அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3312 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் பிபிசி குழுவின் ஆய்வு இது . டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆபாசப் படம் பார்த்து அதற்கு விருப்பக்குறியிட்டதாக கூறி கேலி கிண்டலுக்குள்ளானார். தனது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக செயல்படும் டெல்லி எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா இவ்விவரத்தை கடந்த வியாழக்கிழமை காலையில் ட்வீட் மூலம் வெளியிட்டார். ''டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட்டரில் ஆபாச படம் பார்த்திருக்கிறார். நேற்று இரவு அவர் ஆபாச படத்த…
-
- 0 replies
- 742 views
-
-
உத்தரகண்ட் விஷச் சாராய பலி எண்ணிக்கை 116ஆக உயர்வு.. சிறப்பு விசாரணைக்கு உத்தரவு 100க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட உத்தரப் பிரதேசம், உத்தர கண்ட் விஷச் சாராய சாவுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் விஷச்சாராயம் அருந்திய 116 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.போலி மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில், விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்ப…
-
- 0 replies
- 291 views
-
-
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது May 24, 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்கிறது. இதனால், மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளதுடன் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. தற்போதைய மக்களவையின் பதவிகாலம் முடிந்து, புதிய மக்களவை தொடங்குவதோடு, பிரதமர் மோ…
-
- 0 replies
- 273 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஆர்.எஸ்.எஸின் கொள்கையை அடிப்படையாக கொண்டதால்தான் மோதி அரசு காஷ்மீர் விவகாரத்தில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களுக்கு அவர் இன்று ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தன்னை காஷ்மீருக்கான தூதுவராக நியமித்துக் கொண்டதாகவும், இறுதிவரை காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஆற்றிய உரை க…
-
- 0 replies
- 312 views
-
-
இந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்கமாட்டோம்: இம்ரான்கான் இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) லாகூர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்ரான்கான் மேலும் கூறியுள்ளதாவது, “எந்த பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வை கொடுக்காது என்பதை இந்தியாவுக்கு நான் கூற விரும்புகிறேன். போரில் வெற்றி பெறுபவர் கூட ஒரு தோல்வியாளர்தான். ஏனெனில் புதிய பிரச்சினைகளுக்கு போர் வழிவகுக்கும் இதனால்இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம். இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன. பதற்றம் அதிகரித்தால் உலகம் …
-
- 0 replies
- 332 views
-
-
இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்! இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கத் தொடங்கும் எனவும், இதன் மூலம், கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தில் இந்தியா முன்னேற்றம் அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் ரயில்கள் இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் ஒரு முக்கிய கட்டமாக விளங்குகிறது. நிலையான போக்குவரத்து, கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன…
-
- 0 replies
- 122 views
-
-
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் நோய்த்தொற்று வேகமாக பரவினால் நிலைமையை நிர்வகிக்க முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பதிவு: ஏப்ரல் 04, 2020 16:48 PM மும்பை மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் 25 பேரும், புனேயில் 11 பேரும், அகமதுநகரில் 3 பேரும், வாஷிம், ரத்னகிரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றில் முத…
-
- 0 replies
- 348 views
-
-
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்! 25 Dec 2025, 10:55 AM நாட்டின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நட…
-
- 2 replies
- 212 views
-
-
இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய் குறைபாடுகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், தங்களின் மருத்துவ குறைபாடுகளுடன் சேர்த்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வியாழக்கிழமை மாலையில் நடந்த இரண்டாம் நாள் விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஆனாலும், அந்த உத்தரவு வெளிவந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அளவு காலியானது. டெல்லியில், திரத் ராம் ஷா மருத்துவமனை, யுகே நர்சிங் ஹோம், ரதி மருத்துவமனை, சாந்தோம் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் ஆக்சிஜன் க…
-
- 3 replies
- 746 views
-
-
திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன நேரம் மாற்றியமைக்கப்படுகிறது! திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாடுகள் நடைபெறுவதாக நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதியில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். திருப்பதிக்கு கடந்த மாதம் 21 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் 122 கோடியே 19 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு கோடி லட்டுகள், அதாவது 98 லட்சத்து 44 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 44 லட்சத்து 7…
-
- 0 replies
- 217 views
-
-
சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி Published By: RAJEEBAN 03 MAR, 2023 | 03:39 PM சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதா ல் அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/149641
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
மோடி வென்ற கதை! Dec 03, 2023 18:49PM IST ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநில முடிவுகள் வெளிவந்துவிட்டன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு முக்கியமானது? இப்படி ஒரு கேள்வியை யாராவது கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? தேர்தல் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநிலங்களில் மொத்தம் 88 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் ஆறில் ஒரு பங்கினர், இந்த ஐந்து மாநில தேர்தலில் வாக்காளர்கள். ஆகவே, ஐந்து மாநில தேர்தல் என்பது ஒரு மினி ந…
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
வாக்கு எந்திர விவகாரம்; தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை: உச்ச நீதிமன்றத்தை நாடும் எதிர்க்கட்சிகள் Published : 14 Apr 2019 17:48 IST Updated : 14 Apr 2019 17:48 IST பி.டி.ஐ. புதுடெல்லி மின்னணு வாக்கு எந்திரத்தின் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் : படம் ஏஎன்ஐ மின்னணு வாக்கு எந்திரங்களில் ஏற்பட்டு வரும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஒப்புகை தணிக்கைச் சீட்டு எந்திரங்கள் மூலம வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட…
-
- 0 replies
- 494 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Ani Image caption ஆண்டனோவ் ஏ.என்-12 வகை விமானத்தின் மாதிரி படம் இந்திய எல்லைக்குள் அனுமதியில்லாத வான்வெளியில் பறந்த ஆண்டனோவ் ஏ.என்-12 வகை பாகிஸ்தான் சரக்கு விமானம் ஒன்றை இந்திய விமானப்படை இன்று, வெள்ளிக்கிழமை, இடைமறித்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இன்று மாலை 4.55 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானத்தின் குழுவினரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மூத்த அரசு அதிகாரிகள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். …
-
- 0 replies
- 386 views
-
-
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார். இந்திய மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோதி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா இருவரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். மேலும், கடந்த இரு மக்களவை தேர்தல்களின்போது (2009, 2014), ஐபிஎல் போட்டிகளைக்கூட நடத்த முடியவில்லை. அரசாங்கம் வலுவாக இருந்தால், ஐபிஎல், ரம்சான், பள்ளித் தேர்வுகள் என அனைத்…
-
- 1 reply
- 587 views
-
-
தவறுகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை – இந்திய பிரதமர் மோடி! கடந்த கால தவறுகளில் இருந்து இன்னமும் பாகிஸ்தான் பாடங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என இந்திய பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார். கார்கில் போரில் வெற்றி பெற்று இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போரில் உயிர் நீத்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் இந்தியாவில் ஏற்படுகின்ற பயங்க…
-
- 1 reply
- 218 views
- 1 follower
-
-
"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம்" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கர் இவ்வாறாகக் கூறினார். வெளியுறவுத் துறையின் 100 நாள் சாதனைகளை அவர் விளக்கினார். அப்போது பேசிய அவர், "நமது அண்டை நாடு இயல்பான நி…
-
- 4 replies
- 764 views
- 1 follower
-
-
19 DEC, 2024 | 07:51 AM மும்பை: மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மும்பை அருகேயுள்ள எலிபென்டா தீவில் புகழ்பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்கரையிலிருந்து படகுகளில் செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோருடன், நீல்கமல் என்ற படகு மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி நேற்று மாலை புறப்பட்டது. அப்போது அந்த வழியாக கடற்படையின் ரோந்து படகு சென்றது. அந்த படகு நேற்று மாலை 3.55 மணிய…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,RAFALE படக்குறிப்பு, இந்தியா பிரான்சுடன் 26 ரஃபேல்-எம் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே பதவி, பிபிசி செய்தியாளர் 29 ஏப்ரல் 2025, 13:30 GMT இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கள்கிழமையன்று கையெழுத்திட்டன. இந்த விமானங்களின் மொத்த விலை சுமார் ரூ.64,000 கோடியாக இருக்கும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானங்களை இந்தியா பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து வாங்குகிறது. இந்த ரஃபேல் விமானங்களை ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் நிறுத்தி பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கும், பாக…
-
-
- 3 replies
- 267 views
- 1 follower
-
-
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா! ஈரானுடனான தொடர்புகளுக்காக அமெரிக்காவால் முன்னர் தடை செய்யப்பட்ட மூன்று எண்ணெய்க் கப்பல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்க அதன் கடல்சார் மண்டலத்தில் கண்காணிப்பை இந்தியா முடுக்கிவிட்டதாக ஒரு வட்டாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது. எண்ணெய் சரக்குகளின் தோற்றத்தை மறைக்கும் வகையில், கப்பல் பரிமாற்றங்களுக்கு தனது நீர்நிலைகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதே இந்தியாவின் நோக்கமாகும் என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது. அனுமதிக்கப்பட்ட மூன்று கப்பல்களான ஸ்டெல்லர் ரூபி, அஸ்பால்ட் ஸ்டார் மற்றும் அல் ஜாஃப்சியா ஆகி…
-
- 0 replies
- 62 views
-
-
நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு: ஜூலை 09, 2020 05:00 AM புதுடெல்லி, பிரதமர் மோடி கடந்த மாதம் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள். இதற்க…
-
- 0 replies
- 320 views
-
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறைவு: சுகாதார அமைச்சு by : Yuganthini சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறைவாகதான் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிரிழப்புகள், சர்வதேச அளவில் 3.41 சதவீதமாக இருக்கும்போது, இந்தியாவில் அது குறைவாக 2.5 என்ற சதவீதத்தில் காணப்படுகின்றது. கடந்த 5 மாதங்களில் முதல் முறையாக இறப்பு விகிதம் இந்த அளவுக்கு குறைந்து காணப்படுகின்றது. அத்துடன் மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம் மற்றும் அந்தமான் நிகோபார…
-
- 0 replies
- 298 views
-
-
பூடான் மீதும் கண் வைத்த சீனா.. அடுத்த ஆக்கிரமிப்பு.. . இந்தியாவுக்கு பாதகமாகும் பகீர் முயற்சி.! திம்பு: லடாக் மற்றும் தென்சீனக் கடலை தொடர்ந்து பூடானின் சில பகுதிகளை ஆக்கிரிமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ராணுவ உள் கட்டமைப்பை உருவாக்கி எல்லை நிலையை சீனா மாற்ற முயற்சிக்க உள்ளதாகவும், வரவிருக்கும் 25 வது சுற்று எல்லை பேச்சுவார்த்தைகளில் இதை சாத்தியப்படுத்த சீனா திட்டமிடுவதாகவும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்தியாவின் சிலிகுரி பகுதிக்க அடுத்தபடியாக பூட்டான் இருப்பதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மையமாக உள்ளது. ஆனால் சீனாவுடன் நடத்த உள்ள ச்சுவார்த்தையில் பூட்டான் மேற்கொள்ளப்போகும் எந்தவொரு பிராந்திய சமரசமும…
-
- 0 replies
- 380 views
-
-
இந்திய பொருளாதாரச் சரிவும், அந்நிய கார்ப்பரேட்களின் வரவும் – இதயச்சந்திரன் கொரோனாவால் மோசமாகப் பாதிப்புற்றுள்ள இந்தியாவிற்கு, 750 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளது ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி. சீன தேசத்தால் உருவாக்கப்பட்ட இவ் வங்கியில் (AIIB), இந்தியா உட்பட, அமெரிக்கா-ஜப்பான் தவிர்ந்த, பல மேற்கு நாடுகள் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்திய-சீன மோதல் குறித்த அதிகளவில் கொம்பு சீவி விடும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் யாவும் இந்தக் கடன் விவகாரத்தை ஏன் மறைக்கின்றன?. புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய மசோதாக்கள், வெளிநாட்டு கார்ப்பரேட் வணிகர்களுக்கு புதிய வாசல்களை அகலத் திறந்துள்ளது. இது குறித்தும் இந்த ஊடகங்கள் பேசுவதில்லை. …
-
- 0 replies
- 298 views
-
-
குறைந்தவிலை கொரோனா மருந்திற்காக இந்தியாவை உலகம் எதிர்பார்த்துள்ளது- இந்திய வெளிவிவகார அமைச்சர் குறைந்தவிலை கொரோனா மருந்திற்கு உலகம் இந்தியாவை எதிர்பார்த்திருக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா குறைந்த விலையில் அனைவரும் பெறக்கூடிய கொரோனா வைரஸ் மருந்தினை உற்பத்தி செய்யும் என உலகம் எதிர்பார்த்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பெறக்கூடிய மலிவான கொரோனா வைரஸ் மருந்தினை நாங்கள் உற்பத்தி செய்வோம் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐநாவிற்கு உறுதியளித்துள்ளார் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எனது சகாக்கள் பலருடன் நான் மேற்கொண்ட உரையாடல்களின் போது அவர்கள் இதற்காக காத்திருப்பது புலனாகியுள்ளது என இந்திய வெளிவிவக…
-
- 1 reply
- 363 views
-