Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல்! டெல்லியில் அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி டெல்லி மாநகர அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அரச-பேருந்துகளில்-பெண்கள/

  2. தீவிரவாதிகளை எங்கள் நாட்டுக்குள் திணிப்பதை நிறுத்துங்கள்: பாக். (Pakistan) மீது சீறும் இந்திய அரசு! ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் தலைவர்கள் மிகவும் ‘பொறுப்பற்ற கருத்துகளை' சொல்லி வருவதாகவும், ஐ.நா-வுக்கு அது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் எழுதியுள்ள கடிதத்திற்கு எந்தவித மதிப்பும் இல்லை என்றும் சாடியுள்ளது இந்திய அரசு தரப்பு. குறிப்பாக ஐ.நா சபைக்கு எழுதப்பட்ட கடிதத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் ஆகியோரின் கருத்துகளும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. “இந்தியாவின் உள் விவகாரத்துக்கு உட்பட்ட ஒரு விஷயம் குறித்து பாகிஸ்தான் தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்த…

    • 0 replies
    • 251 views
  3. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு.. சற்றுநேரத்தில் கைது? ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிக்கப்பட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். ஐஎன்எக்…

  4. இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு!! அமைச்சர் தகவலால் பரபரப்பு! காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய நிலையில், பாகிஸ்தான் முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா | Edited by Musthak (with inputs from PTI) | Updated: August 27, 2019 20:30 IST ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. N…

    • 0 replies
    • 530 views
  5. இந்தியா – திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 19.16 இலட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் செல்லுகின்றனர். அங்கு அவர்கள் செலுத்தும் காணிக்கைகள் என சுமார் 9800 டன் நகைகள் திருப்பதி கோயில் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. மேலும் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 19.16 இலட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலாளர…

  6. படத்தின் காப்புரிமை MONEY SHARMA ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார் தி இந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் என்கிறார் அவர். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அளித்த பேட்டியிலிருந்து: கே. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? ப. இது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்…

  7. படத்தின் காப்புரிமை Getty Images ஆர்.எஸ்.எஸின் கொள்கையை அடிப்படையாக கொண்டதால்தான் மோதி அரசு காஷ்மீர் விவகாரத்தில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களுக்கு அவர் இன்று ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தன்னை காஷ்மீருக்கான தூதுவராக நியமித்துக் கொண்டதாகவும், இறுதிவரை காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஆற்றிய உரை க…

  8. பிரான்ஸில் ஜி7 மாநாடு நடந்துவரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து பேசியுள்ளார்; இருவரும் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், ஜி7 மாநாட்டில், இருதரப்பு சந்திப்பின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளது. "நாங்கள் காஷ்மீர் குறித்து நேற்றைய சந்திப்பில் பேசினோம். காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் மோதி எண்ணுகிறார். அவர்கள் (இந்தியா) பாகிஸ்தானுடன் இது தொடர்…

  9. 'காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்' - பாகிஸ்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித் அகமது ஹஸ்மத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 20ஆம் தேதி சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை இந்த பத…

    • 2 replies
    • 345 views
  10. இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி, குலாம் நபி அசாத், திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பிப் அனுப்பப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள், குலாம் நபி அசாத், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, திமுகவின் திருச்சி சிவா, ஷரத் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் அங்கு சென்றனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய சென்றதாக காங்கிரஸின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்குள்ள அரசியல் தலைவர்களை சந்திக்க சென்றுள்ளன…

    • 0 replies
    • 480 views
  11. முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது…

  12. ஐ. நா.வில் காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பேச தீர்மானம் ; இம்ரான் கான் ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செம்படம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொது சபை நடைபெறவிருக்கிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இக் கூட்டத்தில் பங்கேற்கும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது தொடர்பாக கலந்துரைாயட உள்ளார் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/63280

  13. 12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட உணவு ஆய்வில் இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பதிவு: ஆகஸ்ட் 23, 2019 11:03 AM உலகெங்கிலும் உள்ள 12 நாடுகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரம் ஆய்வு செய்யப்பட்டது. ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நடத்திய இந்த ஆய்வில், பகுப்பாய்வு செய்யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்களும் அடங்கும். இந்த ஆய்வில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு சீனர்களுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தது. அவற்றில் ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. …

  14. இந்தியாவில் ஊழல், குடும்ப அரசியல், கொள்ளைக்குச் செக்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு! Read in English ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர், சூசகமாக தெரிவித்தார். இந்தியா | Edited by Barath Raj | Updated: August 23, 2019 16:32 IST EMAIL PRINT COMMENTS பாரீஸில் நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கிறார் மோடி. NEW DELHI: பிரான்ஸ் நாட்டுக்கு சுற்று…

    • 0 replies
    • 566 views
  15. தீவிரமடையும் காஷ்மீர் பிரச்சனை.. இன்று களமிறங்கும் திமுக.. டெல்லியில் போராட்டம்.. 14 கட்சிகள் ஆதரவு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் கடந்த இரண்டு வாரம் முன் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை இரண்டு அவையிலும் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் இதுவரை காஷ்மீர் விவகாரத்தில் எந்த கட்சியும் துணிந்து போராட்டத்தில் இறங்கவில்லை. திமுக அதை தற்போது கையில் எடுத்துள்ளது. தொடக்கத்தில் இருந்த…

  16. முக்கியமான நேரத்தில், சுடாத துப்பாக்கி. அதிர்ச்சியடைந்த போலீசார். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (82), உடல் நலக்குறைவால் கடந்த 19ம் தேதி காலமானார். ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல்வராகும். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார்.ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதிச் சடங்கு, கடந்த 21ம் தேதி முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அப்போது, விதிமுறைப்படி, 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது. போலீசார் வானத்தை நோக்கி, துப்பாக்கியால் சுட முயன்றபோது, எந்த துப்பாக்கியும் சுடவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உயரதிகாரிகள், துப்…

  17. இந்தியாவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளில் உண்மை இல்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளதாக பிபிசியின் இஸ்லாமாபாத் செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தெரிவிக்கிறார். ஆகஸ்டு 17ஆம் தேதியன்று பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள கெல் செக்டரில் நடைபெற்ற எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் நாயிப் சுபேதார் அகமது கான் என்ற பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆ…

  18. 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 10:00 இந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான நீர் ஒப்பந்தத்தின் சரத்துக்களின் கீழ், குறிப்பிட்ட மட்டத்தை தாண்டியவுடன் மேலதிக தண்ணீர் வெளியேற்றத்தை நேற்று முன்தினமிரவு பாகிஸ்தானுக்கு அறிவித்ததாகக் கூறியுள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சுட்லெய் ஆற்றிலிருந்து எதிர்பாரதவிதமாக நீரை விடு…

    • 2 replies
    • 531 views
  19. ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா கட் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று பகல் 11 மணிக்கு அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். கிருஷ்ணகாதி பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்திலுள்…

    • 0 replies
    • 242 views
  20. ஜம்மு காஷ்மீரில் 4,000 பேர் கைது – சிறைகளில் இடமில்லை August 19, 2019 கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 4,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கைதானவர்களைக் காவலில் வைக்க காஷ்மீர் மாநிலச் சிறைகளில் இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசுத் தரப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டம் என்ற சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சட்டப்பிரிவின்படி கைது செய்யப்பட்டவர்களை இரண்டு வருடங்கள் வரை…

  21. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பியாக இருந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந்திகதியுடன் முடிவடைந்தது. மன்மோகன் சிங் ஐந்து முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். ஐந்து முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டார். தற்போது அசாமில் காங்கிரஸ்க்கு போதுமான அளவு எம்எல்ஏ-க்கள் இல்லாததால் அசாமில் இருந்து 6-வது முறையாக தேர்வாகும் வாய்ப்பு இல்லாமல் போனது. மற்ற மாநிலம் ஏதாவது ஒன்றில் இருந்து மாநிலங்களவ…

    • 0 replies
    • 373 views
  22. ''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!! বাংলায় পড়ুনहिंदी में पढ़ेंRead in English எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் நிலைமையை பொறுத்து மாறலாம் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து சதிச் செயல்களில் ஈடுபட்ட…

  23. காணாமல் போன ஏ.என்-12 பி.எல்-534 விமானத்தின் பாகங்கள் 51 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிப்பு. இமாசலபிரதேச மாநிலத்தில் காணாமல்போன இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-12 பி.எல்-534 விமானத்தின் பாகங்கள் 51 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-12 பி.எல்-534 விமானம் இமாசலபிரதேச மாநிலத்தில் இமயமலையின் ரோஹ்டங் பாஸ் என்ற சிகர பகுதியில் 1968ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி காணாமல் போனது. குறித்த விமானத்தில் பயணம் செய்த வீரர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்றுவந்தது. கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி இதற்காகவே தாகா பனிச்சிகரத்தில் டோக்ரா சாரணர் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த சாரணர் குழுவும், இந்திய விமானப்படையும் இணைந்து கடந்த 6ஆ…

  24. பங்களாதேஷில் பாரிய தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசம் – 50 ஆயிரம் மக்கள் பாதிப்பு! பங்களாதேஷில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள சாலண்டிகா குடிசைப் பகுதி ஒன்றிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கினால் வீடுகளின் கூரைகள் அமைக்கப்பட்டமை காரணமாக தீயினை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த பாரிய தீ விபத்து காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வீடுகளை இழந்தவர்கள் தற்போது வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

  25. விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பங்கேற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே 14-ம் தேதி அந்த அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்திற்கு ஆதரவை பெருக்க முயற்சிப்பதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடி…

    • 3 replies
    • 792 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.