Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு மும்பையின் டோங்கிரி பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் டோங்கிரி என்ற பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது. அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக குறித்த கட்டிடம் சேதம் அடைந்திருந்தது. இந்நிலையில், அந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கட்டிட இடிபாடு களை அகற்றி காயமடைந்து போர…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தான் முழுவதும் இருந்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நோக்கி பேரணியாக செல்கின்றனர். 8 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அந்த நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக செல்கின்றனர். இதனால், அங்கே உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. இஸ்லாமாபாத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், பதிலடியாக காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் முழுவதும் இருந்து இஸ்லாமாபாத்தில் பல ஆயி…

  3. 02 JUL, 2025 | 02:59 PM திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமா தான் மரணத்திற்கு பின்னர் மறுபிறவியெடுப்பேன் என தெரிவித்துள்ளார். தலாய்லாமா தனது 90வயதை குறிக்குகமாக இடம்பெற்ற நிகழ்வின்போது உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். தனது வாரிசை கண்டுபிடித்து கடந்தகாலபௌத்த மரபுகளின்படி அங்கீகரிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தலாய்லாமா என்ற கட்டமைப்பு தொடரும் என அமைதிக்கான நோபல்பரிசை வென்ற திபெத்தின் ஆன்மீக தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கான செய்தியில் தலாய்லாமா தனக்கு பின்னர் ஒருவரை கண்டுபிடித்து அவரை அங்கீகரிக்கும் பொறுப்பு 2015 இல் தான் உருவாக்கிய அமைப்பிற்கே உரியது என குறிப்பிட்டுள்ளார். வேறு எவருக்கும் இந்த விடயத்தில் தலையிட உரிமையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் க…

  4. எல்லைப் பிரச்சினை விவகாரம் : பாதுகாப்பு துறைக்காக 500 கோடி ரூபாயை ஒதுக்கியது இந்தியா! by : Krushnamoorthy Dushanthini சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை தொடர்ந்து பாதுகாப்புத்துறைக்கு அவசரகால நிதியாக 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் ஆயுத அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் வெடிமருந்துகளையும், ஆயுதங்களையும் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்காக மேற்படி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறுகிய கால அறிவிப்பில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ பொருட்களை வாங்குவதற்கும் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலுக்கும் அல்லது தற்செயலுக்கும் அவர்களின் செயல்பாட்டுத…

    • 0 replies
    • 372 views
  5. Fari and lovely பெயர் மாற்றம் - சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? கீதா பாண்டே பிபிசி செய்தியாளர் Getty Images யூனிலீவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் `முகப் பொலிவு` க்ரீமான `ஃபேர் அண்ட் லவ்லி`யில் உள்ள ஃபேர் என்ற வார்த்தை நீக்கப்படும் என அந்நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவுப்பைப் பலர் வரவேற்றாலும், ஆர்வலர்கள் இது பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்கின்றனர். `வெள்ளையாக இருப்பதே அழகு` என்றும் இதனால் நிறம் குறைவாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பற்றத்தன்மையுடன் உணருவதற்கும் இந்த ஃபேர் அண்ட லவ்லி க்ரீம் துணை புரிகிறது என யூனிலீவர் மற்றும் அதன் இந்தியத் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடட் மீது ஏற்கனவே பலர் கடுமையான விமர்சனங்…

  6. சீனாவுடனான மோதலை தொடர்ந்து ஆயுதக்கொள்வனவை அதிகரிக்கின்றது இந்தியா July 8, 2020 இந்திய சீன படையினர் மத்தியில் எல்லையில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து இந்தியா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு கொள்வனவு பேரவை 6பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு பேரவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூழ்நிலையில் நாங்கள் எங்கள் எல்லைகளின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு படையினரை பலப்படுத்தவேண்டியுள்ளது என தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு…

  7. காஷ்மீரில் நடைபெற்ற, பயங்கரவாத தாக்குதல்களுக்கு... பொறுப்பேற்றது, புதிய அமைப்பு! ஜம்மு காஷ்மீரில் 9 இராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்திற்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள காணொலியில் ஒக்டோபர் 11 ஆம் திகதி இராணுவத்தினர் சென்ற வாகனத்தை கண்காணித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத மேலும் பல படுகொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தவும், தீவிரவாதிகளை ஒழிக்கவும் இராணு…

  8. உக்ரைனுக்கு... முதற்கட்ட நிவாரண பொருட்களை அனுப்பும் இந்தியா! உக்ரைன் எல்லையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலையை சமாளிக்க உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போதே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு, அரசு இயந்திரம் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்துள்ளார். அதேநேரம் உக்ரைனில் சிக்கி தவிக்கும் அண்டை நாடுகள், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த…

  9. இந்தியாவிற்கு... உதவ தயாராக இருப்பதாக, அமெரிக்கா அறிவிப்பு! சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் மேற்படி தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் தடையற்ற வெளிப்படையான வர்த்தகத்திற்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியா தனது இராணுவத்தை நவீனமயமாக்கவும், இந்திய இராணுவத்தினர் ரஷ்யாவின் பூர்வீகமான ஆயுதக் கொள்முதலை சார்ந்து இருக்காமல் இருப்பதற்கும் அமெரிக்கா உதவும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவ…

  10. கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம் - நரேந்திர மோதி, ஹாரிஸ் ஜெயரஜ் உள்ளிட்டோர் அஞ்சலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்னையால், சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 54 வயதான கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய சினிமா துறையில் குறி…

  11. சீனா போருக்கு தயாராகின்றது என்ற ராகுலின் கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் சீனா போருக்கு தயாராகி வருகின்றபோதும் இந்த அச்சுறுத்தலை இந்திய அரசாங்கம் புறக்கணிக்க முயற்சிக்கின்றது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அருணாசலப் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100 நாளை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இருப்பினும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கருத்திற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் எதிர்கட்சிகள் நாட்டிற்கு ஆதரவாக இருப்பதாக கூறி இந்தியாவை இழிவுபடுத்தும் மற்றும் மனஉறுதியை சீர்குலைக்கும் கருத்தை கூறி வருவத…

  12. கோப்புப் படம் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய அணைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வருகின்றன. ஆசியாவிலேயே பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை இன்று மாலை மீண்டும் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால், மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. 368 பேர் உயிரிழந்தனர். ரூ.21,000 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்க…

  13. அபிநந்தன் மரியாதையுடன் நடத்தப்படுவார் – பாகிஸ்தான் பாகிஸ்தான் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் பாதுகாப்பாகவுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ படையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், இந்திய விமானப்படையின் விமானியொருவர் பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். விங் கொமாண்டர் அபிநந்தன் இராணுவ விதிகளுக்கு உட்பட்டு மரியாதையுடன் நடத்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை பாகிஸ்தானால் நேற்று சுட்டுவீழ்த்தப்பட்ட இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களில் பயணித்த விமானிகள் மூவரை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைது செய்தமை குறி…

  14. மோடியின் பதவியேற்பு விழா: புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் பதிவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்துள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று (வியாழக்கிழமை) குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்களாதேஷ், இலங்கை, கிர்கிஸ்தான், மொரீஷியஸ், நேபாளம், மியன்மார், மாலைத்தீவு, பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் விமர்சகர்கள் பலர் சமூக வலைதளங்களில் …

    • 1 reply
    • 382 views
  15. புதுடெல்லி: வங்கக் கடலில் உருவான டானா புயல் வியாழக்கிழமை இரவு அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். டானா புயல் கரையைக் கடக்கும் போது ஒடிசாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அதேபோல் மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த பின்பு ஒடிசாவின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருப்பர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. டானா புயல் பிதர்கனிகா …

  16. அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சைப் பேச்சு : முடங்கியது நாடாளுமன்றம்! christopherDec 18, 2024 12:45PM அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று (டிசம்பர் 18) அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே அவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சி எம்.பிக்களை நோக்கி, “’அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக…

  17. உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு மோடியின் சஃபாரி! உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) காலை குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சஃபாரி சென்றுள்ளார். இது குறித்து எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்று காலை, உலக வனவிலங்கு தினத்தன்று, நான் கிரில் ஒரு சஃபாரிக்குச் சென்றேன், இது நாம் அனைவரும் அறிந்தபடி, கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம் என்று குறிப்பிட்டுள்ளார். வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது மோடி, அவற்றின் வசீகரிக்கும் அழகினை கையில் இருந்த கமரா மூலம் புகைப்படம் எடுத்தார். இந்த பயணித்தின் போது, ஆசிய சிங்கத்தின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின சமூக…

  18. கொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சையில் உதவும் தப்லிக் ஜமாத் அமைப்பினர் டெல்லியின் தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணமடைந்த பலர் தங்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாக்களை (ஊநீர்) வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னும் பலருக்கு அந்த பிளாஸ்மாக்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்க முடியும். இந்தியாவின் பல மாநிலங்களில் தொற்று பரவ தப்லிக் ஜமாத் அமைப்பினரே காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர். எனவே தற்போது இந்தியாவின் பல மாநிலங…

  19. இந்தியாவில் உச்சம்... 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒரே நாளில் 195 பேர் மரணம் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 195 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்பது மாநில அரசுகளின் கருத்து. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரே நாளில் நேற்று மட்டும் 195 பேர் மரணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக 14,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிராவில் மொத்தம் 583…

  20. பழங்குடி இளைஞரை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் - மருத்துவமனையில் இறந்தார் சுரை நியாஜி பிபிசி இந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, காவல் நிலையம் மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிறிய பிரச்சனைக்காக பழங்குடி இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு, வாகனத்தோடு கட்டி இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காணொளி ஆகஸ்ட் 28ஆம் தேதி பரவத் தொடங்கியது. இது…

  21. காஷ்மீரில் இருந்து வெளிமாநிலத்தவர்கள், வெளியேறி வருவதாக... அறிவிப்பு! காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நீடித்து வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் இதுவரை 11 பேர் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொல்லப்பட்ட 11 பேரில் 5 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பதால், வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட காடுகளில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http…

  22. அன்னை தெரசா தொடங்கிய 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' அமைப்பு வெளிநாட்டு நிதி பெற அனுமதி மறுத்த இந்திய அரசு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் சமூக சமையலறை உணவு வழங்கும் காட்சி - கோப்புப் படம் அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்புக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமத்தை நீட்டிக்க மறுத்துள்ளது இந்திய அரசு. ஆயிரக்கணக்கான கன்னியாஸ்திரிககளைக் கொண்டுள்ள 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' என்கிற அமைப்பு, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பராமரிப்பு இல்லங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மிக மோசமான உடல் நலம் கொண்டோரைப் பராமரிக்கும் இல்லம் போன்றவை…

  23. இந்தியா... ஆயுத உற்பத்தியில், தற்சார்பு நிலையை அடைய வேண்டும் – நரவனே இந்தியா ஆயுத உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், உக்ரைன் போரை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் இந்தியா போர்களை எதிர்கொள்ள ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். சொந்த நாட்டின் ஆயுத உற்பத்தியை வைத்து போரை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் போர்கள் மூளலாம் . அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உக்ரைன் போர் நமக்கு உணர்த்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1271079 ################## …

  24. மாசுபாட்டால் இறந்த லட்சக்கணக்கான இந்தியர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் சொல்வது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காற்று மாசுபாடு வீசும் காற்றில் விஷம் பரவினால் வாழ்க்கை மோசமாகும் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஆனால், வீசும் காற்றே விஷமாக மாறினால் விளைவு எப்படி இருக்கும் என்பதை அண்மையில் வெளியான லான்செட் அறிக்கையின் தரவுகள் இதை நமக்கு புரியவைக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 23 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் 16 லட்சம் காற்று மாசுபாட்டாலும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நீர் மாசு…

  25. யஷ்வந்த் சின்ஹா: குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிப்பு 21 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யஷ்வந்த் சின்ஹா முன்னாள் பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சித் தல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.