தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
போலீஸ் காவலில் இளைஞர் விக்னேஷ் மரணம்: பதறவைக்கும் வாக்குமூலங்கள் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 30 ஏப்ரல் 2022 படக்குறிப்பு, விக்னேஷ் சென்னையில் போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், மத்தியக் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்த வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. இந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் குறித்த பதற வைக்கும் வாக்குமூலங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 18ஆம் தேதியன்று, சென்னை புரசைவ…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின், அழைப்பின் பேரில்... தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, இந்தியாவில் ஆட்சி புரியும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் நெருக்கமான உறவை பேணி வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இந்தியாவில் இருந்து மலையக மக்கள் சார்ந்த உதவிகளை முதல் முதலாக இலங்கை பெற வழிவகுத்திருந்தது. மறைந்த தலைவர்களான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம் முதல் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை இந்தியாவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொழிலாளர் கங்கிரசுடன் நட்புறவை வலுப்பட…
-
- 0 replies
- 202 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்திய மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் இந்திய மத்திய அரசு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவி செய்யும் அதேநேரத்தில் அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்து வருகின்றது. இந்நிலையில், இதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து இந்திய மத்திய அரசுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதற்கு இதுவரை இந்திய மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவுவதற்கு இந்திய மத்திய அரசின் …
-
- 2 replies
- 292 views
-
-
சிக்கித் தவிக்கும்... இலங்கைத் தமிழர்களுக்கு, உதவுமாறு... ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் கோரிக்கை! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று (வியாழக்கிழமை) தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார். இந்தச் சூழ்நிலை…
-
- 5 replies
- 474 views
-
-
போதைப் பொருள் கடத்தில் வழக்கில் தொடர்புடைய இருவர் கைது - இலங்கையில் இருந்து அகதிகள் போல் வந்தவர்கள் BBCCopyright: BBC இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் இருவர் அகதிகள் போல் தமிழ்நாட்டுக்கு வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர் வாழ முடியாமல் தமிழ்நாட்டில் அகதியாக வந்ததாக இன்று காலை தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதிக்கு இருவர் வந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கையில் போதைப் பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால் யாழ்ப்பாணத்தில் இரு…
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
தமிழகத்திற்கு... 26 கோடி கிலோ, நிலக்கரி ஒதுக்கீடு! தமிழகத்திற்கு 26 கோடி கிலோ நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களாக நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கூடுதலான நிலக்கரி ஒதுக்கீடு செய்யுமாறு மின் வாரியம் வலியுறுத்தியிருந்தது. இதற்கமைய தற்போது மத்திய அரசு 26 கோடி கிலோ நிலக்கரியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலக்கரியை தமிழக மின் வாரியம் சொந்த செலவில் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2022/1278892
-
- 0 replies
- 264 views
-
-
General News தஞ்சாவூர் தேர்த் திருவிழாவில் திடீர் விபத்து தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின்அழுத்தக் கம்பியில் உரசி விழுந்ததால் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்…
-
- 2 replies
- 398 views
-
-
பேரறிவாளன் விடுதலை விவகாரம்: ஆளுநரின் செயல் கூட்டாட்சி அமைப்பை அழித்துவிடும் - உச்ச நீதிமன்றம் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுப்பது என்ற குழப்பத்திற்குள் செல்லாமல், பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுதலை செய்யக்கூடாது என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதி…
-
- 2 replies
- 691 views
- 1 follower
-
-
கருணாநிதியின் பிறந்தநாள்... அரசு விழாவாக, கொண்டாடப்படும் – ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) 110ஆவது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்போதே அவர் மேற்படி அறிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் எனவும் கூறினார். அவருடைய பிறந்த தினமான ஜுன் மாதம் 3 ஆம் திகதி இனி அரசு விழாவாக கொண்டாப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1278696
-
- 0 replies
- 179 views
-
-
மு.க.ஸ்டாலின் - திராவிடச் சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.) கருப்பையும் சிவப்பையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை குறித்து 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. …
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
இந்தியா - இலங்கை இடையே மின்பாதை அமைக்கக் கூடாது! இந்தியா - இலங்கைக்கு இடையே கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை : இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல வசதியாக மதுரையிலிருந்து இலங்கையின் அனுராதபுரம் பகுதிக்கு கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக இரு நாடுகளின் பரிசீலனையில் இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இரு முறை கைவிடப்பட்ட இந்தியா - இலங்கை மின்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது …
-
- 1 reply
- 591 views
-
-
லீலாவதி கொலை வழக்கு: '2k கிட்ஸ்' தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? பிரசாந்த் முத்துராமன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK / CPIM TAMILNADU படக்குறிப்பு, லீலாவதி தமிழ்நாட்டில் நடந்த அரசியல் கொலைகளுக்காக ஒரு பட்டியல் தயார் செய்தால், அதில் லீலாவதி கொலை வழக்குக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. அவ்வப்போது, லீலாவதி கொலை வழக்கு என்று இணையத்தில் பேசப்படும் இந்த வழக்கு என்ன? யார் இந்த லீலாவதி? ஏன் அவரது கொலை வழக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படுகிறது? ஏப்ரல் 23, 1997. தன் கணவருடன் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சென்ற…
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
சூழலியலாளர் சாந்தலா தேவி: "என்னை போலவே உடைந்திருந்த தடாகம் பள்ளத்தாக்கை மீட்க விரும்பினேன்" மோகன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAMED FAZIL படக்குறிப்பு, சாந்தலா தேவி கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக 18 வயதான சாந்தலா தேவி ஆய்வு செய்து தயாரித்திருக்கும் அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது. கோவை மாவட்டம் தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தலா தேவி. இவரின் தந்தை மருத்துவர் ரமேஷ். கடந்த 2019-ம் ஆண்டு நிகழ்ந்த இரு சக்கர சாலை விபத்து ஒன்றில் ச…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
தமிழ்நாடு: தொடரும் மின்வெட்டு; அமைச்சர் சொன்ன மத்திய தொகுப்புதான் பிரச்னையா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 21 ஏப்ரல் 2022, 09:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஏற்படும் திடீர் மின்வெட்டுகளால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். `மத்திய தொகுப்பில் இருந்து வரவில்லையென்றால் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. இதனை மாநில அரசு ஆராய வேண்டும்' என்கின்றன மின்வாரிய ஊழியர் சங்கங்கள். என்ன நடக்கிறது? அமைச்சர் சொன்ன காரணம் கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான வெயில் சுட்டெரிப்பதால் மி…
-
- 1 reply
- 312 views
- 1 follower
-
-
7 பேர் விடுதலை - ஜனாதிபதிக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டது எப்போது? மின்னம்பலம்2022-04-21 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஜனவரி 27ஆம் தேதி ஆளுநரிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பேரறிவாளன் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே உள்ளார். இதனிடையே 7 பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்…
-
- 0 replies
- 326 views
-
-
கூவாகம் அழகிப் போட்டியில் வென்ற மெஹந்தி: "பெற்றோர்கள் கைவிடாமல் எங்களை ஏற்க வேண்டும்" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை முதலிடத்தையும், திருச்சியை சேர்ந்த திருநங்கை இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த திருநங்கை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் இத்திருவிழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று சூழல் குறைந்து கட்டுப்பாடுகள…
-
- 2 replies
- 431 views
- 1 follower
-
-
ரோஜா பேட்டி: "ஆந்திராவில் அமைச்சரானாலும் மாமியார் வீடு தமிழ்நாடுதான்!" 5 மணி நேரங்களுக்கு முன்னர் நான் அமைச்சராகியிருப்பது ஆந்திர பிரதேசத்தில் என்றாலும் என்னுடைய மாமியார் வீடு தமிழ்நாடுதான். இதன் பெருமையை மெச்சும் வகையில் தாய் வீடான ஆந்திராவில் பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றுள்ள ரோஜா. சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அமைச்சராக ரோஜா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அமைச்சர் ரோஜா தரி…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
சைபர் மோசடிக் குற்றங்கள் கோவையில் அதிகரிக்கின்றனவா? மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திவ்யா என்பவர் சமீபத்தில் ரூ.1,28,000 பணத்தை இணைய வழி முறைகேட்டில் இழந்துள்ளார்.திவ்யாவின் வாட்சப் எண்ணுக்கு அவருடைய தலைமை செயல் அதிகாரி போல ஒரு எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பேசிய நபர் அமேசான் பரிசு கூப்பன் வாங்கி தனக்கு அனுப்பி வைக்குமாறு திவ்யாவிடம் கேட்டுள்ளார். வாட்சப்பில் பேசியவர் தன்னுடைய தலைமை செயல் அதிகாரி என நம்பிய திவ்யா ரூ.1.28 லட்சம் மதிப்புள்ள ஐந்து அமேசான் பரிசு…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
ஏ. ஆர். ரஹ்மான்: தமிழ், தென் இந்தியர்கள் குறித்து பேசியது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய ஏ. ஆர். ரஹ்மான், இது நாம் இணைவதற்கான நேரம் என்று தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் டிவிட்டரில், 'தமிழுக்கும் அமுதென்றுபேர்!' என்ற பாரதிதாசனின் கவிதையில் வரும் 'தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!' என்ற வரிகளை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ரஹ்மான் பதிவிட்டிருந்தார். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கான எதிர்வினை…
-
- 0 replies
- 787 views
- 1 follower
-
-
சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு: இனி அவருக்குள்ள வாய்ப்புகள் என்ன? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TTV DINAKARAN படக்குறிப்பு, வி.கே. சசிகலா `அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ` அ.தி.மு.க மீது சசிகலாவுக்கு உரிமை இல்லை என்றாகிவிட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தாலும் பயன் உள்ளதா என்பது கேள்விக்குறிதான்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
கொரோனோ தொற்றின்... புதிய உருமாற்றம், தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை- சுப்பிரமணியன் புதிதாகப் பரவிவரும் XE வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, நாட்டில் பரவும் XE வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கொரோனோ வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/12760…
-
- 0 replies
- 153 views
-
-
இலங்கை போர்: தமிழ்நாடு இல்லனா செத்துருப்போம்-மனம் திறக்கும் நடிகர் போண்டா மணி(கேதீஸ்வரன்) தமிழ் மக்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள் என சிங்கள மக்களும் இப்போது உணர்கின்றார்கள். தமிழர் பிரதேசங்களில் விவசாயம் இருப்பதினால் அவர்கள் கஸ்ரப்பட மாட்டார்கள். இப்போது சிங்களவர் மட்டுமே பிரச்சனைகளை அனுபவிக்கின்றார்கள். புலம்பெயர்ந்த ஈழமக்கள் ஏழைமக்களல்ல.வசதியாக வாழ்ந்தவர்கள். பிரபாகரன் இருக்கும் வரைக்கும் இலங்கைக்குள் யாரும் வரமுடியவில்லை. தமிழ்நாட்டிற்கும் பாதுகாப்பாய் இருந்தது. வெள்ளைக்கார நாட்டில் வாழும் தமிழ் அகதிகள் சகல உரிமைகளுடனும் வாழ்கின்றார்கள். தமிழ்நாட்டில் வாழும் ஈழ அகதிகளுக்கு எவ்வித உரிமையுமில்லை.
-
- 0 replies
- 681 views
-
-
ஒற்றை மொழி... ஒற்றுமைக்கு, உதவாது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை கெடுக்கும் வேலையை பா.ஜ.க. தலைமை தொடர்ந்து செய்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இவ்வாறான தவறுகளையே பா.ஜ.க. அரசாங்கம் தொடர்ந்தும் செய்கின்றது என குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், இவ்வாறான முயற்சியில் ஒருபோதும் வெற்றிபெறமாட்டார்கள் என்றும் கூறினார். https://athavannews.com/2022/1275967
-
- 0 replies
- 306 views
-
-
திருச்சி அகதிகள் முகாமில் விதைகள் சேகரித்து, மரக்கன்றுகள் வளர்த்து விநியோகிக்கும் இலங்கைத் தமிழர் ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 7 ஏப்ரல் 2022, 13:13 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHENDRAN சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மகேந்திரன் மரக்கன்றுகள் வளர்த்தும் விதைகளை சேகரித்தும் அதிகாரிகள் முன்னிலையில் தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க …
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
தமிழகத்தில்... கொரோனா கட்டுப்பாடுகள், நீக்கம்! தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டொக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், முகக் கவசங்களை அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்டவை தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்ட…
-
- 0 replies
- 551 views
-