நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 03 AUG, 2023 | 04:36 PM வாராந்தம் 5 கிராம் அதாவது ஒரு ஒரு கடனட்டை அளவில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் (microplastic) மனிதனின் வயிற்றுக்குள் செல்கிறது என ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார இதனை தெரவித்தார். உணவு, குடிநீர் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் (microplastic) எனும் நுண் நெகிழித் துகள்கள் கலந்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நபர் வாரத்திற்கு 5 கிராம் நுண் நெகிழித் துக…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
எச்.ஐ.வி வைரஸ்சை அழிக்கும் ஆற்றல் தேனீக்கள் கொட்டும் விஷத்தில் கலந்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள வோஷிங்டன் யூனிவர்சிட்டி ஸ்கூல் மருத்துவப் பிரிவு மாணவர் நடாத்திய ஆய்விலேயே எச்.ஐ.வி வைரஸ்சை அழிக்கும் ஆற்றல் தேனீக்கள் கொட்டும் கொடுக்கில் உள்ள நஞ்சில் இருப்பது கண்டறியப்பட்டது. குளவி கொட்டும் விஷத்தோடு கலந்துள்ள மெலிற்றின் என்ற நச்சுப் பதார்த்தம் எச்.ஐ.வி வைரஸ்களை அழித்து அதனால் பாதிக்கப்பட்ட செல் கலங்களை மறுபடியும் புத்தெழுச்சியடையச் செய்கிறது. எச்.ஐ.வி வைரஸ்சில் உள்ள நாநோ என்ற துகள்கள் மீது மெலிற்றினை செலுத்தி இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எச்.ஐ.வி வைரஸ்களைவிட செல்கள் அளவில் பெரியவையாகும் எனவேதான் செல்களில் கலந்துள்ள எச்…
-
- 0 replies
- 826 views
-
-
நோய்களை உணர்த்தும் நகங்கள்... ........................................................... நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். . ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நக…
-
- 0 replies
- 492 views
-
-
தொலைபேசி பாவனையினால்... 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின், மூளை வளர்ச்சிக்கு பாதிப்பு! கையடக்கத் தொலைபேசி பாவனையினால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கும் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதற்கமைய 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு 02 மணி நேரம் மட்டுமே கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள், எரிச்சல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் …
-
- 0 replies
- 196 views
-
-
பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது. பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது. பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் …
-
- 0 replies
- 443 views
-
-
ப்ராக்கோலி நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது. ப்ரக்கோலியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க Sulfophane என்ற கலவை உள்ளது. இது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு ப்ரக்கோலியில் அதிகம் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்னும் நோய் வராமல் தடுக்க உதவும். ப்ராக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. ப்ராக்கோல…
-
- 0 replies
- 537 views
-
-
நீரிழிவு நோயாளிகளுக்கான காலிபிளவர் சப்பாத்தி காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது காலிபிளவரில் உள்ள சத்துக்கள். காலிபிளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24 கிராம், புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளது. மருத்துவ பயன்கள்: இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். மேலும் காலிபிளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிபிளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.பூ …
-
- 0 replies
- 987 views
-
-
பழங்களின் அரசனான மாம்பழத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை இருப்பதாக லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளனர். மனிதனை மிரட்டும் முக்கியமான வியாதிகளில் புற்று நோய் முதன்மையானது. இதற்கு சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு தெரியாது எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தம் ஒரு கொடிய நோயாக உள்ளது. இந்த நோயால் பாதித்தால் குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் வந்தாலும் அவை முழுமையாக குணப்படுத்தும் என்பதை உறுதியாக கூற முடியாது. இந்நிலையில் லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் மாம்பழத்திற்கு புற்று நோய் கட்டிகளை குறைக்கும் சக்தி இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு புற்று நோய் மற்றும் மாம்பழம் ஆராய்ச்சியாளர்கள…
-
- 0 replies
- 296 views
-
-
உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS தேதி ஜனவரி 2 , நாள் வெள்ளிக்கிழமை. ஜப்பானில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு கனே என்று பெயர் சூட்டப்பட்டது. இது நடந்தது 1903 ஆம் ஆண்டு. கனே தனாகா 119 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2022 ஏப்ரலில் காலமானார். அவர் அதிகாரப்பூர்வமாக உலகின் மிகவும் வயதான நபர் ஆவார். அவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை நர்ஸிங் ஹோமில் கழித்தார். காலை ஆறு மணிக்கு எழுவார். கணித கேள்விகளுக்கு விடை காண்பார். போர்ட் கேம்களை விளையாடுவார். சாக்லேட் சாப்பிடுவார். காபி மற்றும் சோடா குடிப்பார். ந…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
ஆற்று நீர், ஊற்று நீர், ஏரி நீர், குளத்து நீர், என உள்ளது. மறைநீர் என்று ஒன்று உள்ளது. இவை விளை பொருளை உருவாக்க மண்ணில் இருந்து உறிஞ்சப்பட்ட நீரே, மறைநீர் ஆகும். இதனை டோனி ஆலன் என்பவர் கண்டுபிடித்தார். மனித மூளையின் வளர்ச்சி பிறக்கும் போது 340 கிராம், 6வது மாதத்தில் 750 கிராம், 1 வயதில் 970 கிராம், 2 வயதில் 1150 கிராம், 3 வயதில் 1200 கிராம், 6 வயதில் 1250 கிராம், 9 வயதில் 1300 கிராம், 12 வயதில் 1350 கிராம், 20 வயதில் 1400 கிராம், 12 ஆண்டுகளுக்கு பின்பு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது. அரளிச் செடிகள் விபத்தை குறைக்கிறது ஏனெனில் வாகனங்களில் இருந்து வரும் ஒளியின் பிரதிபலிப்பை உட்கிரகித்து குறைக்கும் தன்மையை பெற்றுள்ளன. அதனால் தான் பைபாஸ் சாலை மற்றும் நான்கு வழிச…
-
- 0 replies
- 417 views
-
-
உடற்பருமனால் கவலைகொள்பவர்களுக்கு நற்செய்தி உடற்பருமன் என்பது வயது வித்தியசமின்றி உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. உடற்பருமனைக் குறைக்க பல்வேறு மாத்திரைகள் இருந்தாலும், பெரும்பாலான சிகிச்சைக்கு ஊசி வழி மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறன. இவை சிகிச்சையைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் உடல் பருமனைக் குறைக்க வெகோவி” (Wegovy) என்ற வீரியம் மிக்க மாத்திரையொன்றை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஜி.எல்.பி.-1 அகனிஸ்ட்” எனப்படும் ஒரு புதிய மருந்து வகையில், “ஸெமாக்ளூடைட்” எனும் மூலப்பொருள் கொண்டு குறித்த மாத்திரை தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்க…
-
- 0 replies
- 475 views
-
-
நம்மால் முடியும்! என்னால் முடியும்! பிப்ரவரி-4, உலக புற்றுநோய் தினம் உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்திவரும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய். புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி ‘உலக புற்றுநோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ‘நம்மால் முடியும்’, ‘என்னால் முடியும்’ என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. புற்றுநோய் என்பது என்ன? நமது உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு செல்லில் இருந்துதான் புற்றுநோய் செல் வளர ஆரம்பிக்கிறது. நாம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காமல், அலட்சியப்படுத்தும்போதுதான் புற்றுசெல்கள் பல்கிப் பெருகி, உடலில் கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோயை…
-
- 0 replies
- 363 views
-
-
ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து,…
-
- 0 replies
- 5.4k views
-
-
உணவு தயாரிப்பின் போது உடலுக்கு பல பாதகமான பதார்த்தங்கள் உருவாகுவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் French fry தயாரிக்கும் போது அக்கிரலமைட் எனும் பதார்த்தம் உருவாகிறது. அதைபற்றி சிறிது பார்ப்போம். Acrylamide அக்கிரலமைட் எனப்படுவது ஒரு மணமற்ற,வெண்மையான அறைவெப்பநிலையில் திண்மமாக காணப்படும் ஒரு பதார்த்தமாகும். இதன் மூலக்கூற்று சூத்திரம்- C3H5NO மூலக்கூற்று நிறை -71.08. இதன் பல்பகுதியமானது நீர் பரிகரிப்ப- Water treatment எண்ணெய் பிரித்தெடுப்பு- Enhanced oil recovery வீழ்படிவாக்கி- Flocullant கழிவுபொருட்களின் பரிகரிப்பு - Sewage and waste water treatment ;...... ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. அண்மைய காலங்களில் இது உணவிலும் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (Swe…
-
- 0 replies
- 1.1k views
-
-
அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து! நாம் உண்ணும் உணவு வகைகளில் இன்று 1700க்கும் குறையாதவை செயற்கையான சுவைக்கூட்டுப் பொருள்களால் உருவானவை. பானங்களிலும் பிஸ்கட்டுகளிலும் 100க்கும் குறையாத இரசாயனங்களையே பயன்படுத்துகின்றனர். கேக் மிக்ஸ், சாக்லெட், பிஸ்கட், மார்ஜரின், திடீர் உணவுவகைகள், குலோப் ஜாமூன் மிக்ஸ் என அனைத்திலும் நம்முடைய சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மோசமான இரசாயனங்கள் இருக்கின்றன உண்ணத் தயாராக இருப்பதாலும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் இருப்பதாலும், நாம் இவற்றைக் கணக்கில் கொள்வது இல்லை. எனவே நமது உடலுக்கு பாதுகாப்பானவையா என்று எவரும் அக்கறை கொள்வதில்லை. சுவைகூட்டுப் பொருள் என்பது தேவையில்லாத ஒன்றாகும். சுவை கூட்டுப் பொருளுக்கும் ஊட்டச் சத்துப் பொருளுக்…
-
- 0 replies
- 817 views
-
-
உணவே மருந்து என்பது தான் நம் முன்னோரிகளின் தாரக மந்திரம், அஞ்சரைப்பெட்டியில் உள்ள அனைத்தும் மூலிகைப்பொருட்கள் என்பது நம்மில் பலருக்கு மறந்தே போய் விட்டது. கேன்சரை குணப்படுத்தும் மிகச்சிறந்த மருந்துவப் பொருட்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலறையில் தான் உள்ளது. 01. மஞ்சள்: புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 02. பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் எனும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களின் புற்றுநோய் பிசின் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைக்கிறது. வறுக்கப்பட்ட பெருஞ…
-
- 0 replies
- 609 views
-
-
விட்டமின் மாத்திரைகள் தயாரிக்கும் தொழில்துறை மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது. மிண்டல் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, பிரிட்டனில் உள்ளவர்களில் பாதி பேர் விட்டமின் மற்றும் தாது சத்து மாத்திரைகளை தினமும் உட்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. பலரும் அதனை ஒரு குறைபாட்டை சரிசெய்துகொள்ள எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, நம் உடல் ஆரோக்கியத்துக்கு அது பலம் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானவை விட்டமின்களும் தாதுக்களும் கலந்த மல்டி-விட்டமின் மாத்திரைகளாக கிடைக்கும்பட்சத்தில், எது உடலுக்கு நன்மை (அப்படி ஏதெனும் இருந்தால்) தரும் என்பதை அறிவது கடினம். உங்கள் உடல் நலத்தை காக்க மொத்தம…
-
- 0 replies
- 415 views
-
-
இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள்! By உமா | Published on : 24th October 2017 04:02 PM | அ+அ அ- | சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான். இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். விழித்திருக்கும் போது நம்முடைய புலன்களும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். தூங்கினால் தான் நம் உடல் உறுப்புக்களுக்கும், புலன் உணர்வுக்கும் சிறிது ஓய்வு கிடைக்கும். தூக்…
-
- 0 replies
- 363 views
-
-
திங்கள்கிழமை, மார்ச் 26, 2012, 17:02 [iST] SHARE THIS STORY 0 Here's a quick way to help your joints feel better - Now in Canada! நடனம் என்பது உடலுக்கு உற்சாகம் தரக்கூடிய சிறந்த உடற்பயிற்சி என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். வயதானலும், நோய் பாதிப்புகள் இருந்தாலும் உற்சாகமான நடனமாடுவது மனதையும், உடலையும் உற்சாகப் படுத்தி இளமையை மீட்டுத்தரும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மன உளைச்சல் நீங்கும் நடனமாடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைக்கிறது. இசையோடு கூடிய நடனம் மன அழுத்தத்தை போக்குவதாகவும் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதயநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறாதாம். நடனமாடுவதன் மூலம் உருவாகும் உற்சாக அலைகள் டென்சனை நீக்கி மன உளைச்சலை…
-
- 0 replies
- 425 views
-
-
[size=5]பிளம்ஸ்(plums) பழங்கள்..![/size] மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன. பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இ...வற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !! சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை…
-
- 0 replies
- 2.4k views
-
-
கொரோனா வைரஸ் நமது கனவுகளை எப்படி மாற்றியுள்ளது? அதை கட்டுப்படுத்துவது எப்படி? பூஜா பிபிசி செய்தியாளர் Getty Images பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய முடக்க நிலை அமல்படுத்தப்பட்டு பல வாரங்களாகிறது. அப்போது முதல், அந்த நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு வினோதமான கனவுகள் வருகின்றன. “மருத்துவமனையில் நான் இருக்கிறேன். நள்ளிரவு நேரத்தில் மருத்துவர் ஒருவர் எனது கையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்” என்று கூறுகிறார் எலிசா ஏஞ்சல்ஸ். “அடுத்த சில கணங்களில் நான் வெறும் ஒரு கையோடு மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறேன். அந்த மருத்துவர் என் கையை வைத்து ஓடியாடி விளையாடுவதை நான் பார்த்ததாக நினைவு.” இதே போன்று அடு…
-
- 0 replies
- 415 views
-
-
நம்மில் பலர் உடம்பிற்குத் தேவைப்படும் வைட்டமின்களை தினமும் மாத்திரை வடிவிலோ அல்லது மருந்து வடிவிலோ எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி வருகிறோம். இவை நல்லதா , கெட்டதா என்பது ஒருபுறமிருக்க உணவின் வழியே இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இவற்றை ரசாயனக் கலப்பு உள்ள மாத்திரைகள் வழியாக எடுத்துக் கொள்கிறோமே. இது தேவைதானா என்பதே வாதம். எந்த வயது ஆண், பெண் என்றாலும் உடல் உழைப்புத் தேவை. துணி துவைத்தல், தோட்ட வேலை போன்றவற்றின் போதும் இரத்த ஓட்டம் தலை முதல் கால்வரை சீராக இருக்கிறது. குளிர்சாதன வசதியுள்ள வீடு, அலுவலகம், கார்களில் வசிப்பவர்கள் உடலுக்கு வைட்டமின் டி தேவை. இவர்கள் காலை பத்துமணி முதல் பகல் இரண்டு மணிக்குள் வெயிலில் நடப்பது, வேலை பார்ப்பது போன்றவற்றை வைத்துக் கொண்டால் வைட்ட…
-
- 0 replies
- 991 views
-
-
ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்.. காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – (விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வித…
-
- 0 replies
- 15.9k views
-
-
குழந்தைகள் நலன்: ஆட்டிசம் இருப்பதை கண்டறிவது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, குழந்தைக்கு ஆட்டிசம் இருக்கிறதா? என்ன அறிகுறிகளைப் பார்த்தால் எச்சரிக்கையாக வேண்டும்? ஆட்டிசம் என்பது நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆனால் சிலர் இதை ஒரு நோய் என்று கருதுகிறார்கள். ஆட்டிசம் குறைபாடு ஒரு குழந்தைக்கு உள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவது, அத்தகைய குழந்தைகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம். பெற்றோர்கள் மத்தியில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும், பலர் ஆட்டிசம் ஒரு குறைபாடு என்று புரிந்த…
-
- 0 replies
- 398 views
- 1 follower
-
-
“சொன்ன சொல் மாறிவிட்டீர்கள்” என முகத்தில் அறையுமாப் போல அவர் குற்றம் சாட்டவில்லைத்தான்.“நீங்கள் முந்திச் சொன்னது ஒன்று இன்று சொல்வது மற்றொன்று. படிச்ச நீங்களே இப்படி மாற்றிப் பேசலாமா” என்றும் கேட்கவில்லைத்தான். ஆனால் இது நீதி அநீதி, சரி பிழை போன்றவை சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அறிவியல். அதிலும் முக்கியமாக வளர்ந்து வரும் மருத்துவ அறிவியல், அது சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, துறை சார்ந்த நிபுணர் குழுவினர் எட்டிய முடிவுகளை ஒட்டிய விடயம். வீட்டில் இலக்ரோனிக் கருவியில் பார்த்தபோது பிரஷர் சற்று அதிகம் என்பதால் பதற்றத்துடன் என்னிடம் வந்திருந்தார். நான் பார்த்தபோதும் கிட்டத்தட்ட அதே அளவுதான் 148/90…
-
- 0 replies
- 812 views
-