Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Published By: DIGITAL DESK 2 07 JUN, 2025 | 02:58 PM உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலமான செனாப் பாலம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் வெள்ளிக்கிழமை (06) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம், 1315 மீற்றர் நீளத்தைக் கொண்டது. நில அதிர்வுகளையும், அதிக காற்று அழுத்தங்களையும் தாங்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் இப்பாலத்தின் வழியாக பயணிக்கக்கூடியதாகும். இந்தப் பெருமைமிகு புதிய பாலம், ஜெர்மன…

  2. விவாகரத்து கேட்டு நிர்பயா கொலை குற்றவாளியின் மனைவி தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமாரின் மனைவி அவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அவுரங்காபாத் நீதிமன்றில் இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் புனிதா விசாரணைக்கு முன்னிலையாகவில்லை. இதையடுத்து, மனு மீதான விசாரணையை மார்ச் 24ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ‌ஷர்மா, அக்‌‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20ம் திகதி அதாவது, நாளை தூக்கு தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறத…

  3. இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல் ANI இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. வியாழக்கிழமை அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இருவரும் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, கிழக்கு லடாக் பகுதியில் சமீ…

  4. மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்! கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்தை ஊசியால் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தவிர்க்கலாம் என்றும், 0.1 மில்லி அளவிலான மருந்தை மூக்குக்குள் செலுத்திக்கொண்டாலே நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/மூக்கு-வழியே-செலுத்தும்/

  5. சவால்களை... எதிர்கொள்ள, ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன – பிபின் ராவத் நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சுதந்திரத் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்ட நிலையில், இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆயுதப் படைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும், எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார்நிலையில் உள்ளன. முப்படைகளுக்கு இடையிலான கூட்டுத்தன்மையை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் ஒட்டுமொத்த…

  6. பாலஸ்தீனத்திற்கான... இந்திய தூதரக அதிகாரி, மர்மமான முறையில் உயிரிழப்பு! பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி முகுல் அர்யா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாலஸ்தீன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவருடைய உடலை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகுல் ஆர்யா ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1270711

  7. பாமாயில் தொடர்பாக இந்தோனீசியா எடுத்துள்ள முக்கிய முடிவு - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ வரும் 28 ஆம் தேதி முதல் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் மற்றும் அதன் மூலப்பொருளான பாமோலின் ஏற்றுமதியை தடை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் நாட்டில் பாமாயில் உற்பத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் 'மலிவாகவும் ஏராளமாகவும்' பாமாயில் கிடைப்பதை உறுதி செய்த பின்னரே ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் உணவுப் ப…

  8. இந்தியா மாதிரி பொய்யெல்லாம் சொல்ல மாட்டோம்.. நிச்சயம் "குரங்குகளை" அடக்குவோம்.. பாகிஸ்தான். இந்தியா மாதிரி தாக்குதல் நடத்தாமலேயே நடத்தியதாக பொய் சொல்ல மாட்டோம். நிச்சயம் இந்த குரங்குகளை அடக்குவோம் என பாகிஸ்தான் திமிர்த்தனமான கருத்தை தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அதிகாலை பாகிஸ்தானில் பாலக்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை வெடிப்பொருள்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் கொல்லப்பட்டார்.இந்த பதிலடியை இந்தியாவே கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானோ எங்கள் மீது எந்த தாக்…

  9. புல்வாமா தாக்குதலுக்கு பின் காஷ்மீரில் 93 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பாலக்கோட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு பின், ஜம்மூ-காஷ்மீரில் எல்லை தாண்டிய ஊடுருவல் குறைந்துள்ளதா என மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நிதியானந்த் ராயிடம் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய ராய், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், எல்லை தாண்டிய ஊடுருவல் கடந்த 6 மாதத்தில் மட்டும் 43 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். இதே கருத்தை பதிவு செய்த உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியும், 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் தீவிரவாதம் சார்ந்த சம்பவங்கள் 28% குறைந்துள்ளதா தெரிவ…

    • 1 reply
    • 305 views
  10. பெப்ரவரி 16ஆம் திகதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பு by : Dhackshala டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பெப்ரவரி 16ஆம் திகதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் கெஜ்ரிவால் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். அவரது வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, கெஜ்ரிவால் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளார். மேலும் புதிய அரசு பதவியேற்கும் தி…

  11. கொரோனா வைரஸ் : பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி! கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் 72 ஆய்வகங்கள் செயற்பட்டு வருகிறது. இங்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் பயோ-டெக்னாலஜி துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி கழகம் மேலும் 49 ஆய்வகங்கள் செயற்படும். அதே போல் தனியார் ஆய்வகங்களும் கொரோனா வைரஸ் சோதனையை இலவசமாக செய்ய கேட்டு கொள்ளப்படுவார்கள். 51 தனியார் ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதிக…

  12. செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி! டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட பின்னர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், தெரிவித்துள்ளது. டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிக்கு 1 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் இயக்கப்படும் ஒரு சிறிய, ஒற்றை-இயக்கி விமானம் செவ்வாயன்று வடமேற்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பறந்து, மழையை பொழிய வைக்…

  13. பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்? பட மூலாதாரம்,Arvind Yadav/Hindustan Times via Getty Images படக்குறிப்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்." ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த 2026 மத்திய பட்ஜெட்டில், ஒருபுறம் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பசுமை ஆற்றலுக்கு அரசு சலுகைகளை வழங்கியுள்ளது; மறுபுறம், பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகள் மற்றும் சில செயல்பாடுகளின் விலையை உயர்த்தியுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு நீக்கியுள்ளது, இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த மரு…

  14. அபாயகரமான நிலையை எட்டியுள்ள இந்தியாவின் காற்றின் தரம் தலைநகர் டெல்லி மற்றும் ஏனைய வடக்கு நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களில் காற்றின் தரம் வேகமாக மோசமடைந்துள்ளமையினால் இந்தியாவில் காற்று மாசுபாடானது அபாயகரமான நிலையின‍ை எட்டியுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு மிகவும் கவலையான செய்தி என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளானர். காரணம் உலகெங்கிலும் பல ஆய்வுகளில் கொவிட்-19 நோயாளர்கள் உயிரிழப்பதற்கு காற்றின் தரக் குறைவும் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கியூபிக் மீட்டர் பரப்பளவில் உள்ள காற்றில் ஒரே ஒரு மைக்ரோகிராம் அளவுக்கு, மாசை உண்டாக்கும் பி.எம் 2.5 துகள்கள் அதிகரித்தாலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 8 சதவீதம் அதிக…

  15. கொரோனா வைரஸ் : இந்தியாவிற்கு உதவி செய்யும் சர்வதேச நாடுகள்! இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், பல நாடுகளும் உதவிகரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் ரஷ்யா. பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா ஆகிய நாடுகள் அனுப்பிவைத்துள்ள மருத்துவ உதவி பொருட்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. இதன்படி 120 ஒக்சிஜன் செறிவூட்டும் சாதனங்கள், வெண்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உதவி பொருட்களுடன் பிரித்தானிய விமானம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவை வந்தடைந்துள்ளது. குறித்த மருத்துவ பொருட்கள் டெல்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதுவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்களும் இந்தியாவிடம் அளி…

  16. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இராணுவ தளவாடங்களுக்கு தடை! வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 108 இராணுவ தளவாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (திங்கட்கிழமை) ஒப்புதல் அளித்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறிய ரக போர் கப்பல்கள், பீரங்கி என்ஜின், ரேடார்கள் உள்ளிட்ட 108 இராணுவ தளவாடங்களுக்கான இரண்டாவது இறக்குமதி தடை பட்டியலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபாட்டுடன் பங…

  17. செளதிக் பிஸ்வாஸ் பிபிசி நியூஸ் இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. முந்தைய சில ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களில் கோவிட்-19 பாதிப்பால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கூறுவது கடினமென்றாலும், அந்தத் தொற்றால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பை அளவிடுவதற்கான எண்ணிக்கையாக இது உள்ளது. இதுவரை இந்தியாவில் 4,14,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 தொற்று காரண…

  18. நிலைமாறா பொருளாதாரக் கொள்கை : அசுர வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்தியா By NANTHINI 19 OCT, 2022 | 12:10 PM (எம். மனோசித்ரா) உலகில் நிலப்பரப்பின் அடிப்படையில் 7ஆவது பெரிய நாடாகவும், சனத்தொகை அடிப்படையில் 2ஆவது பெரிய நாடாகவும் காணப்படும் இந்தியா வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தையே கொண்டுள்ளது. எனினும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டால் கூட நிலைமாறா பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி, 2047ஆம் ஆண்டாகும்போது, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 40 டிரில்லியன் டொலர் வரை விரிவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CI…

  19. சல்மானுக்கு போன் போட்ட இம்ரான்.. சவுதி, அமீரக உதவியை நாட முடிவு.. நீடிக்கும் பதற்றம்! பாகிஸ்தானில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி அரேபியா மற்றும் அரபு அமீரகத்தின் உதவியை நாடி இருக்கிறார். நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி இந்திய விமானப்படை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. இதில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் பெற முயன்று வருவதாக செய்திகள் வருகிறது.இந்த நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மா…

  20. ரஃபேல் ஊழல் குறித்த புத்தகத்தை வெளியிடத் தடை! ‘நாட்டையே உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையகம் தடை விதித்துள்ளது. விஜயன் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வெளியிடப்படவிருந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான புத்தகம் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தக வளியீடுக்காக பூந்தல்லியில் இருந்து தேனாம்பேட்டை புத்தக கடைக்கு கொண்டுசெல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட…

  21. இந்திய மாலுமிகள் கடத்தல் விவகாரம் – உறுதி செய்தார் சுஸ்மா சுவராஜ் நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐவர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட இந்திய தூதர் அபய் தாக்கூருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். T.M apecus என்ற இந்திய கப்பலை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடந்தமாதம் கடத்தியிருந்தனர். இது குறித்து கப்பலில் பணியாற்றிய மாலுமியின் மனைவியான பாக்யஸ்ரீ தாஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜுயிடம் தன் கணவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஜூன் 2024 டெல்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், ‘அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்’ பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத்துறை முன்னாள் பேராசிரியர் முனைவர் ஷேக் ஷௌகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) பிரிவு 45 (1)-இன் கீழ் வழக்கு தொடர்ந்த…

  23. ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல் In இந்தியா August 3, 2019 7:08 am GMT 0 Comments 1128 by : Yuganthini ஆந்திரா சிறையில் 27 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் பிணை செய்யகோரி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்- ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலும் ஒருவர் ஆவார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி முதல் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை பெற வேண்டியு…

  24. காஷ்மீர் விவகாரம் ; பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என போர்க் கப்பல்கள் ஆயத்தபடுத்திய இந்தியா ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்பதற்காக இந்திய கடற்படையினர் போர்க் கப்பல்களை கிழக்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் எச்சரிக்கையுடன் நிறுத்தி வைத்துள்ளனர். அத்துடன் ஜம்முகாஷ்மீர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளனர். அப் பகுதியின் நிலைமை அமைதியாக இருந்தபோதிலும், எந்தவொரு அசம்பாவித நடவடிக்கைகளும் இடம்பெறாமல் தடுப்பதற்கே இவ்வாறு பாதுகாப்பு படையினர் கடைமையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை காஷ்மீர் வி…

  25. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய கோடிக்கணக்கான பக்தர்கள்! திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக வெள்ளிக்கிழமை (14) பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2025 மகா கும்பமேளா நிகழ்வு தொடங்கியதில் இருந்து 491.4 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதியின் சங்கமம்) நீராடியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 8.54 மில்லியன் மக்கள் வியாழக்கிழமை மாத்திரம் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல் துறை சுட்டிக்கட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாத பெளர்ணமியில் தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.