நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
கண்ணீரைச் சிரிப்பாக்கிய அகதி கனடாவில் வாழும் இலக்கியச் செயல்பாட்டாளரும், ‘காலம்’ இதழின் ஆசிரியருமான செல்வம் அருளானந்தம், இலங்கையிலி ருந்து பாரீஸுக்குப் போய் வாழ்ந்த ஒன்பது வருட அனுபவங்களை நினைவுத் தீற்றல்களாக எழுதியுள்ள நூல் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’. பெரும்பாலும் இந்திய, தமிழக வாழ்வையொத்த குடும்பம், ஊர், சாதிசனம் என்ற குண்டான்சட்டி பரப்பளவே கொண்ட ஒரு சம்பிரதாயமான யாழ்ப் பாண வாழ்க்கையிலிருந்து உயிர்பயம் துரத்த எல்லைகளையும் கடல்களையும் கடக்க நேர்ந்த அகதியின் குறிப்புகள் இவை. கவிஞர் பிரமிளின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ஒரு சமூகத்தின் உயிரை இருபத்தி நாலு மணிநேரமும் இருள் சூழத் தொடங்கிய காலத்தில்’ யாழ்ப் பாணத்திலிருந்து புறப்பட்ட மு…
-
- 0 replies
- 550 views
-
-
எதிர்வரும் 5 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதிய ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் வெளியிட உள்ள நந்திக் கடலுக்கான வழி - தமிழ் புலிகளை தோற்கடித்த உண்மையான கதை என்ற நூல் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நூல் எதிர்வரும் 6 ஆம் திகதி அதாவது கமல் குணரட்ன ஓய்வுபெறும் தினத்திற்கு மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்த நூலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் உட்பட சில முக்கிய விடயங்கள் அடங்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது. புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றதாக இலங்கை இராணுவத்தினர் கூறும் 53 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக 2…
-
- 0 replies
- 391 views
-
-
நூல் அறிமுகம்: விடியலைத் தேடி’ ஊடாக, செங்கை ஆழியானை நினைவுகூர்தல் ‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்…
-
- 0 replies
- 822 views
-
-
ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம் ஒரு மெல்லிய நீரோடை போல துவங்கும் இந்த நாவல் அதனுள் இத்தனை அழுத்தமான ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தும் கருத்தினை வைத்திருக்கும் என படிக்க துவங்கும்போது யாரும் உணர்ந்திட மாட்டார்கள். நைஜீரிய எழுத்தாளர் 'சிமாமந்தா எங்கோசி அடிச்சி' எழுதியுள்ள 'ஊதாநிறச் செம்பருத்தி' அது வெளியாகிய 2003-ம் காலப்பகுதியிலேயே பெரும் கவனம் பெற்றது. அரசியல் ஸ்திரதன்மையற்ற நைஜிரியாவில் நிகழ்கிறது கதை. தாய்,தந்தை, நாயகி, அவளுக்கொரு அண்ணன் என சின்னஞ்சிறு பணக்கார கத்தோலிக்க குடும்பம். தீவிர மதப்பற்றுள்ள அப்பா. அவர் மீது பயமும் மரியாதையும் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நடுங்குகிறது அந்த குடும்பம். ஆனால் அப்பாவிற்கோ கடவுளின் மீத…
-
- 0 replies
- 634 views
-
-
நல்லைக்குமரனின் 24 ஆவது மலர் வெளியீடு இன்று புதன்கிழமை யாழ.நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நல்லைக்குமரன் மலர் வெளியீடு நடைபெற்றது. நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் வாசுதேவக்குருக்கள் சைத்தன்ய சுவாமிகளின் ஆசியுரைகள் இடம்பெற்றன. நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தி.இராசநாயகத்திற்கு பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் யாழ்.விருது வழங்கி கௌரவித்தார். …
-
- 0 replies
- 518 views
-
-
எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையில் ஒரு தலைவராகச் செயற்பட்ட கரிகாலன் எம்முடன் உரையாடுவதற்காக அங்கு வந்திருந்தார். சிறையிலிருந்த எம்மை விடுதலை செய்வதற்கு அவர்களுக்கு நாங்கள் உதவவேண்டும் என கரிகாலன் எம்மிடம் கேட்டார். கைதிகளை விடுவிப்பதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதுமாறு கரிகாலன் எம்மிடம…
-
- 3 replies
- 1k views
-
-
ஈழத்து மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய " இலங்கை அரசியல் யாப்பு" (டொனமூர் முதல் சிறிசேன வரை) நூல் வெளியீடு நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது. கிழக்கு லண்டன் - ஈஸ்ட்ஹாம் பகுதியில் அமைந்துள்ள Trinity Community Centre நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு இரவு 10:00 மணி வரை இடம்பெற்றது. தமிழ் ஆய்வு மையத்தின் வெளியீடாக இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஊடகவியலாளர் சு.பா.ஈஸ்வரதாஸ் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். மங்கள விழக்கை முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் பொன்.சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. அதன் பின்னர் நூலின் அறிமுக உரையினை நூலகவியலாள…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்நாட்டிற்கு வெளியிலிருக்கும் தமிழ் எழுத்தாளனுக்கு எழுத ஏராளமான கதைகளிருக்கின்றன! லக்ஷ்மி சரவணக்குமார்: தற்போது தமிழில் இயங்கிவரும் குறிப்பிடத்தகுந்த இளம்படைப்பாளிகளில் ஒருவர். நீல நதி (2009), யாக்கை (2010), வசுந்தரா என்னும் நீலவர்ண பறவை (2011), மச்சம் (2012), மயான காண்டம் (2015), யானை (2015) தேர்ந்தெடுத்த கதைகள் ஆகியவை இதுவரை வெளியான சிறுகதைத் தொகுப்புகள். 2013 ல் வெளியான மோக்லியைத் தொலைத்த சிறுத்தை– இவருடைய கவிதைத் தொகுப்பு. உப்புநாய்கள் (2011), கானகன் (2014), நீலப்படம் (2015) ஆகியவை இவர் எழுதிய நாவல்கள். திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டே இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கி வருபவர். உப்புநாய்கள் நாவலுக்காக 2012 ஆம் ஆண்டு சுஜாதா விருது பெற்றவர…
-
- 0 replies
- 496 views
-
-
இலங்கையிலிருந்து பிரபஞ்சம் முழுமைக்கும்... அசட்டு ஐதிகங்களுக்கு அப்பால் வரலாறு, விஞ்ஞானம், தத்துவம், அரசியல் என பலவித ஞானங்களையும் ஊடுருவி பிரச்சினைகளின் மூலாதாரங்களை உண்மையின் ஒளிகொண்டு தேடியவர் பிரமிள். அதீத விழிப்பு நிலையின் அலைக்கழிப்பே அவர் இருப்பாக இருந்துள்ளது. அவரது பிறப்பு, இளம் பருவம் திரிகோணமலையோடும் படைப்பியக்கம் தமிழகத்தோடும் தொடர்புடையது. இருப்பினும் பிரமிளில் வெளிப்படும் மனிதன் ஒரு குறிப்பிட்ட நிலத்துடனோ பூர்வீகத்தோடோ தொடர்புடையவன் அல்ல. தன்னை உலக மனிதனாக உணரும் புள்ளியில் இருந்தே பிரமிளின் கேள்விகள் தொடங்குகின்றன. எனவே, தமிழீழ அரசியல் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் சார்பு நிலைக்கு வெளியிலும் அரசியல் நிலைப்பாடு…
-
- 0 replies
- 474 views
-
-
ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வி தெரிவித்துள்ளார். அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முன்னாள் அரசியல் துறைப் போராளி வெற்றிச்செல்வி எழுதிய பம்பைமடு பெண் போராளிகள் தடுப்பு முகாம் தொடர்பாக எழுதப்பட்ட 'ஆறிப்போன காயங்களின் வலி' புத்தக வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய தமிழினி குறித்து நிறையவே தெரியும் என்றும் அவர் சாதாரண போராளியாக இருந்த காலத்திலிருந்தே அவருடன் தான் நெருங்கிப் பழகி…
-
- 2 replies
- 537 views
-
-
தமிழ்நதியின் பார்த்தீனியம் : பேரழிவின் மானுட சாட்சியம் யமுனா ராஜேந்திரன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்தாகிறது. 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதிப்படையின் கடைசி அணி இலங்கையிலிருந்து வெளியேறுகிறது. முழுமையாக 22 மாதங்கள் இந்திய அமைதிப்படை ஈழத்தமிர்கள் வாழும் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்தது. தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவல் இந்திய அமைதிப்படை இலங்கையில் கால்கொண்ட நாட்களின் கொஞ்சம் முன்னாகத் துவங்கி, இலங்கையிலிருந்து அதனது கடைசி அணி வெளியேறும் காலத்தோடு முடிகிறது. ஈழப் போராட்டத்தில் இந்திய அமைதிப்படையின் தலையீட்டையும்; அது விளைவித்த பேரழிவையும் முன்வைத்து ஈழத்தவரால் எழுதப்பட்ட முத…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் சாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.இதுவே எனக்கு ஜெயகாந்தனின் முதல் வாசிப்பு. இந்த காலகட்டத்தில் (முதல் அச்சு-1970) இது கொஞ்சம் நீண்ண்ண்ண்ட நாவலே. ஆனாலும் தங்குதடை அற்ற அழகிய நடை போர் அடிக்காமல் நாவலை நகர்த்துகிறது.இந்த நாவலில் அறியாத வயதில் கற்பிலந்த பெண்ணாக கங்கா. ஆண் துணையில்லாத கங்காவுக்கும் அவள் உறவு மற்றும் சமுகத்துக்கும் இடையேயான முரண்பட்ட போராட்டமே கதை.அவளே தனது கதையை சொல்வதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. மிக அருமையான கதை நகரத்தல். சுய விருப்பம்,வெறுப்பு, மகிழச்சி எனகங்காவின் மன ஓட்டத்தை மிக அழகாகச் சினிமா படம் போலக் கோர்வையாக அடு…
-
- 1 reply
- 3.5k views
-
-
மறைந்த முன்னாள் தமிழ்ப்போராளியான தமிழினியின் புத்தகமானது சிங்கள சமூகங்களிடையே, சுயபரிசோதனை செய்வதற்கான ஒரு எழுச்சியை அவர்கள் மனங்களில் உருவாக்கியமையே இப்புத்தகத்திற்கு கிடைத்த வெற்றி என நான் நினைக்கின்றேன் என தமிழினியின் கணவன் ம.ஜெயக்குமரன் தெரிவித்துள்ளார். சிங்களத்தில் கிட்டத்தட்ட 6,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இப்புத்தகத்தின் சிங்கள வெளியீட்டாளர் உண்மையிலேயே இப்புத்தகத்தினால் கிடைக்கும் நிதியை மஹரகமை புற்றுநோய் வைத்தியசாலையில் சிறுவர் பிரிவிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார். தமிழினியின் இறுதி விருப்பமும் இதுவாகவே இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார். அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்க…
-
- 0 replies
- 399 views
-
-
பிரான்சில் இருந்து புதிய வருகை . காலாண்டு இலக்கிய சஞ்சிகையாக . "நடு" ..வெளிவரத் தொடங்கியுள்ளது http://www.naduweb.net/
-
- 0 replies
- 522 views
-
-
எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' நூல் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் ச.ராதேயன் தலைமையில் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் எஸ்.ஜீவசுதன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் ஆகியோர் நூல் பற்றிய கருத்துரையாற்றுவர். ஏற்புரையை நூலாசிரியர் வெற்றிச்செல்வி வழங்க உள்ளனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்க்கை பற்றிய வரலாற்றுப் பதிவாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்த நூல் அண்மையி…
-
- 0 replies
- 591 views
-
-
அகர முதல்வனின் இரண்டாம் லெப்ரினன்ட் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா தமிழ் நாட்டிலே சிறப்பாக நடை பெற்ற அகர முதல்வனின் நூல் வெளியீடு அந்த நிகழ்வினில் இடம்பெற்ற அகரமுதல்வன் ஏற்புரை http://www.mukadu.com/2016/05/11/அகர-முதல்வனின்-இரண்டாம்/
-
- 0 replies
- 398 views
-
-
துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான்! ‘எழுதித் தீராப்பக்கங்கள்’ தொகுப்பில் ஒவ்வொரு அனுபவக் கட்டுரையையும் அகதிகளின் உணர்வுகளாகச் செல்வம் அருளானந்தம் எழுதியிருக்கிறார். அவரது பார்வையும் சிந்தனையும் அவற்றிலே நகைச்சுவையைக் காண்பதுமாகத் துயரங்களை எழுதியவற்றைப் பாராட்டும் அதே நேரம், ஒவ்வொரு கட்டுரையின் தலையங்கமும் அதனோடு இணைந்த ஓவியங்களும் அவற்றை மலினப்படுத்தி விடுகின்றன என்பது இத்தொகுப்பின் பலவீனமாய் எனக்குத் தெரிகிறது. சட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது தமிழ்வாணன் காலத் தலைப்புகள் போலயிருக்கே என்பது தான். தலைப்புகள் ஓவியங்கள் கவர்ச்சியாக வாசகரை வாசிக்கத் தூண்டுவதற்கானவையாக இருக்கவேண்டுமென வைத்தாரா செல்வம் தெரியவில்லை.ஆனால், உள்ளே விட…
-
- 1 reply
- 617 views
-
-
இந்த நூற்றாண்டில் மேற்கொண்ட மிகப் பெரிய வாதை என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் உள்ளத்தில் உள்ள தேசப் பற்றை அழிக்கும் நோக்கில் மேற்கொண்ட வாதையே என்று கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் பம்பைமடு தடுப்புமுகாம் தொடர்பான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் உரை வருமாறு, ஒடுக்கப்பட்ட ஈழ நிலத்தினுடைய, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, 18 ஆண்டுகள் ஓய்வின்றிப் போராடிய, தன் வாழ்வின் பெரும் பகுதியை போராட்டத்துடன் கழித்த முக்கியமான போராளிகளில் ஒருவராக வெற்றிச்செல்வி அக்காவினுடைய ஆறிப்போன காயங்களின் வலி என்ற நூல் வெளியீட்டு …
-
- 0 replies
- 602 views
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நாவலின் நூலாசிரியர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்லீடர் இணையத்தில் தொடராக வெளியிட்டுவைக்கப்பட்ட நாவலின் முதலாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு ஒஸ்ரேலியாவில் தமிழருவி மணியன் தலைமையிலும் தமிழகத்தில் வைகோ தலைமையிலும் நடைபெற்றிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் 19 – 06 -2016 அன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இது நாவலின் முதற் பாகம் எனவும்இ இரண்டாம் பாகம் கிளிநொச்சியிலிருந்து இரணைப்பாலை வரையுமான போரை மையமாகவும், மூன்றாம் பாகம் இரணைப்பாலையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையுமான போரை சித்திரிப்பதாக அமையும் எனவும் இந்த நாவ…
-
- 0 replies
- 769 views
-
-
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும். *”கண்டிவீரன்” என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “புனைவுப் பரிசு”ஷோபா சக்திக்கு வழங்கப்படுகிறது. *தமிழ் இலக்கிய உலகின் பிதாமகனான, அசோகமித்ரனின் “குறுக்குவெட்டுக்கள்” என்னும் கட்டுரை தொகுப்பிற்கு, 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “அபுனைவுப் பரிசு” அளிக்கப்படுகிறது. *”மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” என்…
-
- 0 replies
- 421 views
-
-
சென்னை புத்தகக் காட்சி 2016 - அதிகம் விற்ற 5 நூல்கள் முதல் அலப்பறை நாயகன் வரை புதிய தாள்களின் வாசனையுடன் வந்திறங்கிய புத்தகங்களுடன் நடந்த சென்னை புத்தகக் காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. அதன் சுவைமிகு பதிவுகள் இவை. | தொகுப்பு: சாரி, சிவசு, வெ.சந்திரமோகன், நீதிராஜன், கே.கே.மகேஷ் | புத்தகக் காட்சி படங்கள்: பிரபு காளிதாஸ் http://tamil.thehindu.com/opinion/blogs/சென்னை-புத்தகக்-காட்சி-2016-அதிகம்-விற்ற-5-நூல்கள்-முதல்-அலப்பறை-நாயகன்-வரை/article8731556.ece?homepage=true&theme=true
-
- 1 reply
- 450 views
-
-
மழை vs வெயில், லிச்சி vs காபி, ஜன்னல் மலர் vs இறைவி... சென்னை புத்தகக் கண்காட்சி live! பொறுத்துப்பொறுத்துப்பார்த்து இந்த வருடம் புத்தகங்களை வாங்க புத்தக கண்காட்சிக்கு மழையும் படையெடுத்துவந்துவிட்டது. “ப்பா.. என்னா வெயில்” என்று வாசகர்கள் குரலில் துவங்கிய சென்னை 39வது புத்தகக் கண்காட்சி, துவங்கிய நான்கைந்து நாட்களில்‘ஐயையோ மழை.. மழை’ என்று பதிப்பாளர்கள் அலறியடித்து புத்தகங்களை மழையிலிருந்து காப்பாற்றப் போராடுவது என்று மாறிவிட்டதில் அப்செட்டில் இருக்கிறார்கள் பல பதிப்பாளர்கள். கடும் மழையினால் ஸ்டாலுக்குள் ஷவர் போலப் பொழிந்த மழை, உடைந்து விழுந்த மரப்பாலம் என்று பல தடைகளுக்கிடையே தட்டுத்தடுமாறி நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் இன்னும் …
-
- 0 replies
- 507 views
-
-
புத்தகம் ஏன் சக்களத்தர் ஆகிவிடுகிறது? சென்னைப் புத்தகக் காட்சியில் வழக்கமான ஜனவரி பனிச் சூழல் கோலாகலத்தை இந்தாண்டு ஜூன் வெம்மைச் சூழலில் பார்க்க முடியவில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தவிர்த்து வாரத்தின் ஏனைய நாட்களில் கூட்டம் இல்லை. ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டிருந்த ஒரு பதிப்பாளர், “டீ செலவை ஈடுகட்டுற விற்பனைகூட இல்லை” என்றார். ஒரு கவிதைப் புத்தகத்தைக் கையில் கொடுத்தார். அட்டையே சாதாரண காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. “கவிதைப் புஸ்தகம் வாங்க ஆளே இல்லை. இந்தப் புத்தகம் இருபது ரூபாய். ரெண்டு டீ காசு. எறநூத்தம்பது அடிச்சோம். ஒண்ணு விக்கலை” என்றார். பிரபலமான பெரிய, ஏற்கெனவே பலமான வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிற பதிப்பகங்கள், ஊடக நிறுவனங்கள் நீங்கல…
-
- 3 replies
- 937 views
-
-
செங்கை ஆழியானின் வாடைக்காற்று சந்திரவதனா வாடை பெயர்ந்துவிட்டது. நெடுந்தீவுத் தெற்குக் கடற்கரையில் செமியோனின் வரவுக்காக பிலோமினா காத்திருக்கிறாள். மூன்று வருடங்களாக, வாடைக்காற்று பெயரத் தொடங்கியதும் தந்தையுடன் ஒரு தொழிலாளியாக வந்து வாடி அமைத்து, மீன் பிடித்துச் சென்ற செமியோன் கடந்த வருடம் தானே சம்மாட்டியாக வந்தபோதுதான் அவனுக்கும் பிலோமினாவுக்கும் இடையில் அழகிய காதல் மலர்ந்தது. வாடை முடிந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்பும் போது அவளையும் தன் மனைவியாகத் தன்னோடு அழைத்துச் செல்லும் நினைப்புடன்தான் செமியோன் அவளுடன் பழகினான். ஆனால் பிலோமினாவின் அண்ணன் சூசைமுத்துவுக்கும், செமியோனுக்கும் ஒத்துவரவில்லை. செமியோன் ஒரு சம்மாட்டி. பிலோமினாவின் குடும்பம…
-
- 0 replies
- 1.4k views
-
-
10 நாட்கள், 10 லட்சம் தலைப்புகள், ஒருகோடி புத்தகங்கள்; துவங்கியது சென்னை புத்தக கண்காட்சி! சென்னை; தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 39 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவுத்திடலில் இன்று துவங்குகிறது. இதில் விகடனின் புதிய இலக்கிய வெளியீடான தடம் இதழுக்கென பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்திவருகிறது. ஆண்டுதோறும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும். கோடிக்கணக்கான புத்தகங்களில் தங்கள் அறிவுப்பசிக்கு உகந்த புத்தகங்களை ஒரே இடத்தில் தேடி வாங்கிச்செல்வது அவர்களுக்கு பெரும்…
-
- 0 replies
- 574 views
-