகளும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், 55 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி…
-
- 0 replies
- 325 views
-
-
பாகிஸ்தான் உளவாளியான இலங்கைத் தமிழர் சென்னையில் கைது?! பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இலங்கையைச் சேர்ந்த அருள் செல்வராஜன் என்பரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சென்னையில் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தூண்டுதலின் பேரில் இலங்கையைச் சேர்ந்த சிலர் உளவு பார்ப்பதற்காக தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் பாகிஸ்தானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தேசியப் புலனாய்வு அமைப்புக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழக போலீஸôர் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் இலங்கையில் இருந்து வந்த முகமது …
-
- 14 replies
- 971 views
-
-
எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம்? தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு.பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகர் எஸ்.வி. சேகருக்கு அவரது உறவினரும் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தும் பதிவை தமது சமூக வலைதளங்களில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதனிடையே எஸ்.வி.ச…
-
- 0 replies
- 650 views
-
-
தியாக தீபம்' தீலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் ,ராகவன், மதன் ஆகியோர் கல்லூரி வளாக விடுதியில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை இன்று மேற்கொண்டனர். http://www.pathivu.com/news/34137/57//d,article_full.aspx
-
- 0 replies
- 1.1k views
-