Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.! Vhg டிசம்பர் 09, 2025 யாழ்ப்பாணம் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜேர்மனியில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளஞன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தங்கவைத்தனர். விசா இல்லை வேலை இல்லை, தனிமை விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என அடிக்கடி குடும்பத்தினருக்கு கூறி வந்ததாக கூறப்படுகின்றது. குடும்பத்தினரும் போன காசை உழைத்துக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் இளைஞர் விபரீத முடிவெடுத்து இன்று (9.12…

  2. லண்டனில் கத்திக் குத்துத் தாக்குதல்: கரவெட்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு லண்டனில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ் வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இராமச்சந்திரன் ஜெயந்தன் (வயது- 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். லண்டனில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மேற்படி இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்து சிகிச்சைகளுக்காக அங்குள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்த இளம் குடும்பஸ்தர் திருமணமாகி ஒரு வருடமே ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கறுப்…

  3. Published By: Vishnu 02 Dec, 2025 | 04:12 AM (நா.தனுஜா) வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கனேடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இவ்வனர்த்தத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் தமது இருப்பிடங்களைவிட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரையான காலத்தில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான வெள்ள…

  4. Published By: Vishnu 28 Nov, 2025 | 03:14 AM (நா.தனுஜா) மாவீரர் நாள் என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்திரேலிய செனெட் உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ், தமிழர்களின் தியாகங்களைத் தாம் அங்கீகரிப்பதாகவும், கடந்தகாலம் குறித்து நேர்மையாகப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) அவுஸ்திரேலிய செனெட் சபையில் உரையாற்றியபோதே டேவிட் ஷுபிரிட்ஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'மாவீரர் நாள்' என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், உலகவாழ் தமிழர்கள் யுத்தத்தில் உயிரிழந்தோரை 27 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு நினைவுகூர்வத…

  5. புகலிட மாவீரர் நிகழ்வுகள்! ஒரே பார்வையில்…. தமிழர்தாயகத்தில் கடுமையான காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியில் இன்று (27.11.2025) தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிலையில் புகலிட தேசங்களிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாவீரர் நாள் பாரம்பரியப்படி தாயகத்தில் மாலை 6.05 க்கு ஈகைச் சுடரேற்றப்பட்ட நேரத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அவற்றின் உள்ளுர் நேரப்படி மாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நியூசிலாந்து நியூசிலாந்தில் பிரதான நிகழ்வு தலைநகர் ஓக்லாந்தில் இடம்பெற்றன. நியூசிலாந்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி உட்பட்ட நகரங்களிலும் நடத்தப்பட்டிரு…

  6. லண்டனின் வீதியில் நின்ற தமிழ் இளைஞருக்கு கொள்ளையர்களால் நேர்ந்த கதி லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்லான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் சவுத்ஹாலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டன் சவுத்ஹால் பகுதியில் வீதியில் நின்ற இளைஞரை குறிவைத்து சிலர் தாக்கியுள்ளார்கள். அடித்துக் காயப்படுத்திய நபர்கள் அவர் அணைந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரைச் சரமாரியாகத் தலையில் தாக்கி, கீழே தள்ளிவிட்ட நிலையில், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ள…

  7. ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம் Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 09:20 AM மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்று பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் இதன் போதே ஈழத்தமிழர்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிர…

  8. 23 Nov, 2025 | 10:41 AM (நா.தனுஜா) இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னிக்கிடம் வலியுறுத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் (முதலமைச்சரே ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் தலைவரும் அரசாங்கத்தின் சகல கொள்கைகள், தீர்மானங்களுக்குப் பொறுப்பானவரும் ஆவார்) ஜோன் ஸ்வின்னிக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது சுமார் 16 வருடங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்துவரும் மிகமோசமான நிலைவரம் தொ…

  9. கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது. ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். கனடா திரும்பு…

  10. பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை. இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது. இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இரு…

  11. உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் கனடாவின் பெற்றார்.! Vhg நவம்பர் 09, 2025 இலங்கையில் பிறந்த தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார். கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது. அகதியாக கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றார். “இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்,” என அவர் கூறினார். “அகதியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையை…

  12. https://www.frenchclassintamil.com/ மிகவும் இலகுவாக உங்களால் பிரெஞ்மொழி எழுத, வாசிக்க, பேச வழிவகைகள் உள்ளன........உச்சரிப்புகளுக்கும் ஒலி மூலம் விளக்கம் உள்ளது.......பார்த்து பயனடையுங்கள்.......! 💐

  13. கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு 05 Nov, 2025 | 11:38 AM (இணையத்தள செய்திப் பிரிவு) கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வெற்றியுடன், கியூபெக், மொன்றியலில் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை அவர் நாட்டினார். கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா, இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட லிங்கராஜா தியாகராஜா (சட்டத்தரணி …

  14. பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்! சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் …

    • 3 replies
    • 366 views
  15. இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள் - சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம் Published By: Vishnu 28 Oct, 2025 | 08:17 PM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி அதன் மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான 'இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள்' எனும் அமைப்பினால் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொட…

  16. 27 Oct, 2025 | 06:18 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பிரித்தானிய தமிழர் பேரவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்றுமுடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானம் குறித்து தமத…

  17. நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு. Posted on October 23, 2025 by சமர்வீரன் 342 0 யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா…

    • 0 replies
    • 245 views
  18. கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை! October 10, 2025 சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும…

  19. பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். போலியான திருமணம் பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானிய புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் பொருட்டு, அவரையே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் நசீர் கலீல் என்பவர் ஸ்லோவாக்கியா சிறுமி ஒருவரை போலியான திருமணம் செய்து ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்டார். குறித்த ஸ்லோவாக்கியா பாடசாலை மாணவிக்கு 16 வயது நிரம்பிய 4 நாட்களுக்கு பின்னர் இருவருக்குமான திருமணம் நடந்துள்ளது.…

  20. தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார். சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றையதினம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு …

  21. Published By: Vishnu 19 Sep, 2025 | 05:36 AM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் ஜெனிவா ஊடக அமையத்தில் நடைபெற்றது. தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தனால் தொகுத்தளிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞரான அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி,…

  22. Published By: Priyatharshan 10 Sep, 2025 | 08:34 AM பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைவு (A/HRC/60/L.1) ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன. சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2024 செப்டம்…

  23. 16 Sep, 2025 | 09:02 AM நா.தனுஜா இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச பேரவை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண…

  24. 09 Sep, 2025 | 09:23 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தாம் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் எலும்புக்கூடுகள், சிறுவர்களின் உடைகள் மற்றும் குழந்தைகளின் பால் போத்தல் உள்ளிட்ட பொருட்களுடன் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியானது யுத்தகாலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படுவதுடன்…

  25. விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா Published By: Vishnu 05 Sep, 2025 | 03:30 AM (நா.தனுஜா) நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலான விசேட செயற்திட்டமொன்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலங்களுக்கான எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் சமகாலத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன. இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.