அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3314 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images முத்தலாக் மசோதா குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடந்து முடிந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேறியது. இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக முறைப்படி அறிவித்தார். இதையடுத்து அவைத் தலைவராக உள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு எதிர்தக் கட்சித் தலைவர் குலாம் நபி ஆச…
-
- 0 replies
- 477 views
-
-
1.1 டிகிரி குளிர் வாட்டிய டெல்லி புத்தாண்டு நாள்: 15 ஆண்டுகளில் இல்லாத நடுக்கம் பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, பனி-தூசி மூட்டத்தில் டெல்லி இந்தியா கேட் பகுதி. 2021 புத்தாண்டு தினம் இந்தியத் தலைநகர் டெல்லிக்கு நடுங்கும் குளிர் நாளாக இருந்தது. அதிகாலை குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சென்றது. சஃப்தர்ஜங் தட்ப வெட்ப கண்காணிப்பகத்தில் இந்த வெப்ப நிலை பதிவானது. காலை 6 மணி அளவில் பனி மூட்டம் முழுவதுமாக சாலைகளில் எதிரில் வருவோரைக் கூட பார்க்க முடியாத அளவில் இருந்தது. அந்த நேரத்தில் காணும் திறன் பூஜ்யமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையத்தின…
-
- 3 replies
- 477 views
-
-
காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் சீனாவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்று எச்சரித்துள்ள மத்திய அரசு, காஷ்மீரின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. புதன் கிழமை நள்ளிரவு முதற்கொண்டு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது 2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாறியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்த கருத்துதான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 'இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற…
-
- 0 replies
- 477 views
-
-
பாகிஸ்தான் ராணுவ தலைவரை நவ்ஜோத் சிங் சித்து அணைத்துக்கொண்டது ஏன்? குருப்ரீத் சிங் சாவ்லாபிபிசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீக்கியர்களின் புனித தலமான கர்த்தர்புர் சாஹிப், பாகிஸ்தானுக்குள் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. படத்தின் காப்புரிமைNARINDER NANU/GETTY IMAGES Image captionநவ்ஜோத் சிங் சித்…
-
- 0 replies
- 477 views
-
-
இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி - சீனாவுக்கு கடற்படை தளபதி மறைமுக எச்சரிக்கை புதுடெல்லி, இந்திய, பாகிஸ்தான்போரின்போது, 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி, பாகிஸ்தானின் 4 போர்க்கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்தது. இதில், நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படையின் இந்த சாதனையை, பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.…
-
- 3 replies
- 476 views
-
-
ஆனந்த் கிரி: யார் இவர்? மறைந்த துறவி நரேந்திர கிரியுடன் இவரது உறவு எப்படி இருந்தது? அனந்த் பிரகாஷ் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK/ANANDGIRIYOGA படக்குறிப்பு, காவலர்கள் படை சூழ வரும் ஆனந்த் கிரி அகில பாரத அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரியின் தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரது சீடர் ஆனந்த் கிரி மீது உத்தரபிரதேச போலீசார் செவ்வாய்க்கிழமை அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். அதில், கடந்த சில காலமாக நரேந்திர கிரி, அவரது சீடர் ஆனந்த் கிரியால் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்ததாகவும்…
-
- 1 reply
- 476 views
- 1 follower
-
-
`நாடே ஆக்ஸிஜனுக்காக தத்தளிக்கும்போது, உங்களிடம் எப்படி கையிருப்பில் உள்ளது?' - பதில் கூறும் கேரளா சிந்து ஆர் Oxygen cylinder ( AP Photo / Rajesh Kumar Singh ) `தேர்ந்தெடுத்த 8 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தியுள்ளோம். இன்னும் இரண்டு ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன' என்கிறார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா. கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இ…
-
- 2 replies
- 476 views
-
-
கண் பார்வையில்லைன்னா.. எதுக்காக போராட்டத்துக்கு வந்தே? ஜேஎன்யூ மாணவன் மீது போலீஸ் தடியடி பார்வையற்றவர்னா ஏன் போராட்டத்துக்கு வந்தே என ஜேஎன்யூ போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவனிடம் கேட்டு விடாமல் லத்தியால் தாக்கிய போலீஸாருக்கு கண்டனங்கள் குவிகின்றன. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணங்கள் 300 சதவீதம் உயர்த்தப்பட்டன. மேலும் போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவ அமைப்புகளின் தலைவர்களுக்கான அபராதத் தொகையும் மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டது. இவற்றை திரும்ப பெற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சப்தர்ஜங் சமாதி பகுதியில் கூடியிருந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல ம…
-
- 1 reply
- 476 views
-
-
5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம் February 18, 2020 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக அமெரிக்காவில் உள்ள உலக மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வருகின்ற அதேவேளை பல்வேறு சிறு-குறு தொழில்களில் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கடந்த 3 ஆண்டுகளில் இந்த சரிவு 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் தற்போது இந்திய பொருளாதாரம…
-
- 0 replies
- 475 views
-
-
கேரளாவில் எலி காய்ச்சல்- 12 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினமலர்: கேரளாவில் எலி காய்ச்சல்- 12 பேர் பலி படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் …
-
- 0 replies
- 474 views
-
-
வெட்டுக்கிளி படையெடுப்பு சொல்லும் செய்தி என்ன? கரோனா ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நாட்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருகிறது. வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து, பத்தில் ஒரு பங்கு உலக மக்கள்தொகையைப் பட்டினிக்குத் தள்ளும் அளவுக்குத் திறன்பெற்ற வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? இப்போது வடமாநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள், நம் பகுதிகளில் சாதாரணமாகக் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள்தான். இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்க்கைமுறை மிகவும் வ…
-
- 0 replies
- 474 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption பினராயி விஜயன் சீனா சென்று திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது கேரள அரசு. முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையின் பேரில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப…
-
- 0 replies
- 474 views
-
-
இந்துக்களுக்கென ஒரு தனியான நாடு இல்லை- நிதின் கட்கரி உலகில் எங்குமே இந்துக்களுக்கு என்று ஒரு தனியான நாடு இல்லாத நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தம் அவசியமானதாக உள்ளதென மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் நேபாளம் இந்து நாடாக இருந்தது. தற்போது அதுவும் மதசார்பற்ற நாடாகிவிட்டது. உலகில் எங்குமே இந்து தேசம் என்று ஒன்று இல்லை என நிதின் கட்கரி சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்துக்களும் சீக்கியர்களும் எங்கேதான் போவார்கள் எனவும் எதிர்க்கட்சிகள் மக்களை தவறான பிரசாரம் மூலம் திசை திருப்புவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். http://athavannews.com/இ…
-
- 2 replies
- 473 views
-
-
வெளிநாடுகளில் மருத்துவம் முடித்து, இந்திய தேர்வில் தோல்வியடைந்த 73 பேர் மீது சிபிஐ வழக்கு - முழு விவரம் பட மூலாதாரம்,CBI 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்து இந்தியாவில் மருத்துவர் ஆவதற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ள மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 62 பேர் மற்றும் முறைப்படி இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத 12 பேர் உள்பட மொத்தம் 73 பேருக்கு எதிராக இந்திய புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று இந்தியா முழுவதும் சிபிஐ அதிகாரிகள் 91 இடங்களில் சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் மதுரை, திருந…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
தமிழுக்கு இந்திய நாடாளுமன்றில் பா.ஜ.க அவமரியாதை! மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரில் தி.மு.க.வை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். இதன்போது ‘தமிழ் வாழ்க’ எனக்கூறி பதவியேற்றமைக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷமிட்டமையினால், அவைவையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. 17ஆவது மக்களவையின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பதில் சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். அவர்கள் பதவியேற்ற பின்னர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர். இந்…
-
- 0 replies
- 472 views
-
-
பட மூலாதாரம்,REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் இந்தியாவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்துக் கூறியுள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. அவரது கருத்துகள் ‘தேவையற்றவை’ எனவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் எதார்த்தத்தை அவை பிரதிபலிக்கவில்லை எனவும் இந்தியா கூறியுள்ளது. இந்தியாவின் தேர்தல் அனுபவத்திலிருந்து பல நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும், அதைப் பின்பற்ற விரும்புவதாகவும் இந்திய அரசு அதுகுறித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மன்றத்தின் 55வது கூட்டத்தொடரின்போது இந்தியாவின் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த அமர்வில்…
-
- 0 replies
- 472 views
- 1 follower
-
-
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் காணொளி மூலமான உரையொன்றின்போதே பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார். அந்த காணொளி உரையில் நரேந்திர மோடி மேலும் கூறுகையில், ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஊரடங்கால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றும…
-
- 8 replies
- 472 views
-
-
இந்தியா போருக்கான விதைகளை தூவுவதாக பாகிஸ்தான் இராணுவச் செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் குற்றம்சாட்டினார். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளமை குறித்து பாகிஸ்தான் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்ற நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், “காஷ்மீரின் தற்போதைய நிலை இந்தப் பிராந்தியத்துக்கு மிகவும் ஆபத்தாக மாறியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் போருக்கான விதைகளை தூவும் வகையில் அமைந்துள்ளன. எங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்…
-
- 0 replies
- 472 views
-
-
தமிழகம், கேரளாவில் வவ்வால்களில் கொரோனா வைரஸ்; ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கை உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 377 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வவ்வால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. …
-
- 4 replies
- 472 views
-
-
படத்தின் காப்புரிமை Reuters புனேவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஜோடி பெண்களை மசூதிகளுக்குள் பிரார்த்தனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தனர். இதையடுத்து இன்று மத்திய அரசு, தேசிய பெண்கள் கமிஷன், மத்திய வக்பு வாரியம், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். நீதிபதி எஸ்.ஏ போப்டே மசூதிகளில் பிரார்த்தனை செய்வதற்கு இருக்கும் தடையை நீக்கக்கோரும் புனேவைச் சேர்ந்த முஸ்லிம் ஜோடியின் மனுவை ஏற்றுக்கொண்டார். …
-
- 0 replies
- 472 views
-
-
இந்திரா காந்தியின் பிறந்த தினம்: சோனியா- ராகுல் நினைவிடத்தில் மரியாதை முன்னாள் பிரதமரும் விடுதலைக்காக போராடிய ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தியின் 101 ஆவது பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) மரியாதை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி சக்திஸ்தால் பகுதியிலுள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காண…
-
- 0 replies
- 471 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் அருணாச்சல பிரதேசத்தின் மீது நீண்டகாலமாக உரிமைக்கோரி வரும் சீனா, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சூட்டி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பை தற்போது இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி இன்று கூறுகையில், ”அருணாச்சல பிரதேச மாநிலம் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த மற்றும் இந்தியாவிடமிருந்து பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இமயமலையை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் இந்தியாவிற்கும், சீனாவ…
-
- 4 replies
- 471 views
- 1 follower
-
-
மூத்த மருத்துவர்களால் நோயாளிகளைத் தொட முடியாது. ஏனென்றால் அவர்கள் 50 வயதைத் தாண்டியிருப்பார்கள். கொரோனா தொற்று நோய் என்பதால், 50 வயதுக்கு அதிகமானோரைத் தாக்கினால் இறப்புக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள இறுதியாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களை களமிறக்க வேண்டும் என்றும், இதற்காக அவர்களது தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாராயணா ஹெல்த்தின் நிறுவனரும், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான தேவி பிரசாத் ஷெட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத…
-
- 0 replies
- 471 views
-
-
ஆந்திர பெற்றோர்கள் தங்களது மகள்களை கொலை செய்தார்களா? பின்னணி தகவல்கள் ஆந்திராவில் பெற்றோர்கள் தங்களது மகளை கொன்றதாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்தில் வசியம் நடந்ததா? எப்படி கொலை நடந்தது? கொரோனா பரிசோதனை எடுக்க மறுக்கும் தாய் சொல்வது என்ன?
-
- 1 reply
- 470 views
-
-
திகார் சிறைக்கு, தயவு செய்து அனுப்ப வேண்டாம்- ப.சிதம்பரம். தன்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திகார் சிறைக்கு மாத்திரம் அனுப்ப வேண்டாமென ப.சிதம்பரம் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தனக்கு 74 வயதாகின்றமையினால் தயவு செய்து திகார் சிறைக்கு மாத்திரம் அனுப்ப வேண்டாம் என சிதம்பரம் வலியுறுத்துவதாக அவரது சட்டத்தரணி கபில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, ”அமலாக்கத்துறை வழக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. அதுவரை 3 நாட்கள் வீட்டுக் காவலில் அனுப்புங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம…
-
- 1 reply
- 470 views
-