நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3022 topics in this forum
-
இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்[ புதன்கிழமை, 24 யூன் 2015, 09:01.47 மு.ப GMT ] வாயுத்தொல்லை, இரத்தக் குழாய் அடைப்பு போன்றவற்றை இஞ்சிப்பால் குணப்படுத்துகிறது.மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சிப்பால் சிறந்த மருந்தாகும். செய்முறை இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும். ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார். மருத்துவ நன்மைகள் 1.நுரையீரல் சுத்தமாகும். 2. சளியை குணமட…
-
- 0 replies
- 375 views
-
-
மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை. “10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர், திடீரென போய் விட்டாரே. நேற்று நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்று பலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்ன? இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புதான். இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது மாரடைப்பாக உருமாறி உயிரை மாய்க்கிறது. மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாகப் பரிணாமம் எடுத்து மனிதனை முடக்கி விடுகிறது. துடிக்கும் மனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழ வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 ம…
-
- 0 replies
- 423 views
-
-
நீரிழிவு நோயும் பாதங்களின் பராமரிப்பும் நீரிழிவு நோய் மக்களை ஆட்டிப் படைக்கும் நோயாகும். இலங்கையில் நான்குபேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்,நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தம் 700 க்கும் அதிகமானவர்களின் கால்கள் அகற்றப்படுவதாக தேசிய நீரிழிவு மத்திய நிலையம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், நாட்டின் சகல பகுதிகளிலும், நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்கள் உள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. கட்டுப்பாடின்றி உணவு உட்கொள்ளுதல், மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாமல் செயல்படுவது ஆகியனவே, நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் எனவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ள…
-
- 3 replies
- 17.4k views
- 1 follower
-
-
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், மார்பக புற்றுநோய் ஆராய்ச்சிக்காக ஆய்வகத்தில் செயற்கையாக மார்பகங்களை வளர்த்துள்ளனர். மனித மார்பகத்தை முப்பரிமாண முறையில் செயற்கை திசுக்களால் இவர்கள் வளர்த்துள்ளனர். இதன் மூலம் மார்பகத்தைத் தாக்கும் புற்று நோய் செல்கள் குறித்த ஆய்வை மேலும் துல்லியமாக்கி, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய இது உதவும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும். இதுகுறித்து ஸ்டடி லீடர் கிறிஸ்டினா ஷீல் கூறுகையில், ‘இந்த தொழில்நுட்ப சாதனையானது பல ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கும். புற்று நோய் செல்கள் எப்படி மார்பகத்தை தாக்குகின்றன என்பதையும், அதைத் தடுப்பது எப்படி என்பதையும் கண்டுபிடிக்க இந்த…
-
- 0 replies
- 535 views
-
-
அதிக மன அழுத்தம் இனப்பெருக்க மண்டலத்தையும் பாதிக்கிது! [Monday 2015-06-15 22:00] மன அழுத்தத்திற்கு குழந்தைகள்கூட விதிவிலக்கு இல்லை. தலை முடியில் தொடங்கி கால்கள் வரைக்கும் உடலின் பெரும்பாலான பாகங்களைப் பாதிக்கக் கூடியது மன அழுத்தம். மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்? இனப்பெருக்க மண்டலம்: அதிகப்படியான தொடர் மன அழுத்தத்தின்போது அட்ரினலில் இருந்து சுரக்கப்படும் கார்டிசால் என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணியைப் பாதிக்கும். நீண்ட நாள் மன அழுத்தம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தியைப் பாதித்து, ஆண்மைக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம். பெண்களுக…
-
- 0 replies
- 609 views
-
-
உலக ரத்த தான நாள்: ஜூன் 14 மனித உயிர்களைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ரத்தத் தானம், தானங்களில் சிறந்தது என்பதில் கேள்விக்கு இடமிருக்காது. ஒருவர் செய்யும் ரத்தத் தானம், ரத்தம் பெறுபவருக்குக் கொடுக்கும் ஒப்பற்ற வாழ்நாள் பரிசு. ஒவ்வொரு முறையும் தானமாகக் கொடுக்கப்படும் ரத்தம் மூலம் மூன்று பேரைக் காப்பாற்ற முடியும். மருத்துவ உலகில் அத்தியாவசியமானதாகக் கருதப்படும் ரத்தம், உலக அளவில் எப்படிக் கிடைக்கிறது, அதை யார் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என உலகச் சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. அவற்றைப் பார்ப்போம். ரத்தத் தானம் # ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் 10.8 கோடி யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்படுகிறது. இதில் 50 சதவீதம் வளர்ந்த நாடுகளில் பெறப்படுகிறது. உலக மக்கள்தொகை…
-
- 0 replies
- 674 views
-
-
தமிழில் அறிவியல், அறிவு என்ற இரு வார்த்தைகளின் மூலமும் அறிதல் என்ற வார்த்தையே. சுருங்கக் கூறின் அறிவியல் என்பது அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிதலே. சில வருடங்களுக்கு முன்பு ஒரு நூலை வாசித்திருந்தேன். அதில் நீங்கள் ஒரு விடயத்தை அதிகமாக யோசித்தீர்கள் என்றால் மூளையில் இருந்து அந்த எண்ண அலைகள் இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும். பிரபஞ்சத்தில் சுத்திக் கொண்டிருக்கும் அதே ஒத்த எண்ண அலைகள் உங்கள் மூளைக்கு வந்து சேரும். இதுதான் அந்த புததகத்தில் இருந்த அடக்கம். சில நாளைக்கு முன்பு தமிழ்ப் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் உரையை கேட்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். குறள் இதுதான். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உ…
-
- 3 replies
- 14.3k views
-
-
கனடாவில் தமிழ் கடைகள் அனைத்திலும் Maggi Noodles மற்றும் இன்ன பிற instant noodles கள் விற்கப்படுவதையும் அவற்றை அநேகமான தாய்மார்கள் வாங்கிப் போவதையும் காண்கின்றேன். ஈயம் போன்றன அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் கூடாது என்று இந்தியாவில் சில மானிலங்கள் இதனை அண்மையில் தடை செய்தும் இன்னும் சில தடை செய்வதைப் பற்றி சிந்தித்தும் வருவதாக செய்திகள் சொல்கின்றன. முந்தி சாப்பிட்ட ஆசையில் வருடத்தில் ஓரிருமுறை வாங்கி சுவைத்தாலே ஒழிய நானோ அல்லது என் மனைவியோஒரு போதும் இவற்றை வாங்குவதில்லை. பிள்ளைகளுக்கு கொடுப்பதே இல்லை. அதில் உள்ள nutritious facts இனை பார்த்தாலே தலை சுற்றும். சோடியம் 50% இற்கு மேல் இருக்கும் அதுவும் சீனத் தயாரிப்பு என்றால் மிக மோசமாக சோடியம், இரசாயனப் …
-
- 18 replies
- 6k views
-
-
எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை 02 Jun2015 l நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு. ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள். நீங்கள் நரம்புமண்டலங்கள் உண்டு என்று நம்பினால் மெரிடியன்களையும் நம்பித்தான் ஆகவேண்டும். நமது பாதத்தில் உள்ள 7000 நரம்புமண்டலங்களின் முடிவுகள் உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புள்ளவை. இவற்றை சக்திவாய்ந்த மின்சார…
-
- 0 replies
- 621 views
-
-
புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் மிகப்பெரிய பாடி பில்டர்கள் கூட தங்கள் உடற்பயிற்சியை புஷ்-அப் முதல் தான் தொடங்குவார்கள். சொல்லப்போனால் இது தான் மிக அடிப்படையான உடற்பயிற்சியாகும். அதே போல் மிக முக்கியமான உடற்பயிற்சியும் கூட. இதனை கொஞ்ச வாரங்களுக்கு செய்தாலே போதும், உங்கள் நெஞ்சு மற்றும் ட்ரைசெப்ஸ் பகுதிகளில் கண்டிப்பாக சில மாற்றங்களை காண்பீர்கள். புஷ்-அப் செய்வதென்றால் முதலில் உங்கள் உடலை இரு கைகள் மற்றும் கால்களின் மீது சமநிலைப்படுத்தி, தரையின் மீது உடலை மட்ட நிலையில் வைக்க வேண்டும். உங்கள் கைகளை கொண்டு மேலேயும் கீழேயும் செல்லலாம். இதனால் உடலின் பல்வேறு உறுப்புகள் வலுவடையும். நீங்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் புஷ்-அப் செய்ய…
-
- 0 replies
- 766 views
-
-
அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும், பதில்களும்.... அக்குபங்சர் அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும், பதில்களும். வலைதளத்தில் இருந்து உங்களுக்காக தொகுத்து கொடுத்துள்ளேன் அக்குபங்சர் என்றால் என்ன? சித்தர்கள் வளர்த்த வர்ம அறிவியலுக்குச் சீன மக்களின் பங்களிப்பு அக்குபங்சர். சீனாவின் சித்தர்களாகிய தாவோ ஞானிகளின் உண்மைகளை உள்வாங்கிய தமிழர்களின் அறிவியல் அக்குபங்சர். மெல்லிய மயிரிழை போன்ற ஊசிகளைக் கொண்டு அகிலத்தின் ஆற்றல்களை நம் உடலுக்குப் பெற்றுத்தரும் அற்புத அறிவியல் மருத்துவம். அக்குபங்சர் முறையில் நோய்களை கண்டறிவது எப்படி? இது தனக்கே உரித்தான நோயறியும் முறைகளைக் கொண்டது. வர்ம மருத்துவம் போல் தனிச் சிறப்பான நாடி அறிதல் முறைகள் இ…
-
- 0 replies
- 1.9k views
-
-
உளுந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் [ புதன்கிழமை, 03 யூன் 2015, 08:35.30 மு.ப GMT ] உளுந்தில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து ஆகியவற்றோடு, கரையும் தன்மை உள்ள நார்ச்சத்துகள் போன்றவை அடங்கியுள்ளன. உளுந்து சாப்பிடுவதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது நிச்சயம். நோயின் பாதிப்பு நீங்கும் கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாராம்பரிய சீனத்து உனவுகள் நோய்களைத் தடுக்கும், ஆற்றலுடையன. சிட்டக்கிவகை காளான்களினால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தவை. கிசகா மோரி (Kisaka mori) என்னும் ஜப்பானிய அறிஞர் சிட்டக்கி காளான்களினது நோய் தீர்க்கும் இயல்பை வெளிக்காட்டினார். சிட்டக்கி காளான்களிலுள்ள எரிட்ரீன் (Eritasenina) என்னும் பதார்த்தம் குருதிக் கொலஸ்ட்ரோலின் அளவை மிக விரைவாகக் குறைக்கக் கூடியது. இதனைத் தவிர சிட்டக்கி காளான்களின் மருத்துவத்தன்மையான பல்வேறு பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு நோய்களைத் தடுப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. லென்டினன் (Lentinan) என்னும் பதார்த்தம் புற்று நோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுள்ளதா எனத் தீவிரமாக ஆராயப்படுகிறது. அதனைவிடக் க…
-
- 0 replies
- 847 views
-
-
புற்று நோயாளியான 92 வயது மூதாட்டி மாரத்தான் ஓட்டத்தில் சாதனை June 1, 2015 செய்திகள்0 35 அமெரிக்காவின், சான் டீகோவில் 92 வயது மூதாட்டியும், புற்று நோயிலிருந்து மீண்டவருமான ஹாரியட் தாம்சன் என்ற 92 வயது மூதாட்டி அதிக வயதில் மாரத்தான் ஓடிய பெண்மணி என்ற வகையில் சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக 2010 ஹோனாலூலு மாரத்தானில் கிளேடிஸ் புரில் என்ற மூதாட்டி தனது 92 வயது 19 நாட்களில் சாதனை நிகழ்த்தினார். ஆனால் தற்போது ஹாரியட் தாம்சன் 92 வயது 65 நாட்களில் மாரத்தான் ஓடி சாதனை புரிந்துள்ளார். இது இவரது 16-வது ராக் அன் ரோல் மாரத்தான் ஓட்டமாகும். ஆனால் இது “கடினமானது” என்கிறார் ஹாரியட் தாம்சன். “இந்த ஆண்டு எனக்கு கடினமாக அமைந்தது. கடந்த ஜனவரியில் கணவர் இறந்து போனார்.…
-
- 0 replies
- 455 views
-
-
மீனின் செதில்களை போன்று தோல் உரிகிறதா? ஆபத்து [ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 07:16.09 மு.ப GMT ] சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை தடிப்பு தோல் அழற்சி என்றும் கூறுவார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய தோல் மீனின் செதில் போல் இருப்பதால் இதை மீன் செதில் படை என்றும் அழைப்பார்கள். சொரியாசிஸின் வகைகள் சொரியாசிஸ் வல்கெரிஸ்(Psoriasis vulgaris): இது பொதுவாக அதிகளவில் காணப்படும் வகையாகும் . சிவந்த தட்டை வடிவமாக தோன்றி பின்னர் வெள்ளை நிற செதில் போன்ற தோலால் மூடப்படுகிறது. இந்த பகுதிகள் பிளேக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நேர்மாறான தடிப்புத் தோல் அழற்சி(inverse psoriasis): இது பொதுவாக இனப்பெருக்க உறுப்புகளின் கீழே , மார்புகளின் கீழ் இ…
-
- 2 replies
- 6.2k views
-
-
சிகாகோ: புற்றுநோய்க்கு ஒரு புதிய முறை வைத்தியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் கீ்மோ தெரப்பி செய்யாமலேயே புற்றுநோயை சரி செய்ய முடியுமாம். இந்த புதிய முறைக்குப் பெயர் இம்யூனோதெரப்பி என்பதாகும். இது உடலில் உள்ள புற்று நோய் செல்களையும், கட்டிகளையும் தாக்கி அழித்து விடுமாம். இன்னும் ஐந்து ஆண்டுகளில் கீமோ தெரப்பிக்குப் பதில் இந்த இம்யூனோதெரப்பியை அறிமுகம் செய்ய உள்ளனராம். இந்த புதிய வகை சிகிச்சை முறையானது, தோல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு மிகச் சிறந்த உபாயமாக கருதப்படுகிறது. இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளுக்கு நல்ல முறையில் குணம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இம்யூனோதெரப்பியால் உலகம் முழுவதும் பல லட்சம் புற்றுநோயாள…
-
- 1 reply
- 805 views
-
-
கனடா-Vaughanனை சேர்ந்த குடும்பம் தங்களது எட்டு மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சைக்கு உதவுமாறு பொது வேண்டுகோளை விடுத்துள்ளனர். டெல்வினா பட்சியாக் என்ற இக்குழந்தைக்கு பிறவி கல்லீரல் நோய் கண்டுள்ளது. பித்த குழாய் அழற்சி —- கல்லீரல் தொற்று —– யினால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். அவளிற்கு ஒரு புதிய கல்லீரல் கிடைக்கும் வரை அவள் வீட்டிற்கு திரும்ப முடியாது என தந்தை பீற்றர் தெரிவித்தார். அவளின் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். டெல்வினா இரண்டுமாத குழந்தையாக இருந்த போது Biliary Atresia நோய் கண்டறியப்பட்டுள்ளது. அன்று முதல் அவள் பலவிதமான கல்லீரல் தொற்று நோய்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றாள். ஒட்டாவா செனட்டர்…
-
- 0 replies
- 504 views
-
-
இன்றைய சூழலில் இயற்கையின் ஐம்புலன்களும் விற்பனை பொருளாகிவிட்டது. அதில் நிலமும், நீரும் தான் மக்களை பிரித்து வைத்து சண்டைகளை உண்டாக்கும் பொருளாக உருமாறி நிற்கிறது. உணவு இன்றி கூட மனிதன் வாழ்ந்து விட முடியும் ஆனால், நீர் இன்றி மூன்று நாள் தாக்குப்பிடிப்பதே சிரமம். இன்று, நீரில் மாசுப்பாடு அதிகரித்து வருவதனால், நிறைய சுத்தீகரிப்பு நீர் விற்பனையும், கருவிகளும் சந்தையில் விற்கப்படுகிறது. இதில் மிக முக்கியமாகவும், பிரபலமாகவும் விற்கப்படுவது ஆர்.ஓ குடிநீர். இம்முறையில், நீர் நல்ல முறையில் சுத்தீகரிக்கப்படுவதாய் மக்கள் நம்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். ப்ளீஸ்... பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க!!! ஆனால், இப்போது இந்த ஆர்.ஓ சுத்தீகரிப்பு முறையில் நீரை பருகுவது பொது …
-
- 2 replies
- 2.5k views
-
-
Dr. பி. விஸ்வநாதன் நீரிழிவு நோய் பிரச்சினை உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புதான் நீரிழிவு விழித்திரை நோய் (டயபடிக் ரெட்டினோபதி). இது, நீரிழிவு உள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்து கிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய ரத்தக்குழாய்களில் ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது. இந்தக் கசிவுகள் ‘ரெட்டினல் இடிமா’ மற்றும் கடின கசிவு எனப்படும் ‘லைப்போ புரோட்டீன்’ வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு விழித் திரையின் முக்கிய பகுதியான …
-
- 0 replies
- 1.1k views
-
-
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நம்முடைய ஆரோக்கியத்தை எப்படிப் பாதிக்கும்? உடல் பருமனாய் இருப்பவர்களைவிட, போதுமான உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மரணத்தைத் தழுவுகின்றனர். தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் அகால மரணத்தைத் தவிர்க்க முடியும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் மூலம் எவ்வளவு உப்பை நாம் தினம்தோறும் உட்கொள்கிறோம்? அமெரிக்காவில் உட்கொள்ளப்படும் உப்பில் 75 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் வழியாகவே வருகிறது என லினஸ்பாலிங் ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. டின்களில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட சூப், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஹாம்பர்கர் மூலமாக அதிகபட்சச் சோடியத்தை அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர். நம் நாட்டில…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலக ரத்தக் கொதிப்பு நாள் மே 17 | ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்னும் பழமொழியைச் சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பைச் சேர்த்துவிடுகிறோம். ஆனால், ``உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்; தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்’’ என்றொரு பழமொழியும் இருக்கிறது. உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்சினைதான். நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இது குறித்துச் சென்னையைச் சேர்ந்த உடல் மூப்பு கட்டுப்பாட்டு (Anti Aging) நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன் விளக்குகிறார்: எங்கே இருக்கிறது? அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் …
-
- 0 replies
- 558 views
-
-
உங்களுக்கு 'பிரஷர்' இருக்கிறதா? மே 17 சர்வதேச உயர்ரத்த அழுத்த விழிப்புணர்வு தினம் டாக்டர்கு. கணேசன், பொதுநலமருத்துவர் ராஜபாளையம். email: gganesan95@gmail.com உங்களுக்கு முப்பது வயது ஆகிவிட்டதா? உங்கள் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை யாருக்காவது ரத்தக் கொதிப்பு உள்ளதா? நீங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பரபரப்பாகப் பணி செய்பவரா? புகைபிடிப்பவரா? மதுப் பழக்கம் உண்டா? உடல் பருமன் உள்ளதா? ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? சர்க்கரை நோய் இருக்கிறதா?மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறீர்களா? அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு 'ஆம்' என்று பதில் சொன்னாலும் இன்றைக்கே டாக்டரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான ரத்த அழுத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
இருமல் பிரச்சனையால் அவதியா? இதோ தீர்வு [ வியாழக்கிழமை, 14 மே 2015, 08:45.26 மு.ப GMT ] வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டால், எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும்,நார்ப்பொருளும் உள்ளன. இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. இதில் உள்ள நார்ப்…
-
- 0 replies
- 3k views
-
-
உடலுழைப்பு இல்லாத வேலையும் காரணம்!டேக் கேர் மருத்துவமனையின் குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனுநீதி மாறன்: நெஞ்செரிச்சல் பாதிப்பு, தற்போது அதிகரித்து வரும் நோயாக மாறி வருகிறது. முன்பு, 35 - 40 வயதுக்கு மேல் காணப்பட்ட நிலையில், தற்போது, 20 - 25 வயதிலேயே, இந்தப் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இதற்கு, மாறிவரும் உணவுக் கலாசாரம் தான் முக்கிய காரணம். இதனால், உணவுக்குழாயும், இரைப்பையும் இணைகிற இடத்தில், ஒரு வால்வு பாதிப்படைகிறது.நெஞ்சுக்குள் கீழே உள்ள பகுதி தான் இரைப்பை; நடுவில் இருப்பது வால்வு. உணவுப்பையில் உண்டாகிற ஹைட்ரோ குளோரிக், செரிமானத்துக்கான ஒரு அமிலம். அதைத் தாங்கும் சக்தி, இரைப்பைக்கு உண்டு; ஆனால், உணவுக்குழலுக்கு இல்லை.அதனால், அங்…
-
- 2 replies
- 1.2k views
-
-
டொக்டர்.P.சங்கர், M.D.,D.M., சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணர் நம் உடலிலுள்ள கழிவுகளில் அகற்றுவதில் முக்கிய ப்ங்கு வகிப்பது சிறுநீரகம் தான். அத்துடன் நம்முடைய இரத்த அழுத்தம் சீராக வைத்திருப்பதும் இதன் கடமைகளில் ஒன்று எலும்புகளை உறுதிப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான இரத்த சிவப்ப ணுக்களின் உற்பத்தியை தூண்டுவதிலும், உட லிலுள்ள நீர் மற்றும் அமிலப் பொருள்களின் அளவை சமமாக வைத்திருப்பதிலும் இதன் பணிகளே. அத்துடன் நாம் சாப்பிடும் உண வுப் பொருளின் கழிவுகள் இரத்தத்துடன் சீறுநீர கத்திற்கு வரும் அதனை வடிகட்டி, யூரியா, கிரியாட்டின் போன்ற கழிவுகளை துல்லியமாக இனம் கண்டறிந்து அதனை சிறுநீராகப் பிரித்து…
-
- 0 replies
- 2.1k views
-