யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
31 topics in this forum
-
View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார். எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை. மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம். தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில் ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம். ஆசை பலகோடி அத்தனையும்…
-
-
- 16 replies
- 1.9k views
- 1 follower
-
-
உ மலருக்கு தென்றல் பகையானால் .......! மலர்ந்திட கதிரவன் துணையுண்டு. (1). நிர்மலா சங்கரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்கு வந்து பத்து வருடமாகின்றது. முன்பெல்லாம் மிக அன்பாயிருந்த அவளது மாமியார் இராசம்மா இப்போதெல்லாம் அவள்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கிறாள். அது நிர்மலா அவளைக் கடந்து போகும் போதெல்லாம் ஜாடைமாடையாக கதைப்பதும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கி சண்டை போடுவதுடன், மாலையில் மகன் சங்கர் வேலையால் வந்ததும் போட்டுக் குடுப்பதிலும் தெரிகிறது. அவனும் வேலையால் அலுத்துக் களைத…
-
-
- 71 replies
- 4.4k views
- 1 follower
-
-
மெய்தீண்டாக் காதல் டூயட் பாடல் . ஆண் : அன்பே .....! பெண் : அத்தான்....! மௌனம் அவன் மடியில் சாய்ந்து சொல்லுங்கள் அத்தான்.....! ஆண் : நிலவை மூடி அசையும் முகிலாடையை விலக்கிடவே கரம் தயங்கிடுதே பெண்: நாணம் கொண்ட நானும் நாணம் கெட்டு நிக்கிறேன் மனசாலும் உன் செயலை தடுக்கலையே ஆண் : பாட்டன் வழி வந்த பழக்கதோசம் பேரன் என்னிடமும் நிறைந்திடுதே பெண் : பூட்டி வழி வந்த பண்பாட்டை -- முழுதாய் என் உடலும் காத்திடுதே இருவரும்: மலர்மாலை சூடி மங்கலநான் சுமந்து மங்கியதோர் நிலவினில் ம…
-
-
- 19 replies
- 1.9k views
-
-
கால் நூற்றாண்டுகளாய் களம் கண்டு-நின்றியங்கும், யாழ் இணையம்- நூறாண்டு மேல் உயர வாழ்த்துக்கள் ! மச்சானின் நெல் வயலில் மகிழ்ந்திருந்த நெல் மணிகள், கச்சான் காத்தடித்ததனால் கதிர் விலகிச் சிதறினவே. அருகினிலே சில மணிகள் ஆழ மண்ணில் சில மணிகள் தெருவினிலே சில மணிகள் தேசம் விட்டுச் சில மணிகள். கலகலத்துச் சிரித்துவிட்டு கச்சான் காத்தோய்ந்து போக, வெலவெலத்துப் போன மச்சான் வெளிப்பட்டான்-செயற்பட்டான். பதறிப் போன மச்சானும் சிதறிப்போன மணிகளதைக், கதறிக் கொண்டு சேகரித்துக் கட்டிச் சேர்த்தான் கோணியிலே. சிதறிப் போன மணிகளாகச் சிறிலங்காத் தமிழர் இன்று. …
-
-
- 4 replies
- 833 views
- 1 follower
-
-
2021´ம் ஆண்டு கார்த்திககை 29´ம் திகதியன்று வேலையிடத்தில் நடந்த விபத்தின் பின்... நோயாளர் காவு வண்டியில்.. வேலையிடத்தை விட்டு சென்ற நான், 15 மாத தொடர் சிகிச்சை, தெரப்பியின் பின்... இன்று முதன் முதலாக மீண்டும் வேலையிடத்துக்கு சென்றேன். 🙂 வைத்தியரின் அறிவுரைப்படி... முதல் இரண்டு கிழமைகள் தினமும் 3 மணித்தியாலமும், மூன்றாம், நான்காம் கிழமைகள் தினமும் 5 மணித்தியாலமும், ஐந்தாம், ஆறாம் கிழமைகள் 7 மணித்தியாலமும் வேலை செய்து பார்த்து சரி வந்தால், தொடர்ந்து எட்டு மணித்தியாலப் படி வேலை செய்யலாம் என்று சொன்னார். இன்று முதல் நாள் என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இருவர் ஓய்வெடுத்து …
-
-
- 89 replies
- 6.1k views
- 2 followers
-
-
சிறுக ஓர் தேர் கட்டி ஊர் கூடி இழுக்க ஆசை வைச்சு.. தமிழ் தேசியம் சில்லாய் வைச்சு கருத்துக்கள் எனும் தடம் பதித்து ஆண்டுகள் 25 தானிழுக்க வெள்ளித் தேராய் ஓடுகிறது அதுவே யாழ் களம்..! களத்தின் நாயகனே மோகன் எனும் முதல்வரே தேரோட்டியாய் தாங்கள் என்றும் அமைய வேண்டும்...! விலகி நின்றாலும் நீங்கள் வழிநடத்த வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் அதன் காலக் கண்ணாடியில்...! வம்புகள் தும்புகள் வந்தாலும் போனாலும் சம்பவங்கள் நொடி மறந்து கருத்தால் வேறுண்டாலும் தமிழால் இணைந்து நவீனத்துவம் உள்வாங்க தொடரட்டும் யாழ் எனும் வெள்ளித் தேர் இழுப்பு...!! …
-
-
- 7 replies
- 988 views
-