நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
வாய்வு தொல்லை (FARTING) என்பது விடுபவருக்கும் தொல்லை பக்கத்தில் நிற்பவருக் கும் தொல்லை.சில சத்தமாக இருக்கும். சில கமுக்கமாக இருக்கும். சில மணம இருக்காது.சில உயிர் போகும் அளவுக்கு மண முடையவை. இந்த வாய்வு பற்றிய சில தகவல்கள். என்ன? உணவு சமிபாடு தொழிற்பாட்டின் பக்க விளைவுகளின் ஒன்றான இது (Fart ) காற்று மற்றும் சில குறிப்பிட்ட வாயுக்களின் கலவையாக வெளியேறு கின்றது. கலவை 59 % - நைதரசன் 21 % - ஐதரசன் 9 % - காபன்டைஒக்ஸைட் 7 % - மெதேன் 3 % - ஒக்சிசன் 1 % - வேறு அளவு ஒருவர் தினமும் 14 தடைவைகள் வாய்வு விடுகிறார். இதன் மொத்த அளவு அரை லீட்டர் fart gas. இயல்புகள் ஆபத்து : இது தீப்பிடிக்கக் கூடியது வெளியேறும் வேகம் 7mph ஆரம்ப வ…
-
- 4 replies
- 1.5k views
-
-
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி செய்யும் ஹார்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு “இன்சுலின்” மருந்து மட்டுமே வரபிரசாதமாக உள்ளது. இதற்கு மாற்று வழியை கண்டு பிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் ரத்தத்தில் “குளுகோஸ்” அளவை குறைக்கும் ஹார்மோனை கண்டுபிடித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த ஹார்மோனை எலிக்கு சோதனை செய்து பார்த்து வெற்றியடைந்துள்ளனர். இதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் விஞ்ஞானி ஜொனாதன் க்ராப் தலைமை…
-
- 0 replies
- 480 views
-
-
உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7வரை கொண்டாட படுகிறது . தாய்ப்பாலின் அருமைகளை விளக்கவே இந்த விழா கொண்டாட படுகிறது . உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7 குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் , அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும் , நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் . முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து . ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும் .குழந்தைக்கு போடும் முதல் தடுப்பு மருந்து என்றும் இதை சொல்லலாம் . இதில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன . விட்…
-
- 0 replies
- 712 views
-
-
உங்க லிப்ஸ்டிக் தரமானதா? உதடு பத்திரம்! உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது இன்றைக்கு பேஷனாகிவிட்டது. தரமான லிப்ஸ்டிக் உபயோகித்தால் மட்டுமே உதடுகளை பாதுகாக்க முடியும். இல்லையெனில் உதடுகள் கருத்தும் வறண்டும் போய்விடும். முதன்முறையாக லிப்ஸ்டிக் உபயோகிக்கப்போகிறீர்களா? இதோ லிப்ஸ்டிக் போடும் முறை பற்றி ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள். ஒருவர் உபயோகித்த லிப்ஸ்டிக்குகளை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது இதனால் தொற்றுக்கிருமிகள் தாக்கும். எனவே தனியாக லிப்ஸ்டிக் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். நிறத்திற்கு ஏற்ற லிப்ஸ்டிக். தற்போது இளஞ்சிவப்பு முதல் பிரவுன், வைலெட் மற்றும் கறுப்பு வரை பல்வேறு வர்ணங்களில் கடைகளில் லிப்ஸ்டிக்குகள் கிடைக்…
-
- 37 replies
- 3k views
-
-
40 வயதிலும் நலமான தாம்பத்ய வாழ்க்கைக்கு ….. நலமான தாம்பத்ய வாழ்க்கை மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் தாம்பத்ய வாழ்க்கை இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று பெண்கள் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் வந்தாலும் கூட முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் சொல்லப் போனால், முன்பை விட சுதந்திரமாக, எந்தவித தடையும், சங்கடமும் இல்லாமல் அனுபவிக்க முடியும் என்பது மருத்துவர்களின் கருத்து. மெனோபாஸ் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுவது இயற்கை. அந்த சோர்வை விரட்டுவதற்கு தாம்பத்ய உறவானது அருமருந்தாக பயன்படு…
-
- 0 replies
- 768 views
-
-
சோடியமும் குளோரினும் சேர்ந்தால் உருவாகுவது நம் வாழ்வின் முக்கியமான உணவு பொருளான உப்பு. சோடியம் (Sodium) + குளோரின் (Chlorine) --> சோடியம் குளோரைட் (sodium chloride) 2 Na + Cl2 --> 2 NaCl இவ் உப்பில்லாமல் ஒரு வேளை உணவை கூட நாம் சாப்பிட முடியாது. உப்பில் மொத்தம் பன்னிரண்டு வகை உண்டு. அதில் நான்கு தான் மிக பிரபலமானவை. அவற்றிலும் இரண்டு தான் நம் வீட்டின் உபயோகித்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கடல் உப்பு(sea salt), மேசையுப்பு(table salt). வழக்கம் போல் கால மாற்றத்தில் நாம் நம்முடைய பாரம்பரிய "கல் உப்பு" எனும் கடல் உப்பை மறந்து மேசையுப்புக்கு மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் கடல் உப்புத்தான் இன்று வரை டாக்டர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை பரிந்துரை செ…
-
- 8 replies
- 2.5k views
-
-
உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. மருத்துவ குறிப்புகள் : 1. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். 2. உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப்…
-
- 0 replies
- 442 views
-
-
உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து, ’நீ எந்தக்கடையில அரிசி சாப்பிடுகிறாய்?’ என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வார். பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்னை காரணமாக உடன் எடை அதிகரிக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும். ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும் எடை கூடும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட எடை கூடுவதை நடுத்தர வர்க்கத்தினரிடையே காணலாம். குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்பட நேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியமான தோற்றமும் இல்லாமல் இருப்…
-
- 4 replies
- 6k views
-
-
பாதிப்புகள். 1) கல்லீரலில் பாதிப்பு கல்லீரலை வீங்கச் செய்யும் கல்லீரலை நிரந்தரமாக சேதம் அடைய செய்யும். 2) மயக்கத்தில் ஆழ்த்துதல் அதிகமாக மது அருந்துவதால் மயக்கம் ஏற்படும். கண் விழிக்கும்போது தலைவலி இருக்கும். 3) மூளையைப் பாதித்து அதன் செயல்திறனைக் குறைக்கிறது. உங்களின் முடிவுகள், சுய கட்டுப்பாடு மற்றும் உடல் ஒத்துழைப்பு அனைத்தையும் பாதிக்கிறது. எனவே விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணமாகிறது. 4) பசி இழப்பு. இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகிறது. மது பழக்கத்திலிருந்து விலகும் வழிமுறைகள். 1) உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் மன உறுதி வலுவாக இருக்குமானால், நீங்கள் துரிதமாக மதுவை விட்டு விடுவீர்கள். 2) மதுவின் அளவை கு…
-
- 13 replies
- 1.5k views
-
-
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி செய்யும் ஹார்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு "இன்சுலின்' மருந்து மட்டுமே வர பிரசாதமாக உள்ளது. இதற்கு மாற்று வழியை கண்டு பிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரத்தத்தில் "குளுகோஸ்' அளவை குறைக்கும் ஹார்மோனை கண்டு பிடித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த ஹார்மோனை எலிக்கு சோதனை செய்து பார்த்து வெற்றியடைந்துள்ளனர். இதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் விஞ்ஞானி ஜொனாதன் க்ராப் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது."இந்த பரிசோதனை வெற்றியடைந்தா…
-
- 0 replies
- 587 views
-
-
காபி vs டீ காபியும் டீயும் நம் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி ,சிலருக்கு டீ ,மற்றும் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது . பல்வேறு வகைகளில் காஃபியையும் டீயையும் ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது . அதற்கான ஐந்து காரணங்கள் இதோ . 1 .விலை காஃபி ,டீ இரண்டும் வெவ்வேறு தரங்களில் வெவ்வேறு விலைகளில் கிடைத்தாலும் தரமான காஃபி அல்லது டீயின் விலையை ஒப்பிட்டால் காஃபியின் விலை அதிகம் . மேலும் காஃபியை விட டீயை அதிக நாட்கள் கெடாமல் வைக்கலாம் . 2 . பல் பாதுகாப்பு காஃபி ,டீ இரண்டுமே பற்களில் கரையை ஏற்படுத்துபவை என்றாலும் காஃபி அதிக கரையையும் வாய் துர் நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது .…
-
- 1 reply
- 625 views
-
-
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்? ஆஸ்துமா குணமாக: முட்டைக் கோஸ், முருக்கைக்காய், புதினா, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, பசலைக்கீரை, தக்காளி, லெட்டூஸ், செலரி. இருமல் குணமாக: சுரைக்காய், வெண்டைக்காய், இஞ்சி, புதினா, வெள்ளைப்பூண்டு, முட்டைக்கோஸ். இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு முதலியவற்றைக் குணப்படுத்த: காரட், பச்சைப் பட்டாணி, காலிஃபிளவர், புடலங்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், காளான், பூசணி, பசலைக்கீரை, லெட்டூஸ், சோயா, செலரி, கொத்துமல்லி. இளமைத்துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் உட…
-
- 0 replies
- 890 views
-
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அளித்த அருமருந்து தான் பாகற்காய். அதில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படுத்தும் முறையும் கீழே தரப்பட்டுள்ளது. பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும். பாகற்காயின் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயின் இலைச் சாற்றில் காசிக் கட்டியை (கத்தைக் காம்பு) உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதிர்ந்து…
-
- 5 replies
- 17.6k views
-
-
மாற்றம் செய்த நேரம்:4/2/2012 3:29:05 PM 15:29:05 Monday 2012-04-02 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாப்கார்ன், உடல் ஆரோக்கியத்தை காக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சோள வகை உணவான பாப்கார்னில் உள்ள சத்துக்களும் பயன்களும் குறித்து அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ரான்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாப்கார்ன் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் தியேட்டர்களில் பாப்கார்ன் வாங்கி சாப்பிடுபவர்கள்தான் அதிகம். விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள்…
-
- 2 replies
- 561 views
-
-
Courtesy: Raman, kalakad வெற்றிலை போடுவது ஒரு அநாகரீகச் செயல் என்றும், பழுப்பு நிறப் பற்களைப் பார்த்து கேலி செய்வதும் வழக்கமாக உள்ளது. உண்மையில் வெற்றிலை போடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும். அது அருவெருக்கத் தக்கதாகவும், அபாயகரமானதாகவும் ஆனது, அதை நாம் கையாண்ட விதத்தினால் தான்! அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும்; (அளவோடு குடித்தாலும் கோலாக்கள் கடும் விஷமாகும்) அதுவும் நல்லது என்று ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால், அதை கேடு விளைவிக்கக் கூடியதாக மாற்றுவது நமக்குக் கைவந்த கலை! மருத்துவரைக் கேளுங்கள்: “வெற்றிலை போடாதீர்கள்! அது கெடுதல் தரும் கேன்சரைக் கொண்டு வரும்” என்பார். கிறிஸ்தவத்தை தனது மதமாகக் கொண்ட ஆங்கிலேயனாகட்டும்; அவன் இந்தியாவில் பரப்பிய (பக்கவிளைவு தரும்)…
-
- 0 replies
- 494 views
-
-
முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம். இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம். எப்படி ஆனதோ? நாரிப்பிடிப்பு ஏன் வருகிறது? இவ்வாறு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள…
-
- 12 replies
- 9.8k views
-
-
Today is World Autism day; empathy not sympathy, opportunity not isolation is what should be the mantra ஆடிசம் என்பது நோய் அல்ல . மன குறைபாடு ஆகும் . உடல் வளர்ச்சி சரியாக இருக்கும் . ஆனால் மன நல குறைபாடு இருக்கும் . தமிழில் தற்புனைவு ஆழ்வு என்று கூறலாம் . அறிகுறிகள்: இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது . கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பது பல முறை கூப்பிட்டால் ஒரு முறை மட்டும் பார்ப்பது கண்ணோடு கண் பார்க்க மாட்டான் முகத்தை நேருக்கு நேர் பார்க்காது . சில விசயங்களை திரும்ப திரும்ப ஒரே மாதிரி செய்து கொண்டு இருப்பது இதை எவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிகிறோமோ அவ்வளவு நல்லது …
-
- 3 replies
- 1.5k views
-
-
இது முகநூலில் பகிரபட்டிருந்தது இதன் உண்மை தன்மை தெரியவில்லை சிறுநீரககல் பிரச்சினை படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும்... ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன். அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம். எனக்கு நான்கு வருடங்களுக்கு ம…
-
- 0 replies
- 516 views
-
-
யோகா பயிற்சிகள் யோக முத்திரா ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது. “குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும்” என்பது தமிழ்வாக்கு.…
-
- 2 replies
- 1k views
-
-
what is human Endogenus cholesterol? கொலஸ்ட்ரால் என்றால் என்ன? கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது. சரி …
-
- 0 replies
- 605 views
-
-
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லத…
-
- 0 replies
- 560 views
-
-
"ரத்தத்தை சுத்தமாக்கும் உணவுகள்" மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. ரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாடமுடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களிலேயே உள்ளது. உணவியல் நிபுணர்கள் கூறும் அவற்றை சாப்பிட்டு பாருங்களேன். எலுமிச்சை ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பி…
-
- 0 replies
- 378 views
-
-
பரசிட்டமோல்(paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது. உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் கூட. இந்த மாத்திரையை தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே. இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப்படும்போது அந்தத் தயாரி…
-
- 1 reply
- 1.9k views
-
-
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களை விட ஆக்டிவாக அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்கு 11 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு பிரெசென்டீசம் (“presenteeism”) எனப்படும் நோய் தாக்குகிறதாம். மனஅழுத்தம், முதுகுவலி, இதயநோய், உயர்ரத்த அழுத்தம், வாய்வு கோளாறுகள் ஏற்படுவதே இந்த பிரெசென்டீசம் நோயின் அறிகுறி என்கிறது மருத்துவ அகராதி. வேலை என்பது வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமானதுதான். அந்த வேலையே உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தாகிவிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஒய்வு இல்லாத வேலை …
-
- 1 reply
- 523 views
-
-
என்னுடைய அக்காவிற்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதற்காக ஆறு மாதத்தில் குழந்தையை பிறக்க வைத்துள்ளார்கள்.ஆனால் குழந்தை உயிருடன் உள்ளது.எனது கேள்வி என்னவென்றால் இந்த குழந்தை தப்பி ஆரோக்கியமாக வளர முடியுமா? ஏனென்றால் குழந்தை இறக்கும் பட்சத்தில் அக்காவை மன ரீதியாக தேற்றுவது மிகவும் கடினம்.இதைப்பற்றி பூரண விளக்கம் ஆராவது தந்தால் திருப்தியாக இருக்கும்.
-
- 30 replies
- 3.1k views
-