Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'வன்னி: வரலாறும் பண்பாடும்' நூலின் அறிமுக நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்துறை விரிவுரையாளர் க. அருந்தாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூல் அறிமுகவுரையை ஓய்வுநிலைப் பேராசிரியர் இரா.சிவச்சந்திரனும், கருத்துரைகளை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், பேராசிரியர் செ.கிருஷ்ணராசா, விரிவுரையாளர் கே.ரி. கணேசலிங்கம், கலாநிதி த.கிருஷ்ணமோகன் ஆகியோரும் வழங்கினர். நூலின் சிறப்புப் பிரதியை நாடக ஆசான் குழந்தை சண்முகலிங்கத்துக்கு யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வழங்கினர். தொடர்ந்து பிரதிகள் வழங்கப்பட்டன. ஏற்புரையை பதிப்பாசிரியர் நிகழ்த்தினார். புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் க.சுந்தரலிங்கம், 44 கட்ட…

  2. நல்லைக்குமரனின் 24 ஆவது மலர் வெளியீடு இன்று புதன்கிழமை யாழ.நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நல்லைக்குமரன் மலர் வெளியீடு நடைபெற்றது. நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் வாசுதேவக்குருக்கள் சைத்தன்ய சுவாமிகளின் ஆசியுரைகள் இடம்பெற்றன. நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தி.இராசநாயகத்திற்கு பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் யாழ்.விருது வழங்கி கௌரவித்தார். …

  3. நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம் அல்லது எதற்காக சாட்சிகளாயிருக்கிறோம்.. எனக்கெதுவும் புரியவில்லை. பகலையும் இரவையும் கண்டு அஞ்சும் என் கண்களை என்ன செய்வேன்..? 000 ஆசிரியர், வெளிச்சம் சஞ்சிகை, கலை பண்பாட்டுக் கழகம், கோப்பாயோ கொக்குவிலோ என முகவரியிட்டு பதின்ம வயதுகளில் நான் எழுதிய எந்த ஆக்கமும் வெளிச்சம் இதழில் வந்ததில்லை. பதினைந்துகளில் நின்றிருந்த வயதது. அதற்குரிய சந்தேகங்களோடு உவங்கள் தெரிஞ்சாட்கள் எழுதினாத்தான் போடுவாங்கள் போல என நம்பினேன். வெளிச்சம் ஆசிரியரைத் தெரிந்து கொள்ள வேண்டும். பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அதில் மெனக்கெட முடியாதளவிற்கு இடப்பெயர்வுகளும் ஓட்டங்களும் அடுத்த ஆண்டுகளில் நிற…

    • 0 replies
    • 1.7k views
  4. ஈழத்தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்டபோரின் அவலங்களைப் பேசும் கருணாகரனின் வேட்டைத்தோப்பு - முருகபூபதி படித்தோம் சொல்கிறோம் அரசியல் அறமே கூற்றுவனாகி மக்களின் வாழ்வைகுலைத்துப்போட்டதை சித்திரிக்கும் தொகுப்பு இலங்கையில் மட்டுமன்றி தமிழகம்மற்றும் தமிழர் புகலிட நாடுகளிலும் இலக்கிய வாசகர்களின் கவனிப்பிற்குள்ளான கருணாகரன் - கவிஞராகவே முன்னர் அறியப்பட்டவர். வெளிச்சம் இதழின் ஆசிரியராகவுமிருந்தவர். பத்தி எழுத்தாளர் -ஊடகவியலாளர் - சில நூல்களின் பதிப்பாளர் - இலக்கிய இயக்கசெயற்பாட்டாளர். எனக்கு கருணாகரன் இலக்கியத்தின் ஊடாகஅறிமுகமானது 2008 இல்தான். லண்டனில் வதியும் முல்லை அமுதன்தொகுத்து வெளியிட இலக்கியப்பூக்கள் தொகுப்பில் மறைந்த செம்பியன்செல்வனைப்பற்றி கருணாகரன்…

  5. http://img377.imageshack.us/my.php?image=trhank5.jpg சிறுதெய்வ நெறிகள் சிறுதெய்வ ஆய்வு நாட்டுபுறப் பண்பாட்டியலின் ஒரு பெரும் பிரிவாகும். இந்த வகையான ஆய்வு தமிழ்நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளேதான் தொடங்கப்பட்டது. சரியாகச் சொல்வதானால், இந்த ஆய்வுத்துறை தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் பிள்ளைப் பருவத்தில் உள்ளது. இந்த வகையான ஆய்வுச் சிந்தனையைத் தொடங்கியதில் தாமரை, ஆராய்ச்சி போன்ற இதழ்களுக்கே பெரும்பங்குண்டு. சொல்விளக்கம் முதலில், நாம் தமிழில் ''சிறுதெய்வம்'' என்ற சொல்லின் தோற்றத்தை நோக்குவோம். இச்சொல் முதன்முதலாக ''சென்று நாம் சிறுதெய்வம் சேரோம் அல்லோம்'' என்று அப்பர் தேவாரத்தில் பயின்று வருகிறது. இதன் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆகும். இதற்கு…

  6. துயர் கவிந்த சரிதையில் அழுத்தி பதியும் நிழல் – அப்பால் ஒரு நிலம் -சி.ரமேஸ் குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு முதலான நாவல்களைக் கடந்து வெளிவந்த நாவலே அப்பால் ஒரு நிலம். ஈழத்தின் ஆனையிறவு, பரந்தன்,கிளிநொச்சியின் வன்னிக்களமுனை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இந்நாவல் வேவுகாரர்களின் வாழ்வை உணர்வின் தளத்தில் சித்திரிக்கிறது. செங்கையாழியானின் ‘சாம்பவி’ வேவு புலிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் ஈழத்து நாவல் என்றாலும் அதில் யதார்த்தம் இருக்கவில்லை. உணர்வின் கூர்மையை விட கதை சொல்லியின் கற்பனையே அதில் விஞ்சி நின்றது. குணா கவியழகனின் இந்நாவல் சம்பவங்களின் வாயிலாக மக்களின், போராளிகளின் அனுபவங்களை உணர்வுத் தளத்தில் சித்திரிக்கிறது. வேவுப் போராளி ஏனைய போராளி…

  7. இந்நூலின் ஒலிவடிவம் கீழ்க்கண்ட கொழுவியினுள் உள்ளது. சொடுக்கி கேட்கவும் http://pulikalinkuralradio.com/archives/label/audio-book

  8. புதிதாக ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும்போதே, ஒரு நாவல் பாதி வெற்றியடைந்து விடுகிறது. சொல்ல வந்ததை சரியாகச் சொல்லி விட்டால் முழு வெற்றியையும் பெற்று விடுகிறது. பல எழுத்தாளர்கள் புதியதொரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, சொல்லும் முறையில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால், கதைக்களன், சொல்லும் முறை இரண்டிலும் கோட்டை கட்டியிருக்கிறார் குணா.கவியழகன். appal oru nilamகிளிநொச்சியை சிங்களர்களிடமிருந்து மீட்க, புலிகள் மேற்கொண்ட வேவு நடவடிக்கைகள்தான் கதையின் களம். இதைச் சுற்றி விடுதலைப் புலிகளின் அன்றாட வாழ்க்கை, பயிற்சி முறைகள், இயக்க செயல்பாட்டு முறைகள், போர்க்குணம், போரினால் அலைக்கழிந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை மிக நெருக்கமாக நம்முன் காட்சிப்படுத்துகிறார் குணா.கவ…

    • 0 replies
    • 669 views
  9. அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல் ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற விமர்சனத்துக்கு உரிய ஒரு நூலை எழுதியிருக்கிறார் வசுமித்ர. இந்த நூல் எழுத வேண்டிய அவசியம், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளின் நழுவல்வாதம், அம்பேத்கரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம், அடையாள அரசியல் என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் வசுமித்ர பேசுகிறார். ந.முத்துமோகன், அருணன், எஸ்.வி.ராஜதுரை, கி.வீரமணி, பெரியார்தாசன் என பலரைக் குறித்து இதில் பேசுகிறார். சிந்தன் பதிப்பகத்தில் அவரை அவரை த டைம்ஸ் தமிழ். காமிற்காக நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் துரைராஜ். கேள்வி : ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற உங்களுடைய நூலை வாச…

    • 0 replies
    • 1.1k views
  10. கருணாகரனின் “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – புதிய கவிதை நூல் வெளியீடு கருணாகரனின் புதிய கவிதை நூல் – “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – வெளியீடும் விமர்சனமும் எதிர்வரும் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப.300 மணிக்கு நடைபெறவுள்ளது. சு. ஸ்ரீகுமரன் (இயல்வாணன்) தலைமையில், யாழ்ப்பாணம் புதிய உயர்கல்வி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கவிஞர் ந. சத்தியபாலன், தாயகம் இதழின் ஆசிரியர் க. தணிகாசலம், விமர்சகர் சி. ரமேஸ், சத்தியன், ஞானசக்தி ஸ்ரீதரன், வேல் நந்தகுமார் மற்றும் கருணாகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இலங்கையில் 2009 இல் ஏற்பட்ட போரழிவுக்குப் பின்னான மீந்து போன மனிதர்களின் வாழ்…

  11. உலகம் - நூல் அறிமுகம் தமிழ்ச் சமூகத்தின் மீதான உலகமயத்தின் தாக்குதல்கள், தமிழ்ப் பண்பாட்டின் மீதான நுகர்வியப் பண்பாட்டின் தாக்கங்கள், உலகப் பொருளாதாரம், உணவுப் பஞ்சம், தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. வெளியீடு: பன்மைவெளி, | தஞ்சை | | பக்கங்கள்: 112 | விலை: ரூ.60 | கிடைக்குமிடம்: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 44-1, பசனை கோயில் தெரு,முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. http://www.arunabharathi.blogspot.com/

  12. முரண் – கோமகனின் புதிய சிறுகதைத்தொகுதி குறித்து. – கே.எஸ்.சுதாகர் இந்த வருடம் (2019) `எதிர்’ வெளியீடாக வந்திருக்கும், கோமகனின் ‘முரண்’ சிறுகதைத்தொகுதியை ஆர்வமாக வாசித்தேன். சில கதைகள் புதிய அனுபவத்தைத் தந்தன. சில கதைகள் பழகிய தடத்திலே ஓடிச் சென்றன. சுற்றுப்புறச் சூழல் மாசடைதல், சமுதாயச் சீர்கேடு, ஆண்-பெண் மற்றும் ஒருபால் உறவுகள், அகதி வாழ்வு எனப் பல வகைப்பாடுகளில் கதைகள் அமைந்திருந்தன. மனிதர்களுடன் அஃறிணைகளும் கதைகள் பேசின. முதலாவது கதை ‘அகதி’ ஒரு புறாக்கதை எனப்பிடிபட சற்று நேரமாகிவிட்டது. ‘நான் எனது மனைவி மற்றும் எமக்குப் பிறந்த 10 மக்களும்…’ என்று முன்கூட்டியே சொல்லியிருந்தாலும், ‘ஒருநாள் பல்கனியில் எனது சகதர்மினி முட்டை போடுவதற்காக அந்தரப்பட்…

  13. கொச்சிகட நாவல் | ஈழத் துயர்; அலைதலின் வேட்கை | கிருஷ்ணகோபாலன் சமகால தமிழீழ படைப்பாளியிடமிருந்து ஒரு படைப்பு வருகிறதென்றால் உடனடியாக அதை வாசித்துப் பார்க்க வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்கும் இயல்பாக வந்து விடுகிறது .மக்கள் அகதிகளாகி அல்லலுறச் செய்த போர் சூழலை, சிங்கள இனவாதத்தின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுவது என்பது தமிழீழ படைப்பாளிகளின் தார்மீகக் கடமை… அந்த வகையில் மு. புஷ்பராஜின் ஈழப்போரில் எனது சாட்சியங்கள். கட்டுரைத் தொகுப்பு விடுதலை இயக்கங்களின் வேறொரு முகத்தைக் காட்டியது.மேலும் அகரமுதல்வன்,தமிழ்நதி,ஷோபாசக்தி போன்ற படைப்பாளிகளின் படைப்புகளின் வழியே ஈழம் குறித்து அங்கு செயல்பட்ட விடுதலை இயக்கங்களின் சாதக பாதகங்களையும் குறித்து அறிய முடி…

  14. கார்டன் வைஸ்சின் Cage – தமிழாக்கமான கூண்டு நடேசன் (Gorden Weiss) கார்டன் வைஸின் தமிழாக்கமான கூண்டு நூல் தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது. பல இடங்களில் அதன் ஆங்கில மூலத்தை பார்த்திருந்தேன். அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தேன் . ஆனால், கூண்டு என்ற அதன் தமிழாக்கம் பற்றி ஏன் தமிழ்த் தேசியர்கள் பலர் பேசவில்லை என ஆச்சரியப்படுகிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் புத்தகங்களை வாசிக்காதவர்கள். அல்லது ஆனந்தவிகடன் , குமுதத்தின் வாசகர்களாக இருந்தாலும் அவர்களில் ஒரு வீதத்தினராவது இது பற்றிப் பேசியிருந்தால் புத்தகத்தைப் பற்றி எனக்கும் தெரிந்திருக்கும். முக்கியமாக தமிழர்கள் மத்தியில் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. பின் அட்டைக்கு பேராசிரியர்…

  15. தெணியான் எழுதிய ‘ஏதனம்’ எனும் நாவல் வெளியிட்டுவிழா கொற்றாவத்தை பூமகள் சனசமூகநிலைய பொது நோக்கு மண்டபத்தில் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணிக்கு கொற்றை.பி.கிருஷ்ணானந்தன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை ந.ஆதவனும் வெளியீட்டுரையை க பரணீதரனும் நிகழ்த்தினர். க.தம்பிமுத்து, வதிரி.சி.ரவீந்திரன், க.நவம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். க. ஞானசீலன் நன்றியுறை வழங்கினார். http://thuliyam.com/?p=52258

  16. பருவம் – எஸ்.எல்.பைரப்பா எஸ்.சுரேஷ் நம்மை முதலில் தடுமாறச் செய்வது பாத்திரங்களின் வயது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாயத்தையும் பாத்திரங்களின் வயதைக் குறிப்பிட்டே துவங்குகிறார் பைரப்பா. போர் மேகங்கள் திரள்கின்றன, மாபெரும் யுத்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன- இந்தக் கட்டத்தில் கர்ணன் அறிமுகப்படுத்தப்படுகிறான். அவனது வயது அறுபத்து ஐந்து! நாமறிந்த மகாபாரதத்தை முழுமையாகப் புரட்டிப் போட்டு விடுகிறது இது. அமர் சித்ரா கதாவிலும் ராஜாஜியின் வியாசர் விருந்திலும் நாம் கண்ட கர்ணன் அல்ல இவன். நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் இளம்பருவ கர்ணன் அல்ல இவன், நாம் திகைப்புடன் கண்டு ரசித்த சிவாஜி கணேசனின் கோபக்கார கர்ணன் அல்ல இவன். போர்க்களம் புகத் தயாராகிக் கொண்டிருக்கும் அற…

  17. உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன்’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள புளோரிடா மாநிலத்தில் வசிக்கிறார். “வனநாயகன் என்றால் என்ன?” என்று இப்போது நீங்கள் உங்கள் தலைக்குள் கேட்பது எனக்குப் புரிகிறது. மலேசியாவில் அதிகமாக இருக்கும் ‘உராங்…

    • 0 replies
    • 432 views
  18. கடந்த ஞாயிற்றுக் கிழமை (09.04.2017) அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள தமிழர் அரங்கத்தில் அறிவியல் எழுத்தாளர் ராஜ்சிவா அவர்களுடனான கலந்துரையாடல், சாந்தி நேசக்கரம் அவர்களின் 'உயிரணை' நாவல் அறிமுகம், என்னுடைய 'நாங்கள்' சிற்றிதழ் அறிமுகம் ஆகிய மூன்று நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தன. 50இற்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ராஜ்சிவா அவர்களுடைய அறிவியல் விளக்கங்களை சபையோர் கவனமாக செவிமடுத்தனர். இப்படி ஒரு கலந்துரையாடல் எமது சூழலுக்கு புதிது என்பதனால், இந்த முயற்சிக்கு ஆதரவு இருக்குமா என்கின்ற சந்தேகத்தில் நான் அவருக்கு ஒரு மணித்தியாலமே ஒதுக்கியிருந்தேன். சபையோரின் ஆர்வத்தினால் நிகழ்வு மேலும் அரை மணித்தியாலம் நீண்டது. ராஜ்சிவா அவர்க…

    • 0 replies
    • 560 views
  19. டேய் ஜேகே, இன்றைக்கு இலக்கிய வாசிப்புப் பழக்கம் இளம் தலைமுறையிடையே அருகிவிட்டதா? இதற்குச் சரியாகப் பதில் சொல்லாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கல் நூறாகிவிடும்.. அன்புடன், வேதாளம். டியர் வேதாளம், இலக்கிய வாசிப்புப் பழக்கம் எது என்பதில் எனக்கு எப்போதுமே குழப்பம் வந்திருக்கிறது. எப்போதாவது இதுதான் இலக்கியம் என்று தெளிவடையும் சந்தர்ப்பத்தில் ஒரு பயங்கரவாதி அதனைக் குண்டுவைத்து தகர்த்துவிடுகிறான். “ஜே ஜே சில குறிப்புகள்” வாசித்துவிட்டு அட என்று நிமிர்ந்தால் அது ஒரு மட்டமான புத்தகம் என்கிறது ஒரு உயிரி. “என் மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” என்றவனை கவிஞனே இல்லை என்கிறார்கள். ஒரு கறாரான மதிப்பீட்டின்படி பார்த்தால் தமிழில் இலக்கிய வாசிப்…

    • 0 replies
    • 433 views
  20. “நாங்கள் இப்படித்தான் சுவாதி...ஜோதிமணிகளை எதிர்கொள்கிறோம்!” பி.ஜே.பியின் சமூக ஊடக அரசியல் பிண்ணனி #IamATroll அந்தப் புத்தகம் இப்படியாகத் தொடங்குகிறது, “அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ அல்லது பிரிட்டன் பிரதமர் தெரசா மேவோ அல்லது ஃபிரான்ஸ் அதிபர் ஃப்ரான்சியோஸ் ஹாலாந்தோ சமூக ஊடகங்களில் மிக மோசமான நடவடிக்கைகளில் (பெண்களை இழிசொல்லால் கொச்சைப்படுத்துபவர்கள், கொலை மிரட்டல் விடுபவர்கள்) ஈடுபடுபவர்களைப் பின்தொடர்வார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா....? நம் பிரதமர் இந்தத் தலைவர்களுடன் நட்பில் இருப்பதில் பெருமை கொள்கிறார். அதே நேரம்... அவர், பெண்களை இழிசொல்லால் கொச்சைப்படுத்துபவர்களையும், கொலை மிரட்டல் விடுபவர்களையும் பின்தொடர்கிறார்.…

  21. வணக்கம் ,நண்பர்களே ,நான் இதுநாள் வரைக்கும் தரவிறக்கம் செய்து படித்து மகிழ்ந்த அணைத்து மின் நூல்களையும் ,உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .தங்களுக்கு எதுவும் நூல் தேவைபட்டால் ,கூறவும் ,நான் அதற்கு முயற்சி செய்து இங்கே பதிவிடுவேன் .அனைத்து நூல்களையும் ஒரே தொகுப்பாக்குவதில் சிறு ஆர்வம் . 1)Tamil ebooks Part—I தமிழின் மிகச்சிறந்த நூறு கதைகள் பாகம் ஒன்று ,பாகம் இரண்டு link--- http://downloads.ziddu.com/download/25085005/100_sirantha_kathaikal_Ra_Ki_Part1.rar.html Tamil ebo…

    • 0 replies
    • 3.4k views
  22. வன்னி நாவல் பற்றிய என்பார்வை - எம். ஜெயராமசர்மா … அவுஸ்த்திரேலியா வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையானது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்றுவிடும்.பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால்” வன்னி ‘ நாவல் அப்படியானதன்று.தமிழன் உள்ளகாலம் வரை பேசப்படும் நாவலாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். மஹாவம்சத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். அது வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் சுயபுராணக் கதையாகும். அதில் பல புனைவுகள் புகுத்தப் பட்டிருக் கின்றன. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் ஒருபக்கச் சார்பானதாகும். வன்னி நாவலையும் தமிழரின் …

  23. செங்கை ஆழியானின் வாடைக்காற்று சந்திரவதனா வாடை பெயர்ந்துவிட்டது. நெடுந்தீவுத் தெற்குக் கடற்கரையில் செமியோனின் வரவுக்காக பிலோமினா காத்திருக்கிறாள். மூன்று வருடங்களாக, வாடைக்காற்று பெயரத் தொடங்கியதும் தந்தையுடன் ஒரு தொழிலாளியாக வந்து வாடி அமைத்து, மீன் பிடித்துச் சென்ற செமியோன் கடந்த வருடம் தானே சம்மாட்டியாக வந்தபோதுதான் அவனுக்கும் பிலோமினாவுக்கும் இடையில் அழகிய காதல் மலர்ந்தது. வாடை முடிந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்பும் போது அவளையும் தன் மனைவியாகத் தன்னோடு அழைத்துச் செல்லும் நினைப்புடன்தான் செமியோன் அவளுடன் பழகினான். ஆனால் பிலோமினாவின் அண்ணன் சூசைமுத்துவுக்கும், செமியோனுக்கும் ஒத்துவரவில்லை. செமியோன் ஒரு சம்மாட்டி. பிலோமினாவின் குடும்பம…

  24. [size=5]பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை 75 ரூ.[/size] [size=4]ஆங்கிலத்தில் நீங்கள் எழுதியதில் ஒருவர் குற்றம் கண்டுபிடித்தால், கூனிக்குறுகிப் போகிறீர்கள். ஆனால், தமிழில் தவறு இருந்து, அதை யாராவது சுட்டிக்காட்டினால், ‘ஐ டோண்ட் நோ தட் மச் தமிழ்’ என்று பெருமையாகச் சொல்வீர்கள். [/size] [size=4]தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாகச் சொல்வீர்கள். தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாக ஆனது தமிழ்ச் சமூகத்தில் மட்டும்தான். பள்ளியில், கல்லூரியில், பட்டங்கள் பெறுவதில், வேலை பார்க்கும் இடத்தில், கோவிலில், நீதிமன்றங்களில் என அனைத்து இடங்களிலும் தமிழ் தள்ளி…

    • 0 replies
    • 2.2k views
  25. அகரமுதல்வனின் ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ -நூல் அறிமுகம் -விமர்சகர் த.ராஜன் December 08, 2017 "கண்ணீர்வலியைஇழிவுபடுத்திவிடும்என்றொருகடவுள்நம்பிக்கைஎனக்குண்டு." - அகரமுதல்வன் ஈழத்தின் தற்கால சூழலையும் அதன் வரலாற்றையும் அறிந்து கொள்ள இலக்கியம்மட்டுமே நம்பத்தகுந்த ஒரே வழியாக இருக்கின்றது.கொடூர சம்பவங்கள், வன்கொடுமைகள், குண்டுகளின் சப்தங்கள், சிதைந்த உடல்கள், இயலாதோரின்ஓலம், வலி என துயர் நிரம்பிய பக்கங்கள் தான் அடங்கியிருக்கும் என்பதைமுன்னமே வாசகர்கள் அறிந்திருப்பதால் ஈழம் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதில்பெரும் தயக்கம் காட்டுவதைக் காண முடிகிறது.இயலாமையினால் வரும்குற்றவுணர்வு மட்டுமல்லாமல் தற்போதைய 'ஃபேஸ்புக்மனநிலை'யி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.