யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
71 topics in this forum
-
மழைப் பாடல்கள் ---------------------------- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ..... என்று சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஆரம்பித்திருப்பார். மங்கல வாழ்த்தில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய பின், மழையைப் போற்றி, பின் சிலம்பின் காப்பியம் கதையை ஆரம்பிக்கும். இங்கு இப்பொழுது ஒவ்வொரு திங்களில் இருந்து ஞாயிறு வரையும் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மாமழை கண்டு, இளங்கோவடிகள் இப்பொழுது இருந்திருந்தால், அவரே சலித்துப் போய் 'மாமழை போதும், மாமழை போதும்' என்று பாடியிருப்பார். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இங்கு தினமும் …
-
- 2 replies
- 667 views
-
-
நீங்கள் எப்போதாவது பசித்திருந்திருக்கிறீர்களா ஆம் பசித்திருத்தலின் கொடுமையை நான் அனுபவித்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது வெறுங் காலுடன் நடந்துள்ளீர்களா ஆம் பாதணிகள் இன்றி நான் பல நாட்கள் நடந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உடுத்த உடையின்றித் தவித்திருக்கிறீர்களா ஆம் நான் மாற்றுத் துணியின்றிப் பல நாட்கள் இருந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உங்கள் வீடு பிரிந்ததுண்டா ஆம் அகதியாகிப் பலமுறை நான் அலைந்திருக்கிறேன் ஆம் வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல பல நேரம் சுமையாகிறது சில நேரம் சுகமாகிறது …
-
-
- 5 replies
- 587 views
-
-
முடி திருத்தகம் ஒன்றில் இன்று நான் அவளைச் சந்தித்தேன் அவள் அமெரிக்க நாட்டின் ஆப்கான் அகதி பல்கலை ஒன்றில் பட்டம் பயிலும் அவள் பகுதி நேரம் அங்கே பணி புரிகிறாளாம் இப் புனித மாதத்தில் தன் ஊரில் இல்லாமை பற்றி அதிவருத்தம் கொண்டாள்…
-
-
- 6 replies
- 591 views
-
-
அண்மையில் Plam Spring California என்ற இடத்தில் போய் 4 நாட்கள் தங்கியிருந்தோம். இந்த தேசம் முழுவதும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் நன்றாக காற்று வீசக் கூடிய இடத்தில் Windmills Farm என்று சிறிய காற்றாலைகளில் இருந்து பெரிய பெரிய காற்றாலைகள் வரை பூட்டி மின்னுற்பத்தி பண்ணுகிறார்கள். ஒருநாள் இதைப் பார்க்க போயிருந்தோம். அவர்களின் உத்தரவுடன் வாகனத்திலேயே பயணித்தபடி பார்வையிடலாம். அவர்களின் அலுவலகத்துக்குள் போனால் காற்றாலை எப்படி இயங்குகிறது.எவ்வளவு மின்சாரத்தை பெற முடியும்.காற்றே இல்லை என்றால் எப்படி மின்சாரம் வழங்குவது. மிக முக்கியமாக இதில் பிரச்சனை வரும்போது எப்படியெல்லாம் திருத்த வேலைகள் செய்யலாம்.உள்ளே போவதற்கு எப்படி போவது. இது…
-
-
- 6 replies
- 877 views
- 1 follower
-
-
ஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும். ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்…இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள். ஆண்டவர்களில…
-
-
- 7 replies
- 1.3k views
-
-
புளுகுப் போட்டி -------------------------- மேடைப் பேச்சு சம்பந்தப்பட்ட எல்லாக் கலைகளும் யுத்த காலத்தை தாண்டியும் நன்றாகவே வளர்ந்து விட்டிருந்தாலும், 'புளுகுப் போட்டி' என்ற கலை வடிவம் ஏறக்குறைய முற்றாக அழிந்து போனது நெடுங்காலம் ஒரு கவலையாக இருந்தது. எந்த எந்த ஊர்களில் இந்தக் கலை வடிவம் அந்நாட்களில், 80களின் தொடக்கத்தில், இருந்தது, வளர்ந்தது என்று தெரியவில்லை, ஆனால் நான் வளர்ந்த ஊரில் அன்று மிகவும் செழிப்புடன் இது வளர்ந்து கொண்டிருந்தது. மூளையிலுள்ள நியூரான் நெட்வொர்க் போன்றதொரு மிகச் சிக்கலான ஒழுங்கைளின் வலைப்பின்னலால் உருவாக்கப்பட்டது என்னூர். ஊரில் சில ஒழுங்கைகளின் முடிச்சுகளில் காணாமல் போய், அப்படியே இன்னுமொரு முடிச்சில், நேர விரயம் ஏது…
-
-
- 2 replies
- 458 views
-
-
(குறுங்கதை) குரு தட்சணை ----------------------- அம்மாச்சி கதையை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். எப்பவோ பெய்ய ஆரம்பித்திருந்த மழை இன்னும் விடவில்லை. ஓடும், தகரமும் சேர்ந்த வீட்டுக் கூரையில் இருந்து இரண்டு விதமான ஒலிகள் கலந்து வந்து கொண்டிருந்தன. மழைக்கு இதமாக அம்மாச்சிக்கு அவரின் கையில் ஒரு சுருட்டு இருந்தது. அம்மாச்சியின் அருகில் ஒரு பணிஸூம் ஒரு கடதாசியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கதைகளின் நடுவில் சில இடைவெளிகளை இடைக்கிடை எடுத்து, அம்மாச்சி அந்த பணிஸில் ஒரு துண்டை சாப்பிடுவார். சுருட்டும், பணிஸும் அவன் அம்மாச்சிக்கு வாங்கிக் கொடுப்பவை. அம்மாச்சி சொல்லும் கதைகளுக்கு அது அவர் கேட்கும் கூல…
-
-
- 2 replies
- 540 views
-
-
2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, …
-
-
- 32 replies
- 2.9k views
- 1 follower
-
-
Dangar Island - தனிமை விரும்பிகளுக்கு மட்டும்… கொஞ்ச காலமாகவே ஒன்றிலும் நாட்டம் ஏற்படவில்லை. வேலைகளும் அதிகம், எல்லாவற்றிலும் இருந்து சற்று விலகி அமைதியாக இருக்க மனம் விரும்பியது. இந்த தீவு பற்றி கேள்விப்பட்டு அங்கே போவதற்காக ஓரு அதிகாலையில் வெளிக்கிட்டு இந்த தீவிற்கு வந்தோம். இது ஒரு சிறிய தீவு.. சிட்னியின் ஆரவார இயந்திர வாழ்கையிலிருந்து சற்று விலகி இருக்கும் ஒரு தீவு. Hawkesbury ஆற்றில் அமைந்துள்ள இந்த தீவை நீங்கள் ஆகக் குறைந்தது 1 மணித்தியாலத்திற்குள் சுற்றிப் பார்த்துவிட முடியும். Hawkesbury ஆற்றின் அழகு!! இந்த தீவிலும், இந்த தீவிற்கு வரும் வழியிலும் கண்ணில் பட்டதை கருத்தை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நான் இருக்கு…
-
-
- 10 replies
- 1.2k views
-
-
எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... உயிரிகளின் வாழ்வானது காட்டிலேயே மையங்கொள்கிறது. என்னதான் மனிதன் புதிய தேடல்களுள் முகிழ்ந்து மகிழ்ந்தாலும் மன ஆறுதலுக்காக எங்கே போகின்றான். இயற்கையை நோக்கித்தானே. இயற்கை என்றதும் முதலில் எம்முன் தோன்றுவது காடும் மலையும் அவற்றின் வனப்பும் அமைதியுமே எனில் மிகையன்று. எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை நேற்று எப்போதாவது வீட்டிலே போடப்படும் தொலைக்காட்சியிலே ஆதவன் காணொளியலையினூடாகப் பார்த்தேன். காட்டையே வாழ்வாகக் கொண்ட மக்கட் கூட்டத்திலே நண்பர்கள் இருவர். ஒருவன் காட்டைப் பாதுகாக்க நினைக்கும் கதாநாயகன். மற்றவனோ நண்பனைப் பணயம் வைத்துக் காட்டதிகாரியாகிக் காட்டையழித்து மரங்களைக் கடத்தத் துணைபோகும் ஒருவன் என இருவருக்கிடையே நிகழும் சில சம்பவங்க…
-
-
- 5 replies
- 456 views
-
-
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. திங்க ள் வேலைக்கு லீவு வேணும்.. சாட்டேதும் சொன்னால் மனிசி நோண்டுவா.. அடிச்சது லக்கு… சூரிய கிரகணம் சனிதோசம்…உள்ளவை கட்டாயம் பார்க்க வேணும்..இது செல்வகணபதி ..அய்யர் கண்மூடி மூன்று நிமிசம் பார்த்தால்… கண்ட தோசமும் ஓடிடும்..இது அம்மன் கோயில் அய்யர்…. அடிசக்கை…ஆரும் இதை விடாதையுங்கோ பாருங்கோ..பெரும்பேறு கிடைக்கும் அய்யப்பன் அய்யர்.. சனியனை சாட்டுச் சா ட்டாக சொல்லி சமாளிச்சு …லீவு எடுத்தாச்சு.. எனி பிளான் இரண்டு… மச்சுமுடிய இரண்டு மணியாகும் கிரகணம் மூன்று மணிக்கு… காலை பத்துமணிவரை காவல் இருக்கோணுமே.. பிளான் மூன்றும் ரெடி…
-
-
- 10 replies
- 849 views
-
-
அன்று ஊரில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகள் பல இறுதிக் கட்டத்தில் கைகலப்பில் முடியும். ஓரிரண்டு நடுவர்கள் தான் ஊரில் இருந்தனர். ஒவ்வொரு தடவையும் கெஞ்சிக் கூத்தாடி அவர்களை போட்டிகளுக்கு கூட்டிக் கொண்டு வருவது. வந்த பின் அவர்களுக்கு என்ன நடக்கும் என்றால்.......... சிறந்த நடுவர் --------------------- கறுப்பு சட்டை கறுப்பு காற்சட்டை கறுப்பு காலணி கறுப்பு மணிக்கூடு அணிந்து நடுவில் நின்றார் நடுவர் வரப்போவதை அறியாத மணவறை மாப்பிள்ளை போல அந்தப்பக்கம் அவர்கள் இந்தப்பக்கம் இவர்கள் அந்த அணி சண்டியர்கள் இந்த அணி சவலைகள் சவலைகள் சந்தியில் முதல் நாள் ஏடாகூடமாக ஏதோ சொல்ல சண்…
-
- 0 replies
- 290 views
-
-
இது என்ன மழையோ, இங்கு நான் இருக்கும் பாலை நிலத்தில் இப்படி பெய்து கொண்டேயிருக்கின்றது. இங்கு முன்னர் இப்படியான ஒரு மழையை நான் காணவில்லை. ஊரில் தான் மாரியில் இப்படி பெய்திருக்கின்றது. ************************** ஒரே மழை ---------------- அன்று அங்கே மாரியில் அடைமழையில் இடுப்பளவு ஓடும் வெள்ளத்தில் குளிப்போம் வெள்ளத்தின் போக்கில் கடல் வரும் ஓங்கி ஓங்கி கடல் அலை கரையை அடிக்கும் என்னூருக்கு ஏதோ ஒரு சாபமிடுவது போல அலையை தொட்டு தொட்டு ஒதுங்குவோம் வெட்ட வெளியை வெள்ளம் மூடும் பத்து லட்சம் பேத்தைக் குஞ்சுகள் பிறக்கும் அன்று வந்து வெள்ளத்தில் வால் ஆட்டி ஆட்டி நீந்தும் அவை ஒரு கையில் அள்…
-
-
- 3 replies
- 539 views
-
-
இலையுதிர் காலம் எங்கும் உள்ளது தான். நாட்டுக்கு நாடு இது எந்த மாதங்கள் என்பதில் தான் ஒரு மாறுதல் இருக்கும். கொட்டோ கொட்டென்று கொட்டும், அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான். கொட்டுவதும், பின்னர் துளிர்ப்பதுமாக மரங்கள் இருக்கும். உயிர்களும் போவதும், பின்னர் புதியன வருவதுமாக தெருக்களும் இருக்கின்றன. ** இலை என்றால் உதிரும் -------------------------------------- என்ன அழகு என்று தினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க இலைகள் கொட்ட ஆரம்பித்தன வாசல்களும் தெருக்களும் விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன …
-
-
- 8 replies
- 849 views
-
-
பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூட…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
ஆரோக்கிய நிகேதனம் -------------------------------------- இன்று இலவசமாக வழங்கப்படும் ஆலோசனைகளில் அதிகமாக முதலாவதாக முன்னுக்கு நிற்பது ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டல்களே. அதற்குப் பின்னால் மகிழ்ச்சியுடன் வாழ்வது, வெற்றியுடன் வாழ்வது, அன்புடன் வாழ்வது, அறத்துடன் வாழ்வது, அமைதியுடன் வாழ்வது, தமிழுடன் வாழ்வது இப்படியான இலவச ஆலோசனைகளின் வரிசை அசோகவனத்தில் அனுமார் வால் நீண்டது போல நீண்டு வாசிப்பவர்களை பதறவைக்கும். சமூக ஊடகங்களினூடாக இவை வழங்கப்படும் போது, ஒரு லைக்கை வாசிக்காமலேயே போட்டுவிட்டுத் தப்பிவிடும் வசதி இருக்கின்றது. நேரில் வழங்கப்படும் போதும் தான் திக்குமுக்காட வேண்டியிருக்கின்றது. இங்கு ஒருவரின் வீட…
-
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
அழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள். எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அ…
-
-
- 37 replies
- 3.4k views
- 2 followers
-
-
யாழ். முற்றவெளியில் தமன்னாவை பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் சென்ற மாசி மாதம் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சியின் போது பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டமை வாசகர்களுக்கு நினைவிருக்கும். சுமூகமாக நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா மேடைக்கு வந்த போது, ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தமன்னாவை பார்க்க முண்டியடித்து மேடைக்கு முன் சென்ற போது நிகழ்ச்சியில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த பனைமரத்தில் ஏறி தமன்னாவை பார்த்து ரசித்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக தென்னிந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் அலசி ஆராயப்பட்டது. பனைமரத்தில் ஏறிய இந்த நிகழ்வானது …
-
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்" மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதி என்பது இந்தியாவின் பண்டைய ஆரிய சமூக அமைப்பில் எழுதப்பட்ட அரசியல் சட்டம். ஆனால் அது ஸ்மிருதிதான். அது ஸ்ருதி அல்ல. ஸ்ருதி என்பது இயற்றப்படாதது, தொன்று தொட்டுப் பரம்பரை பரம்பரையாக காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது அல்லது எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. ஸ்மிருதி என்பது ஒரு காலத்துக்காக மனிதரால் எழுதப்பட்டது. மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என நம்பப்படுகிறது. அந்த காலத்தின் தேவையை பொறுத்து, அவர்களின் அறிவு, நம்பிக்கையைப் பொறுத்து எழுதப்பட்டது. அவ்வளவுதான். அத்துடன் பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்காகவும் வந்தது தான் இந்த ‘மனு தர்மம்’என…
-
-
- 6 replies
- 664 views
- 1 follower
-
-
(குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும்…
-
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
தேனும் விஷமும் ------------------------------ நண்பன் ஒருவர் ஒரு சந்தியின் முப்பது வினாடிகள் காட்சி ஒன்றை அனுப்பியிருந்தார். நண்பன் அயலூர் தான் என்றாலும், இப்பொழுது தான் இந்தச் சந்திக்கு முதன் முதலாகப் போயிருப்பதாகச் சொன்னார். எந்தச் சந்தியும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களினதும், கதைகளினதும் களம். 'எப்படியும் சந்திக்கு வந்திடும்', 'சந்தி சிரிக்கும்', 'கடைசியாக சந்தியில் தான் நிற்கப் போகின்றாய்' என்ற அடைமொழிகளுடன் சாகாவரம் பெற்று நிற்கும் சாட்சி சந்திகள். நண்பனின் சந்திக் காட்சி ஆரம்பிக்கும் இடத்தில், குமார் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற அன்று, 1976 அல்லது 1977 அல்லது அந்த ஆண்டுகளில் ஒரு நாள்,…
-
-
- 12 replies
- 1.5k views
-
-
இந்த ஏழு நாட்கள் ----------------------------- ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்து விட்டாய் என்று கள நிர்வாகம் ஒரு பதக்கம் கொடுத்திருக்கின்றார்கள். வெறும் ஏழே ஏழு நாட்கள் தான் ஆகியிருக்கின்றதா? ஏதோ ஒரு யுகம் இங்கே உருண்டு பிரண்டு கிடந்தது போல மனம் நினைக்கின்றது. பல வருடங்களாக தினமும் பார்க்கும் 50 தளங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது, போன வாரம் வரை. அப்படியே முகப்பிற்கு வந்து, பிடித்ததை வாசித்து விட்டு போய்க் கொண்டிருந்தேன். உறுப்பினராக உள்ளே வந்து பார்த்தால்.........பெரும் பிரமாண்டம்.....👏👏 நல்ல ஒரு கட்டமைப்பும், வசதிகளும் உள்ள ஒரு தளம். கணினி மென்பொர…
-
-
- 16 replies
- 1.6k views
-
-
நானும் ஒரு அடிவிட்டன் எண்பத் தைந்துகளின் பிற்பகுதி பள்ளிக்கூடக் காலத்தில் கலக்கல் கோலி… கொழும்பில் இருந்தாலும் அவசர அழைப்பில் அல்வாயில் நிற்கும் காலம்… இறுதி ஆட்டமொன்று.. இறுக்கமான இரண்டு குழுவும்… இடையில் நடுவராக உடுப்பிட்டியின் உயர்ந்த ஜம்பாவான்…. ஆறடிக்கு மேல் உயரம்… அதுதான் பரவாயில்லை.. பிரதம அதிதி. பொலிசு அதிகாரி… அம்பயரின்…மைத்துனரம்.. அதுவும் பெரும்பான்மை இனம்.. மோதும் அணி இரண்டும் ஏலவே பிக்கல் புடுங்கல் உள்ளவை நடத்தும்..அணியும் நமக்கெதிரானதுதான்…. ஆட்டம் ஆரம்பம்…. அடி உதையும் நடக்குது…. முதல் கோல் நமக…
-
-
- 10 replies
- 1.7k views
-
-
கண்டால் வரச் சொல்லுங்க… கார் களவெடுக்கும் தம்பி… கண்டால் வரச் சொல்லுங்க… கனடா…கார் களவெடுக்கும் தம்பியை.. கண்ட இடமும் அலையாமல் நேராய் வரச் சொல்லுங்க.. முத்தத்தில் மூணுகாரு.. மினுக்கிக் கொண்டு நிற்கும்… முதல் ஆளு..கமரி பார்க்கப் பளபளப்பா நிற்பார்.. பற்ரறி மாத்தவேணும்.. மூணு நாளைக்கு ஒருக்கால் ஒயில் விடவேணும்.. பார்ட்ஸ் எல்லாம் பழசு.. பார்த்துத் தூக்கு தம்பி.. அக்கூரா அடுத்து நிற்பார்.. ஆளு வாட்ட சாட்டமாய் இருப்பார்.. இப்பதான் அடிவாங்கி ஆசுபாத்திரியால் வந்திருக்கார்.. அவர் சுக நலம் இன்னும் எனக்கே தெரியாது… பார்த்து எடுடா தம்பி… பார்ட்ஸ்…
-
- 3 replies
- 1.5k views
-
-
அள்ளு கொள்ளை ----------------------------- பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் செய்வதற்கு இரண்டு வேலைகள் இருந்தன. ஒன்று பந்தடிப்பது, மற்றயது கயங்குண்டு விளையாடுவது. போலை அல்லது மார்பிள் என்று சொல்வதை எங்களூர் பக்கம் கயங்குண்டு என்று சொல்வார்கள். பந்தடிப்பதற்கு ஆட்கள் சேர முன், கயங்குண்டு விளையாடுவோம். பெரும்பாலும் கோஸ் என்று ஒரு விளையாட்டு. அன்று நான் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த இரண்டு விளையாட்டுகளுக்காகவும் அர்ப்பணித்திருந்தேன். பள்ளிக்கூடத்திற்கும் ஒரு பந்தும், கொஞ்ச கயங்குண்டுகளும் கொண்டு போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது பள்ளிக்கூடத்தில் ஒரு புதிய விஞ்ஞான கூடம் கட்டியிருந்தனர். அது ஒரு மூலையில் கொஞ்சம் ஒதுக்குப் பக்கமாக இருந்தது. அதற்கும் …
-
- 0 replies
- 462 views
-