அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத், உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் என்று பல மாநிலங்களில் சமீப காலமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வாணியர் பேரவை சார்பில் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழிசை பங்கேற்றார். அப்போது பேசிய அவர்; தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார். சமுதாயத்தில் பெண்களை குத்துவிளக்கு…
-
- 0 replies
- 309 views
-
-
பரேலி; கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, உத்தரபிரதேசத்துக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும் அதிர்ச்சி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தங்கியுள்ள பிற மாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். போக்குவரத்து தடை செய்யபட்டுள்ளதால் கால்நடையாகவே சொந்த ஊருக்கு திரும்பும் நிலை உள்ளது. இதனால் சமூக தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு டெல்லியில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பரேலி மாவட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.அவர்களால் உத்தரப் பிரதே…
-
- 0 replies
- 309 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஆர்.எஸ்.எஸின் கொள்கையை அடிப்படையாக கொண்டதால்தான் மோதி அரசு காஷ்மீர் விவகாரத்தில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களுக்கு அவர் இன்று ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தன்னை காஷ்மீருக்கான தூதுவராக நியமித்துக் கொண்டதாகவும், இறுதிவரை காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஆற்றிய உரை க…
-
- 0 replies
- 309 views
-
-
சுபாஷ் சந்திர போஸை சிறையில் தாக்கிய பிரிட்டிஷ் ஐஜியை சுட்டுக்கொன்ற மூன்று இந்தியர்களின் தியாக வரலாறு கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,RUPA படக்குறிப்பு, கொல்கத்தாவின் பி.பி.டி. தோட்டத்தில் பினோய்-பாதல்-தினேஷ் நினைவிடம் லெப்டினன்ட் கர்னல் நார்மன் சிம்சன் 1940களில் வங்காளத்தின் ஐஜியாக (சிறை) இருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை சித்திரவதை செய்வதில் அவர் பெயர் பெற்றவர். நார்மனின் மேற்பார்வையில் கொடிய குற்றவாளிகள் சுதந்திரப் போர…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
இந்தியப் பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக எழுத்தாளர் வரவரராவ் கைது : November 18, 2018 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்டு ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடைபெற்ற சாதிய வன்முறை தொடர்பாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் உள்ளிட்ட கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சல்லெஸ் முதலான ஐந்துபேரை மகாராஷ்டிரா மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இதனால், எழுத்தாளர் வரவரராவை கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி முதல் ஹைதராபாத் அசோக்நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட…
-
- 0 replies
- 309 views
-
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்த ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியீடு! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81--720x450.jpg அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் 25 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி நிறைவடையவுள்ள நிலையில், அவருடைய ஆட்சிக் காலப்பகுதியில், அமெரிக்கா உலக நாடுகளுக்கு எவ்வளவு மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்ற விபரத்தை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவுனம் வெளியிட்டுள…
-
- 0 replies
- 308 views
-
-
குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் பலி - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து 8 பேர் பலியான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பதிவு: ஆகஸ்ட் 06, 2020 09:32 AM அகமதாபாத், குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக…
-
- 0 replies
- 308 views
-
-
இந்தியாவில் இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்கும் ராஜஸ்தான் இளைஞன் இந்தியாவில் மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெறவுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மானசரோவர் பகுதியைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் (21 வயது), தனது ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூர்த்தி செய்தார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடந்த நீதிபதிகளுக்கான தகுதி தேர்வில் கலந்துகொண்ட மயங்க் பிரதாப், அதிலும் தேர்ச்சிபெற்றார். இந்நிலையில் விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இதனூடாக அவர், இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதி ஆனவர் எனும் சிறப்பையும் பெறவுள்ளார். நீதிபதி ஆவதற்கு குறைந்தபட்ச வரம்பாக இருந்த 23 வயதை …
-
- 0 replies
- 308 views
-
-
காஷ்மீர் தாக்குதல் – கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு February 16, 2019 காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்துறைப் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவரவாதி நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக…
-
- 0 replies
- 308 views
-
-
சிபிஐ நுழைய கூடாது: அதிரடியாக உத்தரவு போட்ட இரண்டு மாநிலங்கள். சோதனைகள் மற்றும் வழக்கு விசாரணை குறித்து சிபிஐ அதிகாரிகள் தங்களுடைய மாநிலத்தில் நுழைய வேண்டுமெனில் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என இரண்டு மாநிலங்கள் உத்தரவு போட்டுள்ளதால் தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனை மற்றும் வழக்கு விசாரணைக்காக தங்கள் மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய தடை விதித்து சமீபத்தில் ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதேபோன்ற ஒரு உத்தரவை மேற்குவங்க அரசும் பிறப்பித்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் நுழைவதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த, மாநில அரசின் தடையில்லா சான்றை திரும்ப பெற்றுக்கொள்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று …
-
- 0 replies
- 308 views
-
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு கொரோனா டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 893ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்திருக்கின்றது. அவர்களில் 43 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று டெல்லி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒன்பது பேர் 50 முதல் 60 வயது நிரம்பியவர்கள் என்றும், பத்து பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 31 ஆயிரத்து 878 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இரு வார…
-
- 0 replies
- 308 views
-
-
இந்தியாவில், கொரோனா பரவ... மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதமானோர் இந்த…
-
- 0 replies
- 308 views
-
-
நூபுர் ஷர்மா விவகாரம்: "உங்களது பேச்சு மொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது" - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HINDUSTAN TIMES படக்குறிப்பு, நூபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக பல மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய பாஜக-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த விசாரணையின்போது, தான் தெரிவித்த கருத்துக்கு மொத்த இந்தியாவிடமும் நூபுர் ஷர்மா…
-
- 2 replies
- 308 views
- 1 follower
-
-
உலகம் முழுவதும் வாழும்இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இந்தியர்கள் தங்களது அடையாளத்தை நிலைநாட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிக்காக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கினர். உங்களது பங்களிப்பால் நாட்டின் சுகாதார துறை சேவைகள் மேம்பட்டுள்ளன. உலகின் பல்வேறு மூலைகளில் நாம் வாழ்ந்தாலும் இணையம் வாயிலாக இணைந்துள்ளோம். நமது உள்ளம் பாரத மாதாவுடன் ஒன்றிணைந்துள்ளது.உலகளாவிய அளவில் தேநீர் முதல்ஜவுளி வரை பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கிறது. மருத்துவ துறையிலும் இந்தியா சிறப்பாக சேவையாற்றி வருகிறது. …
-
- 0 replies
- 307 views
-
-
ஒரு மாணவி தேர்வு எழுத, 70 பேர் பயணிக்கும் தனிப்படகையே இயக்கிய கேரள அரசு கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்திரா பாபு. இவர் ஆலப்புழாவில் உள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்புத் தேர்வை எழுத இருந்தார். ஆனால் இவர் தேர்வு எழுதச் செல்ல வேண்டுமென்றால் படகு போக்குவரத்தில் செல்ல வேண்டும். தனிப்படகு எடுத்துச்சென்றால் அதிக செலவாகும் என்பதால் அரசின் உதவியை நாடினார் சந்திரா. கேரள மாநில நீர்வழிப் போக்குவரத்துத் துறையை அணுகிய சந்திரா, தான் தேர்வு எழுத வேண்டுமென்பதால் உதவ முடியுமா? எனக் கேட்டுள்ளார். மாணவியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த கேரள அரசு, சந்திரா பாபாவுக்காக மட்டுமே 70 பேர் பயணிக்கக் கூடிய படகை இயக்கியது. காலை 11…
-
- 0 replies
- 307 views
-
-
அயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம் உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, அங்குள்ள ராமர் சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும் என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது. உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கோயில் கட்டும் பணி, விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து, கோயில் கட்டப்படவுள்ள இடத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். இதன்போது, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில், “ரா…
-
- 0 replies
- 307 views
-
-
பாக்கிஸ்தான் பிரதமர் தன்னை கொரோனா வைரஸ் மருத்துவபரிசோதனைக்கு பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளார் என அவரின் கொரோனாவைரஸ் தொடர்பான ஆலோசகர் மருத்துவர் பைசால் சுல்தான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இம்ரான்கானை சந்தித்த நன்கொடையாளர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இம்ரான்கானை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அவரின் மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவரின் மருத்துவ மருத்துவபரிசோதனை முடிவுகள் வெளியானதும் அதனடிப்படையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/80467
-
- 0 replies
- 307 views
-
-
இந்தியா பாக்கிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி70 பேர் பலி இந்தியா பாக்கிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி70 பேர் பலியாகியுள்ளனர். பாக்கிஸ்தானில் 57 பேர் பலியாகியுள்ளனர் எனவும் இரண்டுபேர் காணாமல்போயுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை இந்தியாவின் காஸ்மீரிலும் பனிச்சரிவு காரணமாக பத்துபேர் உயிரிழந்துள்ளனர். பாக்கிஸ்தானின் நீலும் பள்ளத்தாக்கில் கடும் மழையின் பின்னர் இடம்பெற்றுள்ள பனிச்சரிவு காரணமாக பல கிராமத்தவர்கள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன பலர் காணாமல்போயுள்ளனர் அவர…
-
- 0 replies
- 307 views
-
-
தினத்தந்தி: "எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்" - பா.ஜ.க வேட்பாளர் ஹரியாணா மாநில சட்டசபைக்கு இன்று (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள கர்னால் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பக்ஷிஷ் சிங் விர்க் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் பேசும்போது, 'இன்று நீங்கள் ஒரு தவறு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு துயரப்படுவீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டளிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். மோடிஜியும், மனோகர்ஜியும் (முதல்-மந்திரி) மிகவும் உஷாரானவர்கள். வாக்குப்பதிவு எந்திரத்தி…
-
- 0 replies
- 307 views
-
-
இந்தியாவில் 1 இலட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதன்படி நேற்று புதிதாக 7300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 65 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 177 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4711 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 70 ஆயிரத்து 920 பேர் சிகிச்சைகளுக்குப் பின் வீடு திரும்பியுள்ளதுடன் 89 ஆயிரத்து 755 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். …
-
- 0 replies
- 307 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, பிபிசி செய்தியாளர் 2 அக்டோபர் 2023, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் சீன கடற்படையின் ஆதிக்கமும் செயல்பாடுகளும் இந்திய அரசுக்கும் பாதுகாப்பு நிபுணர்களுக்கும் கவலைக்குரியதாகவும் விவாதத்துக்கு உரியதாகவும் உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும்நிலையில், கடந்த மூன்று ஆண்டு…
-
- 1 reply
- 307 views
- 1 follower
-
-
144 தடை உத்தரவுடன் சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி உத்தரவிட்டது. குறித்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், ஐய்யப்ப பக்தர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இந் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவு நிலைமை மோசமானது. பதற்றம் நிலவியது. பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல இளம்பெண்கள் ஐய்யப்பன் சன்னிதானத்…
-
- 0 replies
- 307 views
-
-
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த பலரும் நியூ பனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த சுமார் 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் பிபிசிக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவமும் தெருக்களில் குவிந்துள்ளதாகவும், கடுமையான மோதல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த சூழலிலும் போராட்டக்காரர்கள் பின் வாங்கவில்லை. உயிர…
-
- 6 replies
- 307 views
- 1 follower
-
-
அதானி வணிகத்தை மேம்படுத்துவதே இந்திய வெளியுறவு கொள்கை: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI அதானி குழுமத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி தவறான வழியில் உதவியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். அதானி குழுமம் பங்குச் சந்தையில் பெரிய அளவில் திருகு வேலை செய்தது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற சந்தை ஆய்வு நிறுவனம். இதையடுத்து அதானி நிறுவனப் பங்குகளின் மதிப்பு மோசமான சரிவை சந்தித்தது. …
-
- 1 reply
- 307 views
- 1 follower
-
-
உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தின், கோலகாட், நாகோன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பரவியுள்ளது. உலகில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் வாழ்கின்றன. கடந்த வருடம் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 2413 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு இருப்பதாக கூறப்பட்டது. படத்தின் காப்புரிமை WTI Image caption வீட்டிற்குள் நுழைந்த புலி புலிகளின் வாழ்விடமாகவும் இருப்பதால் 2006ம்…
-
- 0 replies
- 307 views
-