நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
இந்த 32 விளம்பரங்களையும் அதிர்ச்சி தகவல்களையும் பார்த்தால் ஒரு வேளை புகைப்பதை விட்டு விடுவீர்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் மே 31ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. புகைத்தல் பாவனையை கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வருவதனை நோக்கமாகக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனமானது, வருடாந்தம் ஒரு தொனிப் பொருளை முன் வைத்து மக்களை விழிப்புணர்வூட்டுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இம்முறை தொனிப்பொருளாக உருவமற்ற சிகரட் பெட்டிகளை அமுல்படுத்தல் அமைந்துள்ளது. (எந்த வித விளம்பரங்களுமில்லாத மங்கலான நிறத்தில் அமைக்கப்பட்ட சிகரட் பெட்டி), அவுஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே …
-
- 0 replies
- 941 views
-
-
ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே ‘எய்ட்ஸ் நோய்’ அல்லது ‘அக்கொயர்டு இம்மியூனோ டெபிஷியன்ஷி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 19–வது நூற்றாண்டின் முடிவிலோ அல்லது 20–வது நூற்றாண்டின் தொடக்கத்திலோ மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் எய்ட்ஸ் நோயானது, கடந்த 1981–ம் ஆண்டு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வாளர்களால் முதன்முதலாக கண்டறியப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயானது எச்.ஐ.வி. எனும் வைரஸ் மூல…
-
- 0 replies
- 316 views
-
-
பார்வை தரும் பன்றிகள்: மருத்துவ உலகின் அடுத்த புரட்சி கடந்த சில பத்தாண்டுகளில் உலகின் விஞ்ஞான கேந்திரமாக சீனா வளர்ந்திருக்கிறது. இதில் அதன் மருத்துவ ஆய்வுகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. கண்பார்வைக் குறைபாடு சீனாவில் மிகப்பெரும் பொதுசுகாதார பிரச்சனையாக இருக்கிறது. அங்கே எண்பது லட்சம் பேருக்கு கண்பார்வையில்லை. ஆனால் ஆண்டுக்கு ஐயாயிரம் கார்னியா மாற்று சிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன. தற்போது சீன விஞ்ஞானிகள் இதற்கு வித்தியாசமான புதியதொரு சிகிச்சையை உருவாக்கியிருக்கிறார்கள். சீனாவின் உடலுறுப்பு பற்றாக்குறைக்கு வித்தியாசமானதொரு தீர்வாக பன்றிக் கண்களின் ஒரு பகுதி மனிதர்களுக்கு பொருத்தப்படுகிறது…
-
- 0 replies
- 459 views
-
-
வெற்றிகரமாக நடந்த அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மருத்துமனை மருத்துவர்கள், அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இது அறுவை சிகிச்சை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். ஆணுறுப்பு தொடர்பான புற்று நோயால் பாதிப்படைந்த 64 வயதாகும் தாமஸ் மானிங் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது. அண்மையில் அவருக்கு ஆணுறுப்பு தானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. உலகளவில் பரிசோதனை ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள மூன்றாவது நபர் என்ற பெருமையை தாமஸ் மானிங் பெற்றுள்ளார். …
-
- 0 replies
- 332 views
-
-
சர்க்கரையில் உடலுக்கு நல்லது,கெட்டது என்ற வகை உண்டா? இனிப்பான பண்டங்களை சுவைப்பதற்கு பிரியப்படாதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். `நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என இனிப்பை வகைப்படுத்த முடியுமா' ஆனால் ரத்தத்தில் சேரும் அதிக சர்க்கரையினால் ஏற்படும் நீரிழிவு நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இனிப்பு சுவையை கொடுக்கும் சர்க்கரையில் உடலுக்கு கேடு வளைவிக்காத சர்க்கரை வகை ஏதும் உண்டா என்பது குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன. அப்படியென்றால் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என அந்த இனிப்பை வகைப்படுத்த முடியுமா என்பதே தற்போது நடைபெற்று வரும் ஆய்வின் மையப…
-
- 1 reply
- 694 views
-
-
"இருபதாம் நூற்றாண்டு துவங்கும் போது உலக சராசரி ஆயுள் 31 வயதுதான். 2010ல் உலக சராசரி ஆயுள் 67ல் நிற்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு: 1. பசுமைப் புரட்சி மூலம் உணவுப் பற்றாக்குறையைப் போக்கியது. 2. நவீன மருத்துவ முறைகளில் நிறைய நோய்களை குணமாக்கவும் மற்றும் குணமாக்க முடியாத நோய்களை மேலும் மோசமாகாமல் மேனேஜ் பண்ணிக் கொள்ள முடிந்ததும்தான். இப்போது நாம் எல்லாரும் சகஜமாக 30 வயதை தாண்டுவதற்கு நாம் மேலே சொன்ன இரண்டு விஷயங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்." என்று ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார். இது போன்ற பேத்தல்களை உண்மை போலப் பேசி நம்ப வைத்துவிட்டார்கள். 1.உரங்களையும் பூச்சி மருந்துகளையும் போட்டு நம் நிலத்தையும் பாரம்பரிய விதைகளையும் அழித்தத…
-
- 0 replies
- 652 views
-
-
இன்றைக்குக் குளிர்பானம் என்ற பெயரில் கலர் கலராகச் செயற்கை பானங்கள் நம் முன்னே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இவை நம் உடல்நலத்தை வறட்சியாக்குவது மட்டுமன்றி, நாம் வாழும் நிலத்தையும் வறளச் செய்கின்றன. இந்தச் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்தாக வேண்டும். தண்ணீரைவிடவும் சிறப்பாகத் தாகம் தணித்த இயற்கை தந்த கொடையான இளநீர்தான், அக்கால முதன்மைக் குளிர்பானம். வெயில் காலத்துக்கு ஏற்ற, பல நோய்களைப் போக்கும் தன்மை கொண்ட இளநீரையும் நுங்கையும் கோடை முழுவதும் உட்கொள்வது சிறந்தது. சத்துக் களஞ்சியம் கேளி இளநீர், அடுக்கிளநீர், செவ்விளநீர், கருவிளநீர், மஞ்சள் கச்சி, ஆயிரங்கச்சி, குண்டற்கச்சி எனப் பல வகையான இளநீர் பற்றிய பாடல் குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு வகையான இளநீருக்கும் …
-
- 0 replies
- 770 views
-
-
உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் சக்தி வாய்ந்த எளிய வழி..! [Wednesday 2016-04-13 18:00] தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்தப் பெருமகான்களின் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்ற…
-
- 26 replies
- 5.6k views
-
-
வழக்கத்தை விட மனிதர்கள் நீண்ட காலம் உயிர் வாழ புதிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐரோப்பியா நாடுகளை சேர்ந்த 2 நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினார்கள். பொதுவாக உடலில் உள்ள ஜி.எஸ்.கே. - 3 என்ற புரோட்டீன் மூலக்கூறுகள் மனிதர்களின் வாழ்நாளை குறைக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்தி ஆயுளை நீட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பழ வண்டுகள் பயன் படுத்தப்பட்டன. அவற்றின் உடலில் குறைந்த அளவில் லித்தியம் என்ற ரசாயன பொருட்களை செலுத்தினர். இதன் மூலம் அவை வழக்கத்தை விட 16 சதவீத அளவு கூடுதலாக உயிர் வாழ்ந்தன. அதே முறையில் புதிய மாத்திரை தயாரித்து மனிதர்கள் வழக்கத்தை விட கூடுதலாக 10 ஆண்டுகள் வாழ வழிவகை செய்ய முடியும் என விஞ்ஞானிகள…
-
- 1 reply
- 652 views
-
-
கரத்தில் நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்க அதனை வயிற்றுக்குள் வைத்து தைத்த மருத்துவர்கள் தொழிற்சாலை விபத்தொன்றில் கையின் ஒரு பகுதியில் தோல் முழுவதும் உரிக்கப்பட்ட நிலைக்குள்ளான நபரொருவருக்கு, அவரது அந்தக் கரப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க அதனை அவரது வயிற்றுப் பகுதிக்குள் வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் தென் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது. தொழிற்சாலையொன்றில் இயந்திரத்தை செயற்படுத்தும் பிரிவில் கடமையாற்றி வந்த கார்லொஸ் மரியோற்றி (42 வயது) என்ற மேற்படி நபர், சம்பவ தினம் பணியாற்றிக் கொண்டிருந்த போது இயந்திரத்தில் அவரது கரம் சிக்கியதால் அந்தக் கரத்தின் முன் பகுதியிலுள்ள தோல் முழுவதும…
-
- 0 replies
- 321 views
-
-
இப்போது ஆணுறை முக்கிய கருத்தடை சாதனமாக இருந்து வருகிறது. இது நோயை தடுப்பதுடன், கருத்தரிப்பையும் தடுக்கிறது.ஆனால் ஆணுறையால் முழுமையான பயன் கிடைப்பதில்லை. ஆணுறை பயன்படுத்தினாலும், 18 சதவீதம் கர்ப்பம் உருவாகி விடுகிறது.மேம்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ரொனால்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.அதில் புதிய வகை கருத்தடை மருந்து ஒன்றை உருவாக்கி உள்ளனர். ஸ்டீரின் அல்மாலிக் ஆசிட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மருந்து சிறந்த கருத்தடை மருந்தாக செயல்படுகிறது. இதை முயல்களுக்கு கொடுத்து சோதனை நடத்தினார்கள். அப்போது அது வெற்றிகரமாக செயல்பட்டது. இந்த மருந்தை பயன்படுத்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
உடலில் செரிமானம் சீராக நடைபெறுவதில் குடல்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. உங்கள் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், செரிமானம் மீண்டலம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் உடலிலேலே குடலில் அதிக கழிவுகள் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் இதன் வழியாகத் தான் உடலின் அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது. கழிவுகள் வெளியேற்றப்பட்டால் தான் உடலால் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியும். எனவே அத்தகைய குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். குடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கேட்கிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. டிப்ஸ் #1 …
-
- 1 reply
- 537 views
-
-
சாக்லெட் சாப்பிடுவது உடலுக்கு கெடுதலா? சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி டார்க் சாக்லெட்டைச் சாப்பிடுவது நல்லது எனத் தெரியவந்திருக்கிறது. சாக்லெட் உடலுக்கு கெடுதியானது. அதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பு, பற்சொத்தை, சக்கரை நோய் உட்பட பல உபாதைகள் வந்துச்சேரும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளோ, இதற்கு மாறான தகவல்களை வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன் மக்களே அதிகமான சாக்லெட்டை சாப்பிடுபவர்கள் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. பிரிட்டனில் இருக்கும் ஆறு பேரில் ஒருவர், சாக்லெட் சாப்பிடுவது வழமை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இதை ஒரு இலகுவான உணவாகவும் அனைவரும் பார்க்கின்றனர். டார்…
-
- 0 replies
- 434 views
-
-
இன்றைய நவீனஉலகமும், இயந்திரத்தனமான வாழ்க்கையும் அத்தகைய உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது. அதனால்தான், வாழ்க்கையின் குறிப்பிட்ட நாட்களை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறோம். அந்த வகையில் நமது முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்த வெந்தயத்தின் மகிமை அலாதியானது. வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் கு…
-
- 0 replies
- 472 views
-
-
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல்தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான். அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று. சரி, இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம். * நோயெதிர்…
-
- 4 replies
- 912 views
-
-
வளரும் இளம் பெண்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவினை பொறுத்து அழகாக ஜொலிக்கலாம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில் பழங்கள், காய்கறிகளை அதிகளவில் எடுத்துக்கொண்டால் அதில் நிறைந்துள்ள இயற்கை சத்துக்கள் உங்கள் உடம்பில் உள்ள திசுக்களை வளர்ச்சிடைய செய்து, தோல்களின் பளபளப்புக்கு உதவுகின்றன. என்ன சாப்பிடலாம்..? 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தினமும் 290 முதல் 350 கிராம் வரையிலும் தானியங்கள், தினை, சாமை உணவு வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். புரோட்டின் நி…
-
- 0 replies
- 356 views
-
-
* புற்றுநோய் பரவுவதை தடுக்கும். * மலச்சிக்கலைப் போக்கும். * பித்தத்தைக் குறைக்கும் * அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும். * கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பர…
-
- 6 replies
- 2k views
-
-
கொய்யா பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. அடங்கியுள்ள சத்துக்கள் கொலஸ்ட்ரால் கிடையாது, சோடியம் – 3 மிகி, பொட்டாசியம் 417 மிகி, கார்போஹைட்ரேட் 14 கி, புரோட்டின் 2.6 கி, விட்டமின் ஏ 12 சதவீதம், கால்வியம், விட்டமின் D, விட்டமின் B12 , விட்டமின் C, இரும்புச்சத்து, விட்டமின் B6, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பயன்கள் கொய்யா பழத்தை நன்றாக கழுவிய பிறகு, பற்களால் கடித்து நன்கு மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத விட்டமின் சி என்ற உயிர்ச்சத்து, இப…
-
- 1 reply
- 12.4k views
-
-
தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர போகாது அப்படியே இருக்கும். அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி முடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது எ…
-
- 0 replies
- 464 views
-
-
நீங்கள் இன்று எப்படி உணர்கிறீர்கள்? ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பது போல் உணர்கிறீர்களா? இல்லையெனில், நீங்கள் மன அழுத்தத்திற்கு அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டால், எதிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியாமல் இருப்பதோடு, அதனாலேயே உடலினுள் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பமாகிவிடும். அப்படி உங்கள் உடலில் பிரச்சனைகள் ஆரம்பமாகியிருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளைக் கொண்டே நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால், தீவிர பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்களுக்கு அந்த அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். …
-
- 0 replies
- 472 views
-
-
என்றென்றும் இளமையாக இருக்க உதவும் பானங்கள் [ ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, 02:05.38 மு.ப GMT ] இளமையிலேயே ஏன் முதுமையான தோற்றம் வருகிறது என்று தெரியுமா? ஏனெனில் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்கள் சரியாக உடலில் இருந்து வெளியேற்றப்படுவதில்லை. இதனால் உடலில் அவை தங்கி முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய அமிலத்தன்மை மிக்க டாக்ஸின்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டால் தான், உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும். மேலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் டயட் காரணமாகவும், இளமையிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆகவே என்ன தான் ஆரோக்கியமான உணவுகளான பிராக்கோலி, முட்…
-
- 0 replies
- 839 views
-
-
ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்! இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில்…
-
- 4 replies
- 3.3k views
-
-
வேலை, பொருளாதார நிலை, வாழ்வியல், கலாச்சார மாற்றம், ஃபேஷன் என்ற பெயரில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒருசில வருடங்கள் தம்பதிகள் தள்ளிப் போடுவதுண்டு. சிலர் தங்களது இளம் வயதை அல்லது திருமணத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தை அனுபவிக்கிறோம் என்ற பெயரிலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார்கள். இதில் என்ன இருக்கிறது என நீங்கள் எண்ணலாம், ஆனால், தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதால் பெண்களுக்கு நாளடைவில் இதய நலன் மோசமடைகிறது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. இதய நலன் 30 – 35 வயதுக்கு மேல் குழந்தை குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கு இதய நலன் குறைபாடு, மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கிறது என சமீபத்திய ஆய்வில் தெரியவந…
-
- 1 reply
- 478 views
-
-
புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான செயலி அறிமுகம் புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிய, மருத்துவர்களுக்கு உதவும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புற்றுநோயை கண்டுபிடிக்க ஒரு ஆப்ஸ் அறிமுகம் புற்றுநோய் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து குறிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும், அறிகுறிகள் மற்றும் தடயங்களை சுகாதார அதிகாரிகள் இனம் கண்டு கொள்ளவும், இந்த செயலி வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளது. இந்த செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள தொழில்நுட்பத்திற்கான ஸ்காட்டிஷ் மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயல…
-
- 1 reply
- 308 views
-
-
அதிக எடை : நினைவாற்றல் குறையும் அபாயம் உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் நினைவாற்றல் மற்றும் திறமை குறைவாக இருக்குமென அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலுள்ள கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திலுள்ள ஆய்வாளர்கள் 18 தொடக்கம் 35 வயதிற்குட்பட்டவர்களின் நிறை அவர்களின் தினசரி ஞாபகசக்தி என்பவற்றை ஆய்வுக்குட்படுத்தினர். இதில் அதிக எடை கொண்டவர்களின் ஞாபகசக்தி குறைந்து காணப்பட்டது. அதிக எடை கொண்டவர்கள் அடிக்கடி உணவு சாப்பிட்டதால் அவர்கள் தமது சிந்திக்கும் திறனை இழந்துள்ளார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குண்டானவர்கள் கற்பது மற்றும் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.virakesari…
-
- 0 replies
- 393 views
-