Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை! கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்ரஸ், கவலை வெளியிட்டுள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்பு கணிக்கப்பட்டதை விட தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. கிளைமேட் சென்ட்ரல் எனும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகையாகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்…

  2. தவறாக நடந்த பூசாரி.. கோவிலுக்குள் நுழைந்து அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய பெண்கள்: சிசிடிவி-யில் சிக்கிய காட்சி இந்தியாவில் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட கோவில் பூசாரி மீது சரமாரி தாக்குதல்." இந்தியாவில் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட கோவில் பூசாரி மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவிலுக்கு வந்த பெண் ஒருவரிடம் பூசாரி தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழுவாக கோவிலுக்குள் நுழைந்த பெண்கள், பூசாரி மீது மிளகாய் பொடியை வீசி, துணிகளைக் கிழித்து அடித்து உதைத்து நிர்வாணமாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வ…

  3. சுர்ஜித்தை தொடர்ந்து மற்றுமொரு சிறுமி ஆழ்துளை கிணற்றுக்குள்! அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறைக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர் சிறுமியை மீட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். சுமார் 50 அடி ஆழம் கொண்ட குறித்த கிணற்றிற்கு பக்கவாட்டில் மற்றுமோர் பள்ளம் தோண்ட…

  4. ஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை.. உ.பி.யில் ஒரு கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிப்பு உத்தரப்பிரதேசததில் உள்ள ஒரு கிராமத்தில். ஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் அந்த கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 91 லட்சம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை செலுத்தாமல் அந்த கிராம மக்கள் பாக்கி வைத்திருந்ததால் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ளது ஜகன்புரா என்ற கிராமம். இங்கு மொத்தம் 300 வீடுகள் காணப்படுகிறது. ஜகன்புரா கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூட கடந்த மாதம் தங்களது மின் கட்டணத்தை செலுத்தவில்லை. இதன் மூலம் அனைவரின் கட்டண பாக்கி என்பது ரூ.91.88லட்சம் ரூபாய் ஆகும். …

  5. தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். தாய்லாந்துக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற சவாஸ்தி பிஎம் மோடி எனும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை அவர் வெளியிட்டார். மேலும் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு குருநானக்கின் 550ஆவது பிறந்த தினத்தையொட்டி நினைவு நாணயத்தையும் மோடி வெளியிட்டார். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பேசிய மோடி வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். இந்தியா-தாய்லாந்து இடையே நிலவும் சிறந்த நட்புறவை க…

  6. மக்களின் நாயகன் ஜெகன் மோகன் ரெட்டி

    • 4 replies
    • 812 views
  7. இந்திய வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இணைப்பு! மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்திய வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடன் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதி லடாக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. குறித்த வரைப்படத்தை மத்திய உட்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வரைப்படத்தின்படி குப்வாரா, பன்டிப்பூர், கன்டேர்பல், ஸ்ரீநகர், பட்காம், புல்வாமா, சோபியான், குல்காம், ரஜோரி, ரம்பான், டோடா, கிஷ்த்வார், சம்பா, கார்கில் ஆகியவை புதிய மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தடன் இந்த வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் முசாராபாத் பகுதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்…

  8. ஐந்தாண்டுகள் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் கடந்த மாதம் 24-ம் தேதி அன்றும் மகிழ்வுடன் இருந்தார். இரண்டாவது முறையாக அரியாசனத்தில் அமரப்போகிறோம் என்கிற பெருமிதம் அவரிடம் இருந்தது. ஆனால், அடுத்த நாளே அவரது ஆசையை, நிராசையாக்கியது கூட்டணிக் கட்சியான சிவசேனா. ஆம்! நாடு முழுவதும் கோலோச்சிய பி.ஜே.பி-க்கு மகாராஷ்டிராவில் ஆட்டம் காட்டிவருகிறது சிவசேனா. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. மற்றொரு புறம் காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிபெற்றன. பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் அதிகமாக சிவசேனா, பி.ஜே.பி கூட்டணி வெற்றிபெற்றுள்…

    • 0 replies
    • 749 views
  9. அணு உலை கணினி மீது 'சைபர்' தாக்குதல்: எந்த அளவுக்கு அபாயகரமானது? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMINERVA STUDIO / GETTY IMAGES சில நாட்களுக்கு முன்பாக கூடங்குளம் அணு உலையின் கணினிகள் தீங்கேற்படுத்தும் நிரல்களால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அணு உல…

  10. காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் சீனாவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்று எச்சரித்துள்ள மத்திய அரசு, காஷ்மீரின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. புதன் கிழமை நள்ளிரவு முதற்கொண்டு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது 2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாறியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்த கருத்துதான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 'இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற…

    • 0 replies
    • 471 views
  11. NEW YORK: புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை முழுவதுமாக கடலில் மூழ்கி விடும் என்று சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை சேர்ந்த பருவநிலை மையம் (Climate Central) என்ற அமைப்பு பருவநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அமெரிக்க இதழான Nature Communicatios -ல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது- புவி வெப்பமயமாதல் காரணமாக இனிவரும் நாட்களில் கடல் மட்டம் உயரக்கூடும். இதன்படி, 2050-ம் ஆண்டுக்குள் மும்பையில் 15 கோடிப்பேர் வசிக்கும் இடம் கடலில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, மும்பையில் கடல் பகுதியை ஒட்டி…

  12. இஸ்லாமாபாத்: இந்திய படைகளுக்கு எதிராக ஆசாத் காஷ்மீர் மக்கள் புனிதப் போர் புரியக்கூடாது என்றும், அது பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிரானதாகும் எனவும் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வந்த பாகிஸ்தானில், தீபாவளி திருநாளான நேற்று காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் மக்கள் பேரணியில் ஈடுபட்டும், போராட்டம் மேற்கொண்டும் இந்தியாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இ…

    • 2 replies
    • 416 views
  13. தமிழ்நாட்டை டார்கெட் செய்த மோடி...!! ஜல்லிக் கட்டுப்போட்டியை பார்க்க அலங்காநல்லூர் வருகிறார் ரஷ்ய அதிபர்...!! ஜி ஜின்பிங்கை அடுத்து தமிழகம் வரும் விளாடிமிர் புடின்.! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்களின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியைகாண ஆண்டுதோறும் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் ஜல்லிக்கட்டுப்போட்டி, முன்பைவிட அதிக சிறப்புடனும், அதிக ஆர்வத்துடனும் தமிழக அரசாலும், ஜல்லிக்கட்டு ஆதரவு…

  14. இந்திய ராணுவ வீரர்கள் தான் என்னுடைய குடும்பம், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண விரும்புகிறேன் என காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி குறிப்பிட்டார். காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ. தூரத்தில் குரெஸ் ராணுவ முகாம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான ஆட்சி மலர்ந்து பிரதமரானதும், முதன் முறையாக மோடி இங்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பிரதமர் மோடி பேசியதாவது: தீபாவளியை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடுவது ஒரு பாரம்பரியம் . அதை ராணுவ வீரர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். ஆகவே இங்கு வந்துள்ளேன். நீங்கள் தான் என் குடும்பம். நாட்டில் பல எல்லைப்பகுதிகள் உள்ளன.ஆனால் நீங்கள் இருக்கும் இந்த ப…

    • 0 replies
    • 305 views
  15. பிரதமர் மோடி தாய் ஹீராபென்னுடன் இருக்கும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம்பிரதமர் நரேந்திர மோடி தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசி பெறும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பரிசு பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஏலத்தில் விற்பனை செய்து கிடைக்கும் தொகையை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடவே பிரதமர் மோடி முன்வந்தார்.இதையடுத்து அந்த பரிசு பொருட்கள் இடம் பெற்ற கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை மத்திய கலாச்சார அமைச்சகம் டெல்லியில் நடத்தியது. இதில் மொத்தம் 2,772 பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.அவை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட…

  16. * இரண்டரை ஆண்டுக்கு பின் முதல்வர் பதவியை ஒப்படைக்க எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போட வலியுறுத்தல் மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜ- சிவசேனா இடையே கருத்து வேறுபாடு அதிகமாகி இருக்கிறது. ‘இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, 50 சதவீத அமைச்சர்கள் பதவி வழங்கப்படும்’ என எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் எழுதி கொடுக்க வேண்டும் என பாஜ.வுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க இருக்கின்றன. ஆனால், ஆட்சியில் தங்களுக்கு முதல்வர் பதவி உட்பட அனைத்திலும் சமபங்கு கொடுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூற…

    • 0 replies
    • 325 views
  17. நவாஸ் ஷெரிப் பிணையில் விடுதலை! ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நல குறைவினால் பிணை வழங்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட நவாஷ் ஷெரீப்புக்கு அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www…

  18. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன. மலேசிய காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரு வேறு மாநிலங்களை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர். இந்நிலையில், மலாக்கா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனின் மனைவி உமாதேவி தனது கணவரை விடுவிக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு, கோலாலம்பூரில் உள்ள மலேசிய காவல்துறை தலைமை அலுவலகமான புக்கிட் அமானுக்கு எதிரே சாலையோரம் அமர்ந்து தனது போராட்டத்தை…

  19. பங்களாதேஷில் படுகொலை செய்யப்பட்ட மாணவி: 16 பேருக்கு மரண தண்டனை பங்களாதேஷில் பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மறுத்ததற்காக 19 வயது மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டமை நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், குற்றவாளிகள் 16 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஏப்ரலில் பங்களாதேஷ் பள்ளிக்கூடம் ஒன்றில் பள்ளி மாணவி நுஸ்ரத் ஜஹான் ரஃபி என்பவர் தலைமை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு தெரிவித்த ரஃபி, காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார். இதைத் தொடர்ந்து வகுப்பறையிலிருந்து மாணவியை கட்டடத்தின் மாடிக்கு அழைத…

  20. இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று இலங்கை நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று மூன்று கிறித்துவ தேவாலயங்களிலும் மூன்று ஹோட்டல்களிலும் நடைபெற்ற தற்கொலைப்படை தீவிரவாதத் தாக்குதலில் 270 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எட்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 40 பேர் வெளிநாட்டவர், 45 குழந்தைகளும் இத்தாக்குதலில் உயிரிழந்தனர். இத்தாக்குதல் குறித்து இலங்கை நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தியுள்ளது. 272 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் ச…

    • 0 replies
    • 219 views
  21. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு – ப.சிதம்பரம் பிணையில் விடுதலை ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிகழமை) உத்தரவிட்டது. மேலும் ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் நீதிபதிகள் விதித்தனர். இதேநேரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே, சி.பி.ஐ வழக்கில் பிணை பெற்றாலும் ப.சிதம்பரம் உடனடிய…

  22. தபால் சேவை நிறுத்தம்- பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் இந்தியாவுடனான தபால் சேவையை எந்தவித முன்னறிவிப்புமின்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதற்காக இந்திய அரசு அந்நாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தபால்களை அந்நாடு ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் தபால்களையும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தபால்களையும் அந்நாடு நிறுத்தி வைத்ததை அடுத்தே இந்திய தபால் துறை அதிகாரிகளும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தபால்களை நிலுவையில் வைத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “பாகிஸ்தான் எந்தவித முன்னறிவிப்பும் இன்ற…

  23. தினத்தந்தி: "எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்" - பா.ஜ.க வேட்பாளர் ஹரியாணா மாநில சட்டசபைக்கு இன்று (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள கர்னால் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பக்‌ஷிஷ் சிங் விர்க் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் பேசும்போது, 'இன்று நீங்கள் ஒரு தவறு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு துயரப்படுவீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டளிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். மோடிஜியும், மனோகர்ஜியும் (முதல்-மந்திரி) மிகவும் உஷாரானவர்கள். வாக்குப்பதிவு எந்திரத்தி…

  24. ஜம்மூ-காஷ்மீரில் எல்லை தாண்டி தாக்குதல் ; இரு இராணுவ வீரர் உட்பட மூவர் பலி! Published by J Anojan on 2019-10-20 11:19:42 எல்லை தாண்டி பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலால் 2 இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். ஜம்மூ காஷ்மீரின், குப்வாரா மாவடத்தில் இன்று காலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://www.virakesari.lk/article/67223

  25. பிரதமர் இம்ரான் கானை பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். கர்சாஸ் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் 12ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானில் விரைவில் ஜனநாயகம் மற்றும் சமூக-பொருளாதார உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என உறுதி கூறினார். இந்த நோக்கங்கள் நிறைவேற பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வாக்குறுதியை நிறைவேற்றி மக்களிடம் நம்பகத்தன்மையை பெற தவறிய இம்ரான் கானை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்கட்சிகள் ஒன்றுகூடி முடிவு செய்துள்…

    • 0 replies
    • 267 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.