யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
94 topics in this forum
-
காற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையு…
-
-
- 50 replies
- 2.8k views
-
-
"உனக்காக் காத்திருக்கேன் [14 பெப்ரவரி 2025 ]" [காதலர் தினம் கொண்டாடும் உறவுகளுக்காக] வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களின் கட்டட நிர்மாண, மீள்நிர்மாண, புனர்நிர்மாண மற்றும் பராமரிப்பு தொடர்பான சேவை வழங்கும் கட்டட திணைக்களத்தில் ஒரு இளம் பொறியியலாளராக ஆராமுதன் அன்று கடற்கரை வீதி, குருநகரில் அமைந்துள்ள பணிமனைக்கு முதல் முதல் 01 பெப்ரவரி 2020, வேலையில் சேர, தனது தற்காலிக வதிப்பிடத்தில் இருந்து புறப்பட்டான். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வரை இலகுவாக சென்றவன், அதன் பின் கொஞ்சம் தடுமாறினான். அப்பொழுது மாணவர்கள் கடக்க தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தவன், தனக்கு பக்கத்தில் ஸ்கூட்டரில், தனது கடிகாரத்தை பார்த்து முணுமுணுத்துக் கொண்டு இருந்த அந்த பெண்ணிடம் ' ஹலோ…
-
-
- 3 replies
- 280 views
- 1 follower
-
-
ஓயும் ஊசல் ------------------- என்னைக் கண்டவுடன் அது இப்ப எச்சரிக்கையாவதில்லை மெதுவாக தலையை உயர்த்தி நேராக என் கண்களை பார்க்கின்றது கனிவும் அமைதியும் அதன் கண்களில் காலம் கொடுத்து விட்டிருக்கின்றது தெருப்பூனை ஒன்றின் ஆயுளைத் தாண்டி இன்னும் அது தெருவில் வாழ்கின்றது மெதுவாக வந்து கொஞ்சமாக சாப்பிடுகின்றது 'நீ சாப்பிட்டாயா........... எல்லோரும் நலமா........' என்று உள்ளே மெதுவாக ஒரு தடவை எட்டிப் பார்க்கின்றது ஒரே எட்டில் முருங்கையில் ஏறி கூரைக்கு அது இப்போது பாய்ந்து போவதில்லை முருங்கையையும் கூரையையும் பார்த்து விட்டு நிலத்தில் நடந்து போகின்றது அது இப்ப எந்தப் பறவையையும் பிடிக்க பதுங்குவதும் இல்லை எங்கோ போய் ஓய்ந்து அன்றைய நாளை முடிக்கின்றது நாளை மீண்டும் வரும் அந்த…
-
-
- 9 replies
- 363 views
-
-
"நீயில்லை நிழலில்லை" சுட்டெரிக்கும் கதிரவன் யாழ்ப்பாணத்தின் மேல் உயர்ந்து, வறண்ட பூமியில் கூர்மையான நிழல்களைப் போட்டது. ஒரு காலத்தில் செழித்தோங்கிய நகரம் பல ஆண்டுகளாக மோதலை சகித்துக் கொண்டு, அதன் தெருக்களை சண்டைகள் மற்றும் உயிர்வாழ்வின் நினைவுகளால் பொறித்தது. இந்த நகரத்தின் மையத்தில் ஒரு பழமையான ஆலமரம் நின்றது, அதன் பரந்த கிளைகள் நிழல் தேடுபவர்களுக்கு ஓய்வு அளித்தன. நெகிழ்ச்சியின் சின்னமான அந்த மரம் யாழ்ப்பாணத்தின் மாறிவரும் அலைகளுக்கு மௌன சாட்சியாகவும் இருந்தது. அதன் நிழலில் ராகவன் என்ற முதியவர் அமர்ந்திருந்தார், அவருடைய இருப்பு மரத்தைப் போலவே உறுதியானது. ஒவ்வொரு நாளும், அவர் அங்கும் இங்கும் கிழிந்த, ஒரு பழைய நாட்குறிப்பு மற்றும் ஒரு பேனாவைக் கொண்டு வருவார். அவருக்கு …
-
- 0 replies
- 139 views
-
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே…. எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. கவனித்தாயா? அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை. பார்த்தாயா? ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா? அதன் அம்மா அப்பாவை நாந்தான் சேர்த்துவைத்தேன். எங்கள் ஆட்டு மந்தையில் அது ஒரு வரலாறு. பல சம்பவங்களின் பின் நடந்தேறியது. அங்கேயும் பட்டியின் பழைய கதவுகளை நெட்டித்திறக்க எனக்கு உதவியது அந்த கெட்டிக்கார கிழவனி…
-
-
- 12 replies
- 647 views
- 1 follower
-
-
ஒரே ஒரு இழையில் தொங்கியபடி ஒரு சிலந்தி இருந்தது. எங்கிருந்தோ யாரோ சொன்னார்கள், சிலந்தி இருப்பது கூட்டுக்கு நடுவில் அல்லவா? சிலந்தியும் ஊடுபாவாக கூடு கட்டத் துவங்கிற்று. போதாக்குறைக்கு உலக வலைப்பின்னலிலும். ... இப்போதெல்லாம் அது கட்டிவிட்ட கூட்டிலிருந்து தப்பிவிடத் தான் எத்தனிக்கிறது ஆனால் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி இழைகளே அதை நெரிக்கின்றன அதன் கூக்குரலோ வலைப்பின்னல்களில் எதிரொலித்தாலும் யாருக்கும் கேட்பதாயில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் தன்னைப் போலவே பல சிலந்திகள்... சிலதோ ஏதோ ஒரு உத்வேகத்தோடு, கழுத்தை நெரித்தாலும் - மேலும் மேலும் வலைகளைப் பின்னுவதும் தெரிகிறது. இப்போது சிலந்திக்குச் சிரிப்பும் வருகிறது வலையைப் பின்னப்போய் வாழ்க்கையை இழந்து விட்டேனே.
-
-
- 10 replies
- 662 views
- 1 follower
-
-
காலையில் எழுந்ததும் மைதிலி பர பர ப்பானாள். பிள்ளைகளை பள்ளிக்கு பஸ் வண்டியில் ஏற்றி விட்டு, அவசர அவசரமாக சமையலை முடித்து விட்டு அந்த தொடர் மாடிக் கட்டிடத்தின் நாலாம் மாடிக்கு செல்ல கையில் சொக்கலேருக்கள் அடங்கிய சிறு பையுடன் மின் தூக்கி முன் காத்திருந்தாள் . இரவு கணவரிடம் தனது இரண்டாவது அண்ணா இத்தாலியில் இருந்து வந்திருப்பதாகவும் (அண்ணாவின் மனைவி அண்ணி இவளது வகுப்பு த்தோழி ) அவரைப் பார்க்க செல்வதாகவும் கூறி இருந்தாள். மின் தூக்கி வரும் வரை காத்திருந்தாள் , மனமெல்லாம் பத்து வருடங்கள் பின்னாடி சென்றது. இரவிரவாக தலையணை நனைய உறக்கமற்று இருந்தவள், இன்று வாழ்க்கையின் ஒரு பெரும் திருப்பம் அந்த கட்டிட தொகுதியில் வாழும் அண்ணாவின் வகுப்பு தோழன் சென்ற வாரம் செய…
-
-
- 5 replies
- 463 views
- 1 follower
-
-
கூடுவேம் என்பது அவா / குறள்1310 ஊடல் காட்டுவது அழகின் வடிவமே ஆடல் கலையின் ஒரு முத்திரையே வாட விடாமல் அருகில் இருந்தே மடவரல் பெண்ணைத் தேற்றினால் என்ன? கூடல் இல்லா இன்பம் உண்டா பாடல் தராத இசை இருக்கா தேட வைத்து கண்ணீர் வரவழைக்காமல் மடந்தை நெஞ்சுடன் இணைந்தால் என்ன? தேடல் கொண்டு உள்ளம் அறிந்து உடல் வனப்பை பார்த்து மகிழ்ந்து அடக்கம் தூவும் நாணம் அகற்றி ஆடவள் மனதில் குடிகொண்டு வாழ்ந்தாலென்ன? கூடுவேம் என்பது அவாவின் வெளிப்பாடு நாடும் ஆசைக்கும் வடிகால் அதுவே கூடு போட்டு அதைச் சிறைவைக்காமல் கேடுவிளைக்கும் பொய்க் கோபம் அழிந்தாலென்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 200 views
-
-
"தனிக் குடித்தனம்" இலங்கையின் யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், பரபரப்பான தெருக்கள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு மத்தியில், அகநகை மற்றும் இளங்கவி என்ற புதுமணத் தம்பதிகள் வாழ்ந்தனர். புதிதாகத் திருமணமாகி, உற்சாகத்தில் மூழ்கிய அவர்கள், தங்கள் பெற்றோரின் வீடுகளின் ஆறுதலான அரவணைப்பிலிருந்து விலகி, தங்களுக்கென சொந்தக் கூடு அல்லது தனிக் குடித்தனம், "இனித்திட இனித்திடத்தான் நகைமுத்தன் எழில் அறம் நடத்துதற்கு தனியில்லம் கொண்டான்" என்று பாரதிதாசனார் கூறியது போல, கட்டுவதற்கான பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அகநகையின் பெற்றோர் அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, " நீ ஆரம்பத்தில் இருந்தே செல்லமாக, சுதந்திரமாக வாழ்ந்துவிட்டாய், காலையில் நேரத்துடன் கூட எழும்பமாட்டாய், அவசரமாக அரைகுறை…
-
- 0 replies
- 256 views
-
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம் இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு…
-
-
- 12 replies
- 950 views
- 1 follower
-
-
"பிள்ளை நிலா" ஒரு முன்னிரவு அன்று, வெள்ளி நிலவின் ஒளியின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், சுந்தர் மற்றும் மீனாட்சி இருவரினதும் திருமணம், அவர்களது குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டது. அவர்களின் திருமணம் ஆராவாரத்துடன் கொண்டாடப்பட்டாலும், மணமக்கள் இருவரிடமும் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. பொறியியலாளரான சுந்தர், விருப்பு வெறுப்பற்ற, அமைதியான இயல்புடன், சிந்தனைகள் அல்லது ஆசைகளை விட, உண்மையான உலக நடைமுறைகளில் அதிக அக்கறை கொண்டவரும் எதையும் துல்லியமாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவருமாவார். அதே வேளை, உணர்ச்சிமிக்க கலைஞரான மீனாட்சி, உணர்ச்சிகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டவள். அவர்களது கருத்து வேறுபாடுகள் அடிக்கடி, அவர்களுக்கிடையில் உராய்வுக்கு வழிவகுத்…
-
- 0 replies
- 164 views
-
-
"கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" "கலாச்சாரம் தமிழா தலைசுத்துது எனக்கு கலப்பு இல்லா ஆதி மொழியே கலை மூன்றும் தந்த பெருமையே!" "பகலோனாக உலகிற்கு ஒளி ஏற்றிவவனே பகுத்தறிவு சித்தர்களின் பிறப்பு இடமே பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதலே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ "துடிக்கும் இதயங்கள்" "துடிக்கும் இதயங்கள் தேடுது அன்பு அடிக்கும் கைகள் அணைக்குது பாசம் இடிக்கும் வார்த்தைகள் வாட்டுது நெஞ்சம் குடிக்கும் மதுபானம் சிதைக்குது உடலை கெடுக்கும் செயல்கள் குறைக்குது நற்பெயரை!" "உள்ளம் மலர்ந்தால் மகிழ்வு பிறக்கும்…
-
- 1 reply
- 209 views
-
-
“காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” நன்முல்லை, ஒரு கடற்கரையோரம் இருந்த, பழமையான மரத்தடியில் அமர்ந்திருந்தாள். மெல்லிய குளிர் காற்றில் அவளின் சேலை அசைந்தது. அவள் கூந்தலில் சூடிய மல்லிகைப் பூக்களின் நறுமணம் உப்புக் காற்றில் கலந்திருந்தது. பழைய மகிழ்வான நினைவுகளால் நிரம்பிய அவளது கண்கள், தனக்கு நன்றாகத் தெரிந்த, ஆனால் பல ஆண்டுகளாகப் பார்த்திராத, ஒரு உருவத்தைத் தேடுவது போல, அடிவானத்தை நோக்கியது. அவளுடைய மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்களைக் கண்ட கடல், அவள் இதயத்தில் உள்ள வலியை மறந்து, தனது நித்திய தாளத்தைத் தொடர்ந்தது. பனிமலை போல் பரந்திருக்கும் வெண்மணலின் முடிவில், பாரிய கடல் ஆர்ப்பரித்து அலை மேலெழுந்து, அவள் காலை முத்தமிட்டது. அந்த அழகே தனிதான்! ஆனால் அவள் அதை விர…
-
-
- 2 replies
- 258 views
-
-
காதலர் தினக் கதை ------------------------------ என் நண்பன் சொன்ன அவனின் கதை இது ஆள் அப்படி ஒன்றும் கண்டவுடன் காதலிக்க தோன்றும் புற அழகு என்றில்லை ஆனால் அவனின் அகம் நல்ல அழகு என்று அவனே சொல்லிக் கொள்வான் சொந்த இடம் பீஜிங் சோகக் கதை நடந்ததும் அங்கே தான் அங்கே ஒரு பெண் நல்ல அழகு அவர் ஊரில் பலரும் அவர் பின்னால் திரிய அவரோ நம்மாளை எப்படியோ காதலிக்க ஆரம்பித்தார் கனவா நிஜமா என்று காற்றிலே மிதந்து கொண்டிருந்தான் நம்மாள் அடுத்து வந்த காதலர் தினத்தில் நம்மாள் ஒரு பூங்கொத்து கொடுத்தார் எங்கே வாங்கிய பூங்கொத்து என்ற கேள்விக்கு …
-
-
- 16 replies
- 645 views
- 2 followers
-
-
அதிகாலைப் பொழுது ஆழ்ந்துநான் உறங்கையிலே தூக்கத்தில் மனத்திரையில் எழுந்தது காட்சியொன்று! பசும்புல் நிறங்கொண்ட பச்சைச் சேலையுடன் பல்லவன் சிற்பமொன்று என்னருகில் நின்றதுபார்! ஆசையுடன் கையிரண்டில் அள்ளி நானெடுத்தேன் வஞ்சிக் குமரியவள் வளையல்க் கையிரண்டும் மாலையாய் எந்தோளில் விழுந்தது போலுணர்ந்தேன்! அல்லிப்பூ இதழின் அழகுக் கோலத்தால் ஆசையாய் முத்தமொன்று அவளிடம் கேட்டுவிட்டேன்! துள்ளிக் குதித்திறங்கித் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள் கையில் மிதக்கும் கனவேயது என்றுணர்ந்தேன்!
-
- 3 replies
- 288 views
-
-
"தை மகளே வருக" தை மகளே வருக மகிழ்வாக கை கூப்பி உன்னை வாழ்த்துகிறேன்! மை பூசிய அன்பு விழியாளே வா, வந்து அருள் புரிவாயே! கார்த்திகை மழை பெய்து பெருகி ஆர்ப்பரித்து வெள்ளமாய்ப் பாய்ந்து ஓடி ஊர்வலமாய் வயல் வெளி தாண்டி மார்கழியில் அங்கே குளம் ஆனாள்! தையில் குள நீர் தெளிந்திட தையால் தன் கடிமனம் வேண்டி தையில் முன்பனி நீர் ஆடி தைத்தாடை உடுத்து தவம் முடித்தாள்! வண்ணக் கோலம் இட்டு அவள் விண்ணின் கதிரவனை வணங்கிப் போற்றி கண்ணான உறவினருடன் பொங்கல் படைத்து மண்ணின் பெருமையை உலகத்துக்கு அறிவித்தாள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 136 views
-
-
“ஏனடி இந்த வேதனை..?” மாலைக் கதிரவன் பனை மரங்களுக்குப் பின்னால் தன் கதிர்களை இழுத்து மூடிக்கொண்டு, நீலக்கடலில் குளிக்கும் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள மகிழ்மதியின் வீட்டிலும் நீண்ட நிழல்களை வீசியது. மகிழ்மதி இடைகழியில் [முன்னறையில்] அப்பொழுது அமர்ந்திருந்தாள். அவளது மெல்லிய விரல்கள் தூசி நிறைந்த அறையின் தரையில் எதோ வடிவங்களைத் தேடிக்கொண்டிருந்தது. கண்ணீரால் கனத்த அவள் கண்கள், வெளியே உற்றுப் பார்த்தன. அங்கு அடிவானம், அடைய முடியாத வாக்குறுதிகளால், அவளைக் கேலி செய்வதாகத் அவளுக்குத் தோன்றியது. அவளது குழந்தைப் பருவத்தோழிசங்கவி, அவ்வேளை அங்கே வந்தாள். மகிழ்மதியின் முகத்தில் படிந்திருந்த வாட்டத்தைக் கண்டு, அவளின் மகிழ்ச்சியான வருகை தடுமாறியது. மகிழ்மதியும் சங்கவியும் ஒன்றாகப…
-
- 0 replies
- 272 views
-
-
"கும்மிருட்டில் நடனம்" முள்ளிவாய்க்காலில் இரவு கனமாக இருந்தது, சொல்லொணாத் துயரம் கிசுகிசுக்கும் அமைதியற்ற அமைதியில் மறைந்திருந்தது. இந்த மண்ணில் நடந்த கொடுமைகளை வானமே புலம்பியது போல, மேலே உள்ள நட்சத்திரங்கள் மங்களாகி கும்மிருட்டாய் ஆகியது. இலங்கையின் நீண்ட மற்றும் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிப் போர்க்களமான முள்ளிவாய்க்கால், கேட்கப்படாத ஒரு ஆயிரம் ஆயிரம் அழுகையின் கனத்தைத் தாங்கியது. இந்த மண்ணிலிருந்து திருடிய அல்லது அழித்த எல்லா உயிர்களும், அந்த மோதலின் நிழலில் சிக்கிக்கொண்டு, அதன் எரிந்த பூமிக்கு அடியில் இருந்து, அவர்களின் குரல்கள் இன்னும் நீடித்துக்கொண்டே இருந்தது. "உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும் குடருங் கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய் …
-
-
- 2 replies
- 347 views
- 1 follower
-
-
இன்னொரு சக்கரவர்த்தி --------------------------------------- அற்புதமான ஆடை என்று கொடுக்க அதை உடுத்து ஆடம்பரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் ஒரு சக்கரவர்த்தி என்னே ஆடை இது எப்படி மின்னுது இது இதுவல்லவோ அழகு எங்கள் ராசா என்ன கம்பீரம் என்று கூட்டம் குரல் எழுப்பியது இன்னும் பெருமைப்பட்ட சக்கரவர்த்தி இன்னும் இன்னும் கைகளை நீட்டி கம்பீரமாக நடந்தார் சின்னப் பயல் ஒருவன் திடீரென 'ஐயே................ ராசா அம்மணமாக வருகிறாரே.....' என்று கத்திச் சொல்லி அவன் கண்களையும் மூடினான் சக்கரவர்த்தி வெட்கத்தில் பொத்திக் கொண்டு ஓட கூட்டமும் ஆடை நெய்தவரும் உயிர் தப்ப ஓடி…
-
-
- 6 replies
- 586 views
-
-
"தை பிறந்தால்" & "பரோபகாரம்" "தை பிறந்தால்" தைவரல் காற்றோடு பொங்கலும் பொங்க தைத்த ஆடையோடு சிறுவரும் மகிழ தையல் கடிமனம் நன்று நிறைவேற தை பிறந்தால் வழி பிறக்குமே! தமிழர் திருநாள் உழவர் பெருநாள் தனித்துவம் கொண்ட எங்கள் அடையாளம் தங்கக் கதிரவனை விழுந்து கும்பிட்டு தலைவி தலைவன் கொண்டாடும் கொண்டாட்டம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "பரோபகாரம்" யாதும் ஊரே யாவரும் கேளிரென்று காதும் காதும் சொல்லி வைத்தானே! தீதும் வந்து தமிழை அழித்ததே போதும் இனி நீக்குவோம் 'பரோபகாரத்தை' அது 'பிறருக்கு உதவுதல்' ஆகட்டுமே! தன்னலம் அற்று செய்யும் பணியும் புன்னகை வழங்கும் அன்புப் பார்வையும்…
-
- 0 replies
- 169 views
-
-
"செருக்கு” [தன்முனைக் கவிதை] "செருக்கு அற்றவர் வாழ்வு என்றும் பெருமிதமே! கர்வம் கொண்டவர் இருப்பு ஒரு கேள்விக்குறியே!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 207 views
-
-
"மௌனம் சம்மதமா?" இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பகலவன் என்ற இளைஞன், கொழும்பின் மையப் பகுதியில், வணிக நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில், மிகவும் சுறுசுறுப்பாக பணிபுரிந்தான். அவனது நாட்கள் கூட்டங்கள், அறிமுகப்படுத்துகை [விளக்கக் காட்சிகள் / presentations] மற்றும் நகர வாழ்க்கையின் சலசலப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிந்தன. அப்படியான மும்முரமான ஒரு வேலையான நாளின் போதுதான், சமீபத்தில் அந்த நிறுவனத்தில் இணைந்து இருந்த பயிற்சி ஊழியரான மட்டக்களப்பைச் சேர்ந்த ஆழினி என்ற இளம் பெண் சிறிது நேரத்தில் தனது அலுவல்கள் பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள அவனை சந்திப்பாள் என்ற அறிவிப்பு அவனுக்கு வந்தது. அவன் அந்த மின்னஞ்சல் [ஈ-மெயிலில்] குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் பெரிதாக கவனிக்காமல…
-
- 0 replies
- 220 views
-
-
அண்மையில் ஊரில் நடந்த திருமணம் ஒன்றிற்கு பரிசாக பணம் அனுப்பியிருந்தேன். பெண்ணின் தகப்பனார் பெயருக்கே பணத்தை அனுப்பி அவருடன் தொலைபேசியில் சொன்னேன். பணம் அனுப்பி இருக்கிறேன். மணமக்களுக்கு திருமண பரிசாக கொடுங்கள் என்றேன். பக்கத்தில் நின்ற எனது மனைவி மறக்காமல் கொடுங்கள் என்றார். அவருக்கு அது கேட்க கூடாது என்று உடனேயே தொலைபேசியில் இருந்து விடை பெற்றுக் கொண்டேன். மனைவியிடம் அவ்வாறு சொல்லக் கூடாது சொல்ல காரணம் என்ன என்று கேட்டபோது அவர் பிள்ளைகளுக்கு பணத்தை கொடுப்பதில்லையாம். பிள்ளைகளின் சம்பளத்தில் பெரும் பகுதியைக் கூட அவரே வாங்கிக் கொள்கிறாராம் என்றார். எனக்கு தெரிந்து அவர் கமத்தை தோட்டத்தை நம்பி மட்டுமே வாழ்பவர். எந்தவகையான கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்.. மிகுந்த நாட்டுப்பற்றாள…
-
-
- 7 replies
- 441 views
-
-
"பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" & "என்றுமே முதலாளி" "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" "பனியில் நனையலாமா? படியிறங்கி வாராயா இனிய காதலை இன்பமாக கழிப்போமா? தனிமை வாட்டும் தணியாத வெப்பத்தை கனியும் அன்பால் கடந்து போவோமா?" "மின்னும் இடையை தொட்டுப் பார்க்கவா சின்ன இதழை கொஞ்ச விடுவாயா? மன்னன் இவனை கட்டி அணைத்து அன்ன நடையில் இன்பம் கொட்டுவாயா?" "கண்ணில் நுழைந்த அழகு வனிதையே விண்ணில் வாழும் தேவதை நீயா? மண்டியிட்டு மலர் ஏந்தி வேண்டுகிறேன் வண்ண மயிலே நிலவிலே காயலாமா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... "என்றுமே முதலாளி" "என்றுமே முதலாளி உழுதுண்டு வாழ்பவரே எல்ல…
-
- 0 replies
- 133 views
-
-
ஒன்று எனக்குச் சொந்தமா ஒரு வீடு இருந்தது. என் கணவருக்கு தோட்டக்காணியும் உண்டு. 2012 வரை அந்த நாட்டுக்குப் போய் வாழமுடியும் என்ற எண்ணம் பலருக்குமே இருக்கவில்லைத்தானே. அதனால அந்த வீட்டை விற்பம் விற்பம் என்று என் கணவர் ஒரே கரைச்சல். அம்மாவும் அப்பாவும் கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை விற்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் கணவர் கரைச்சல் கொடுத்ததுக்கும் ஒரு காரணம் இருந்தது. அம்மாவின் தங்கை ஒருத்தி. அவவுக்கு அக்காவின் பிள்ளைகள் இனி இங்கு வந்து இருக்கப் போவதில்லை. தன் பிள்ளைகளுக்குத் தான் அக்காவின் வீடுகளும் வந்து சேரும் என்ற பேராசை. புலிகள் முன்னர் சில வீடுகளில் வசித்தபோது தொலைபேசி வசதிகள் இல்லாத காலத்தில் “புலிகள் உன் வீட்டைத் தரும்படி கேட்டார்கள். நான் என் நகையை விற்று ஐம்பதா…
-
-
- 161 replies
- 10.1k views
-