வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
எனக்கு இப்ப கொஞ்ச நாட்களாகவே யாழ்இணையத்துக்கு வர விருப்பமே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரவேண்டும் வரவேண்டும். ஏதாவது எழுதவேண்டும் என்று எத்தனையோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. எனக்கு யாழில் யாருடனும் பகையும் இல்லை. மனம் முழுவதும் எதோ வெறுமை சூழ்ந்தது போலவே எந்நேரமும் உள்ளது. என் மனதை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. முகப்புத்தகத்தில் மனதைத் திருப்பினாலும் அதுகூட ஆர்வமாக இல்லை. என்ன செய்யலாம்??????????
-
- 30 replies
- 2.6k views
-
-
கனேடிய தமிழர் பேரவையின் அழைப்பில் பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்காக மதிப்பிற்குரிய சி .வி .கே சிவஞானம் இன்று கனடா வந்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணிக்கு அஞ்சப்பர் உணவு விடுதியில் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் சம கால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெறும் .
-
- 1 reply
- 851 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது ஆளுகைக் காலத்திற்கான நிர்வாகக் கட்டமைப்பினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் செயலகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் தலைமைச் செயலர், அமைச்சரவை, துறைசார் நிறுவனங்கள் என பல்வேறு நிர்வாக கட்டமைப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப் புதிய கட்டமைப்பு கடந்த மூன்றாண்டு காலப்பட்டறிவினை அடிப்படையாகக் கொண்டும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட செயலமர்வு மற்றும் அவர்களது நேரடிக் கருத்துக்கள் என்பவற்றை உள்வாங்கியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத் தமது தோள்களில் தாங்கி நிற்கும் எமது மக்கள் மற்றும் துறைசார் அறிஞர்களின் ஆலோசனைகளைக் கவனத்திற் கொண்டும் வடிவமைக்கப்…
-
- 0 replies
- 599 views
-
-
உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல். தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று மூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றி, கடந்த ஆண்டில் இருந்து தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் தைப் பொங்கல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம். `பொங்கல் பண்டிகை' என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம். http://www.youtube.com/watch?v=dsRE2OVNL2s பொங…
-
- 5 replies
- 1k views
-
-
நோர்வே நாட்டில் கல்வியில் சிறந்து விளங்கும் இனத்தில் 3ம் இடத்தில் தமிழினம் ஜன 13, 2014 நோர்வேயின் மிகப் பெரிய பத்திரிகைகளில் ஒன்றான ( afoenposten ) சமீபத்தில் நோர்வேயில் பிறந்த வேற்று இனக்குழுக்களின்கல்வித் தரம் எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. அதில் சில இனங்கள் சொந்த இன மக்களை விட சிறந்து விளங்குவதாக கண்டறியப்பட்டது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 24 குழந்தைகள் 47 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். அடுத்து சீனாவை சேர்ந்த 52 குழந்தைகள் 45.5 குழந்தைகள் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். ஈழத் தமிழ் குழந்தைகள் 245 பேர் 42.2 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள். இந்தியா 97 குழந்தைகளுடன் 40.8 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர் திருநாள்: புதிய ஆண்டு - புதிய வழி - புதிய வாழ்வு அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள் - ஏனெனில் – ' தமிழரது திருநாள்' என்பதற்கு அப்பால் அது வேறு எந்த அடையாளங்களும் அற்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை. மானிட வாழ்வுக்கு ஆதாரமாகிய இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடு இந்தத் திருநாள். இவர்கள் ' சேற்றில் கை வைத்தால்தான் நாம் ' சோற்றில் கை வைக்க முடியும். யார் இவர்கள்? உழவர் பெருமக்கள். உழவர்கள் – தமிழர்கள் அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள். உலகெங்கும் உள்ள தமி…
-
- 0 replies
- 1.2k views
-
-
வாடையும் சோளகமும் துள்ளிக் குதித்தோட வடக்கன் காளைகளும் நுகம்புகுந்து ஏரிழுக்க - தனக்கென்ற விதைநிலத்தில் உழைப்பேற்றி நெல்போட்டுப் பயிராக்கி - மகிழ்வுடனே கதிரறுத்து உரலிட்டுப் பிடைத்தெடுத்து தன்னுழைப்பின் பயன்கண்டு மண்பானை அடுப்பேற்றி பயறிட்டுப் பாலூற்றிப் பொங்கலோ பொங்கலென்று சர்க்கரையும் நெய்யும் வாழ்வின் சுவைசெப்ப கதிரவனின் கரம்பற்றித் தொழுதேற்றி நன்றியுடன் மனங்குளிரும் பொங்கலிது. தமிழினத்தின் வேரறுக்க ஆதியிலே படையுடனே தொடைதட்டிப் புகுந்தவர்கள் சமயத்தின் துணைகொண்டு சதிசெய்து பலமாற்றி புதுவருசத்தைப் பொங்கலிடம் பறித்தெடுத்து விரட்டி விபரீதம் செய்த கதை தமிழ் வருசம்தான் பொங்கலென்ற கருத்தினையே புரளியாக்கி மலடியாக்க... பொலிவிழந்து சீரிழந்து இன்று நாடிழந…
-
- 4 replies
- 868 views
-
-
பிரான்சில் 2012 / 2013 யில் நடைபெற்ற தமிழ்- குர்திஸ்தான் விடுதலை போராட்ட போராளிகளின் படுகொலைக்கு இன்று வரை நீதி கிடைக்காத நிலையில் - நீதி கேட்டு குர்திஸ்தான் மக்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம். இந்த நாளில் பரிதி அண்ணன்- நாதன்- கஜன் ஆகியோரின் படுகொலைகளுக்கு நீதி கேட்டு ... இடம்: Gare de Nord நேரம் : 11H45 மெட்ரோ: ligne 5 - 4 RER : D- B- E தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு Tel: 06 52 72 58 67 (facebook)
-
- 1 reply
- 469 views
-
-
சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் OFPRA தெரிவித்துள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சென்றுவந்துள்ளார். அத்துடன் சிறீலங்கா தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஊரில் இருக்கும் தனது உறவினர்கள் மூலமாக தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும் சிறீலங்கா அரசாங்கத்…
-
- 0 replies
- 1k views
-
-
அதிபர் ஒல்லாந்த் தொடர்ந்தும் இரவுப் பொழுதை நடிகையுடன் கழிப்பதாக சஞ்சிகை கூறுகிறது பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந், நடிகை ஜூலி காயெயுடன் உறவு வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ள பாரிஸிலிருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதாக அதிபர் தெரிவித்துள்ளார். தன்மீதான குற்றச்சாட்டை அதிபர் மறுக்கவில்லை. ஆனால் குறித்த சஞ்சிகை தனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளமை தொடர்பில் அவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எலீஸி பேளஸுக்கு அருகே உள்ள ஃபிளாட் வீடொன்றில் அதிபர் ஒல்லாந் நடிகை காயெயுடன் தொடர்ந்தும் இரவுப்பொழுதைக் கழித்துவருவதாக பரவிவந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக க்ளோஸர்- சஞ்சிகை பல படங்களை வெளியிட்டுள்ளது. சாரதி …
-
- 0 replies
- 562 views
-
-
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு T20 போட்டியில் அதிரடி வீரம் காட்டிய யுவ்ராஜ் சிங் அதன் பிறகு ஒருநாள் போட்டித் தொடரில் மிட்செல் ஜான்சனிடம் மண்ணைக்கவ்வினார். இதனால் அவரது ஆட்டம் மீது சந்தேகம் எழ நியூசீ.தொடரிலிருந்து யுவ்ராஜ் நீக்கப்பட்டார். ஆனால் அவர் அணியில் வேண்டும் என்று தோனி நிற்கவில்லையாம்! யுவ்ராஜ் சிங் வேண்டாம் என்று தோனி கூறியதாக பிசிசிஐ-யின் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று கிசுகிசுக்கிறது. ஆஸ்ட்ரேலியாவுடன் சரியாக ஆடாவிட்டாலும் தோனி அவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் அவரை தேர்வு செய்தார். ஆனால் பலன் இல்லை. அதே அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப் பிரச்சனை அவரிடம்…
-
- 0 replies
- 843 views
-
-
பரிசிலிருந்து செல்வதற்கு இப்பொழுதே முன்பதிவு செய்யுங்கள். (facebook)
-
- 2 replies
- 703 views
-
-
மண்ணின் மைந்தர்களின் நினைவு சுமந்து யேர்மனியில் நடைபெற்ற ஐரோப்பிய ரீதியிலான கரபந்தாட்டச் சுற்றுப்போட்டி அண்மையில் யேர்மனியில் லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் மண்ணின் மைந்தர்களின் நினைவு சுமந்து ஐரோப்பிய ரீதியிலான கரபந்தாட்டச் சுற்றுப்போட்டியினை லண்டவ் நகர உள்ளரங்கமைதானத்தில் நடாத்தியது. போட்டிகள் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி வெற்றிபெற்ற அணிகளுக்கான மதிப்பளிப்பையடுத்து நன்றியுரையுடன் போட்டிகள் இனிதே நிறைவுற்றன. போட்டியில் சுவிஸ், இலண்டன், நெதர்லாண்ட், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த பேர்ன் ஏளூபீ, பிரான்ஸ் வள்ளுவன் வி.க. ஏளூபீ, தாய்மண் வி.க, சூரிச் த.வி.க, இலண்டன் ஈழம் வி.க. சூரிச் உஸ்ரர் வி.க, நெதர்லாண்ட் தமிழர் ஒன்றியம்,நியூஸ்ரார் ஏளூபீ, யேர்மன் காஸ்ரொ…
-
- 0 replies
- 496 views
-
-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழர் மரபு திங்கள் சிறப்பு நிகழ்வுகளை முன்னிட்டு கனேடிய மற்றும் உலகத்தமிழ் உள்ளங்களுக்கு கனடா ஒன்ராறியோ புரோகிரசிவ் கொன்சவர்டிவ் கட்சியின் தலைவ ரிம் கூடாக் அவாகள் ஆசிச் செய்தி வளங்கியுள்ளார். அவர் அனுப்பிவைத்த அந்த ஆசிச் செய்தியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது. ஐனவரி 09. 2014 அன்பு மிக்க தமிழ் மக்களே வணக்கம்! தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையும், தமிழர் மரபு திங்களை இம்மாதம் பூராகவும் கொண்டாடும் உங்கள் ஒவ்வொருவரையும் ஒன்ராரியோ புரோகிரசிவ் கொன்சவர்டிவ் கட்சியின் தலைவராக எனது வாழ்த்துகளையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த சில பத்தாண்டுகளாக, ஒன்ராரியோ தமிழ் சமூகம், குறிப்பா…
-
- 1 reply
- 715 views
-
-
விண்வெளிக்கு முதல்முறையாக செல்வதற்கு தமிழ் மாணவியொருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது. அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாணவி. அவர் பெயர் சிவேன் ஞானகுலேந்திரன் . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு அவ…
-
- 1 reply
- 950 views
-
-
தமிழர்களின் தைப்பொங்கல் விழாவினை முதன் முதலாக தமிழர் மரபு நாள் என்று மார்க்கம் நகரசபை உறுப்பினர் (வார்ட்7) திரு லோகன் கணபதி அவர்கள் கனடிய நீரோட்டத்தில் பிரகடனப்படுத்தி கடந்த இரண்டு வருடமாய் தமிழர்களின் பாரம்பரியகலாச்சார விழாவாக தைப் பொங்கல் அன்று மார்க்கம் நகரசபை கொண்டாடி வருவது அனைவரின் வரவேற்பையும் உரிய அங்கீகாரத்தையும் தந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும். அவ்வகையில் இந்த ஆண்டும் இங்குள்ள அனைத்துத் தமிழ் சமூகங்களும் பல்லின மக்களும் கலந்து கொண்டு மகிழும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 12.01.2014 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாத் தலைவரும் மா…
-
- 3 replies
- 562 views
-
-
கேன்பெர்ரா: அண்டார்டிகா பனிப்பகுதியில் சிக்கிய ரஷ்ய, சீன கப்பல்களில் இருப்பவர்களை மீட்க, அமெரிக்க பனி உடைப்பு கப்பல் அங்கு விரைகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த பனி உடைப்பு கப்பல் அகாடெமிக் சோகல்ஸ்கை மூலம், அந்நாட்டு விஞ்ஞானிகள், அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்றனர். இந்த கப்பல் கிறிஸ்துமஸ் முதல் நாளில் இருந்து அங்கு பனிப்பாறையில் சிக்கிக் கொண்டது. பனிப்பாறைகளை உடைக்க முடியாததால் கப்பல் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. இந்த கப்பலை மீட்க உதவி செய்யும்படி, சீன நிறுவனத்திடம் ரஷ்யா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்படி, சீனாவின், ஸ்நோ டிராகன் அண்டார்டிகா பகுதிக்கு விரைந்தது. ஆனால், கடும் பனிப்பாறையில் இந்த கப்பலும் சிக்கிக் கொண்டது. தொடர்ந்து முன்னேற முடியாமல், பனிப்பகுதியில்…
-
- 7 replies
- 1.3k views
-
-
Jim McDonald @jmccdon 23h Ask President #Obama to support an international #warcrimes investigation in #SriLanka. http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/ActionItem.aspx?c=6oJCLQPAJiJUG&b=6645049&aid=15205 (twitter) இறுதிக்கட்ட போரில் இருபகுதியும் குற்றங்கள் புரிந்ததாகவும் அவற்றை விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை என்றும் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் amnesty international USA அமெரிக்க அரசாங்கத்தை கேட்கிறது. During 2009, thousands of civilians died in the final months of the war in Sri Lanka. Both the Sri Lankan government and the Tamil Tigers committed war crimes and other gross human rights abuses. But no one has been held accountable. Ask th…
-
- 0 replies
- 466 views
-
-
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெற்ற கலை நிகழ்வொன்றின்போது அமெரிக்காவை தள மாகக் கொண்ட பிரபல இசைக் கலைஞர்கள் இருவர் மேடையில் தோன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை அப்படியும் இப்படியுமாக அசைத்துக்காட்டியும், போராளிகளை ஆதரித்துப் பேசியும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாக கொழும்பை தள மாகக் கொண்ட ஆங்கில இணையத்தளமொன்று தெரி வித்துள்ளது. போர்க்குணம்மிக்க சமூக நீதி மற்றும் அனைத்தும் ஆபிரிக்கத்துவம் ஆகிய இரண்டையும் கருத்தூன்றி வெளிப்படுத்தும் சமூகம்சார் இசைக் காவியங்களுடன் எதிரெதிரே பாடும் தங்கள் பாடல் நடைக்கு பெயர்பெற்றுள்ள "டெட்பிரெஸ்" எனும் பிரபல அமெரிக்க பின்புல இசைக்குழுவின் கலைஞர்களே இவ்வாறு சர்ச…
-
- 2 replies
- 987 views
-
-
Tamil Canadians plan series of rallies to bring awareness of Tamil's plight ahead of 25th UNHRC Session: First rally to start on Friday January 17th கனடியத் தமிழர்கள் முதற்கட்டப் போராட்டத்திற்கு தயாராகின்றார்கள் ! தொடர்ச்சியான போராட்டம் ! அனைவரும் ஒன்றிணைந்து ஈழ விடுதலை நோக்கிப் போராடுவோம் ! வாருங்கள் ! முதலாவது போராட்டம்: இடம்: அமெரிக்கத்துணைத் தூதரகத்திற்கு முன்பாக காலம்: வெள்ளிக்கிழமை ஜனவரி.17 2014 நேரம்: மாலை பி.ப. 3:00 மணி தொடக்கம் மாலை 7:00 மணி வரை அடுத்து வரும் கவனயீர்ப்புக்கான விபரங்கள் • வெள்ளி Jan 24th - American Consulate, University Avenue • செவ்வாய் Feb 4th - Sri-Lankan Consulate • வெள்ளி Feb 14th - British Consulate • வெள்ளி Feb 21st - Ind…
-
- 1 reply
- 425 views
-
-
கடுங்குளிர் நிலவும் அமெரிக்கா அமெரிக்காவின் சில பகுதிகளில் நிலவும் கடுங்குளிர் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது. நியுயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களும் இந்த ஆர்க்டிக் குளிர் காற்றால் உறைந்துள்ளன. வெப்பநிலை வேகமாகக் குறைந்துவரும் நிலையில், நியுயார்க் மாநில ஆளுநர் அண்ட்ரூ குவொமோ சில பெரிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் என்றார். கடுமையான வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை, மின்னெசோட்டா மாநிலத்தில் பாபிட் நகரில் மிகக் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது (-38 டிகிரி செல்சியஸ்) . குளிரான கா…
-
- 4 replies
- 1.1k views
-
-
வணக்கம் தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் நிலவும் கடும் குளிர் காலநிலையின் விளைவாக ரொரன்டோ முதல் ஒன்டாரியோ வரையான பிராந்தியத்தில் வீடுகள் இடிந்து விழுவது போன்றும் துப்பாகிகளில் வேட்டுகள் தீர்க்கப்படுவது போன்றும் பாரிய சத்தங்கள் இரவு முழுவதும் கேட்ட வண்ணம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சத்தங்கள் ஏற்படுவது பனிப்பாறைகள் நிறைந்த துருவப் பகுதிகளிலேயே வழமையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணினூடாக செல்லும் மழை நீரும் பனியும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலை காரணமாக உறைநிலையை அடைகையிலேயே இவ்வாறு பாரிய சத்தங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
-
- 0 replies
- 975 views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் ஐந்து ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால் இவர்கள் கால வரையரையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்குமே சிறிங்கா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அகதிகளுக்கான அந்தஸ்து என்ற நிலையை வழங்கியிருக்கின்றது. ஆனால் அதன்பின்னர் அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பானது இவர்களை அவுஸ்திரேலிய நாட்டுக்கு அல்லது சிறிலங்கா நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கருதி ஒரு மத…
-
- 1 reply
- 383 views
-
-
தமிழர்களின் வீரத்தை வெளிச்சம் போட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1760ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவருக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் சுதந்திர போராட்டம்: கும்பினியார் (ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி) கி.பி. 1793யில் கப்பம் கேட்டனர். கி.பி. 1797யில் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்ச…
-
- 0 replies
- 560 views
-