Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு ஆரம்பம்! மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடைபெறுகின்றது. குறித்த நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகி 5 மணிக்கு நிறைவு பெறுகின்றது. இதனை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகின்றது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜாரத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம் மற்றும் உருது ஆகிய 11 மொழிகளில் நீட்தேர்வு நடைபெறுகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் இம்முறை 1.4 இலட்சம் பரீட்சார்த்திகள் தேர்வெழுதுகின்றனர். இதேவேளை ஃபானி புயலால் ஒடிசா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்பகுதிகளில் நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளமையும…

  2. கொரோனா வைரஸ் ‘இந்தியத் திரிபு’ என்பதை உடனே நீக்குங்கள்: சமூக ஊடகங்களுக்கு இந்திய அரசு உத்தரவு 16 Views இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபை ‘இந்தியத் திரிபு’ (Indian variant) என்று குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பால் இந்த திரிபுக்கு ‘B.1.617’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை ‘இந்தியத் திரிபு’ என்று குறிப்பிடுவது தவறானது என்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது. பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட திரிபுகளுக்கு அந்தந்த நாடுகளின் பெயர்களே வைக்கப்பட்டு அவை பிரிட்ட…

  3. Published By: RAJEEBAN 26 MAR, 2024 | 05:42 PM பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சீன பிரஜைகள் பயணித்த வாகனத்தொடரணி மீதுதற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதலை மேற்கொண்டார் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கைபர் பக்துன்வா மாகாணத்தின் டசுவில் உள்ள தங்கள் முகாமிற்கு இஸ்லாமபாத்திலிருந்து சீன பொறியியலாளர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர் அவ்வேளை தற்கொலை குண்டுதாரி தனது வாகனத்தை அவர்களின் வாகனத்தை நோக்கி செலுத்தி வெடிக்கவைத்தார் என இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ஐந்து சீன பிரஜைகளும் அவர்களின் வாகனச்சாரதியான பாக்கிஸ்தான் …

  4. ஏழு மாநிலங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு! சிக்கிம், கோவா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுவரை 74.32 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று மட்டும் 50 இலட்சத்து 25 ஆயிரத்து 159 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1239096

  5. நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் - பிரதமர் மோடி வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி வைத்து நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் என பிரதமர் மோடி கூறினார். பதிவு: ஜூன் 18, 2020 12:30 PM புதுடெல்லி வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- எரிசக்தியில் தன்னம்பிக்கை அடைய இந்தியா இன்று "ஒரு பெரிய நடவடிக்கை" எடுத்துள்ளது.வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களின் தொடக்கமானது "ஒவ்வொரு பங்குதாரருக்கும் வெற்றி வெற்றி என்ற நிலையை கொடுக்கும். நிலக்கரிக்கான சந்தை இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது அனைத்து துறைகளுக்கும் உதவ…

  6. விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானியா அனுமதி February 5, 2019 இந்தியாவில் வங்கி மோசடி தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானிய உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி வழங்கியுள்ளார். அவரை விசாரணைக்கு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா, இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபா கடன் பெற்றுக் கொண்டு, அதனை மீளச் செலுத்தாமல், லண்டன் தப்பிச் சென்றுள்ள நிலையில் இந்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வுத்துறை, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியுள்ளன. இந்தநிலையிலேயே இவ்வாறு அவ…

  7. கொரோனா தடுப்பூசித் திட்டத்தை இந்தியப் பிரதமர் இன்று ஆரம்பிக்கிறார் தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை, இன்று 16 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கிறார். இந்த தொடக்கத்தின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3000 க்கும் மேற்பட்ட இடங்கள் காணொளி காட்சி மூலம் இணைக்கப்படும் தொடக்க நாளில், ஒவ்வொரு இடத்திலும், சுமார் 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை இன்று ஜனவரி 16 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு காணொள் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவது…

  8. இந்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த கீதா மேதா…. January 27, 2019 மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேதா அறிவித்து உள்ளார். இந்திய மத்திய அரசு நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 94 பேரில் 76 வயதான எழுத்தாளர் கீதா மேதாவும் ஒருவர். ஒடிசா முதல்-அமைச்சர் நவீன் பட்நாயக்கின் சகோதரியான இவர் ஆவண படங்களையும் தயாரித்து இயக்கி இருக்கிறார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக கீதா மேதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில…

  9. யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். தி இந்து(ஆங்கிலம்): யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தென் கிழக்கு ரயில்வேயில், யானைகள் பாலத்தை கடப்பதற்காக ரயில்களை நிறுத்துவது என்பது வாடிக்கையான…

  10. மும்பை – வெள்ளத்தில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் சிக்கியது – 500 பேர் மீட்கப்பட்டனர்… July 27, 2019 மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. கனமழையால் சாலைகள், தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. இதற்கிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளத்தில் சிக்கியது. அதில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர். பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஆர்.பி.எப்., படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், கடற்படை ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்துசென்றன. …

  11. ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் : January 19, 2019 தலைமறைவாக உள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமுலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. பங்களாதேசின் டாக்காவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை கண்காணிக்குமாறு பங்களாதேஸ் அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை Nமுற்கொள்ளப்பட்டு அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும் தற்போது மலேச…

  12. படத்தின் காப்புரிமை A S Satheesh Image caption 20 போலீசார் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த திருநங்கைகள் சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தொடர்ந்து கசப்பான சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் நான்கு திருநங்கைகள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கபட்டுள்ளனர். இந்திய உச்ச நீதிமன்றம் பெண் பக்தர்களை சபரிமலைக்குள் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், சில கும்பல்களால் திரும்ப திரும்ப பெண் பக்தர்கள் தடுக்கப்பட்டனர். நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காவல்துறை பாதுகாப்புடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட திருநங்கைகள் அன…

  13. ஆவண சரிபார்ப்புக்குப் பின் மாநிலங்களுக்கு உடனடியாக ஜிஎஸ்டி இழப்பீடு! மாநில கணக்காய்வாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபாா்த்து ஒப்புதல் அளித்தவுடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையானது மாநிலங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். நாட்டில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் திகதி அமல்படுத்தப்பட்டஜிஎஸ்டி முறையினால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது என்றும் அதைத் தொடர்ந்து வழங்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என்றும் அமைச்சர் நிா்மலா சீதாராம…

  14. வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும் – அஜித் தோவல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பரமாா்த் நிகேதன் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் முதலில் தாக்குதல் நடத்தாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் மட்டுமே, தகுந்த பதிலடியை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதை புதிய பாதுகாப்பு உத்தியாக இந்தியா கொண்டுள்ளது. இந்தியா அதன் சொந்த மண்ணிலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு மண்ணிலும் உறுதியுடன் போரிடும். அந்…

  15. இம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாக்கிஸ்தானின் இராணுவ தளபதியை கட்டியணைத்ததை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. நவ்ஜோத் சிங் சித்துவின் இந்த செயல் வெட்கக்கேடானது என பஞ்சாபின் பாஜக தலைவர் சுவைத் மலிக் வர்ணித்துள்ளார். மேலும் பாக்கிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸ்மீரின் பிரதம அதிகாரிக்கு அருகே சித்து அமர்ந்திருந்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் பாக்கிஸ்தானினால் இந்திய வீரர்கள் கொல்லப்படும்போது பாக்கிஸ்தான் இராணுவதளபதியை கட்டியணைத்ததன் மூலம் சித்து அவரிற்கு நன்றி தெரிவித்தாரா எனவும் அவர் …

  16. பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தகவல் Published : 06 Mar 2019 14:37 IST Updated : 06 Mar 2019 14:40 IST பிடிஐ புதுடெல்லி படம்.| ஏ.எஃப்.பி. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தவறவிடாதீர் அதிகாலை 3.30 மணிக்கு எத்தனை கொசுக்களைக் கொன்றேன் என்று எண்ண வேண்டுமா?-பாஜக அமைச்சர் கேள்வி “விசாரணையில் இருக்கும் ரஃபேல் ஒப்பந…

  17. இந்தியாவில் கொரோனாவால் பெண்களே அதிகளவில் உயிரிழக்கக்கூடும் – ஆய்வு தகவல் தெரிவிப்பு! கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவினால் பலியாவதற்கான அபாயம் ஆண்களுக்கே அதிகம் இருப்பதாக உலக அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அறிவியல் என்ற ஆராய்ச்சி இதழில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் வீதத்தை வயது மற்றும் பாலின அடிப்படையில் வகைப்படுத்தி ஆராய்ச்சியாளா்கள் குழு ஒன்று இதனை மதிப்பீடு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது உறுதி செய்ய…

  18. காங். சின்னமாம்! கை காட்டி வாகனத்தை நிறுத்தக்கூடாது.. பெங்களூரு போலீசுக்கு நூதன உத்தரவு. காங்கிரஸ் சின்னத்தை குறிப்பதால் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது என தேர்தல் பணியில் ஈடுபடும் பெங்களூரு போலீசாருக்கு நூதன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 எம்பி தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு போலீசாருக்கு தேர்தல் நாளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்று பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என 5 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் …

  19. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான ரஹானா பாத்திமா அவ்வப்போது மேற்கொள்ளும் செயல்பாடுகள் பரபரப்பாகப் பேசப்படும். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில், அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானம் சென்று அவர் சாமி தரிசனம் செய்தபோது பரபரப்பானது. இவர், தன் அரை நிர்வாண உடம்பில் தன் மகனை ஓவியம் வரைய வைத்தார். பின்னர் அந்த வீடியோவை 'பாடி ஆர்ட் பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரப்பினார். ’மகனாக இருந்தாலும் சிறுவன் முன்பு அரை நிர்வாணமாக அவர் வெளிப்பட்டது தவறு’ என அது சர்ச்சையானது. இதையடுத்து திருவல்லா, எர்ணாகுளம் சவுத் காவல் நிலையங்களில் பதிவான புக…

  20. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெறுவதற்கான அரசியலமைப்பின் 370வது பிரிவின் விதிகளை இந்தியா ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய, பாகிஸ்தான் கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக, இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட குரேஷி, கூட்டத்தின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளி…

    • 0 replies
    • 400 views
  21. காஷ்மீர் அரசியல் மாற்றத்தைக் காணுமா? ஜம்மு - காஷ்மீரின் தலைவர்களுடனான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் இப்பகுதியில் மாற்றத்தைத் தூண்டுவதோடு புதிதாக யூனியன் பிரதேசத்தில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என்பதே நம்பிக்கைகளாகியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட 14 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய மத்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் 370 வது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பாக இது கருதப்படுகின்றது. ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவா…

  22. கொரோனா வைரஸ் மருந்திற்கான ஆய்வு: இந்தியா எப்படி பெரிய பங்கு வகிக்கிறது தெரியுமா? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி Getty Images அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் மருந்தை உருவாக்க பணியாற்றி வருவதாக நேற்று இரவு, அமெரிக்க உள்துறை அமைச்சரான மைக் பாம்பே கூறினார். இது முற்றிலும் ஆச்சரியம் அளிக்கும் வகையிலான தகவல் இல்லை. ஏன் தெரியுமா? கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, நோய்களுக்கு மருந்து உருவாக்கும் ஒரு கூட்டு திட்டத்தை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செய்து வருகின்றன. டெங்கு, இன்புளூவென்சா, காசநோய் ஆகியவற்றை குணப்படுத்த இவர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். டெங்குவிற்கான மருந்தை சோதித்து பார்க்கும் திட்டமும் வருங்காலத்தில…

  23. அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு அடுத்த மாதம் அடிக்கல் - ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் அயோத்தி, அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த அப்பீல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 9-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உத்தரவிட்டது. அத்துடன் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, தான்னிப்பூர்…

  24. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை தடுக்க முடியாது: பா.ஜ.க. அமைச்சர் உறுதி! அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அமைச்சர் கிரிராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார். பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறைஅமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் வாழும் சுமார் 100 கோடி மக்களின் மதநம்பிக்கைக்கு மையப்புள்ளியாக இருக்கும் ஸ்ரீராமபிரானுக்கு அயோத்தியில் கோவில் கட்டும் விவகாரம் நீர்த்துகொண்டே போகின்றது. தங்கள் நம்பிக்கையை இழந்த மக்கள் தற்போது பொறுமையிழந்து விட்டார்கள். ஆனால், …

  25. கரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகள் வழங்க அனுமதி- புதிய நெறிமுறைகள் வெளியீடு கரோனா வைரஸ் தொற்றை குணப் படுத்த ஹைட்ராக்ஸி குளோரோ குவின் மாத்திரைகளை பயன் படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள் ளது. இதற்கான புதிய நெறிமுறை களை வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை எந்த நாட்டிலும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு மருந்தும் இதுவரை தயாராக வில்லை. உலகம் முழுவதும் 78 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட் சத்துக்கும் அதிகமானோர் உயி ரிழந்துள்ளனர். இந்நிலையில், மலேரியாவுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின், அசித்ரோ மைசின் மாத்திரைகள் கொடுத்தால் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.