நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்களின் பிரச்னையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். உடல் எடையை குறைக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஒருசில உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம். மேலும் இத்தகைய உணவுகள் உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. பூண்டு உடலில் சேரும் கெட்டக் கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருளான அல்லீசின்(Allicin) என்னும் பொருள் பூண்டில் உள்ளது. எனவே ஆண்கள் இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைவதோடு, இதய நோய் வராமலும் தடுக்கலாம். முட்டை ஆண்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் முட்டையும் ஒன்று. ஏனெனில் முட்டை உடலில் உள்ள கெட்ட…
-
- 0 replies
- 725 views
-
-
ஆஸ்டன் பல்கலைக் கழகத்தின் புதிய ஆய்வொன்றின் முடிவு, இருதய நோய் உள்ளவர்களை குஷிப்படுத்தும் செய்தியாக வெளியாகியிருக்கிறது. பொதுவாக பாதாம்பருப்பு சாப்பிட்டால் உடம்பில் கொழுப்புச்சத்து சேரும் என்று இருதய நோயாளிகள் மிரட்டப்பட்டு வந்தனர். அதையும் இப்போதைய கண்டுபிடிப்பு அகற்றியுள்ளது. இருதய நோய் உள்ளவர்கள் நாள்தோறும் ஒரு கை பாதாம்பருப்பு உண்டுவந்தால் அவர்களுடைய ரத்தக்குழாய்கள் ஆரோக்கியம் அடையும் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்திய ஆயுர்வேத வைத்தியம் கூறி வந்ததை இந்த கண்டுபிடிப்பு நியாயப்படுத்தியுள்ளது. பாதாம்பருப்பை உண் பதால் ரத்தவோட்டத்தில் உள்ள உயிர்வளியேற்ற (ஆக்ஸிஜன்) எதிர் பொருள்கள் அதிகரிக்கின்றன. இதன் பலனாக ரத்த அழுத்தம் குறைவதுடன், ரத்த ஓட்டமும் சீரடையும் என்று …
-
- 2 replies
- 911 views
-
-
தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரித்திருக்கிறார்கள். ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹாவர்ட், மேன்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டாக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள். மனித உடலின் இயற்கையான செயற்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்க செயற்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ஆங்கிலத்தில் Body Clock, அதாவது உடல் கடிகாரம் என்கிற பெயரில் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத, ஆனால் மனித உடலின் அடிப்படைத் தேவையான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்ம…
-
- 0 replies
- 488 views
-
-
இப்போதெல்லாம் நமது சினிமா ஹீரோக்கள் வசனம் பேசும் காட்சிகளைவிட கையில் மது பாட்டிலோடு புலம்பும் காட்சிகள்தான் அதிகம். அக்காட்சிகளுடன் கூட வரும் ‘மது அருந்துதல் உடல் நலத்துக்குக் கேடு’ என்ற எச்சரிக்கை வாசகமும் நமக்குப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. ஆனால், உண்மை நிலைமை மிகவும் மோசம். இந்தியாவில் சுமார் 75% ஆண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20-30% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள். குடிப்பழக்கம் பெரும்பாலும் 15-25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. 50-60% சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன. மது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அ…
-
- 3 replies
- 869 views
-
-
வயதான ஆண்களின் உயிரணுக்களும்.. இளம் ஆண்களின் உயிரணுக்களும் கிட்டத்தட்ட ஒரே அளவு தான் முட்டையுடனான கருக்கட்டலில் சாதிக்கின்றன... என்று சுமார் 20 ஆண்டுகளாக சோதனைக்குழாய் குழந்தைகள் உருவாக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறிந்திருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்தின் அடிப்படையில்.. ஆண்கள் தந்தையாவதை பின்போடுவது கூடாது என்றும்.. ஆண்கள் 40 - 45 வயதுக்குள் தந்தையாவது நல்லம் என்றும் அதற்குப் பின்னர் தந்தையாவது தொடர்பில் சிக்கல்கள் எழலாம் என்றும் ஆனால் எதனையும் அறுதியிட்டு வரையறுக்க முடியாது என்றும் இந்த ஆய்வுகளின் முடிவில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. Women should not worry about using sperm from older donors as the success rate is the same as using a younge…
-
- 4 replies
- 960 views
-
-
33 வயதுக்குப் பின்னர் கர்ப்பமடையும் பெண்கள் மெதுவாக மூப்படைவதால் நீண்ட காலம் வாழ்வதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு கூறுகின்றது. இறுதியாக 29 வயதுக்குள் குழந்தை பிரசவித்த பெண்களுடன் ஒப்பிடுகையில் தமது இறுதிக் குழந்தையை 33 வயதுக்குப் பின்னர் பிரசவித்த பெண்கள் தமது 95 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வாய்ப்பை பெறுகின்றமை இரு மடங்கு அதிகம் என மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி தோமஸ் பெரில்ஸ் கூறினார். எனினும், இந்த கண்டுபிடிப்பானது பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்துவதை வலியுறுத்தவில்லை என அவர் கூறினார். வயதான காலத்தில் கடைசிக் குழந்தைகளைப் பிரசவிப்பது பெண்களின் இனவிருத்தி முறைமை மெதுவாக வயதா…
-
- 7 replies
- 962 views
-
-
வெள்ளைக்காரர் சொல்வதே வேதம் என்ற எண்ணம் நமக்கு - அதிலும் வெள்ளைக்காரர்கள் கொடுத்த ஆங்கிலவழிக் கல்வி படித்த நமக்கு வெண்ணெய் என்றாலே ரத்தக்குழாயில் மாரடைப்பை ஏற்படுத்தும் நஞ்சுருண்டையாகவே காட்சி தருகிறது. “அப்படியெல்லாம் இல்லை, வெண்ணெய் நல்லது” என்று அமெரிக்காவின் டைம் பத்திரிகை இப்போது அட்டைப்படக் கட்டுரையாகவே வரைந்து தள்ளிவிட்டது. “உடலில் எடை கூடவும் தொப்பை வளரவும் வெண்ணெய்தான் காரணம் என்று இதுநாள்வரை ஆராய்ந்து கூறியதெல்லாம் தவறு, சர்க்கரையும் பதப்படுத்தப்பட்ட பெட்டியில் அடைக்கப்பட்ட ஆயத்த (ரெடிமேட்) உணவுகளும்தான் உடல் பருமனுக்குக் காரணம்” என்று விஞ்ஞானிகள் இப்போது அறிவிக்கின்றனர். 'கிளினிகல் நியூட்ரிஷன்' என்ற அமெரிக்கப் பத்திரிகை, அறிவியல்பூர்வமான பல ஆய்வுக…
-
- 5 replies
- 2.4k views
-
-
(அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், அக்குபஞ்சர் & மருந்தில்லா மருத்துவ நிபுணர்) உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டென்சன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். உடனே நார்மலாகி விடுவார். இதுதான் இன்றைய பி.பி. நோயாளிகளின் பரிதாப நிலை. வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் த…
-
- 0 replies
- 3.5k views
-
-
சர்க்கரை நோயா? குணமாக்க முடியாது; கட்டுப்படுத்தலாம்... ஆனால் சாகும் வரை மருத்துவம் பார்க்க வேண்டும்... இரத்த அழுத்தமா? குணமாக்க முடியாது; கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதற்குத் தினந்தோறும் மருந்துகளை நிறுத்ததாமல் சாப்பிட வேண்டும். ஆஸ்துமாவா? குணமாக்க முடியாது; அதன் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்க முடியும். ஆனால் இறுதி மூச்சு நிற்கும் வரை மருந்துகளின் துணையோடுதான்..... மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி, புற்று நோய், என்று எந்த நோய் வந்தாலும் குணமாதல் என்பது இன்று பொய்யாகிப் போனது. அலோபதி மருத்துவமோ, ஹோமியோபதி மருத்துவமோ, சித்த மருத்துவமோ அல்லது ஆயுர் வேதமோ எதுவாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்கும் பரிதாப நிலைக்கு வந்துவிட்டோம். இந்த நிலைக்குக் காரணம் மரு…
-
- 0 replies
- 592 views
-
-
உப்பு, காரமில்லாத உணவு எப்படி பலருக்கும் தொண்டைக்குள் இறங்க மறுக்குமோ, அப்படித்தான் புளிப்புச் சுவை இல்லாத உணவும். இன்னும் சொல்லப் போனால் புளிப்பு சற்றே தூக்கலாக இருந்தால் தான் பலருக்கும் முழுமையாக சாப்பிட்ட திருப்தியே வரும்.புளியிலிருந்து பெரிதாக நமக்கு சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை. அது சமையலுக்கு ருசி கூட்டுகிற தவிர்க்க முடியாத ஒரு பொருள் அவ்வளவுதான். வெறும் புளியைக் கரைத்துக் கொதிக்க வைத்து, கொஞ்சம் மிளகு, சீரகம், பூண்டு தட்டிப் போட்டுச் செய்கிற ரசம் பசியோடு இருக்கிற பல நேரங்களில் அமிர்தமாக ருசிக்கும். வெறும் புளித்தண்ணீர்தான் ஆனாலும், அதற்கு அப்படியோர் சுவை. இன்னும் அன்றாடச் சமையலில் சாம்பார், வத்தக் குழம்பு, கூட்டு எ…
-
- 0 replies
- 497 views
-
-
அளவுக்கதிகமாக சிவப்பு இறைச்சியை உண்பது மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை சிறிது அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வொன்று கூறுகிறது. இளம் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு சிவப்பு இறைச்சிக்கு பதிலாக பட்டாணிகள், அவரை வகைகள், முட்டைகள், கடலை, மீன் என்பவற்றை உண்பதன் மூலம் குறைக்க முடியும் என போஸ்டன் நகரிலுள்ள ஹவார்ட் பொது சுகாதார பாடசாலையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அளவுக்கதிகமாக சிவப்பு இறைச்சியை உண்பது வயிற்று புற்றுநோயை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. இந்நிலையில் 24 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய 89,000 பெண்களில…
-
- 0 replies
- 522 views
-
-
இன்று விகடனில் வாசித்த ஒரு தொடரில் வந்த குறிப்பு ஒன்று: சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே... நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை. எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது. ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனா…
-
- 5 replies
- 2.8k views
-
-
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர்மறையாகி விடுகிறது. நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது. முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். ஏனென் றால், ரத்தச் சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன. சர்க்கரை அளவின்படி பழங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு பழத்தின் ஜி.ஐ, (GI - Glycemic Index) குறியீட்டு எண்ணை அறிந்துகொண்ட பின், உண்ண வேண்டும். ஜி.ஐ. என்பது கிளைசிமிக் குறியீடு. நீரிழிவு நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைந்த அளவுள்ள ஜி.ஐ. குறியீ…
-
- 7 replies
- 9.9k views
-
-
“இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலை விழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள். “இவவோடை டின்னர் சாப்பிடப் போனால் கடைக்காரன் பூட்டப் போறன் என்று அவசரப்படுத்தி எழுப்பினால் தான் எழும்புவாள்” என்று நக்கல் அடித்தவர் “வாய் நோகாமல் சாப்பிட்டு ஸ்டைல் காட்டுவா” என நீட்டி முடித்தார். மற்றவர்கள் தவறெனக் காரணம் காட்டிப் பேசினாலும் நக்கல் அடித்தாலும் சிலரால் தமது பழக்கத்தை மாற்ற முடியாது. இருந்தபோதும், சில பழக்கங்கள் நன்மையும் தரலாம். மெதுவாக உண்பவர்களில் பலர் மெல்லிய உடல் வாகினராக இருக்கிறார்கள். மாறாக இன்றைய உலகமானது அவசரமும் நேர…
-
- 0 replies
- 612 views
-
-
பிறந்ததிலிருந்தே உடம்பில் கவனம் எடுத்த பழக்கமில்லை. அதிலும் கடந்த சில வருடங்களாக சாப்பாட்டில் கவனமில்லை. உடலும் வயிறும் வீஙகத்தொடங்கின. மக்கள் சொல்வார்கள் அப்பா உடம்பைக்கவனியுங்கள் என. அதிலும் எவராவது என் வயதுக்காரர் மோசம் போய்விட்டால் தாங்கவே முடியாது ஆனாலும் 7 நாளும் வேலை அத்துடன் பொது வேலைகள்.................. வேலை அலுப்பு மற்றும் அதிக நேரவேலை இதனால் தூக்கம் குறைவு அதனால் எப்பொழுதும் ஒருவித சோர்வு கண்களுக்குள்.... எங்கு இருந்தாலும் தூக்கம் வரும் கார் ஓடிக்கொண்டிருக்கும் போதும்.... அத்துடன் குறட்டை........ அப்பா உடற்பயிற்சி அல்லது நீச்சலுக்காவது செல்லுங்கள் அல்லது குளிசை வாங்கிப்போடுங்கள்.... இல்லை மாட்டேன் எனக்கு எதுவித வருத்…
-
- 44 replies
- 9.4k views
-
-
முயல் கறியில் உள்ள சத்துக்களையும், அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பார்ப்போம். இன்றைய மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், உடல் நோகாமல் வேலை செய்து வருவதாலும், உடலில் உள்ள கலோரிகளானது அதிகமாக செலவாவதில்லை. இருப்பினும் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் 60 வயதில் வரவேண்டிய இரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய்கள் போன்றவை 25 வயதிலேயே தொற்றிக் கொள்கிறது. எனவே பலர் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக உள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள விரும்புகின்றனர். அதே சமயம் உடலுக்கு வேண்டிய சத்துக்களையும் பெறும் அளவிலான உணவுகளை நாடுகின்றனர். பொதுவாக அனைத்து சத்துக்களும் வளமாக இரு…
-
- 20 replies
- 33.8k views
-
-
ஆரோக்கியமற்ற எதிர்காலத்தையும் பொருளாதாரப் பேரழிவையும் நொறுக்குத்தீனிகள் ஏற்படுத்திவிடும் நொறுக்குத்தீனிகளை இடைவெளியின்றித் தின்று, மென்பானங்களை வரம்பின்றிக் குடிப்பதால் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் உடல்நலனைக் கெடுத்துக்கொள்கின்றனர். இது அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலி. இதுகுறித்து, நாடு முழுக்க இருந்த கவலையை அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் 'நாம் செயல்படுவோம்' என்ற இயக்கத்தைத் தொடங்கினோம். அடுத்த தலைமுறைக் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வளர வேண்டும் என்ற அக்கறைதான் இதற்கு அடிப்படைக் காரணம். நொறுக்குத்தீனி கடைகள் X நல்ல உணவுக்கான கடைகள் இந்த லட்சியத்தை எட்ட, எது சாத்தியமோ அதை நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை எடுத்தோம். ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியல்பூர…
-
- 0 replies
- 372 views
-
-
இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போதும் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும். மதுப்பழக்கத்தால் செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டு பாலுறவில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மூளைச் செயல்திறன் குறைவு, நரம்பு மண்டல பாதிப்புகள், தண்டுவடக் கோளாறு போன்றவை ஏற்பட்டு நாளடைவில் ஆண்மைக் குறைவு உண்டாகும். எனவே மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும். உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டம் இல்லாமை, விறைப்பு ஏற்படாத நிலை ஆகியவை தோன்றும். எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது வருவது நல்லது. தேவையில்லாமல் தூக்க மாத்திரைகள் அல்ல…
-
- 1 reply
- 681 views
-
-
இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். மனிதன் பிறக்கும் பொது “ ஆ…. என்ற ஒலியை எழுப்பியவாறே பிறக்கிறான்.பிறந்த பின் தாலாட்டும், இறந்த பின் ஒப்பாரியும் இக்குழந்தைக்கு பிற மனிதர்களால் பாடப்படுகிறது. ஆக இசை என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிப்போனது. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம், அவ்வாறு மன அழுத்தம் ஏற்படுகிறபோது அதிலிருந்து விடுபட சிலர் மது அருந்துகின்றனர். சிலர் கோவிலுக்குச் செல்கின்றனர், சிலர் புகை பிடிக்கின்றனர், சிலர் திரைப்படம் காணச் செல்கின்றனர், சிலர் தனக்குப் பிடித்தவரிடம் சென்று தனது சோகங்களை…
-
- 5 replies
- 7.6k views
-
-
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில உணவுக்கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும். அத்தகைய டயட்…
-
- 0 replies
- 3.8k views
-
-
தனிமையும் தனிமையுணர்வும் மீள வழியுண்டா? டொக்டர்.எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (SL) குடும்ப மருத்துவர் கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது. நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் …
-
- 1 reply
- 798 views
-
-
அன்று முதல் இன்றுவரை புகை பிடிப்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகவே இருக்கிறது. தான் பெரிய ஆள் என்பதை உணர்த்துவதற்காக சிகரெட்டை விரல் இடுக்கில் பிடித்தபடி ஸ்டைல் காட்டும் இளைஞர்கள் இன்று அதிகம். புகை பிடிக்கும் பெண்களும் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள். புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், மற்றொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவருவதையும் ஒருசேரப் பா…
-
- 1 reply
- 510 views
-
-
ஆண்களை விடவும் இளம்பெண்கள் அதிகமான மன அழுத்ததிற்கு உள்ளாவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு காரணம், ஆஸ்ட்ரோஜென் என்னும் பாலியல் ஹார்மோன் பெண்களின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தால், அதிகமான ரத்தம் செலுத்தபட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற பாலியல் மாற்றங்கள், இளம்பெண்கள் பருவத்தை எட்டும்போது, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், முரண்மூளை நோய் (schizophrenia), நரம்பியல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் போன்ற நோய்கள் ஏற்படுவதாக, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தியோடர் சட்டெர்த்வைத் தெரிவிக்கிறார். பொதுவாக, பெண்களுக்கு அதிக அளவில் மனக் கவலையும் மன அழுத்தமும் ஏற்படுக்கின்றன. அதே போல், ஆண்களுக்கு முரண்மூளை நோய் போன்ற மூ…
-
- 31 replies
- 3.7k views
-
-
கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது. கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழு வதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான். கொய்யாக்கனியின் ச…
-
- 4 replies
- 897 views
-
-
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட ‘சார்ஸ்’ கிருமிக்கு இணையான ”மெர்ஸ்” என்னும் கிருமியின் தாக்கம் வேகமாக பரவி வருவதுடன் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை இதுவரை காவுகொண்டுள்ளது. இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையிரல் அலர்ஜி மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த நோய் கிருமி கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் ‘மெர்ஸ்’ மர்ம நோய் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் ஓமான் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின…
-
- 0 replies
- 578 views
-