நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பும் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு நடுக்கம் இருந்தே தீரும். ஏனென்றால் பலவற்றை சமாளிக்க வேண்டும். ஆனால் கவனமாக திட்டமிட்டால், இந்த மாற்றங்கள் சீராக இருக்கும். குழந்தை பெற்றப் பின் அலுவலகம் செல்வது பாலூட்டும் தாய்களுக்கு ஒரு சவாலான விஷயமே. குழந்தை பெற்றப் பின் சீக்கிரமே வேலைக்கு செல்வதினால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம். அவைகளில் சில, குழந்தையை பிரிய வேண்டிய கவலை, அவர்களுக்கு தேவைப்படும் வேளையில் அவர்களுடன் இருக்க முடியாமல் போவதால் ஏற்படும் குற்ற உணர்வு போன்றவைகள். மகப்பேறு …
-
- 0 replies
- 1.5k views
-
-
உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை. தேவையான பொருள்கள் : கொள்ளு – 4 ஸ்பூன் பூண்டு – 5 பல் தக்காளி – 2 மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் துவரம்பருப்பு – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிது கறிவேப்பிலை – சிறிது தாளிக்க நல்லெண்ணெய் – சிறிது கடுகு – சிறிது வரமிளகாய் – 2 செய்முறை : மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். (ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்த…
-
- 6 replies
- 9.1k views
-
-
நிறைய மக்கள் அதிகம் நடப்பதற்கு உடல் எடையை குறைப்பதற்கு இல்லாமல், உடல் எடையை கட்டுப்பட்டுவதற்குத் தான். ஆகவே உடல் எடை அதிகரித்து அசிங்கமான தோற்றத்தைப் பெறுவதற்கு முன்பு, நடைப்பயிற்சியை ஆரம்பியுங்கள். உடல் எடை எளிதில் குறைய வேண்டுமென்றால், தினமும் நடந்தால் மட்டும் முடியாது என்பதற்காக, சிலர் அவற்றை ஒரு பெரிய விஷயமாக எண்ணாமல் நடைப்பயிற்சியை தவிர்த்து, ரன்னிங், நீச்சல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் அந்த பயிற்சிகளை அனைவருமே செய்ய முடியாது. ஆகவே மக்களுள் பலர் நடைப்பயிற்சியைத் தான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் அந்த நடைப்பயிற்சியை ஒரு சீரியஸ் இல்லாமல் சாதாரணமாக செய்கின்றனர். எனவே அவர்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. ஏனெனில் சாதாரணமாக செய்தால், எந்த…
-
- 3 replies
- 723 views
-
-
உடலில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தினால், சிலர் குட்டையாக போதிய உயரமின்றி காணப்படுகின்றனர். அவ்வாறு குட்டையாக இருப்பது பிடிக்காத காரணத்தினால், அவர்கள் நிறைய உடற்பயிற்சிகள், கடைகளில் விற்கும் சில உயரத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் இல்லாமல், தோல்வியை தான் சந்திப்பர். இத்தகைய உயரப் பிரச்சனை இருப்பதற்கு உடலில் உள்ள உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோனின் அளவு மிகவும் குறைவாக இருப்பது காரணமாகும். மேலும் உடலில் போதிய புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு ஒரு சில உணவுகளை உண்டால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொன்னால் நம்பமுடியாது த…
-
- 0 replies
- 867 views
-
-
நீரிழிவு நோய் தற்போது அனைவரின் உடலிலும் வந்துவிடுகிறது. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும். நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்? * இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும். * முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு,…
-
- 30 replies
- 4.6k views
-
-
உடல் இளைத்து இருப்பதுதான் அழகு என்றுதான் பெரும்பாலான பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் சொல்லப்படுகிறது. ஆனால் சத்துக்களை குறைத்து உடலை ஒல்லியாக்குவது தேவையற்றது. அது உடலை பலவீனமாகத்தான் ஆக்கும். உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்…
-
- 0 replies
- 24.4k views
-
-
‘சீஸ்’ என அழைக்கப்படும் பாலாடைக் கட்டி நமது உணவுப் பொருட்களின் பட்டியலில் நீங்காத இடம் பிடிப்பவை. உணவுக்கு images (26)மணமும், சுவையும் தரும் சீஸ், உடலுக்கு அத்தியாவசியமான பல சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. அதன் சத்துகளை பார்க்கலாம்… * பாலில் இருந்து தயாரிக்கப்படும் சுவையான உணவுப் பொருளில் சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டியும் ஒன்று. உலகம் முழுவதும் சீஸ் பயன்படுத்தப்படுகிறது. பசு, எருமை, ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் பாலில் இருந்து சீஸ் தயாரிக்கப்படுகிறது. * சீஸ், உடலில் உள்ள சத்துப் பொருட்களை சம நிலைப்படுத்த உதவுகிறது. இதில் உடலை செரிவூட்டும் சத்துப்பொருட்களான புரதம், வைட்டமின் மற்றும் கார்போ-ஹைட்ரேட் போன்றவை நிறைந்துள்ளன. * தாதுப் பொருட்கள் அதிக அளவில் காணப்படுவதால்…
-
- 1 reply
- 944 views
-
-
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முதுகுவலியைப் பற்றி கூறாதவர்களே இல்லை. ஏனெனில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது இந்த முதுகுவலி. நீண்டநேரம் சேரில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், சரியான உடற்பயிற்சி இல்லாவர்களுக்கும் முதுகுவலி பிரச்சினை வரும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம் இருந்தாலும் முதுகுவலி வரும் என்று கூறும் நிபுணர்கள் சூரியவெளிச்சம் படாமல் ஏ.சி ரூமிலேயே குடித்தனம் நடத்துபவர்களுக்கு முதுகுவலி வரும் என்கின்றனர். அலுவலகத்திற்கு மோட்டர் பைக், கார் போன்ற வாகனங்களில் பெரும்பாலோனோர் சென்று வருகின்றனர். நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு முதுகுவலி வர வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் காலையிலோ, மாலையிலோ சரியான அளவில் உடற்பயிற்சி செய்யவேண்டும் மசாஜ் ச…
-
- 0 replies
- 403 views
-
-
ஃபைப்ரொய்ட்’ என்பவை, பெண்களின் கர்ப்பப்பைச் சுவர்களில் மென்மையான தசைப்பகுதிகளில் சாதாரணமாகக் காணப்படுகின்ற நோய்க்கட்டிகளேயாகும். ‘யுட்டிரெஸ் ஃபைப்ரொய்ட்’ எனப்படும் புற்று நோய் அல்லாத கர்ப்பப்பை கட்டிகள், தாய்மைப்பேறு அடையக்கூடிய வயதுடைய பெண்களில் பொதுவாகக் காணப்படுகின்ற நோயாக இருக்கின்றது. இதனைச் சரியான நேரத்தில் குணப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால் பல விதமான உடல் நலச்சிக்கல்களை உருவாக்கிவிடும். இவ்விதமான கட்டிகள் தனியொன்றாகவோ அல்லது கூட்டமாக வெவ்வேறு அளவுகளிலோ இருக்கக் கூடும். சுமார் 77% சதவிகிதமான பெண்கள் இவ்வாறான கட்டிகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் என, மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால், அவர்களுக்கு இது பற்…
-
- 0 replies
- 413 views
-
-
உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'கிரேப்ஸ்' * எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். * ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்’ ஆக வைத்துக்கொள்ள `டயட்டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம். * பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. *`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் …
-
- 0 replies
- 527 views
-
-
மக்களே.... நிலாவை தொட்டது யாருன்னு கேட்டா டக்குன்னு பதில் சொல்லுவது போல, கிருமிகள் எங்க அதிகமாக இருக்கும்? அப்படின்னு கேட்டா சும்மா யோசிக்காம டக்குன்னு பதில் சொல்லிடுவிங்க...டாய்லெட்டில் தான் இருக்குமுன்னு. ஒரு விளம்பரத்தில் நம்ம விஜய் ஆதிராஜ் ஒரு பிகர் கூட வந்து ஒரு அக்கா வீட்டுல உள்ள பாத்ருமை கிளின் பண்ணிட்டு போவாங்க...ஆனால் அந்த டாய்லெட்டை விட மோசமான அதிக கிருமிகள் இருக்கும், நாம அதிகமா பயன்படுத்தும் இடங்கள் எது எதுன்னு பாக்கலாமா?. 1. ஹோட்டல்களின் மெத்தை விரிப்புகள்: சில ஹோட்டல்களில் மெத்தை விரிப்புகளை தினமும் மாத்த மாட்டாங்க. இதுக்கு பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்கள் கூட விதிவிலக்கு இல்லை. லேட்டஸ்டா இது போல ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தான் ரொம்ப நாளைக்கு பின்ன பாக்ஸர் மைக் டைசனி…
-
- 0 replies
- 597 views
-
-
அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்கிறதா? இல்லை. நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள். சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ் வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது. ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, நாம் எல்லா வகையான உணவுகளையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள். இதற்கு மாறாக…
-
- 0 replies
- 536 views
-
-
நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம். அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக …
-
- 0 replies
- 354 views
-
-
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம். அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும். மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எ…
-
- 0 replies
- 560 views
-
-
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இறக்க வாய்ப்புள்ளதா என அறிய மருத்துவர்கள் டெத் டெஸ்ட் (Death test ) என்னும் பரிசோதனையை கண்டறிந்துள்ளனர். FILE இச்சோதனையின் போது சோதனையை மேற்கொள்ளும் நபர் உடல்நலத்தோடு இருந்தாலும், அடுத்த 5 ஆண்டுகளில் அவரது உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை சில குறியீடுகளை வைத்து மருத்துவர்கள் கண்டறிகின்றனர். எளிமையான ரத்த பரிசோதனை மூலம் இதனை செய்யும் மருத்துவர்கள் வெளியிடும் இச்சோதனை முடிவுகள் உடலில் இருக்கும் கோளாறுகள் குறித்து முன்னெச்சரிக்கையாக தெரிந்துகொண்டு அதுக்கேற்ப சிகிச்சைகளை மேற்கொள்ள மிக உதவியாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1402/28/114022805…
-
- 5 replies
- 1.3k views
-
-
பாதங்களீண் ஓரங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைக்கின்றோம். அவை வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் சங்கடத்தையும் ஏற்படுத்தும். பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர். இருப்பினும் பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இன்னும் பல காரணிகளும் இருக்கத் தான் செய்கிறது. இதனால் பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டு சிதைவுகளும் உண்டாகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளினால் கூட சில நேரங்களில் பித்த வெடிப்பு உண்டாகலாம். பாதங்களை நல்ல அக்கறையுடன் கவனித்து கொண்டு பித்த வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும். அப்படி செய்யாமல், வலி வரும் வரை காத்திருந்து அதன் பின் அதற்கு சிகிச்சை எடுக்கும் கஷ்டம் எதற்கு? ஒரு வ…
-
- 0 replies
- 460 views
-
-
கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை. அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத். பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி…
-
- 6 replies
- 2k views
-
-
தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க: தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்க: தோடப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க: முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். எடையை குறைக்க: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெ…
-
- 0 replies
- 800 views
-
-
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும்,போதிய போசாகின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர். இவை அனைத்திற…
-
- 1 reply
- 10.2k views
-
-
இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர். சாமிக்கு சூடப்படும் மாலையில் தான் சிலர் துளசியை பார்க்கின்றனர் தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் நோயை விரட்டலாம் ஆனால் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான். இந்நிலையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதன் மருத்துவ குணம…
-
- 1 reply
- 651 views
-
-
பொதுவாக தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும். தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான நோய் என்றாலும், அதில் சில வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாக வித்தியாசமாகவும் ஏற்படுவதுண்டு. தலைவலி சாதாரண காரணத்தினாலும் வரலாம்,தீவிர பாதிப்பினாலும் வரலாம். மண்டை ஓட்டைச் சுற்றியிருக்கும் தமனி, சிரை, தோல் வழியேதான் முதலில் வலி உணரப்படுகிறது. பிறகு ரத்தக் குழாய்களின் மூலம் பரவி தலையின் இருபுறங்கள் மற்றும் கழுத்துக்கும் பரவுகிறது. கண்கள், மூக்குத் துவாரங்கள், பற்கள் வழியாகவும் தெரியலாம். பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும். சாதாரண தலையிடியானது தலையில் அமைந்துள்ள (முகம் உ…
-
- 0 replies
- 2.4k views
-
-
சிகரெட், மதுவை போன்று ஆபத்தான பொருளாக மாறிய சர்க்கரை!- அதிர்ச்சி ரிப்போர்ட் Feb 05, 2014 Admin மருத்துவம் 0 இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரை எனப்படும் சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இப்படிதான் நீங்களும் தினமும் அளவுக்கு அதிகமான சர்க்கரை சேர்த்துக் கொள்பவரா? ஆம் எனில் உங்களுக்கான அதிர்ச்சி தகவல் தான் இது. இதனால் இதய நோய் உங்களை விரைவில் தாக்கும் என்பதுடன் எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ச…
-
- 2 replies
- 677 views
-
-
இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… வயிற்றுக் கொழுப்பை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இவ்வாறு வயிற்று கொழுப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது சரியான வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாம் தோல்வியடைகிறோம். வயிற்றுக் கொழுப்பை குறைக்க வேண்டும் என்று உறுதியா…
-
- 26 replies
- 152.5k views
-
-
cc8ad592d7858e6cb34dfcc7ded93f11
-
- 0 replies
- 3.1k views
-
-
ஆண்களுக்கு நீரிழிவால் ஏற்படும் மலட்டுத்தன்மையை தடுக்க சில வழிகள் [Monday, 2014-02-10 21:39:23] ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் முழுமையடைவது தந்தை என்னும் ஸ்தானத்தை அடைந்த பின்னர் தான். ஆனால் அத்தகைய தந்தை, தாய் ஸ்தானத்தை இக்கால தம்பதிகள் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு காரணம், மரபணு கோளாறுகள், உடல் பருமன் மற்றும் ஆல்கஹால் பருகுவது போன்றவை தான். அதுமட்டுமல்லாமல், வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் மலட்டுத்தன்மையானது ஏற்படுகின்றது. மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றிலும், மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு நீரிழிவு முக்கிய பங்கினை வகிக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய நீரிழிவானது ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. இப்படி நீரிழிவானது ஒருமுறை வந்தால், அதனை குணப்பட…
-
- 0 replies
- 454 views
-