அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும் பல்வேறு ஒப்பந்தங்களில் சௌதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது. சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தனது நாட்டில் நிலவும் நிலையற்ற பொருளாதாரத்தை சரிகட்டுவதற்கு சர்வதேச உதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கியிருந்த நிலையில், இந்த முதலீடுகளின் மூலம் சௌதி அரேபியா கைக்க…
-
- 0 replies
- 329 views
-
-
இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்களை கொள்வனவு செய்ய இருப்பதாக பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய் குமார் தெரிவித்திருக்கிறார். கொல்கத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அஜய் குமார் மேலும் கூறியுள்ளதாவது, “விமானப்படை திறனை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது. அந்தவகையில் 200 போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதேவேளை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தேஜாஸ் மார்க்-1 என்ற 83 இலகுரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறு…
-
- 1 reply
- 477 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption பினராயி விஜயன் சீனா சென்று திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது கேரள அரசு. முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையின் பேரில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப…
-
- 0 replies
- 473 views
-
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கடுமையாக சாடிப் பேசிய பிரதமர் மோடி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (01) தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையைப் பயன்படுத்தி பயங்கரவாதம் குறித்து ஒரு கூர்மையான செய்தியை வழங்கினார். அதில் பயங்கரவாத அமைப்புகளுக்கு “சில நாடுகள்” வழங்கும் வெளிப்படையான ஆதரவை இனியும் பொறுத்துக்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் 25 ஆவது SCO உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இதன்போது தனது உரையினை உறுதியாக வெளிப்படுத்திய பிரதமர் மோடி, “ப…
-
- 0 replies
- 73 views
-
-
ஊரடங்கால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றுநீரின் தரம் மேம்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 12:09 PM லக்னோ வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, மார்ச் 25 ந்தேதி முதல் மத்திய, மாநில அரசுகள், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ள நிலையில், மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.இதனால், பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படு கின்றன.இதையடுத்து, காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது.வாகன போக்குவரத்து இல்லாமல், டில்லி உள்ளிட்ட, 90 நகரங்களில் காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் கங்கை, யமுனை ஆறுகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் மூட…
-
- 3 replies
- 701 views
-
-
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனா தொற்று அதிகரிப்பு! மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனாவால் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மும்பையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக தாராவி காணப்படுகின்ற நிலையில் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 733ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமன்றி நேற்று அங்கு ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் தாராவியில் மரணித்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. http://athavannews.com/மும்பையில்-தமிழர்கள்-அதி/
-
- 0 replies
- 418 views
-
-
"ஏர் இந்தியா" நிறுவனத்தின்... வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன. ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் இணையத்தின் வாயிலாக திருடப்பட்டுள்ளமையினால் சுமார் 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை அதிகளவு பயணம் மேற்கொண்டவர்களின் பெயர், பிறந்த திகதி, கிரடிட் அட்டைகளின் விபரங்கள், தொலைபேசி இலக்கம் மற்றும் இரகசிய இலக்கங்கள் ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு ஏர் இந்தியா விமான நிறுவனம் மாத்திரமன்றி சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ், மலேசியா ஏயார்லைன்ஸ், கேத்தே பசிபிக், லூஃப்தன்ஸா, ஃபின் ஆகிய விமான நிறுவனங்களுடைய வாடிக்கையாளர்களின் விபரங்களும் திருடப்பட்டுள்ளம…
-
- 0 replies
- 226 views
-
-
சட்டவிரோதமாக... இந்தியாவில் தங்கியிருந்த, 30இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது! கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனையடுத்து பெங்களுர் சென்ற நிலையில், அங்கிருந்து கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் 6 முதல் 7 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavanne…
-
- 0 replies
- 339 views
-
-
கொவிட் -19 க்கு இடையில் காஷ்மீரில் வருடாந்த 'கீர் பவானி மேளா' அனுஸ்டிப்பு மத்திய காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தின் துல்முல்லா பகுதியில் ஆண்டுதோறும் இடம்பெறம் 'கீர் பவானி மேளா' இடம்பெற்றது. கொவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் பெருந்தொகை மக்கள் கூட்டங்கள் இன்றி இந்த அனுஸ்டிப்புகள் இடம்பெற்றன. இருப்பினும், சிலர் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். துல்லமுல்லா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரக்னியா தேவியின் கோவிலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள் சுகாதார முறைகளை பின்பற்றி திரண்டனர். தெய்வத்தின் புனித சடங்குகள் மற்றும் ஆரத்தி ஆகியவை கோவிலில் குருக்கள் பாரம்பரிய முறையில் நடத்தப்பட்டன. இந்த மத சடங்கினை சமூக ஊடகங்கள் மூலம் கோவிலுக்கு வரமுடியாமல…
-
- 0 replies
- 830 views
-
-
ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி தேவி புகைபடம் வேண்டும்… அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் ரூபாய்களில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம் அச்சிடப்பட்டு இருப்பதாகவும், அதுபோல் இந்திய ரூபாயில் மாற்றம் வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நாளை அல்லது நாளை மறுநாள் கடிதம் எழுத உள்ளதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்தப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் சேர்த்த…
-
- 2 replies
- 529 views
- 1 follower
-
-
அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவிலின் கட்டுமானப்பணிகள் 2024 ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும்: அமித்ஷா தகவல்! அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள சப்ரூம் என்ற இடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் 5ஆம் திகதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, ராமர் கோயில் கட்டுவதற…
-
- 3 replies
- 251 views
-
-
கொவிட்-19 ஐ ஒத்த வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பரவுகிறது! கொவிட்-19 வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் தொடர் இருமல் ஆகியவை இந்த வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக இந்திய சுகாதாரத் துறை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் குழுவைச் சேர்ந்த H3N2 உப பிறழ்வு வகை என அடையாளம் காணப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/243387
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது குறித்து கேட்டபோது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கணவர் மேற்கோள் காட்டிப் பேசியதால் சென்னையைச் சேர்ந்த பெண் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அது உண்மையில்லை என்கிறது காவல்துறை. சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் பால் என்பவர் அருகில் உள்ள பூங்கா ஒன்றில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு புஷ்பலதா என்ற பெண்ணுடன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணமாகி, குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்த நிலையில், புஷ்பலதா கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தன்னுடன் பணியாற்றும் பெண்ணுடன் ஜான் பாலுக்கு தொடர்பு இருந்ததாகவும் அந்தப் பெண்ணைக் கடந்த வாரம் வீட்…
-
- 0 replies
- 554 views
-
-
பெங்களூரில் 20 மாணவர்கள் முன்பு பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை. பெங்களூருவில் 20 மாணவர்கள் முன்பு பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தாசரஹள்ளியில் ஹவனூர் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் முதல்வர் ரங்கநாத்(60). தனக்கு சொந்தமான பள்ளியில் முதல்வராக உள்ளார்.ஞாயிற்றுக்கிழமை ரங்கநாத் ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த ஸ்பெஷல் கிளாஸில் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் பள்ளிக்குள் புகுந்தது. அந்த கும்பல் மாணவர்கள் கண் முன்பு ரங்கநாத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. முதல்வர் கொலை செய்யப்பட்டதை பார்த்த மாணவர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். கொலையாளிகள் …
-
- 0 replies
- 522 views
-
-
சிபிஐ நுழைய கூடாது: அதிரடியாக உத்தரவு போட்ட இரண்டு மாநிலங்கள். சோதனைகள் மற்றும் வழக்கு விசாரணை குறித்து சிபிஐ அதிகாரிகள் தங்களுடைய மாநிலத்தில் நுழைய வேண்டுமெனில் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என இரண்டு மாநிலங்கள் உத்தரவு போட்டுள்ளதால் தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனை மற்றும் வழக்கு விசாரணைக்காக தங்கள் மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய தடை விதித்து சமீபத்தில் ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதேபோன்ற ஒரு உத்தரவை மேற்குவங்க அரசும் பிறப்பித்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் நுழைவதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த, மாநில அரசின் தடையில்லா சான்றை திரும்ப பெற்றுக்கொள்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று …
-
- 0 replies
- 312 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை - மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு திட்டம்?" 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "'வாயு சக்தி' என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்த…
-
- 0 replies
- 554 views
-
-
பங்களாதேஷ் விமானக் கடத்தல் முறியடிப்பு: சந்தேக நபர் சுட்டுக்கொலை! (2ஆம் இணைப்பு) பங்களாதேஷில் போயிங் 737 எனும் பயணிகள் விமானத்தினைக் கடத்த முயன்ற ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். குறித்த விமானத்தின் விமானிகள் மற்றும் அதில் பயணித்த 142 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சிட்டகாங் விமான நிலைய அதிகாரி சாஹில் மிராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு மூலம் விமானத்தை வெடிக்க வைக்கப்போவதாகவும் தன்னிடம் பங்களாதேஷ் பிரதமர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறித்த தாக்குதல்தாரி தெரிவித்திருந்ததாகவும் இந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 8 நிமிடங்களுக்கு மேலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் குறித்த தாக்குதல்தாரி சுட…
-
- 1 reply
- 360 views
-
-
30 இடங்களுக்கு பெயர் மாற்றம் : அரசு அனுமதி. திபெத் பீட பூமியின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் பரிந்துரைக்கு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நடவடிக்கையானது சீனா அருணாசலப்பிரதேசத்தின் பல பகுதிகள் தனத கட்டுப்பாடடின் கீழ் இருப்பதாக கூறி பெயர் வைத்தமைக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. திபெத் பகுதியைப் பற்றி நன்கு வரலாற்று ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில்தான் இந்த மறுபெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும், இதற்கு டெல்லி அனுமதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் தொடர்பாக இந்திய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கேற்ப இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கான வரைபடங்களில் மா…
-
- 0 replies
- 158 views
-
-
ஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:31 ஹைதாராபத் கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரைச் சுட்டுக் கொன்ற பொலிஸாருக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள், பூத்தூவி வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன. பெண் மருத்துவர் மிருகத்தனமாகக் கொல்லப்பட்ட விதம், பெண் பிள்ளைகளைப் பெற்றோரையும் வேலைக்குச் செல்லும் பெண்களையும் பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியது. இந்திய நாடாளுமன்றத்தில், பெண் எம்.பிக்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பி, “பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். நாட்டின் தலைநகரான டெல்லியில் நிருபையா வன்புணர்வு, …
-
- 0 replies
- 238 views
-
-
வங்கதேசத்தின், முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு, பண மோசடி வழக்கில், கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர், சுரேந்திர குமார் சின்ஹா, 68. ஹிந்து மதத்தைச் சேர்ந்த, முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹா, தற்போது, அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் மீது, வங்கதேசத்தில் பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 3.4 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக, சின்ஹா உள்ளிட்ட, 11 பேர் மீது, ஊழல் தடுப்பு கமிஷன், வங்கதேச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, 10 பேர், விவசாய வங்கிகளின் முன்னாள் அதிகாரிகள். இவர்கள், வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்…
-
- 0 replies
- 411 views
-
-
Published By: DIGITAL DESK 3 25 JUL, 2025 | 01:36 PM இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலைபாடசாலை ஒன்றில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாடசாலை வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 மாணவ, மாணவியர் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடச…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு! ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தேகூர் அருகே இன்று (24) அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி சுமார் 20 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து இன்று அதிகாலை 03.30 மணியளவில் எதிர் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டு தீப்பிடித்ததாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தினை அடுத்து பேருந்தின் முன்பக்கத்திலிருந்து உடனடியாக தீப்பிழம்புகள் எழுந்து, வேகமாகப் பரவி, எரிபொருள் தொட்டி வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்ற…
-
- 2 replies
- 164 views
- 1 follower
-
-
ஒலியை விட வேகமாகச் செல்லும் இந்தியாவின் ஏவுகணை பரிசோதனை வெற்றி! ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து அரபிக்கடலில் ஏவப்பட்ட பிரமோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணை (BrahMos Missle) சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation) ருவிற்றரில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மற்றும் பிரமோஸ் ஏவுகணைத் திட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ரஷ்யாவுடன்…
-
- 3 replies
- 953 views
-
-
http://athavannews.com/wp-content/uploads/2019/07/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg இந்தியா யாருக்கும் சளைத்ததல்ல – ராஜ்நாத் சிங் இந்தியா யாருக்கும் சளைத்ததல்ல என்றும் தேஜஸ் மார்க்-2 இலகு ரக போர் விமானத்தை உருவாக்கப் போவதால் புதிய வரலாற்றை எச்.ஏ.எல். நிறுவனம் படைக்கப் போகிறது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பெங்ளூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தேஜஸ் மார்க்-2 இலகு ரக போர் விமானத்தை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது சுயசார்பு இந்தியாவை அடைவ…
-
- 0 replies
- 338 views
-
-
வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த விடுதலைப்புலி உறுப்பினர்களே இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமென் தெரிவித்துள்ளார். இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜி - 8 மாநாடு தொடர்பில் இன்று நடைபெற்ற இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, போர் தொடர்பான சுய விசாரணைகளை இலங்கை மேற்கொண்டுள்ளது.இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக பங்களாதேஷ் வாக்களித்தமைக்குப் பல நியாயப்படுத்தல்கள் உள்ளன. அயல் நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்காமல் இருக்கும் வெளியுறவுக் கொள்கையையே பங்களாதே…
-
- 1 reply
- 314 views
-