Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு! இலங்கை வம்சாவளியான கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார். மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி, தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார். பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர், அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார். 19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெர…

    • 28 replies
    • 2.9k views
  2. நாமும் இன்று நாடோடிகளே. அது ஒரு புறமிருக்க அண்மையில் பாடசாலையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தினால் இங்கு இங்கிலாந்தில் உள்ள, நாடோடிகளைப் பற்றிய அனுபவத்தை சிலரோடு பகிர வேண்டியிருந்தது. அதையே இங்கு பகிர்வது அதன் ஒரு பகுதியாகிறது. எனது வகுப்பறையில் இந்தக் கட்டுரை சொல்லப்போகும் இரு வகை நாடோடிக் குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாக் குழந்தைகளையும் வரவேற்பது போலவே வரவேற்று, கல்வி கற்பித்திருக்கிறேன். மற்றைய குழந்தைகள் போலல்லாது இவர்களுடைய வாழ்க்கைப் பின்னனி மிகவும் வித்தியாசமானது. இதன் காரணமாக இவர்களுடைய மனங்களுக்கு வலுவூட்டி, தைரியம் கொடுத்து மற்றைய குழந்தைகளோடு பழகவும், தமது வாழ்க்கை முறை பற்றி பாடசாலையில் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி தம் அடையாளத்தை நல…

  3. https://tgte.tv/watch/lt-col-thileepan-039-s-memorial-live-event-live-now_zYxS51xSz5eCwvp.html

  4. பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்! AdminSeptember 25, 2021 பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய உணர்வையும் உணவோடு ஊட்டும் அதிசய உணவகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரின் அழகிய வர்ணப்படம் வருபவர்களை வரவேற்பதுடன், உள்ளே தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம்,புதல்வன் பாலச்சந்தின், முதல் மாவீரர் சங்கர், தியாகி அன்னை பூபதி, தியாக தீபம் திலீபன்,முதல் பெண் மாவீரர் மாலதி, முதல் கரும்புலி மில்லர்,கடற் கரும்புலி அங்கையற்கண்ணி, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சினிமாப் பாடல்களை முற்றாகத் தவிர்த்து தமிழீழத் தாயகப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அத்தோடு மிகவும…

  5. பிரித்தானியா கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட பெண்! நடந்தது என்ன? வெளியான முழு தகவல் பிரித்தானியாவில் கடலோர காவல்படையால் கண்டுபிடிக்கப்ப இளம் பெண் மருத்துவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Margate கடற்கரையில் கடந்த 11-ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் கடலோர காவல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது உயிரிழந்த அந்த பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர் பெயர் Thirushika Sathialingam என்பதும் 26 வயது மதிக்கத்தக்க இவர் சம்பவ தினத்தன்று தன் பெண் தோழிகளுடன் குறித்த கடற்கரைக்கு சென்றுள்ளார். ஹோட்டலுக்கு தோழிகள் திரும்பிய நிலையில், அவர் காணவில்லை. அதன் பின…

  6. நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – பிரித்தானியாவில் நூல் வெளியீட்டு September 21, 2021 நிலாதமிழ் அவர்களின் படைப்பான மாவீரர் வரலாற்றுப் பதிவாக நினைவழியா நினைவுகள்-என் நினைவில் மாவீரர்கள்-நூல் வெளியீடு விழா 19.09.21 அன்று மாலை லண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலண்டனின் பல முக்கிய தமிழமைப்புகளின் பிரதிநிதிகளும் போராளி மாவீரர் உறவுகளும் நண்பர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். தமிழ் அமைப்புக்கள் சார் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருமதி.சந்திரிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரரின் சகோதரர் திரு. ரேணுதாஸ் இராமநாதன் அவர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர…

  7. ஆர்யா சம்பந்தப்பட வில்லை. போலீஸ் ஆணையர் தெரிவிப்பு. ஜேர்மன் தமிழ் பெண் விவகாரத்தில், இருவர் கைதாகிய நிலையில், முதலாவது, இரண்டாவது குற்றவாளிகளாக ஆர்யாவும் அவரது தாயாருமுள்ளனர். அவர்கள் விரைவில் கைதாவர்கள் என்று ஜேர்மன் பெண்ணின் சார்பில், அமைந்த வழக்கறிஞர் சொல்லி இருந்தமை குழப்பத்தினை உண்டாக்கி இருந்தது. இந்த நிலையில் பத்திரிகையாளரை சந்தித்த சென்னை போலீஸ் ஆணையர், ஜேர்மன் பெண்ணின் புகார் அவர்கள் மேலே அளிக்கப்பட்டிருந்தது என்ற அடிப்படையில் அவர்கள் பெயர் ஆரம்பத்தில் இருந்தது உண்மை. அந்த வழக்கறிஞர் அதே புகாரின் அடிப்படையிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தினையும், நாடி இருந்தனர். உயர் நீதிமன்றமும் விசாரிக்க உத்தரவு இட்டிருந்தது. எமது விசாரிப்பின் முடிவில்…

  8. ஆபத்தின் கரங்களில் ஆதி இனம் September 15, 2021 — அகரன் — வழமைபோல மனைவியிடமிருந்து நச்சரிப்பு வந்துவிட்டிருந்தது. ‘’காடுபோல முடி வளர்ந்துவிட்டது. வெட்டுங்கள். பயமாக இருக்கிறது’’ என்று. முடி வெட்டுவதில் எனக்கு அக்கறை இருப்பதில்லை. குறைந்த விலையில் முடி வெட்டும் கடைகளில் காத்திருக்கும் நேரத்தில், ஜெயமோகனின் வெண்முரசின் சில பகுதிகளை படித்துவிடலாம் அல்லது பிரஞ்சு வார்த்தைகளை மகளிடம் கேட்டுபடிக்கலாம், வீட்டுக்குள் வளரும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றலாம். ஆனால் மனைவி தன்னை பயமுறுத்தவே இப்படி இருப்பதாக உறுதியாக எண்ணுவாள். அவளின் கடுமையான கண்டனக்குரல், இறுதிப் போராட்டத்தின்பின் முடி திருத்து நிலையத்துக்கு சென்றேன். அ.முத்துலிங்கம் எழுதிய ‘சுவரோடு பே…

  9. நெதர்லாந்து பணியிட விபத்தில் சிக்குண்ட ஈழத் தமிழர் உயிரிழப்பு! AdminSeptember 10, 2021 நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் (bulb company) கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி காலை விபத்து இடம்பெற்றது என்ற தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் இருபாலையைச் சொந்த இடமாகக் கொண்டவரும் நெதர்லாந்தில் நீண்டகாலம் வசித்தவருமான தெய்வேந்திரம் ரவீந்திரன் (வயது54) என்ற இரண்டு பிள்ளைகளது தந்தையே உயிரிழந்தவராவார். பூந்தோட்ட மண்ணை நிரப்பும் பாரிய கொள்கலன் ஒன்றில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் சிக்குண்டு…

  10. அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள 'A Passage North' எனும் நூலாக்கம் booker பரிசுக்கான 13 பேர் கொண்ட 'Long List' இல் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செப்டம்பர் 14 அன்று பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் 6 பேர் கொண்ட 'Short List' லில் உள்ளடக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசினை தீர்மானிக்கும் குழு வெற்றியாளரை, நவம்பர் 2ம் திகதி அன்றும் அறிவிக்கும். long list மற்றும் short list ல் வருவதே மிகப்பெரிய விடயம். இந்நிலையில் அவர் வெற்றி அடைந்தால், தமிழர்கள் எமக்கே பெருமை. அருட்பிரகாசம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

  11. யேர்மனியில் இடம்பெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு. 12.9.2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது யேர்மனி வூப்பெற்றால் நகரில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களான வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன் லோரன்ஸ், வீரவேங்கை கவியரசி அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரி…

    • 0 replies
    • 722 views
  12. பிரிட்டனில் எல்ரீரீஈ அமைப்பு மீதான தடை தொடர்வதாக இலங்கைக்கு அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்படுவதற்கு பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட உள்துறைச் செயலாளரின் தீர்மானமானது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பொன்றின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஓன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எனவே, ஐரோப்பிய ஒன்றியப…

    • 3 replies
    • 1k views
  13. யார் இவர்கள் ? வெளிநாட்டவரை கவனிக்க வைத்த நீதிக்கான ஒன்றுகூடல் வலிந்து காணமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்கு நீதிவேண்டி ஐ.நா மனித உரிமைச்சாசன முன்வரைவு எழுதப்பட்ட பரிஸ்-மனித உரிமைச் சதுக்கத்தில் இடம்பெற்றகவனயீர்ப்பு நிகழ்வு வெளிநாட்டவர்களது கவனத்தை பெற்றதாக அமைந்திருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வானது, ஓகஸ்ற்-30 வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளில் இடம்பெற்றிருந்தது. ‘தேசத்தின் வீரர்கள், தேசத்துக்காக மடிந்தவர்கள்’ என்ற வாசகம் பொதிக்கபட்ட பிரென்சு தேச விடுதலையினை மையப்படுத்தியிருந்த திடலில் முன்னே, காணமலாக்கப்பட்டவர்களின் ஒளிபடங்கள் தாங்கிய இருக்கைகள் இடப்பட்டிருந்தன. …

  14. ஆப்கானிஸ்தான் | தலிபான் சகோதரர்கள் மீது ‘பாசத்தைப் பொழியும்’ கனடிய அமைச்சர் மரியம் மொன்செஃப்! ஒரு சிறு அலசல் மாயமான் ட்றூடோவின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் பாலியல் சமத்துவ விவகாரங்களுக்கான அமைச்சர் மரியம் மொன்செஃப் தலிபான்களை ‘எமது சகோதரர்கள்’ எனக்கூறிய விடயம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் ஊடகங்களால் எடுத்துக் கொடுக்கப்பட்ட இந்த அஞ்சல் தடியைக் கொண்டோடுவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஆட்கள் இல்லை எந்பது வேறு விடயம். நாக்கு வழுக்குவதால் இப்படிப் பல தடவைகள் பல அரசியல்வாதிகள் ஊடகங்களினால் போட்டுக்கொடுக்கப்பட்டு எதிர்க்கட்சிகளால் மொங்கப்பட்டுப்பட்டிருந்தாலும் ‘out of context’ எனக் கூறிப் பலரும் தப்பி விடுவார்கள். ஆனால் மரியம் ம…

    • 16 replies
    • 1.1k views
  15. பாரிஸ் புறநகரில் வீட்டில் தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு! AdminAugust 10, 2021 பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் , 21 வயதான மகள் இருவரது சடலங்களும் இன்று காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் பொலீஸாரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன. புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. வேலை முடிந்து இ…

  16. யேர்மனி லண்டவ் நகரத்தில் மேதகு திரைப்படம். ''மேதகு'' திரைப்படம் லண்டவ் நகரத்திரையரங்கிலே திரையிடப்படவுள்ளது. இந்த நகரை அண்மித்திருக்கும் உறவுகள் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகப் முதற் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயம் காண்பிப்பது பொருத்தமானதாக இருக்கும். https://share-your-photo.com/96f7e53905

    • 1 reply
    • 691 views
  17. இலங்கை புகலிடக் கோரிக்கையாளரான தர்னிகாவின் மனு அவுஸ்திரேலிய நீதிமன்றால் நிராகரிப்பு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பிலோலாவைச் சேர்ந்த நான்கு வயது இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளரின் வழக்கை விசாரிக்கக் கோரிய கோரிக்கையை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நான்கு வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் 2018 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய பிராந்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோலாவில் உள்ள வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் குடியேற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் தர்னிகா முருகப்பனின் வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினர். தாய் பிரியா, தந்தை நடேஸ் மற்றும் சகோதரி கோபிகா உட்பட அவளுடைய குடும்பத்தின் மற்றவர்…

  18. Facebook > Thesiyam Scarboroughவில் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் மோதியதில் இரண்டு வயது குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. இன்று (சனி) மாலை 5:15 மணியளவில் இந்தச் சம்பவம் Markham Road and McNicoll Avenue சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்தது. Majestic City கடைத் தொகுதியில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புகைப்படம்: நன்றி CP24 A two-year-old child has been killed in a vehicle crash at the Majestic City store block in Scarborough. The incident took place today (Saturday) around 5:15 pm near Markham Road and McNicoll Avenue meeting. It is rema…

  19. 2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தெரிவுகளில் ஈழத் தமிழர். அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள 'A Passage North' எனும் நூலாக்கம் booker பரிசுக்கான 'Long List' இல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இன்று காலை பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலங்களில் இலங்கையர்கள், எழுத்துலகில் (ஆங்கில) தமது முத்திரைகளை பதித்து வருகிறார்கள். இந்த அறிவிப்பு இவ்விடயத்தில் இன்னுமொரு மைல் கல்லாகும். இலங்கையின் யுத்தகாலத்தில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த, வடக்கினையும்,யுத்த பாதிப்புகளையும் அதனூடாக, நூலாசிரியரின் அனுபவங்களையும் கொண்டதாக நூல் அமைந்துள்ளது. இந்த 'Long List' இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, மற்றும் முன்னதாகவே புக்…

  20. Scarborough, Canada வில் ஞாயிற்றுக்கிழமை July 4, 2021 அதிகாலை நிகழ்ந்த விபத்தில் தமிழ் இளைஞரான அஸ்வின் சந்திரராஜ் பலியானார் https://thesiyamnation.com/24137/?fbclid=IwAR0XBZAGNv7MlFAmYOkH2M9v03dHfXhPDek2i--XCBvVo5ZqpNOStwGDAlo https://www.facebook.com/permalink.php?story_fbid=1071651769908956&id=208094799597995 CP24 News in English https://www.cp24.com/news/man-dies-after-early-morning-collision-in-scarborough-involving-car-and-ttc-bus-1.5495933?cache=yes%2F7.426867%3FclipId%3D68596 Man dies after early morning collision in Scarborough involving car and TTC bus Emergency crews attend the scene of a fatal collision involving a car…

  21. Started by Knowthyself,

    https://en.wikipedia.org/wiki/Aathichoodi Little Owl Studios Aathichudi is a collection of verses written by the great Tamil Poetess Avvaiyar. It is believed that there were three poets by the same name in three different time periods. This particular contribution is however done by the Avvaiyar who lived during the Chola dynasty. Avvai means 'respected woman'. Her songs are the first introduction to the Tamil language when a child starts school. The meaning of the verses are suitable to any time period which is exactly the reason why even after a millennium, children read her poetry with great interest. Among all her other literary works, aathichudi i…

    • 3 replies
    • 1.4k views
  22. வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி-பா.உதயன் சென்ற இடம் எல்லாம் தமிழன் சிறப்பும் பெருமையும் அடைகிறான். டாக்டராக பொறியியளாளராக சட்டவாளராக பாராளுமன்ற உறுப்பினங்களாக பெரும் வியாபார உரிமையாளராகவெல்லாம். புலம் பெயர் தமிழர்கள் குறுகிய காலத்தில் தமது கடின உழைப்பால் கல்வியால் முன்னேற்றம் அடைந்து வரும் இனமாக பார்கப்படுகிறார்கள். ஒரு காலம் நாகரீகங்களோடு இராட்சியங்களையும் தேசங்களையும் கட்டி ஆண்டவர்களின் வேர்களில் இருந்து வந்தவர்கள் நாங்கள். இன்று ஒரு நாடு மட்டும் இவனுக்கு இல்லாது இருப்பது தான் பெரும் துன்பம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இருப்பதனாலோ என்னவோ தெரியவில்லை. இம் முறையும் உயர் கல்வி படிப்பதற்கு ஐரோப்பா நாடுகள் பூராகவும் இருந்து தமிழ்ப் பிள்ளைகள் தெரிவாகி …

    • 5 replies
    • 912 views
  23. ஆஸ்மா நோய்தொடர்பான இணையவழிக் கலந்துரையாடல். இது வாட்ஸ்ஸப் குழுவிலே பகிரப்பட்ட தகவல். உறவுகளுக்குப் பயனுடையதாக இருக்காலம் எனப்பதால் இணைத்துள்ளேன். நன்றி

    • 1 reply
    • 366 views
  24. யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா Posted on July 26, 2021 by சமர்வீரன் 587 0 யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவுவிழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழாலயம், சுல்ஸ்பாக் தமிழாலயம், கொம்பூர்க் தமிழாலயம் ஆகிய நான்கு தமிழாலயங்களும் தமது 30ஆவது அகவை நிறைவு விழாவினையும் கொன்ஸ் தமிழாலயம் தனது 15ஆவது அகவை நிறைவு விழாவினையும் ஒரே மேடையில் நடாத்திய காட்சி அவர்களின் ஒற்றுமையின் பலத்தைப் பறைசாற்றி நின்றது விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழ…

    • 0 replies
    • 632 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.