தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்! மதுரை மாவட்டம் யானைக்கல் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனக்கூறி மகாத்மா காந்தி சிலை மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் என கூறி மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை தேர்தல் அலுவலர்கள் மூடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேச தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் இது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். …
-
- 1 reply
- 562 views
-
-
உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாருக்கு கமல்ஹாசன் ஆதரவு இலங்கையை கண்டித்து அம்பிகை செல்வகுமார் பிரித்தானியாவில் ஆரம்பித்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் ஆதரவளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ருவிட்டரில் வெளியிட்ட பதிவில், ”இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பெப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலி…
-
- 0 replies
- 329 views
-
-
பட மூலாதாரம்,KUSHBOOSUNDAR FACEBOOK PAGE தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை டெல்லியில் இன்று பாஜக வெளியிட்டது. ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு, அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை, கோவை தெற்கில் வானதி ஸ்ரீனிவாசன், காரைக்குடி தொகுதியில் ஹெச். ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்துக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை வேட்பாளராக அறிவித்துள்ளனர். முன்னதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நிறுத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நில…
-
- 0 replies
- 369 views
-
-
எடப்பாடி பழனிச்சாமியுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் – ஸ்டாலின் தமிழக முதலமைச்சருடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தான் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் ஊடகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தென்னிந்திய சிறப்பு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு மீது குற்றச்சாட்டு தெரிவித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடன் விவாதிக்கத் தயாரா? என சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியா டுடே தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் தயவோடு ஆட்சியை தக்கவைத்த அதிமுகவின் மூலம் தமிழகத்…
-
- 7 replies
- 782 views
-
-
சர்வதேச விசாரணை – பொது வாக்கெடுப்பு’: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் விடயம்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/DMK.jpg இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரதானமாகப் போட்டியிடும் தி.மு.க. கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நல்வாழ்வு என்ற தலைப்பின் …
-
- 7 replies
- 632 views
-
-
இந்திய மாசிக்கருவாடுக்கு இலங்கையில் தடை: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு பிரபுராவ் ஆனந்தன், ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் மாசிக் கருவாடு இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்துள்ளதால், இந்தியாவில் ரூ.100 கோடி மதிப்பிலான மாசிக் கருவாடு தேக்கம் அடைந்துள்ளது. இதனால் மாசிக் கருவாடு தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல். மீன் பிடி சார்பு தொழில்களான மீன் உணவு உற்பத்தி, கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஒன்னு சொல்றேன்.. நாசமாதான் போவீங்க".. ஓசூரில் நின்று சாபம் விட்ட சீமான்.. மிரண்டு போன கட்சிகள்! By Hemavandhana | Published: Saturday, March 13, 2021, 12:05 [IST] ஓசூர்: 'ஒன்னு சொல்றேன்.. மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால், நாசமாகத்தான் போவீங்க" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் காட்டமாக முழங்கினார். பேசினார். சீமான் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.. தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.. செல்லும் இடமெல்லாம் சீமானின் பேச்சுக்கு மக்கள் கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல சீமானும், தன்னுடைய பேச்சில் அதிமுக, திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். கிருஷணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதி…
-
- 4 replies
- 599 views
- 1 follower
-
-
ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை, வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை - திமுகவின் தேர்தல் வாக்குறுதி.! சென்னை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை போர்க்குற்ற்றங்கள், இனப்படுகொலை குறித்து சுதந்திரமான- நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை இந்திய அரசு வலியுறுத்திச் செயல்பட வேண்டும் என மத்திய அரசை திமுக வலியுறுத்தும் ஈழத் த…
-
- 1 reply
- 356 views
-
-
மிஸ்டர் கழுகு: பன்னீர் பட்டியலில் பந்தாடிய எடப்பாடி! கழுகார்HASSIFKHAN K P M மிஸ்டர் கழுகு அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளைத் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கே வாங்கிக் கொடுத்திருக்கிறார் பிரீமியம் ஸ்டோரி கற்றையாக பேப்பர்களை எடுத்துக்கொண்டு என்ட்ரி கொடுத்தார் கழுகார். “எல்லாம் கூட்டணித் தொகுதிப் பங்கீட்டுப் பேப்பர்கள். உமக்கு உதவுமே என எடுத்துவந்தேன்’’ என்றபடி டேபிளில் போட்டார். வெயிலுக்கு இதமாக இளநீரைக் கொடுத்து, “அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதுமே கட்சிக்குள் அதகளம் ஆரம்பித்துவிட்டதே?” என்றோம். “யாரை நிறுத்தினாலும் எதிர்ப்பு காட்டாமல் அவருக்கு வேலை செய்ய இது என்ன ஜெயலலிதா காலத்து அ.தி.…
-
- 1 reply
- 853 views
-
-
குஷ்பூ ``நான் ஏன் வருத்தப்படணும்? பா.ம.க எங்கள் கூட்டணிக் கட்சி தானே. என் கட்சிக்காகவும், கூட்டணிக்காகவும் வேலை செய்கிறேன். என் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு எப்போதும் நான் கட்டுப்படுவேன். அவ்வளவே!" பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார் குஷ்பு, என்ற செய்தி பரபரத்தது. கண்டெய்னர்கள் வைத்து அங்கு தற்காலிக அலுவலகமே அமைத்துவிட்டார் என்றார்கள். ஆனால், கூட்டணியில் உள்ள பா.ம.க-விற்கு இந்த தொகுதியை கடைசி நேரத்தில் அ.தி.மு.க ஒதுக்கிவிட்டதால் குஷ்பு அப்செட் என்கிறார்கள். இதுகுறித்து குஷ்புவிடம் பேசினோம்... ``சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி பா.ம.க-விற்கு ஒத…
-
- 2 replies
- 485 views
-
-
100% தமிழக மக்களை நம்புகிறோம்: சீமான் நாங்கள் 100% தமிழ் மக்களை நம்புகிறோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சீமான் பேசும்போது, மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அரை நூற்றாண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு மாற்றாக தான் நாங்கள் கட்சியை தொடங்கியுள்ளோம். அவ்வாறு இருக்கையில் அந்த கட்சிகளுடன் எவ்வ்வாறு கூட்டணி வைத்து கொள்ள முடியும். அந்த தவறை செய்ய நான் தயாராக இல்லை. நாங்கள் 100% நான் தமிழ் மக்களை நம்புகிறேன். அதனால்தான் நான் தனித்து நிற்கிறேன். எந்த குழப்பமும் இல்லாமல் இத்தேர்தலில் ஒரு…
-
- 3 replies
- 985 views
-
-
பா.ம.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பா.ம.க சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 19 வேட்பாளர்களின் பெயர்கள் இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பென்னாகரத்தில் ஜி.கே. மணி, ஆத்தூரில் திலகபாமா, ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞர் பாலு, சேலம் மேற்கு தொகுதியில் அருள் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதுதவிர கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் திருக்கச்சூர் ஆறுமுகம், ஆற்காட்டில் இளவழகன், திருப்பத்தூரில் டி.கே. ராஜா, தருமபுரியில் வெங்கடேஸ்வரன், செஞ்சியில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் மயிலாடுதுறையில் பழனிசாமி, விருத்தாசலத்தில் கார்த்திகேயன், சேப்பாக்கத்தில் கஸ்ஸாலி, நெய…
-
- 0 replies
- 437 views
-
-
`ஸ்கூலுக்கு அனுப்பலைனா போலீஸுக்குப் போவேன்னு சொன்னேன்!' - வியக்க வைக்கும் பள்ளி மாணவி #SheInspires சே. பாலாஜி `ஸ்கூலுக்கு அனுப்பலைனா போலீஸுக்குப் போவேன்னு சொன்னேன்!' - வியக்க வைக்கும் பள்ளி மாணவி #SheInspires She Inspires ஒரு குக்கிராமத்துச் சிறுமியான தான், மாநில விருது வாங்கிய பயணம் பற்றி நம்மிடம் பகிர ஆரம்பித்தார் நர்மதா. சமீபத்தில் தமிழக அரசு 2020-ம் ஆண்டுக்கான `மாநில பெண் குழந்தைகள் மேம்பாடு' விருதை அறிவித்திருந்தது. வழக்கமாக இந்த விருதை சமூக செயற்பாட்டாளர்கள் பெறுவார்கள். ஆனா, இந்த முறை பெற்றிருப்பது 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி நர்மதா. குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவது, பெண் உரிமைகளுக்காகப்…
-
- 3 replies
- 777 views
-
-
நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தேர்தலில் தனித்துக் களம் காண்பது ஏன்? மக்கள் நீதி மய்யத்தால் உங்கள் வாக்குகள் சிதறுமா?- சீமான் பதில் சென்னை அனைத்துத் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துக் களம் காண்பது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி: ''நாங்கள் தனித்துக் களம் காண்பதற்கு திராவிடக் கட்சிகளுக்கு மாற்று கொண்டுவர வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல, இந்திய அளவில் ஒற்றைக் கட்சி முறைக்கும் மாற்று ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற கொள்க…
-
- 1 reply
- 593 views
-
-
சென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை கடலிலும், நீர் நிலைகளிலும் வீசிவிடுகிறோம். மழைகாலத்தில் ஆறுகள், நீரோடைகள் மூலமாக செல்லும் தண்ணீர், பிளாஸ்டிக் கழிவுகளை கடலுக்கு இழுத்து செல்கிறது. அவ்வாறு கடலுக்கு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை, மீன்கள் உணவு என கருதி சாப்பிட்டுவிடுகின்றன. இதனால் இப்போது பெரும்பாலான மீன்களின் உடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து இருப்பதை காண முடிகிறது. சென்னையில் பிடிபடும் மீன்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து சென்னையில் உள்ள தேசிய கடற்கரை மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கம் பகுதியில் விற்கப்படும் பல வகை மீன்களை அவர்கள் ஆய்வு செய்தார்கள். அதில…
-
- 2 replies
- 441 views
-
-
`தி.மு.க, அ.தி.மு.க என இருவருமே அகற்றப்பட வேண்டியவர்கள்தான். அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும்' என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கமல்ஹாசன், ` கூட்டணி தொடர்பாக ஒவ்வொரு முறையும் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனை முதல் அணியாகத்தான் பார்க்கிறேன். எங்கள் வசதிக்காக ஒரு பெயர் வைக்க வேண்டும் என்றால் `முதல் அணி' எனக் கூறுமாறு உங்களைக் கேட்…
-
- 0 replies
- 480 views
-
-
தனிநபர் வருமானத்தை எப்படி உயர்த்துவீர்கள்? சரியான விளக்கம் தந்தால் நான்கூட திமுகவில் இணைகிறேன்: சீமான் பிரச்சாரம் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும், மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்குக் கொடுக்க நிதி எங்கிருந்து வரும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் ஏப்.6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. குறைவான நாட்களே இருக்கும் நிலையில், அதிமுக, திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிக…
-
- 0 replies
- 339 views
-
-
எனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு எனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு'' சசிகலாவுடன் சந்திப்பு, கமல் கட்சியால் பாதிப்பா? பாஜகவின் வேல் யாத்திரை, பிரபாகரன் உடனான சந்திப்பு உள்ளிட்ட கேள்விகளுக்கு சீமான் சொல்லும் பதில் என்ன? நான் கட்டியமைத்த கட்சியில் சிறு கீறல் வரும் போது எனது கோபத்தை அடக்க முடிவதில்லை.
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
மீன்வளம் பெருகவும், இலங்கை கடற்படை இன்னல்களின்றி மீன்பிடியில் ஈடுபடுவதற்கும் தங்கச்சிமடம் மீனவ குடும்பங்கள் 40 மணிநேர கூட்டுப்பிரார்த்தனை.! கடலில் மீன் வளம் பெருகவும், இலங்கை கடற்படையினரின் பிரச்சனைகள் இன்றி மீன் பிடிக்கவும் தமிழ்நாடு, தங்கச்சிமடம் பகுதி மீனவ மக்கள் 40 மணி நேர தொடர் கூட்டுப்பிரார்த்தனையை நடத்தியுள்ளனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் வளம் பெருக வேண்டியும், நடுக்கடலில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டியும் தங்கச்சி மடத்தில் உள்ள சூசையப்பர்பட்டிணம் தேவாலயத்தில் மீனவர்கள் குடும்பங்களுடன் 40 மணி நேரம் தொடர் கூட்டு பிரார்த்தனை நடத்தி நிறைவாக நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கச்சி மடம் கடலி…
-
- 0 replies
- 279 views
-
-
முக ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் போட்டியிடுவேன்- சீமான் அதிரடி அறிவிப்பு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:- நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு என்று போராடியவர் நம்மாள்வார். எங்களை போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அவர் மறைந்து இருந்தாலும் எங்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளார். அவர் மூலமாக பலர் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார்கள். ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். இதனை எனது டுவிட்டரிலும் பதிவு செய்து இருந்தேன். அவரும், அவரது …
-
- 16 replies
- 1.7k views
-
-
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பேரியக்கம் கடந்த 11 ஆண்டு காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வுகளும் அபரிமிதமானது. அசாதாரணமானது. முற்போக்கு அரசியலால் தமிழக அரசியலின் போக்கையே மொத்தமாய் மாற்றி, அரசியல் திசையைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருக்கிறது. 2010-ம் ஆண்டில் கட்சி தொடங்கியபோதும் மக்களுக்கான களத்தில் நின்று மக்களுக்கானவர்கள் என நிரூபித்துவிட்டே, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக களம்கண்டது நாம் தமிழர் கட்சி. பாலியல் சிறுபான்மைய…
-
- 2 replies
- 481 views
-
-
திமுக- காங்கிரஸ் ஒப்பந்தம்: தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின் மின்னம்பலம் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இன்று (மார்ச் 7) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் , காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு கையெழுத்தானது. நேற்று இரவு ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரி ஆகியோர் ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனையின்படியே இன்று காலை 10 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டது. காலை 9.50 மணியளவில் அறிவாலயம் வந்த காங்கிரஸ் கட்சியின் குழுவினரை கனிமொழி எம்பி வரவேற்று அழைத்துச் சென்றார். திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரும் 25 இடங்களில் காங்…
-
- 0 replies
- 637 views
-
-
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆறு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், சி.பி.எம்., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சு வார்த்தை நீடித்து வந்தது. தி.மு.க. தனது தோழமைக் கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்களையே கொடுக்க முன்வந்ததால், இந்த இழுபறி நீடித்தது. இந்த நிலையில், ம.தி.மு.கவின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்குப் பிறகு ம.தி.மு.க. தி.மு.கவுடனான கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஒரு உடன்பா…
-
- 2 replies
- 385 views
-
-
பூட்டி இருக்கும் ஜெயா.சமாதியில் ரகசிய பூஜை ஏன்? ஜெயலலிதா தோழி Geetha பகீர் பேட்டி ஜெயாவின் சொத்துக்களை அனுபவிப்பது யார்? ஈபீஎஸ், ஓபிஎஸ் துணிவு இருந்தால் என்னுடன் பேசுங்கள் பார்க்கலாம்.
-
- 0 replies
- 393 views
-
-
இம்ரான் குரேஷி பிபிசிக்காக கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் வருகை, தென்னிந்தியாவில் அதிகமாகவே இருந்தது. சமீபத்தில் கேரளாவில் மீனவர்களோடு படகில் கடலுக்குச் சென்றவர் அரபிக் கடலில் குதித்து அனாயாசமாக நீச்சலடித்தார். தமிழகத்தில் மாணவி ஒருவர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு `புஷ் அப்ஸ்` எடுத்தார். மற்றொரு இளைஞரிடம் அகிடோ எனும் தற்காப்புக் கலையைக் காட்டினார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி மீனவர்களோடும், மாணவர்களோடும் உரையாடியதை, தென்னக நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள், வடக்கத்திய ஊடகங்களைப் போல அல்லாமல் நியாயமாகவே செய்திகளை வெளியிட்டன. கடந்த வாரம் கூட தென் இந்தியாவில் சமூக ஊடங்களில் ராகுல் …
-
- 3 replies
- 478 views
-