தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10254 topics in this forum
-
ஆர்.கே நகரில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு ஆதரவில்லை: இளையராஜா மகன் அதிரடி! on: மார்ச் 24, 2017 ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு தனது ஆதரவில்லை என யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் இளையராஜாவின் தம்பியாவார். இந்நிலையில் இளையராஜாவின் இளைய சகோதரர் பாஸ்கரின் மகளான வாசுகி தேர்தலில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த டிவீட்டில் இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜாவ…
-
- 0 replies
- 543 views
-
-
ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா வீடியோ! #VikatanExclusive இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுகவின் 3 அணிகள், பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் களம் காணும் இத்தொகுதியில் வேட்பாளர்கள் பரபரப்பாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்கள். இந்நிலையில் அதிமுக (அம்மா ) அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் அணி நேற்றுமுதல் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்யத்துவங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்தந்த பகுதிகளைப்பொறுத்து வாக்காளர்களுக்கு தலா 2000 முதல் 4000 வரை பணம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்தப் பகுதிக்கென ஒதுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அதிகாலையில் வீடுவிட…
-
- 1 reply
- 552 views
-
-
இராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கருதுவது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கிற வாக்குகள். இங்கு அது வெறும் எண்ணிக்கை அல்ல. அந்த எண்ணிக்கையை அடைவதற்கு பயணப்பட்ட திசை தான் முக்கியம். தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக வேறு திசைக்கு பயணிக்கிறது. நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரம் ஒரு திட்டமிட்ட தனித்துவமான பாணியில் இருந்தது. திராவிட அரசியல் பாதை வரலாற்றின் தொடக்க நாட்களை அது நினைவுபடுத்துகிறது. இப்போது அவர்களை தமிழகம் பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் திரும்பி பார்க்கும் காலம் விரைவில் வரும். தமிழக அரசியல் அதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகிறது. தமிழ் தேசிய அரசியலில் இன்னும் சிலர் களமிறங்க வேண்டியிருக்கிறது. அப்போது இந்த பாய்ச்சல் …
-
- 22 replies
- 1.5k views
-
-
ஆர்.கே. நகரில் அள்ளி வீச ரூ.50 கோடி பணம்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் தயாராக இருப்பதும், கொட்டப்போகிறது பண மழை என்ற ரகசிய தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்துள்ளது. சென்னை: இடைத்தேர்தல் என்றாலே பணம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஓட்டுக்கள் விலை பேசப்படுவது தெரிந்ததுதான். பிரபலமாக பேசப்படும் திருமங்கலம் பார்முலாதான் பண விநியோகத்தை பரவலாக்கியது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று விலை கூடுதலா…
-
- 0 replies
- 553 views
-
-
ஆர்.கே. நகரில் போட்டியிட எனக்கு தொல்லை: தீபா சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எனக்கு தொல்லை கொடுக்கின்றனர் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது மக்களின் விருப்பமே . சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதாவில் அண்ணன் மகள் தீபா கூறுகையில் : ‛‛இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிடுவேன். பேரவையின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசித்த பின்னரே முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும், ஜ…
-
- 6 replies
- 1k views
-
-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : தலைகுனிய வைக்கும் பண விநியோகம் சென்னை ஆர்.கே.நகர் (ராதா கிருஷ்ணன் நகர்) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன. இதனையொட்டி இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. தொகுதியைக் கைப்பற்ற பல்வேறு கட்சிகளும், சுயேச்சை உறுப்பினர்களும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். அவர் காலமானதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே எதிர்வரும் 12 ஆம் திகதி புதனன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 15 ஆம் த…
-
- 1 reply
- 459 views
-
-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வி: என்.ராம் சாடல் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது, தேர்தல் ஆணையத்தின் தோல்வியே எனறு மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வியே' ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து ராம் கூறுகையில், '' இடைத்தேர்தலை ரத்து செய்வது நல்ல விஷயமல்ல. ஆனால் , வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்'' என்று தெரிவித்தார். ''ஒரு வாக்குக்கு 4000 ரூபாய் வரை தரப்படுவ…
-
- 0 replies
- 375 views
-
-
ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ இல்லாமல் பிரதமர் அல்லது முதல்வர் பதவியில் ஒருவர் இடைத்தேர்தல்களில் களமிறங்கினால், ஒட்டுமொத்தப் பார்வையும் அந்தத் தொகுதியின் மீது குவியும். அப்படியான இடைத்தேர்தல் இல்லை ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது. ஆனாலும் இது, பல மடங்கு கவனத்தை இந்தியா முழுமைக்கும் ஈர்த்திருக்கிறது. தெருக்கள் எங்கும் கண்காணிப்புக் கேமராக்கள், அரசு வாகனங்கள் நுழையத் தடை, கூடுதல் பறக்கும் படைகள், துணை ராணுவம், தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி முதல், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வரையில் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், சிறப்புத் தேர்தல் அதிகாரி எனத் தேர்தல் கமிஷன் காட்டும் அதிரடிகள் இதுவரை நடக்காதவை. ஒரு சட்டசபை தொகுதியின் இட…
-
- 1 reply
- 952 views
-
-
ஆர்.கே.நகர் யாருக்கு? திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் (இடமிருந்து வலமாக) சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.24) காலை சரியாக 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. 8.10 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரே ஒரு தபால் வாக்கு பதிவானது. அந்த தபால் வாக்கு திமுகவுக்கு பதிவாகியுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல்.. தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்த…
-
- 20 replies
- 2.5k views
-
-
ஆர்.கே.நகரில் அ.தி.மு.க செயலாளருக்கு அரிவாள் வெட்டு! ஆர்.கே நகரில் 47-வது வட்டத்தில் இன்று பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஒ.பி.எஸ் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனனை அதரித்து அந்த பகுதி கிளைச் செயலாளர் நித்யானந்தம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, கும்பலாக வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இதையடுத்து, அவர் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிற கட்சியினர் சிதறி ஓடினார்கள். தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் ராமர் மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பின்னர், நித்யானந்தத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நித்யானந்தத்ததை வெட்டிய…
-
- 0 replies
- 367 views
-
-
ஆர்.கே.நகரில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்! சிங்கப்பூர் புறப்படும் முன் விஜயகாந்த் பேட்டி Chennai: மருத்துவ சிகிச்சைக்காக தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், பேசுவதில் விஜயகாந்த்துக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்திடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடுமா என்று…
-
- 0 replies
- 410 views
-
-
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்- குஷ்பு அதிரடி காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டால் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதியிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. கடந்த 4ம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்துள்ள அவர், தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தி.மு…
-
- 0 replies
- 453 views
-
-
ஆர்.கே.நகரில் புதிய தேர்தல் தேதியை அறிவிக்க தினகரன் லஞ்சம்: டெல்லி போலீஸ் பரபரப்பு புகார் ஆர்.கே.நகரில் ரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தலை மே 5-ந்தேதி நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் புகார் கூறியுள்ளனர். புதுடெல்லி: ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் அதன் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.…
-
- 0 replies
- 339 views
-
-
ஆர்.கே.நகரில் போட்டி: பன்னீர் அணியில் இணைத்த திலகவதி பேட்டி முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன. அந்த சந்தேகங்களுக்கெல்லாம் அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. ஒரு பொறுப்பான பிரஜையாக, அந்த சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டும் என, உள்ளத்தில் குமைந்து கொண்டிருந்த எண்ணங்களுக்கு, விடையளிக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் இருந்ததால், அவருக்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்து, அவர் பின்னால் நின்று அரசியல் செய்ய ஆசைப்பட்டு, அவர் தலைமையை ஏற்று செயல்பட முடிவெடுத்தேன் என்று, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி கூறினார். சிறப்புப் பேட்டி தமிழக கா…
-
- 0 replies
- 277 views
-
-
ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் ஜெ., மற்றும் எம்.ஜி.ஆர்., உறவினர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஜெ., அண்ணன் மகள் தீபாவும், எம்.ஜி.ஆர். உறவினர் சுதா விஜயனும் போட்டியிடுகின்றனர். சேவல் சின்னம் கேட்கிறார் தீபா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா, சேவல் சின்னத்தை கேட்க முடிவு செய்துள்ளார். அது கிடைக்காவிட்டால், மீன், தராசு, உழைக்கும் கை ஆகிய சின்னங்களில், ஒரு சின்னத்தை பெறுவதற்கான ஆலோசனையை, தன் ஆதரவாளர்களுடன் நடத்தியுள்ளார். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், …
-
- 0 replies
- 339 views
-
-
ஆர்.கே.நகரில் ரவுடிகள் குவிப்பு கலவரம் வெடிக்கும் அபாயம் ஆர்.கே.நகர் தொகுதியில், இரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், சசிகலா மற்றும் பன்னீர் அணி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நாளன்று, அவர்களுக்குள் மோதல் உருவாகி, கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என, தமிழக அரசுக்கும், போலீசுக்கும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சகிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.இத் தொகுதி யில், முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு, 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. அதில், மறவர் சமுத…
-
- 0 replies
- 410 views
-
-
ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்தது ஏன்? 29 பக்க அறிக்கையில் தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம். நூதன வழியில் பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகர் தொகுதிில் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பண பட்டுவாடாவால்தான் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதில் கூறியுள்ளதாவது: ஆர்.கே.நகரில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது இல்லை. தொகுதியில் அதிகமான பணப்பட்டுவாடா நடந்தது வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முறைகேடுகளை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளை தடுத்து நூதன முறையில் …
-
- 8 replies
- 832 views
-
-
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்கும் டி.டி.வி.தினகரன் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் சென்னை ஆர்.கே நகர் வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் பெயரை குழு உறுப்பினர் செங்கோட்டையன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘கட்சியினர் வற்புறுத்தலினால் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். வரும் 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால் முதல்வராகும் எண்ணமில்லை. மு…
-
- 9 replies
- 2.2k views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுத்த 20 ரூபாய் டோக்கன் ‘ஒர்க் அவுட்’ ஆகிவிட்டது: தினகரன் அணி மாவட்டச் செயலாளரின் பேச்சால் பரபரப்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தோம், அது ஒர்க் அவுட் ஆகிவிட்டது என தினகரன் அணியின் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் தொகுதிகளில் உள்ள தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முசிறியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜசேகரன் பேசியதாக தினகரன் ஆதரவாளர்கள் வட்டாரம் தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 230 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? - அதிரவைத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 'அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொகுதி காலியாக இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்தில் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது, ஆர்.கே.நகர்த் தொகுதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நாளை (ஏப்ரல்-12) நடப்பதாக இருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இந்நிலையில்,…
-
- 0 replies
- 281 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! - களமிறங்கும் உள்ளூர்க்காரர் மருது கணேஷ் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் இந்த இடைத்தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னர் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலைய…
-
- 82 replies
- 8.6k views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும்' எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், டிசம்பர் இறுதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்த…
-
- 1 reply
- 446 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் தயக்கம் ஏன்? இம்மாதம் இரண்டு மாநிலங்களில், இடைத் தேர்தலை அறிவித்த, தலைமை தேர்தல் கமிஷன், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியை கண்டுகொள்ளவில்லை. ஜெ., மறைவு காரணமாக, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. ஆறு மாதங்களுக்குள், இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், மார்ச்சில் தேர்தலை அறிவித்தது. தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில் போட்டி யிட்ட தினகரன், பணத்தை வாரி இறைத்தார். ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. அதன்…
-
- 0 replies
- 301 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டி சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் சசிகலா அணி தரப்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளரை தேர்வு செ…
-
- 0 replies
- 336 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சசிகலா அணியில் கோகுல இந்திரா, ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் போட்டி? இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சசிகலா அணியில் கோகுல இந்திராவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. ஜெயலலிதா மறைவால் காலி யாக உள்ள ஆர்.கே.நகர் தொகு திக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதியுடன் முடிகிறது. இத் தேர்தலில் அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் தவிர, ஜெய லலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் தனியாக போட்…
-
- 0 replies
- 426 views
-