அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் திறப்பு! பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் இங்குள்ள ஐதராபாத் நகரத்தில் அமைந்துள்ள, 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலொன்று புனரமைக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. மேலும், புனரமைக்கப்பட்ட இந்த கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளூர் இந்து அமைப்பிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 90% சதவிகிதம் பேர் இஸ்லாமியர்களாக இருந்தாலும் பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மையினராக இந்துக்களே கருதப்படுகின்றனர். இ நாட்டில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்ந்து வருவதாக அர…
-
- 2 replies
- 534 views
-
-
பாகிஸ்தானில் 1300ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு! November 21, 2020 வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் (Swat ) மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பரிகோட் குண்டாய் (Barikot Ghundai) பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இப் புராதன கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்கள், நீர்த்தொட்டி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த ஸ்வாத் மாவட்டம் இருந்தாலும், இந்து சாஹி காலத்தில் கட…
-
- 9 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றன என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் ஃபைஸ் ஹமீது ஆகியோரும் சென்றுள்ளனர். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இம்ரான் கான் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தில் அதிபர் டிரம்பை சந்தித்து அவர் பேசினார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை, இம்ரான்கான் சந்தித்து பேசியபோது இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவது எ…
-
- 0 replies
- 658 views
-
-
பாகிஸ்தானில் அதிகரிக்கும் கட்டாய கடத்தல்கள். பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு குற்றங்களின் அதிர்வெண் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,அங்கு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க எந்த சட்டமும் இல்லை. சிந்து காசி அஹ்மதில் 14 வயது இந்துப் பெண் கடத்தப்பட்டாள், பின்னர் உடனடியாக ஒரு குறிப்பிடத்தக்க வயதான நபரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருவரை அவர்களது வீட்டிலிருந்து கடத்திச் சென்று திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதற்கு எவ்வளவு தகுதி தேவை என்பதை கற்பனை செய்வது கடினம் அல்ல,கடத்தப்பட்ட இந்துப் பெண்களை கட்டாய மதமாற்றம் செய்வது வாடிக்கையானது. சிந்துப் பெண்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அவர்களது வீடுகள…
-
- 1 reply
- 280 views
-
-
பாகிஸ்தானில் அதிகளவான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிப்பு May 22, 2019 பாகிஸ்தானில் அதிகளவான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து அதிகளவான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இதனையடுத்து குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில் அவர்கள் அனைவருக்கும் எச்.ஐ.வி இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 24ம் திகதி ஒரு சிறு பகுதியில் மட்டும் 15 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தீவிர …
-
- 0 replies
- 335 views
-
-
பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி damithFebruary 12, 2024 பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று (11) முடிவடைந்த நிலையில், சிறை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் பெரும்பான்மையாக 264 ஆசனங்களில் 101 இடங்களை வென்றிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்று 60 மணி நேரத்திற்குப் பின்னரே இறுதி முடிவு வெளியாகியுள்ளது. இந்தத் தாமதம் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இதில் மற்றொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரீபின் கட்சி பாராளுமன்றத்தில் மிகப்பெரிய ஒற்றை கட்சியாக 75 இடங்களை வென்றுள்ளது. எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை வெல்லாத நிலையில் கூட்ட…
-
- 2 replies
- 557 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு – 50 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானின் Balochistan மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Balochistan Mastung மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த நிலையிலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த குண்டு வெடிப்புக்கு இதுவரையில் யாரும் பெறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பு தங்களுக்கும் இந்த வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என குறிப்பிட்…
-
- 0 replies
- 253 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரியாஸ் சோஹைல் பதவி, பிபிசி உருது, கராச்சி 24 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கஸ்பானோ பலூச்சின் வீடு குவாதர் துறைமுகத்தின் பழைய பகுதியில் உள்ளது. அது இப்போது மழையால் முற்றிலும் இடிந்ததுவிட்டது. இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவரது மருமகன் ஒரு தையல்காரரிடம் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். மீன்பிடி துறைமுக சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் கஸ்பனோ. 16 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதாகவும், தண்ணீரின் அளவு மிகவும் அதிகமாக இருந்ததாகவும் கூறுகிறார். கஸ்பானோவின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டில் தாக்கிய புயலை விட இது மிகவும் ம…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் இந்து சிறுமிகளுக்கு கட்டாய திருமணம் – விசாரணைக்கு இம்ரான் கான் உத்தரவு பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானில் இந்து வைத்தியர் மீது மத அவமதிப்பு வழக்கு-கடைகளுக்கு தீ வைப்பு பாகிஸ்தானில் அண்மைக் காலங்களில் மத அவமதிப்பு தொடர்பாக பலர் நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். இதன்போது ஆசியா பீபி என்ற பெண் கூட நாட்டை விட்டு வௌியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்தநிலையில், தற்போது மத அவமதிப்பு மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்து வைத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள புலாடியான் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற வைத்தியர் இந்து மதத்தை சேர்ந்தவராவார். இவர் கால்நடை வைத்தியராக பணிப்புரிந்து வருகிறார். இவர் மத அவமதிப்பு செய்வதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. குறித்த பகுதியை சேர்ந்த தலைமை மதகுருவான மவுலவி இசாக் நோக்ரி என்…
-
- 0 replies
- 415 views
-
-
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது : பிரதமர் அலுவலக இல்லத்தை விட்டு வெளியேறினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறினார் இம்ரான் கான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றம் …
-
- 5 replies
- 428 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஆகஸ்ட் 2023, 09:02 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பையடுத்து லாகூரில் உள்ள இல்லத்தில் இருந்த இம்ரான் கானை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ஹுமாயுன் தில்வார், இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்…
-
- 1 reply
- 211 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு- பலர் காயம்! தெற்கு பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கட்கிழமை) சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில், சிந்து மாகாணத்தில் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் விபத்து நடந்ததிலிருந்து பல மணிநேரங்கள் கடந்தும் அணுக முடியாத ரயில் பெட்டிகளில் சிலர் இருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தான் …
-
- 1 reply
- 364 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 03:53 PM பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் மாகாணத்திலேயே இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களுக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/175808
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் குண்டு வெடிப்பை 'இந்தியா ஆதரிக்கும் குழு நடத்தியது' - ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு பட மூலாதாரம், Getty Images 11 நவம்பர் 2025, 13:08 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார். "நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்பட…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பயணிகள் ரயில் தடம் புரண்டதால் எட்டு பேர் காயம்! பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பில் பயணிகள் ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் போலான் மாவட்டத்தின் பேஷி பகுதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் இன்ஜின் உட்பட 8 பெட்டிகள் தடம் புரண்டன. அந்த இடம் மலைப்பாங்கான பகுதியில் உள்ளதால் மீட்புக் குழுவினர் சிரமத்தை எதிர்கொள்வதாக துணை ஆணையர் போலன் ஆகா சமியுல்ல…
-
- 0 replies
- 412 views
-
-
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு: 200 பேர் காயம் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்…
-
- 0 replies
- 155 views
-
-
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாகின்றனர்: ஐ.நா.வில். இந்தியா புகார்! பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஐநா மனித உரிமைக் சபைக் கூட்டத்தில் இந்தியா புகார் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 463 புகார்கள் அந்நாட்டின் விசாரணை ஆணையத்தால் பெறப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர…
-
- 0 replies
- 175 views
-
-
பாகிஸ்தான்: பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த ஜமாத் உத்தவ அமைப்பின் தலைவர் ஹபீஸ் சய்யீத் விடுவிக்கப்பட்டார். ஜூலை 17-ம் தேதி தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சய்யீத்தை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516323 மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில், இந்த தாக்குதலை ஜமாத்-உத்-தாவா என்ற தீவிரவாத அமைப்பு நடத்தியது கண்டறியப்பட்டது இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சய்யீத https://www.hindutamil.in/news/india/159702-.html இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நீரை …
-
- 1 reply
- 314 views
-
-
பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் , மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். பெஷாவரின் சம்கனி போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில், அந்த இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இளைஞர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சங்லா மாவட்டத்தை சேர்ந்த ரவுந்தர் சிங் என்பதும், திருமணத்திற்காக பொருட்கள் வ…
-
- 5 replies
- 617 views
-
-
டிப்தீரியா எனும் கொடிய நோய் ‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே’ என்ற வகை பாக்டீரியாக்களால் பரவுகிறது. இந்தக் கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும் உணவு விழுங்குவதையும் தடுப்பதால் இது தொண்டை அடைப்பான் என அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று எளிதில் ஏற்படும். பெரும்பாலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் வயதானவர்களையும் இது பாதிக்கும். டிப்தீரியாவை குணப்படுத்த ‘டிப்தீரியா ஆன்ட்டி-டாக்சின்’ எனும் உயிர்காக்கும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த மருந்து பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக ஜியோ நியூஸ் தெரிவிக்கிறது. இதனை சிந்து மாகாண சுகாதார அதிகா…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் தலிபன்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம்? பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் உள்ள சொகுசு விடுதியில், தலிபன்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தானுக்கான சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அவர் அதிஷ்டவசமாக தாக்குதல் நடந்த நேரத்தில், சீனாவின் தூதர் நோங் ராங் ஒரு விழாவில் இருந்தர் எனவும், அப்போது அவர் சொகுசு விடுதியில் இல்லை எனவும் பாகிஸ்தானின் உட்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்ததாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததோடு 11பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடந்த பிறகு, இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வர…
-
- 0 replies
- 306 views
-
-
பாகிஸ்தானில் தலிபான்களின் தந்தை என அழைக்கப்பட்ட மதகுரு கொலை November 3, 2018 1 Min Read பாகிஸ்தானில் ராவல்பிண்டியின் மேற்கு பகுதியில், தலிபான்களின் தந்தை என அழைக்கப்பட்ட மதகுரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மௌலானா சமி அல்-ஹக் எனப்படும் மதகுருவே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்ற போதும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவித்துள்ளன. எனினும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகவில்லை. மௌலானா சமி அல்-ஹக் தலைவராக இருந்த வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஹக்கானியா மசூதிப்பாடசாலையில்தான் தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா அமர் உள்பட…
-
- 0 replies
- 223 views
-
-
தலைப் பக்கமாக ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்துள்ளனர் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள். 55 மணி நேரம் நடந்த நான்குகட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு குழந்தைகள் இருவரும் தனித்தனியாக நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இரட்டையர்களின் தாயான சைனாப்பிற்கு ஏழு குழந்தைகளின் பிரசவமும் வீட்டிலேயே நடந்தது. எனவே சைனாப் இந்த இரட்டையர்களை கருத்தரித்து இருந்தபோதும் வீட்டிலேயே பிரசவம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 668 views
-
-
Published By: RAJEEBAN 08 FEB, 2024 | 11:44 AM பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள அதேவேளை பாகிஸ்தான் முழுவதும் மொபைல் இணைய சேவைகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். சட்டஒழுங்கை பேணுவதற்காக இந்த நடவடிக்கை என பாக்கிஸ்தானின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மொபைல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் பெறுமதிமிக்க உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு சட்டமொழுங்கு நிலவரத்தை பேணுவதற்கும் உருவாகக்கூடிய ஆபத்துக்களை கையாள்வதற்கும் இது அவசியம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. …
-
- 7 replies
- 619 views
- 1 follower
-