நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நெஞ்சு நோ அல்லது நெஞ்சு வலி (Chest pain or angina) தொடர்ச்சியாக அல்லது விட்டுவிட்டு அடிக்கடி ஏற்படுகிறதா நிச்சயம் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டியவர் என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு. பல நெஞ்சு நோக்கள் இதய நோய்க்கான அறிகுறிகள் என்று குறிப்பிடும் மேற்படி ஆய்வு புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மன அழுத்தத்தோடு வாழ்பவர்கள் மத்தியில் இதன் தாக்கம் அதிகம் என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி இருதய சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள் மத்தியிலும் இவ்வாறான நெஞ்சு நோக்கள் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். எனவே நெஞ்சு நோ என்றால் சாதாரணம் என்று எண்ணிடலாகாது. குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குடும்ப அல்லது உறவுகள் அல்லது தொழில் பிரச்சனைகளால…
-
- 0 replies
- 1.1k views
-
-
image:bbc.com அமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் பகுதியில் மின் கணத்தாக்கச் செயற்பாடுகளில் வேறுபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூளையின் prefrontal cortex பகுதியில் செயற்பாடு மந்தமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் பரிசோதனையின் போது சில வகை பார்வைத் தூண்டல்களை இனங்காணவோ அல்லது அவற்றைப் பெற்…
-
- 12 replies
- 3.4k views
-
-
சத்தான உணவைச் சாப்பிடுங்கள் கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. 2. நன்றாகத் தூங்குங்கள் நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறில…
-
- 7 replies
- 4.2k views
-
-
முத்தம் சில்லென்று சில குறிப்புகள் * ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது *எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் . *காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது . *66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் . *அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற…
-
- 40 replies
- 7.4k views
-
-
நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில் 'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'. என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன். பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்ததற்கான விருந்துபசாரம் நடந்து கொண்டிருக்கிறது. பியா மொட்டைமாடியில் தீவிரமா எதையோ யோசிச்சுக்கொண்டிருக்கிறா. அஜய் : பியா உள்ள வா பனி கொட்டுது பார். பியா : இல்ல அஜய் நம்ம பிள்ளை எப்பிடி நான் பெத்தெடுக்கப்போறனோ தெரியல. பயமா இருக்கு. மகனைக் குளிக்க வாக்க பாத்ரப்ல தண்ணியைத் திறந்து…
-
- 3 replies
- 1.2k views
-
-
நிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு தனது முக அமைப்பின் ஒழுங்குகள் குறித்து கவலைப்படுவதும், அதை குறைந்த பட்சம் முடி, முகப்பூச்சு மூலம் செப்பனிடுவதற்காக மிகுந்த பிரயத்தனம் செய்வதும் விடலைப் பருவத்தின் தவிர்க்க இயலாத பழக்கம். பிறகு திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கையில் நிலை பெற்ற பிறகு இவை மறந்து போனாலும் தனது அழகின் தரம் பற்றியும் தனக்கு, கிடைக்காத வாழ்க்கைத் துணையின் அழகு பற்றியும் எல்லோருக்கும் ஒரு ஏக்கமும், எதிர்பார்ப்பும் இருக்கும். எது அழகு? எதெல்லாம் அழகின்மையோ அவற்றைத் தவிர மற்றெதுவும் அழகுதான். எவையெல்லாம் அழகின்மைகள்? அவற்றை ஊடகங்களும், சினிமா உலகமும், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும் வடிவமைத்து கற்றுத் தருகின்றன. இள வயதில் …
-
- 1 reply
- 2.7k views
-
-
பொதுவாக பெண்களின் கைகளில் குறிப்பாக உள்ளங்கைகளில் ஆண்களை விட 50% அதிகமான நோய் விளைவிக்கும் பக்ரீரியாக்கள் வாழ்வதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு மனிதனின் கையில் 150 இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் வாழ்வது இனங்காணப்பட்டுள்ளது. இருப்பினும் மனிதர்களின் கைகளில் மொத்தமாக 4700 க்கும் மேலான வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் பல நோயாக்கிகள் ஆகவும் விளங்குகின்றன. ஆண்களின் கைகள் அதிகம் அமிலத்தன்மை உடையவையாக இருப்பதால் பெண்களோடு ஒப்பிடும் போதும் ஒப்பீட்டளவில் அங்கு பக்ரீரியாக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றன. இருந்தாலும் ஆண்களும் பெண்களைப் போலவே பல வகை பக்…
-
- 21 replies
- 3.7k views
-
-
உப்பை விட்டால் தொப்பை குறையும்’ : வெள்ளைச்சர்க்கரை வைட்டமின் திருடன்’ | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 294வது கூட்டம் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன வளாகத்தில் நடந்தது.துணைத்தலைவர் தர்மதுரை தலைமை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் 293ம் கூட்ட அறிக்கையும், 2007 நவம்பர் மாத வரவு, செலவு கணக்கையும் சமர்ப்பித்தார். இணை செயலாளர் உலகநாதன் வரவேற்றார். கூட்டத்தின் தலைவர் தர்மதுரை மூச்சுப்பயிற்சியுடன் கூடிய எளிய உடற்பயிற்சிகளைச் சொல்லித்தர கூட்டத்தினரும் செய்து மகிழ்ந்தனர். பின்னர் சிவகாசி இயற்கை வாழ்வியல் இயக்கத்தின் நிறுவனர் சித்தையன் “”ஒல்லி அழகு மேனியைப் பெற உகந்த வழிகள்” என்னும் தலைப்பில் பேசியதாவது.குண்டானால் உண்ட…
-
- 2 replies
- 10.4k views
-
-
ஒற்றைத்தலைவலி - மைகிறேன் கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு.. கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு: நாற்பத்தைந்து வயதுடைய பெண்ணொருவர் கடந்த 8 வருடங்களாக கடுமையான தலைவலியால் துன்பப்பட்டடிருந்தார். இவருக்கு கிழமையில் 2 – 3 தடவை இந்த தலைவலி. 24 – 36 மணித்தியாலங்களுக்கு நீடித்திருந்தது. தலையிடி தரும் நோவற்ற நாட்கள் இவருக்கு இருந்ததில்லை. வழமையான நோவு நீக்கிகள் (பெயின் கில்லர்) எதுவித நீண்ட நாள் பலனையுமு; தரவில்லை. சில சமயங்களில் தாங்க முடியாத நோவினால், நாள் முழுவதும் கட்டிலில் படுத்தேயிருக்க நேர்ந்தது. இவரின் உணவு பெரும்பாலும் காலையில் பாணும் மதிய உணவில் சோறும் இரவில் ( மாப்பொருளாலான) பிட்டும் அமைந்திருந்தன. நாளில் பல தடவை தேநீர், க…
-
- 0 replies
- 1.7k views
-
-
"அழுகிய முட்டை நாற்றம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்' நியூயார்க், அக். 24: அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் துர்நாற்ற வாயு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முட்டை என்றாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அதுவும் அழுகிய முட்டை என்றால், கேட்கவே வேண்டாம், யாராக இருந்தாலும் பல மைல் தூரத்துக்கு அப்பால் ஓடி விடுவார்கள். ஆனால் அந்த "கூமுட்டையில்' ஏராளமான மருத்துவக் குணம் இருப்பதாக கனடாவைச் சேர்ந்த லேக்ஹெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் சல்பைட் வாயு, மனித ரத்த நாளங்களைத் தளர்வாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்று அந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்…
-
- 8 replies
- 3.9k views
-
-
மிளகாய் சாப்பிடுவது நல்லதா? நன்கு பழுத்த, காய்ந்த கார மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது. அளவுடன் தினசரி உணவில் சேரும் பச்சை மிளகாயும், அரைத்த கார மிளகாய்ப் பொடியும் உடலில் இருந்து நன்கு வியர்வை வெளியேற உதவுகிறது. இயக்கத்தைத் தூண்டிவிடுகிறது. வெப்பப் பிரதேச நாடுகளில் நோயாளிகளை உடனே வியர்க்கச் செய்யவேண்டுமென்றே கார மிளகாய் சேர்ந்த உணவைச் சாப்பிடச் சொல்வார்கள். இதனால் வியர்வைப் பெருகி காய்ச்சல் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். மிளகாயின் தோல் நரம்புகளிலும், விதைகளிலும் காப்ஸஸின் என்ற ஆக்கக் கூறுப்பொருள் இருக்கிறது. முழு அளவில் செறிவூட்டப்பட்ட இந்தப் பொருளிலிருந்தே மிளகாய் மூலம் நமக்கு வெப்பம் கிடைக்கிறது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
தண்ணீர்.. தண்ணீர்… on 16-10-2008 18:39 தினமும் அதிகாலை-யில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய…
-
- 7 replies
- 1.9k views
-
-
செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு உருவாவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் செல்லிடத் தொலைபேசிகளின் வெளிப்புற கவசம் மற்றும் பொத்தான்களில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படாத செல்லிடத் தொலைபேசிகளைப் பாவிப்பதால் இப்பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பொதுவான பெண்கள் மத்தியில் நிக்கல் உலோக ஒவ்வாமையின் பாதிப்பு அதிகமாக ஏற்ப…
-
- 10 replies
- 2.1k views
-
-
பல் மருத்துவம் பல் மருத்துவம்- டாக்டர் பதில்கள் Dr தாயப்பன் என் வயது 26. பற்கள் நிஜமாகவே வெள்ளை நிறமாகத்தான் இருக்குமா? ஏனென்றால் என் பற்கள் சிறிது பழுப்பு நிறமாக உள்ளன? - பரிமளா, கொரட்டூர். ஆரோக்கியமான மற்றும் முழுமையாக உருவாகிய பற்கள் வெள்ளை நிறமாக இருக்காது. இருக்கவும் கூடாது. சிறிது பழுப்பு நிறமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும். அதனால் கவலைப்படாதீர்கள். பால் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? நிரந்தரப் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? தெரிந்து கொள்ள சற்று ஆர்வமாக உள்ளது? - தினேஷ், மவுண்ட்ரோடு. கீழ் முன்வெட்டுப் பற்கள் - 6 மாதம் முத…
-
- 5 replies
- 2.5k views
-
-
கணைய அழற்சியைக் குணமாக்கும் மருந்துகள் நோய் அணுக்களால் பாதிக்கப்பட்ட பித்த நீர், கணைய நாளத்தினுள் புகுந்தால் கணைய அழற்சி ஏற்படுகிறது. அல்லது பித்தக் கற்கள் கணையத்தினுள் சென்றாலும் கணைய அழற்சி ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் கணைய அழற்சி பித்தப்பை அழற்சியுடன் இணைந்தே தோன்றுகிறது. கணையப் பகுதியின் மீது அடிபட்டாலும் தாளம்மை நோயின் பின் விளைவாகவும், புளு சுரத்தின் பின் விளைவாகவும் கணைய அழற்சி ஏற்படலாம். கணைய அழற்சி மூன்று வகையாகும். அவை : 1. தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி 2. கடுமை குறைவான கணைய அழற்சி 3. நாட்பட்ட கணைய அழற்சி ஆகியவையாகும். தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி : பித்தப்பையில் உற்பத்தியாகி இருக்கும் பித்தக்கற்கள் நகர்ந்து சென்று கண…
-
- 0 replies
- 6.6k views
-
-
நெஞ்சு எரிச்சல் பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை “நெஞ்சு எரிச்சல் ‘நோய்‘ (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesophagal என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு ‘நெஞ்சு எரிச்சல் நோய்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நோயைப் பற்றி நோக்குவோம். நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொருள…
-
- 0 replies
- 5.7k views
-
-
பித்தவெடிப்பு, பாதத்தின் தோல் உரிதல் போன்றவற்றிக்கு..... எலுமிச்சம் பழத்தின் பலன்களில் ஒன்று...... ''சித்த வைத்தியத் திலகம் '' வைத்தியர் C.P. தண்டபாணி ற்.ஈ.M.Pயின் மருத்துவக் குறிப்பிலிருந்து. கால் பாதத்தில் வெடிப்புக்கள் இருந்தாலும், பாதம் சொரசொரப்பாக இருந்தாலும், பாதம் தோல் உரிந்து இருந்தாலும் புதிய எலுமிச்சை பழத்தை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காலில் ஒவ்வொரு நாளும் தேய்த்துவர வெடிப்புக்கள் நீங்குவதோடு பாதமும் கன்ணாடிபோல் அழகு பெரும். குறிப்பு: பல ''கிறீம்''கள் இப்படியான பிரச்சனைகளை தீர்க்க இருந்தாலும் இது இயற்கை வைத்தியம் என்பதால் உடலுக்குத் தீங்கில்லை. இளங்கவி
-
- 24 replies
- 12.9k views
-
-
ஆண்களுக்கான அழகு குறிப்புகள் ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம் அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும். முதலில் உங்கள் முக அழகை பற்றிய சில குறிப்புகள் சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும். பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது …
-
- 49 replies
- 15.1k views
-
-
அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள் ( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான கட்டுரை ) அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு கடந்த கால பெண்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே எழும் அழகு குறித்த கவலை இங்கிருந்து முளை விட்டிருக்கலாம். ஆனால் இன்றைய சமூகம் அப்படிப்பட்டதல்ல. பெண்கள் தங்கள் அழகைக் காட்டி பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. தங்கள் …
-
- 0 replies
- 937 views
-
-
ஜூலை 16 `குமுதம் சிநேகிதி' இதழில் நடிகை த்ரிஷா தன் அழகு ரகசியம் பற்றிக் கூறுகையில், `நான் சோப்பே யூஸ் பண்றதில்லை, ஒன்லிஃபேஸ்வாஷ்தான்' என்றிருக்கிறார். இதில் என்ன ஒரு சிறப்பம்சம் என்றால், இப்படிச் சொல்லும் த்ரிஷாவே ஒரு குளியல் சோப் விளம்பரத்தில் மாடலாக நடித்திருக்கிறார் என்பதுதான். `சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்' என்று சந்தையில் புதிது புதிதாக குளியல் சோப்புகள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்போது, த்ரிஷா போன்ற பிரபலங்கள் குளியல் சோப்பை அவாய்ட் செய்வதன் காரணம் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் முரளீதர் ராஜகோபால் முன் வைத்தோம். ``த்ரிஷா சொல்றது கரெக்ட் என்பதைவிட, பொதுவாக குளியல் சோப்புகளுக்குப் பதில் ஃபேஸ்வாஷ் யூஸ் பண்…
-
- 2 replies
- 4.7k views
-
-
குங்குமப்பூ மகத்துவம் சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்:- 1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். 2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். 3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். 4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை …
-
- 20 replies
- 6.7k views
-
-
மகளிர் உடல்நலமும் ஹோமியோ மருத்துவமும் ஹோமியோபதி மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பல்வேறு சிறப்புத் தன்மைகளைக் கொண்டது. பிற முறை மருத்துவர்கள் ஐந்தறிவு படைத்த எலி, பூனை, முயல், குரங்கு போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே (ஆரோக்கியமான) மனிதரிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. மருந்தின் அமைப்பு, வீரியப்படுத்துதல், மருந்தைத் தேர்வு செய்தல் அனைத்திலும் ஹோமியோபதி பிற மருத்துவ முறைகளிலிருந்து மாறுபடுகிறது. ஹோமியோபதியில் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கு பிரதானப் பங்கு உண்டு. உடலும், மனமும், உயிரும் இணைந்த படைப்பாக முழுமையாக மனிதனைப் பார்க்கிறது. உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவுகளை வியாதி என ஹோ…
-
- 0 replies
- 2.9k views
-
-
நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை பெறுங்கள் முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம். இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம். எப்படி ஆனதோ? நாரிப்பிடிப்பு ஏன…
-
- 13 replies
- 8.1k views
-
-
பெண்களும், மன அழுத்தமும்................ Women, Tension, tamil, Relax ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று. மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது. சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் …
-
- 35 replies
- 10k views
-
-
நுண்ணுயிர் கொல்லிப்பாவனையும் அதன் தாக்கங்களும் இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம். நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன. பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன? பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும்…
-
- 0 replies
- 3.4k views
-