Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – உடன் அமுலுக்கு வரும் சட்டம். ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது எனவும் குறிப்பிடடுள்ளார். அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டி…

    • 7 replies
    • 567 views
  2. பாஜக பிரமுகர் மீது புகார்: "சிறுநீரை வாயால் சுத்தம் செய்ய வைத்து பணிப்பெண்ணை சித்ரவதை செய்தார்" 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/@AMBEDKARITEIND (இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (01/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.) வீட்டுப் பணிப்பெண் ஒருவரை எட்டு ஆண்டுகளாக சித்ரவதை செய்துவந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக பிரமுகரை அந்தக் கட்சி இடைநீக்கம் செய்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் சீமா பத்ரா தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செ…

  3. குவைத் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ₹20.5 லட்சம் மதிப்புள்ள 582 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குவைத்தில் இருந்து குவைத் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நஷீத் அகமது ஷேக் (24) சுற்றுலா பயணியாக ரியாத்துக்கு சென்று விட்டு குவைத் வழியாக சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அவரது உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் தனி அறைக்கு அழைத்துச்சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். எதுவும் இல்லாததால் அவ…

    • 0 replies
    • 566 views
  4. பதட்டமான சூழலில் இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு. சபரிமலை கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.தீவிரமாக நடந்து வரும் அந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்திருக்கும். 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெர…

  5. பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கையில் கண்டேன் – மோடி பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கையில் கண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு மோடி விஜயம் செய்ததுடன், ஈஸ்டர் தினத்தன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான அந்தோனியார் தேவாலயத்தையும் பார்வையிட்டிருந்தார். இந்நிலையில், கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், அங்கு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “பயங்கரவாத த…

  6. காந்தியின் உருவப்படத்தில் துரோகி என எழுதிய நபர்கள் அஸ்தியை திருடிச்சென்றனர்- மத்தியபிரதேசத்தில் சம்பவம் காந்தியின் 150 வது பிறந்தநாளை உலகம்கொண்டாடிக்கொண்டிருந்தவேளை அவரது அஸ்தியை இனந்தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மத்திய பிரதேசத்தின் ரேவாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த பகுதியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் 1948 முதல் வைக்கப்பட்டிருந்த அஸ்தியை இனந்தெரியாதவர்கள் திருடிச்சென்றுள்ளனர். மகாத்மாகாந்தியின் உருவப்படத்தில் பச்சை நிறமையினால் துரோகியெனவும் அவர்கள் எழுதிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் தேசத்தின் ஐக்கியத்திற்கு ஆபத்தானது அமைதியை குலைக்ககூடியது என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாப…

    • 0 replies
    • 565 views
  7. மருத்துவக் கருவிகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்தது மத்திய அரசு! மருத்துவ பரிசோதனை மையங்களில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான கருவிகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவிவரும் நிலையில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த தடை உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “பரிசோதனை மையங்களில் உபயோகப்படுத்தும் அனைத்து விதமான நோய் கண்டறியும் சோதனைக் கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களின் ஏற்றுமதிக்கு முற்றிலு…

  8. ரஃபேல் போர் விமானங்களை, ஆயுத பூஜையுடன்... பிரான்சிடம் இருந்து இன்று பெறுகிறார் ராஜ்நாத்சிங்! பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று பெற்றுக் கொள்கிறார். ரஃபேல் போர் விமானத்துக்கு 'ஆயுத பூஜை' வழிபாடு நடத்தப்பட உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.பிரான்ஸின் பார்டியாக்ஸ் நகருக்கு அருகே உள்ள மெரிக்னாக் விமான படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த …

  9. நீதேஷ் ராவத் பிபிசி மராத்தி கோயிலில் திருடியதாக ஐந்து வயது தலித் சிறுவன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில், தலித் சிறுவனின் ஆடைகளை நீக்கி சூடான கல்லில் உட்கார வைத்து தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த தண்டனையின் காரணமாக அவரது பின்பகுதியில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் பெயர் ஆர்யன் கட்சே. அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரில், போலீஸார் அமோல் தோர் எனும் ந…

  10. ''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!! বাংলায় পড়ুনहिंदी में पढ़ेंRead in English எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் நிலைமையை பொறுத்து மாறலாம் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து சதிச் செயல்களில் ஈடுபட்ட…

  11. ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் -வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் October 20, 2018 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருந்தது.மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டுமே முன்வந்தமையினால் 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வாக்கு…

  12. எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது ! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற எயார் இந்தியா விமான விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது…

  13. திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ். ஆந்திர மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இருப்பினும், அதற்கான வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என்பதற்கான ஆய்வக ஆதாரத்தை தெலுங்கு தேசம் கட்சி நேற்று மாலை வெளியிட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின…

  14. இந்தியாவில் ஒரே நாளில் 103,558 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,558 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 478 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை 12,589,067 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 165,101 ஆகவும் உயர்த்தியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கள்கிழமை காலை தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்யை தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 52,847 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,82,136 ஆக உள்ளதுடன், சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் 7,41,830 ஆக காணப்படு…

  15. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 48 கி.மீ நீளமுள்ள ராமர் பாலத்தின் தோற்றம் குறித்த ஆய்வின‍ை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. 48 கிலோமீட்டர் நீளம் கொண்ட சுண்ணாம்பு கற்களால் ஆன இந்த பாலம், பல மர்மங்களை தன்னுள் உள்ளடக்கியது. ராமர் பாலம் எப்படி உருவானது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன இலங்கை அரசன் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்கச் சென்றபோது கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டது என்றும் ராமருக்காக வானர படையினர் அந்த பாலத்தை கட்டியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ராமர் பாலத்தை இந்துக்கள் பு…

  16. சபரிமலைக்கு வந்த மூன்றாவது பெண்ணையும் திருப்பி அனுப்பியது போலீஸ் #GroundReport பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்ல முயன்ற தெலுங்கு தொலைக்காட்சி பத்திரிகையாளர் கவிதா, செயற்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமா ஆகியோர் சன்னிதானத்துக்கு அருகே சென்று, பதற்ற நிலை காரணமாக திரும்பி வந்ததை அடுத்து, கோயிலுக்குச் செல்ல பாதுகாப்பு கோரி வந்த மேரி சுவீட்டி என்ற மூன்றாவது பெண்ணையும் போலீசார் பாதுகாப்போடு வீ…

  17. Published By: RAJEEBAN 30 APR, 2023 | 12:24 PM பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கியாஸ்புரா பகுதியில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். இதில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மயக்கம் அடைந்த நபர்களின் குடும்பத்தினர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர். அதில், என் குடும்பத்தில் மட்டும் 5 பேருக்கு சுயநினைவு இல்லை. எல்லோரும் கூட்டம் கூட்டமாக மூக்கை பிடித்துக்கொண்டு ஓடினோம்.எங்கள் ஊர் மக்க…

  18. பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV 6 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 13 ஜனவரி 2024 மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்கள் மீது அதிக்கம் செலுத்த பிறருக்கு உரிமத்தை தந்துவிடாது என்று அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முய்சு தாயகம் திரும்பியுள்ளார். தலைநகர் மாலேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்திய பெருங்கடலில் மாலத்தீவு மிகச்சிறிய நாடாக இருந்தாலும் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு பிரத்யேக பொருளாதார மண்டலத்தை கொண்டுள்ளோம். இந்திய பெருங்கடலில் இத்தகைய சிறப்பு பெற்ற நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்தியப் பெருங்கடல் குறிப்பிட்ட எந்தவொரு நாட்டிற்கும் சொந்தம் கிடையா…

  19. மன்மோகன் சிங்... திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி! இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை மன்மோகன் சிங் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244770

  20. விவசாயிகளை பயங்கரவாதிகளாக பதிவிட்ட நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு.! விவசாயிகளை பயங்கரவாதிகளாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடிகை கங்களா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட…

  21. பங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தல் இடம்பெறுகின்றது. December 30, 2018 பங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது. இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதேவேளை பிரதமர் ஷேக் ஹசினா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்காள தேசிய கட்சித் தலைவர்களின் உதவியுடன் பொதுத்தேர்தலை சீர்குலைக்க முயல்கிறது என குற்றம் சுமத்தியுள்ளதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை வங்காள தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்…

  22. இந்தியாவுக்கு எதிராக, எப்.16 போர் விமானங்களை பயன்படுத்த அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அனுமதி இந்தியாவுக்கு எதிராக எப்.16 ரக போர் விமானங்களை பயன்படுத்த அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த விமானங்கள் முன்னர் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் தொடுக்கவே பயன்படுத்தப்பட்டு வந்தன. அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோது, விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்திய துணைப் படையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 50 பேர் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி வழங்கும் வகையில் பாகிஸ்தான் பலாகோட் பகுதிக்குள் நுழைந்து இந்திய போர் விமானங…

  23. 3 மணி நேரங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவத்தினர் உயிரிழந்தார்கள். இதில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த ராணுவத்தினர் மீது திடீர் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. பீரங்கி பிரிவைச் சேர்ந்த கமலேஷ், சாகர் பன்னே, யோகேஷ்குமார், சந்தோஷ் நகரல் ஆகியோர் இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த நான்கு வீரர்களில் கமலேஷ் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தையும், யோகேஷ் குமார் தேனி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். 2…

  24. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது முதல், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் காஷ்மீர் சிறப்புச் சட்டப்பிரிவு 370 பற்றி நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, ``சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A-வை ஆயுதமாகப் பயன்படுத்தி காஷ்மீரில் உள்ள மக்களின் மனதில் எதிர்ப்பை விதைக்கப் பாகிஸ்தான் முயற்சி செய்யும். சட்டப்பிரிவு நீக்கத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஆனால் பிரிவினைவாதம், பயங்கரவாதம், ஊழல் போன்றவை முற்றிலும் தடுக்கப்படும்” எனப் பேசியிருந்தார். …

    • 0 replies
    • 556 views
  25. தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது குறித்து கேட்டபோது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கணவர் மேற்கோள் காட்டிப் பேசியதால் சென்னையைச் சேர்ந்த பெண் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அது உண்மையில்லை என்கிறது காவல்துறை. சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் பால் என்பவர் அருகில் உள்ள பூங்கா ஒன்றில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு புஷ்பலதா என்ற பெண்ணுடன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணமாகி, குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்த நிலையில், புஷ்பலதா கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தன்னுடன் பணியாற்றும் பெண்ணுடன் ஜான் பாலுக்கு தொடர்பு இருந்ததாகவும் அந்தப் பெண்ணைக் கடந்த வாரம் வீட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.